உன் கண்ணில் என் விம்பம் teaser 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இது அடுத்த அத்தியாயத்திலிருந்து ஒரு சின்ன teaser. ud நாளைக்கு தரேன்.



images (46).jpg

"யாரை கேட்டு கல்யாணத்த முடிவு பண்ணீங்க?" இளவேந்தன் கத்துவது அந்த இரவின் பிரத்தியேக சத்தத்தை தாண்டி தெரு முழுக்க ஒலிக்க





"யாழுக்கு என்ன குறை அவளை வேண்டாம்னு சொல்லுற" சீதா கோபமாக கேக்க







"எனக்கு சொல்ல ஆயிரம் காரணம் இருக்கு. எனக்கு அத்த பொண்ணு சாந்தியை தான் பிடிச்சிருக்கு, அவளை பேசி முடிங்க" இளா கறாராக சொல்ல, தனவேந்தன் என்ன சொல்வதென்று முழித்துக் கொண்டிருந்தான்.





சீதா அதிர்ச்சியில் உறைந்து விட்டாள். கணவன் இருக்கும் வரை அக்காள் என்று சொந்தம் கொண்டாடியவள் தான் சாந்தியின் அம்மா பங்கஜம். கணவன் இறந்து ஆறு ஆண்டுகளாகியும் இவர்கள் இருக்கிறார்களா? செத்தார்களா என்று கூட திரும்பி பார்க்காதவள் பொண்ணு கேட்டா கொடுப்பாளா? மாட்டாள். நிச்சயமாக மாட்டாள்.





தன்மையாக சொன்னால் மகன் கேட்டுக் கொள்வான் என்று நினைத்து "நா சொல்லுறத கேளு இளா யாழியையே கல்யாணம் பண்ணிக்க" சொல்லி முடிக்க முன் வீட்டில் உள்ள பொருட்கள் தாறுமாறாக உடைய ஆரம்பித்தன.





தூக்கம் வராமல் யாழிசைக்கு கல்யாணமா என்ற அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வதென்று பால்கனியில் நின்று யாழிசையின் வீட்டை வெறித்துக் கொண்டிருந்த ரிஷிக்கும் சீதாவின் வீட்டில் ஒலித்த சத்தம் கேக்கவே உள்மனம் "ஏதோ சரியில்லை சீக்கிரம் போ" சொல்ல தட தடவென படிகளில் இறங்கி சீதாவின் வீடு நோக்கி ஓடி இருந்தான்.







அங்கே ஓடியவன் ஜன்னலினூடாக கண்ட காட்ச்சி சீதா அறையை பூட்டிக்கொண்டு தூக்கு மாட்ட புடவையை கூரையில் பொருத்தி இருக்கும் கம்பில் கட்டுவதையே!





அறைக்கு வெளியே இதையறியாமல் இளவேந்தன் கல்லு போல் நிற்க, தனவேந்தன் அழுது கொண்டு அறைக்கதவை தட்டிக் கொண்டிருந்தான்.



பக்கத்து வீடுகளில் ஜன்னலினூடாக ஒரு சில தலைகள் வேடிக்கை பார்த்தாலும் யாரும் வெளியே வரவில்லை.





இளவேந்தன் கத்துவது கேட்டாலும் அமைதியாக சாப்பிட்டு கொண்டு இருந்த யோகராஜ் பொருட்கள் உடைவதும், தானாவின் அழுகைக் குரலும் கேக்கவே கையை உதறியவாறு பின் வாசல் வழியாக சீதாவின் வீட்டையடைய, மங்கம்மாவும், உள்ளே நுழைய, பின்னால் அழுது கொண்டே இயலும், யாழும்.


images (28).jpg


ரிஷி யாரையும் பொருட்படுத்தாது கதவை உடைத்து சீதாவை இழுத்து கீழே இறக்கி தானே சென்று அவளுக்கு தண்ணீர் புகட்ட யாழிசையும் அவள் அருகில் இருந்து அழுது கொண்டிருந்தாள்.





"என்ன பிரச்சினை?" ரிஷி யாழிசையை பார்த்தவாறே கேக்க,





சீதா யாழிசையை அணைத்துக் கொண்டு "என் தங்கத்தை வேணான்னு சொல்லுரானே! இவன் உறுப்புட மாட்டான். இவள என் பொண்ணா பாத்துக்கணும்னு ஆச பட்டேனே! அது நடக்காம போகப்போகுதே!" என்று கதற





மங்கம்மா புடவை முந்தியை வாயில் வைத்தவாறு விசும்ப, யோகராஜ் இளவேந்தனை முறைத்துக் கொண்டு நிற்க, இயல் கண்கள் கலங்கி மலங்க மலங்க விழிக்க, தனவேந்தன் செய்வதறியாது அமைதி காக்க, இளவேந்தன் அசையாது நின்றான்.





விஷயத்தை புரிந்துக் கொண்ட ரிஷியின் மனது குத்தாட்டம் போட, அழும் யாழிசையை எரிச்சலாக பார்த்தான்.





"அப்படியென்ன இவன் கிட்ட இருக்குனு அழுது வழியிறா?" அவள் எதற்காக, யாருக்காக அழுகிறாள் என்று புரிந்து கொள்ளாமல் உள்ளம் குமுற நின்றவனின் மனம் அவனை விபரீதமாக யோசிக்க வைத்தது. அதில் சிக்கி வாயை திறந்தான் ரிஷி





"இதுக்குதான் சாக போனீங்களா? உங்கள கோவில்ல வச்சு அம்மானு கூப்பிட்டேன்! என்ன மகனாகவே பக்கலயா? என்ன உதவினாலும் கேளுங்கன்னு வாய் வார்த்தையா சொல்லல மனசால சொன்னேன். இப்படியொரு இக்கட்டான நிலைல சாக போனீங்களே! செத்து போனா இந்த பொண்ணு நிலைமை என்னானு யோசிச்சீங்களா? உங்க சாவுக்கு அவ தான் காரணம்னு ஊரே பேசும்! அதுக்கு பிறகு யார் அவளை கல்யாணம் பண்ணிப்பாங்க"





இன்னறுவரை யாரிடம் இப்படி கரிசனமாக பேசியதில்லை. அவனுக்கு தேவை யாழிசை. அவனை இம்சிக்கும் மொத்த அழகும். அதற்காக எந்த எல்லைக்கும் போக அவன் தயாரா இருக்க வியாபாரத்தில் கை தேர்ந்தவனுக்கு பேச கற்று கொடுக்கணுமா என்ன? எவ்வழியிலாவது யாழிசையை அடைந்தே தீரனும் என்றிருந்தவன் காதலை தேர்ந்தெடுத்திருக்க, அதற்க்கு இப்பொழுது நேரம் பத்தாது கல்யாணம் தான் சரி என்ற முடிவுக்கு வந்து, எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு அவன் நேரடியாக கேக்காமல் அந்த எண்ணத்தை தோற்றுவித்தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top