அன்பின் இனியா 17 1

Advertisement

achuma

Well-Known Member
சென்ற பதிவிற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி , இதோ அடுத்த பதிவு.
உங்களின் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரியப்படுத்துங்கள், நட்புக்களே.
அடுத்த பதிவு, ஞாயிறு அன்று .
stay safe friends:love:(y)


ரேஷ்மிக்கு அதிர்ச்சியே முதலில், விஷாகாவுக்கு தன் மீது இப்படி ஒரு வன்னம்மா, தான் அவளுக்கு என்ன தீங்கு செய்தேன், எந்த விதத்தில் அவளை பாதித்தேன்.
இவளின் தவறான குணத்திற்கு, தன்னை பலி ஆக்கி விட்டாளே, என்று தன் மீதே கழிவிரக்கம்.
அதிதிக்கு, தோழியின் காதல் தந்த வலி உணர்வு முடியவில்லை, எனினும், அவள், விஷாகாவால், ஏமாற்றப்பட்ட வலியின் வேதனை உணர முடிந்தது.


"இங்க பாரு ரேஷ்மி, இதையே மனசுல போட்டு குழப்பிக்காத, இதுல இருந்து எப்படி வெளியே வரதுன்னு யோசி".
காதல் ரணத்தில் இருந்து, மீண்டு வருவது சாதாரண விஷயம் என்று நினைத்தாலும், ரேஷ்மி ஏதும் கூறாமல், தோழியின் பேச்சிற்கு செவி சாய்த்தாள் .


"எனக்கு தெரியாது டீ, நீ ஊருக்கு வந்துட்டு போறது கூட விஷா, எனக்கு சொல்ல மாட்டா, நானும் இந்த பக்கம் வரது இல்லை."
"வந்துட்டு போயிட்டு இருந்தேனா, உன்னை சந்தித்து இருந்தேனா, உன்னையும் இந்த அளவுக்கு விட்டு இருக்க மாட்டேன்."


"சும்மா சவுண்ட் தான் அவளுக்கு".
"அண்ணனை பற்றி எல்லாம் தெரியும் போல , உன்கிட்ட அவ பேசி இருக்கா" .
"உன்னையும் ஏமாற்றி இருக்கா, விட்டு தள்ளு" .
"இனி உஷாரா, இருந்துக்கோ, என்ன தெரியும், அவளுக்கு அண்ணனை பற்றி" .
"உனக்கு ஒன்னு சொல்லட்டுமா , எல்லாரும் வீடு, எங்க அப்பாவே, விஷாக்கு எழுதி வைச்சதா நினைச்சிட்டு இருக்காங்க" .


"அவ நல்லா திட்டம் போட்டு தான், எல்லாம் அவ பேருலா மாத்தி வாங்கிக்கிட்டா" .
"உன்னை கல்யாண செய்துக்கலான, வீட்டை விட்டு துரத்துவேன்னு மிரட்டல் வேற".
"நீயே சொல்லு, உண்மையா உழைப்புக்கு முக்கியத்துவம் தர எங்க அண்ணா இனியும் அந்த வீட்டுல இருப்பாரா" .
ரேஷ்மிக்கு இச்ச்செய்தி புதிது, அதிர்ச்சியும் கூட, அன்பு வீட்டிற்க்காவேனும் தன்னை திருமணம் செய்து கொள்வான், என்று விஷா மிரட்டி இருக்கிறாள், என்றால், தன்னை அவன் வீட்டிற்காக கல்யாணம் செய்து இருந்தால், தன் நிலைமையை அவளே அருவருப்பாக நினைத்து வருந்தினாள் .


"என்னை எப்படி எல்லாம் அசிங்க படுத்தி இருக்கா, மாமா நல்லவருன்றதால, சரி, இதே இடத்திலே வேற யாரவது இருந்தா, இருக்கு டீ உனக்கு என்று மனதிலே கருவி கொண்டாள் ரேஷ்மி."
"ட்ராவல்ஸ் வர வருமானமே, எங்களுக்கு அதிகம்" .
"ஆனா அண்ணன் இன்னும் பிசினஸ் பெருசாக்கணும் ஒரு பக்கம், இதுல, உங்க அண்ணி எப்போ என்ன கேட்பானே தெரியாது".
"புகுந்த வீட்டுல, அவளுக்கு , கெத்து காட்டணும்னு, எங்க அம்மாவும் எங்க அண்ணனை, போட்டு படுத்துறாங்க" .


"இதுக்குக்காகவே, நான் சீக்கிரம் படிப்பு முடிச்சி வேளைக்கு போகணும், எங்க அண்ணனுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசை".
"ஆனா அண்ணா , என் காசுல கூட எதுவும் எடுக்காது பாரேன்" .
"அவர் எதுக்கும் ஆசை பட மாட்டார்", அண்ணனை நினைத்து பெருமை, அதிதியின் முகத்தில் ஒளி வீசியது .
"இனியா அண்ணி மேல அவருக்கு அப்படி ஒரு விருப்பம் இருக்குனு, அவர் எங்க அம்மா விருப்பத்துக்கே மதிப்பு தராத அப்போ தான் தெரிஞ்சிகிட்டேன்" .


"அதான் எந்த ஒரு காரணத்தை கொண்டும் இந்த கல்யாணம் தடை பட கூடாதுனு நான் நினைக்கிறன்" .
"அவர் விருப்பம் போல, அவர் திருமண வாழ்க்கையாவது அமையட்டுமே" .
"சத்தியமா எனக்கும், வீட்டுல இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாது".
"இந்த கல்யாணம் சடங்கு, நடக்கும் போதும் எல்லாம் விஷா ஏதோ ஒரு பிரச்னை செய்வா , சரி அவ திமிரு தனம் காட்டுறானு நினைச்சேனே தவிர, இப்படி ஒரு குள்ளநரி வேலை செய்து இருக்கானு, நானும் யோசிக்கலை" .


"நேற்று எதர்ச்சையா, நான் கேட்க நேர்ந்தது".
"எனக்கு என்ன செய்றதுனும் தெரியல, நீயும் நம்பிவியான்னும் தெரியல".
"கையில இந்த போன் சும்மா தானே இருக்கு, உருப்படியா ஒரு நலத்துக்கு பயன் படுத்தலாம்னு, அதான் எல்லாமே ரெகார்ட் பண்ணிட்டேன்" .
"இதால உனக்கு ஏதாவது நல்லதுன்னா, சரிதான், நான், ரெகார்ட் பண்ணேன் ."


"இதை எடுக்குறதுக்குள்ள, எனக்கு நாக்கு தள்ளுச்சுனா, பார்த்துக்கோயேன்," என்று அவள் கைகளை இங்கும் அங்கும் நீட்டி முழக்கி பேசிய விதத்தில், ரேஷ்மிக்கு சிரிப்பு வந்தது.
அவளும், "போதும் டீ, ரொம்ப பன்னாதா போல, சிரிமினல் கண்டு புடிச்ச போலீஸ் மாதிரி பில்டப் வேர,"என்று கிண்டல் அடித்து, "நீ சாதாரணமா சொல்லி இருந்தாலே, நான் நம்பி இருப்பேன்" .


"ஹ்ம் , எங்க அக்கா இப்படி சொல்லி தானே, நீ நம்பி ஏமாந்த," ரேஷ்மி முறைத்ததும், "முறைக்காத டீ, எனக்கும் என்ன செய்றதுன்னு தெரியல, எங்க அண்ணனா கிட்ட சொன்னா கூட, அவன் அக்காவை விட்டு குடுக்க மாட்டான் ."
குடும்பத்துக்காகன்னு பார்ப்பான், வேற ஏதாவது வழி சொல்லுவானே தவிர, விஷா ஆடும், ஆட்டத்துக்கு,எந்த ஒரு முடிவும் வராது ."


"நான் சொல்லி மட்டுமே இருந்தா, நீ கொஞ்சம் விஷா செயலை யோசிக்க ஆரம்பித்து இருப்பே."
"அதே, அவ, பேசுனதையே, உனக்கு இது போல, காட்டி இருந்தா, உன் சைடு எபெக்ட் இன்னும் செம்மையா இருக்கும் பாரு , அதுக்கு தான்".
"எப்படி," என்று பெருமை வேறு .
"அவ மேல செம்ம காண்டா இருக்க போல ." இனி அண்ணி, என்று அவள் மனதார, அழைக்க, ரேஷ்மியின் மனம் இடம் அளிக்க மறுத்தது .


"பின்ன இல்லைனு சொல்லவியா நீ" . அதிதி
"இவ்வளவு நாள் எப்படியோ, இப்போ அவ பசங்க வளர்ந்துட்டு வராங்க".
"கிட்ட தட்ட, என் நிலைமை தான் அக்ஷிக்கும் , அக்ஷய்க்கும்(விஷாகா பிள்ளைகள் ).
"அதிலும் ஆக்ஷிக்கு , ஒன்பது வயசு ஆகுது . அவளுக்கு வீட்டுல நடக்குறது எல்லாம் ஓரளவுக்கு புரியும் வயசு இது .


"அத்தை தான் அவங்கள பார்த்துக்குறாங்க".
"ஒரு கட்டத்துல, பசங்களுக்கும், அம்மா மேல ஏக்கம் வந்தா, அந்த வலி உனக்கு தெரியாது ரேஷ்மி".
"என் நிலைமை தான் அவங்களுக்கும்".
"எத்தனை நாள் அம்மா பாசத்துக்கு ஏங்கி இருக்கேன் தெரியுமா ".
"பொண்ணுக்கு, பொறந்து வீட்டுல உரிமை இருக்கலாம், ஆனா அது ஒரு எல்லைல இருக்கனும்" .
"இவ எப்பவுமே, எங்களை தான் அதிகாரம் செய்றா" .


"நாங்க அவ சொல்றது கேட்டு தான் நடக்குனும்னா , எப்படி தான் பொறுத்து போறது".
"அவளுக்குனு ஒரு குடும்பம் இருக்கு , அதை பற்றி எதுவும் கவலை இல்லையா" .
"பிள்ளைங்க, இரண்டு பேரையும் இன்னும் தேவகி அத்தை கூட எத்தனை காலத்துக்கு பார்க்க முடியும்".
"அவங்களுக்கும் வயசாகல" .


"ஹே, நீ ரொம்ப தெளிவா பேசுற டீ ," என்று ரேஷ்மி அதிதியை நினைத்து பெருமை கொண்டாள் .
"ஒரு சூழ்நிலை தான் இப்படி மனுஷங்கள, இப்படி உருவாக்காது ரேஷ்மி".


"நேற்று வரை, எங்க அம்மாவுக்குனு ஒரு மதிப்பு கொடுத்துட்டு இருந்தேன் . ஆனா அவங்க அடுத்த வீட்டு பொண்ணு வாழக்கையிலும் கூட விஷாக்காக விளையாடுவாங்களா , அந்த நெருப்பு என் மனசுல தீயா எரியுது டீ ."
"நீ இவளை அடக்கு, எங்க அம்மா, தானா அடங்கிடுவாங்க," என்று ஆலோசனை கொடுத்தாள்.
அதிதிக்கும், பல வருடம் கழித்து சந்தித்த தோழியிடம், அவள் மனதிலிருப்பதை பேசும் வாய்ப்பை,பயன்படுத்தி கொண்டாள்.


"நேற்று எங்க அண்ணனை, விஷாக்காக எப்படியாவது, உன்னை சமாளிக்க சொன்னாங்க, அவங்களுக்கு, எதை பற்றியும் கவலை இல்லை. விஷா நல்ல இருக்கனும், அது மட்டும் தான்."
ரேஷ்மி, இன்னும் அவளையே பார்த்து கொண்டிருந்தாள், மனதில் ஆயிரம் எண்ணங்கள். அவளின் ஏமாற்றத்திற்கு வலு சேர்க்கும் வகையில், விஷாவின் செயல், இதை எல்லாம் தாண்டி, காதலின் வலி.


"என்ன ரேஷ்மி, நானே பேசிட்டு இருக்கேன், அப்படியே இருக்க,"
" இல்லை அதி, நான் உங்க அண்ணி வாழ்க்கையில எந்த வகையில இடைஞ்சலா இருந்தேன், எனக் இப்பவும் குழப்பம்" .
"எங்க அம்மா அப்பா கிட்ட கூட நான் உரிமையா இருக்க கூடாது" அவளுக்கு மனமே ஆறவில்லை . இவளின் பொறாமைக்கு தான் பலியாவதா .


"அண்ணாவ கூட விடு, கல்யாணத்திற்கு பிறகு, மனைவிக்கு தான் முதல் உரிமை, அவ என்னிடம் நேரடியா பேசி இருந்தா கூட, நான் எங்க அண்ணனை, அவன் வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கனும் , அவன் கிட்ட இருந்து, தங்ககைன்ற உரிமையை கூட, விட்டு கொடுத்து விலகி இருந்து இருப்பேன்" .
"ஆனா, எனக்கு எல்லாமே பெஸ்ட் தரேன்னு சொல்லி சொல்லி, எங்க அப்பாவுக்கு, அவர் ஸ்டேட்டஸ், பெருமையை ஏற்றி விட்டு, என்னை அவங்க பாசத்தை பகிர விடாம செஞ்சிட்டா பார்த்தியா, இது மட்டும், நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்."


அவள் கண்களில் அவ்வளவு கோவம் .
தன்னை கட்டுக்குள் வைத்திருந்தாலும் இந்த விஷயத்தில் தன்னையும் மீறி, கண்ணீர் வெளியேறியது, ரேஷ்மிக்கு .
அதிதி, தன்னை விட, இப்பொழுது தோழியை தேற்றுவது முக்கியம் என்று உணர்ந்து, அவள் கைகளை பற்றி கொண்டு, "ஹே, உன் குடும்பத்தை பொறுத்த வரை, நீ ரொம்ப ஆசிர்வதிக்க பட்டவ ரேஷ்மி. அன்பான அப்பா அம்மா, அண்ணா எல்லாருமே உன் மேல ரொம்ப அன்பும் நம்பிக்கையும் வைத்து இருக்காங்க ."


"நீ,அவங்ககூட வளர முடியாத நிலை நினைத்து, வருத்த படுற, ஆனா, அதை நினைத்து, இந்த நிகழ் காலத்தை, இழக்காத. இப்போவும், நீ நினைத்தா, எல்லாமே மாற்றலாம் .அவர்களோடு, நீ கூடயே இருக்கலாம் இன்னும் காலம் இருக்கு.."

"ஆனா, என் நிலைமையை யோசித்து பாரு, நேற்று கூட, நான் வரும் நேரம், விஷாக்கு, நல்ல கவனிப்பு தான், என்னை ஒரு வார்த்தை, காலேஜ்ல, இருந்து வந்தாளே, சாப்டியா, என்ன ஏதுன்னு , ஒரு வார்த்தை கேட்க எங்க அம்மாவால முடியல ."

"நான் பொறாமையில் சொல்லவே இல்லை, என்னோட ஏக்கம் அது, இனியும் எனக்கு அது மாறாது."
"எங்க அண்ணனே, எனக்கு இல்லைனா, நான் ஒண்ணுமே இல்லாம போய் இருப்பேன் ."
ரேஷ்மி, அதிதியின் நிலை நினைத்து, வருந்தி, அவளை ஆறுதலாக, தோளில் கை போட்டு தேற்றினாள் .


அவளுக்கும், அதிதி கூறுவது, உண்மையே, அவள் இது போன்ற அன்பான குடும்பம், கிடைத்ததில், அவள் தன்னை கர்வமாகவே உணருவாள் .
"எனக்கு எல்லாமே புரியுது டீ , உன் அண்ணா, மீது எனக்கு காதல் வந்ததற்கு காரணமே, அவர் குடும்பத்து மீது வைத்திருக்கும், அக்கறை தான்" .


"உன்னை அப்படியே தாங்குவார், உன் அம்மா எது சொன்னாலும், அவங்களுக்காக, தலையாட்டுவார், உன் அக்காவை எங்கயும் விட்டு கொடுக்க மாட்டாரு.

ஏன் இப்போவும், அவர் காதல் பற்றி என்னிடம் சொன்னாரே, தவிர, விஷா மேல ஒரு பழியும் சொல்லலையே ," என்று காலையில் நிகழ்ந்த அனைத்தும் கூறி முடித்தாள் .

அதிதி, "அண்ணா உன்னை மீட் பன்னாறா?" என்று அதிர்ச்சியுடன், கேட்டதும்,

"ஹ்ம்ம், நீ ரிலாக்ஸ் மா, உங்க அண்ணா வாழ்க்கையில, நான் எந்த தொந்தரவும் இனி செய்ய மாட்டேன்".
"காதல் எல்லாம் யாசகம் வாங்க வேண்டிய விஷயம் இல்லை. அந்த உணர்வு உனக்கு புரியாது," என்று ரேஷ்மி


"இப்படி, நம்மையே அழிக்கிற காதல் நான் உணரவே வேண்டாம் பா," என்று அதிதி.
"நான் கிடைக்காததுக்கு, உங்க அண்ணா தான் டீ பீல், பண்ணனும்," என்று புன்னகையுடன், ரேஷ்மி, கூறினாள், மனதில் இருந்த வலி மறைத்து.
ரேஷ்மி, தன்னையே, அவளின் வேதனையில் இருந்து, கடக்க, அவள் குடும்பத்திற்காக, தன்னை மீட்டெடுக்கும் முயற்சி செய்கிறாள் .
தோழி, அவளுக்கு அவளே, தேற்றும் முயற்ச்சியில் இருப்பதை,அதிதியும் அவள் பேச்சினில் உணர்ந்து கொண்டாள் .


முடிந்த விஷயத்தை விட்டு, அதிதியும் வேறு பேச்சிற்கு மாறினாள் .
இருவரின், நட்பு வட்டம், படிப்பு, அவர்களின், அனுபவங்கள், என்று, அவர்களின், இழந்த காலத்தை மறைத்து, நிகழ் காலத்தை பற்றி சகஜமாக பேசினர் இருவரும்.
வேறு வேறு, வாழ்க்கை பயணம் இருவருக்கும் இருந்தாலும் நட்பு என்ற, புனிதமான உறவில், இருவரும்
மீண்டும் ஒன்றாக பயணம் செய்ய முடிவெடுத்தனர் .


"அதி, நான் இந்த இயர் எக்ஸாம் மட்டும் முடிச்சிட்டு, இங்க வந்து, என் ஸ்டடீஸ் ,கண்டின்யு, செய்ய போறேன்.
இப்போ நான் ஊருக்கு போறேன் . வந்து உன் அக்காவை, வகை தொகையா வஞ்சனை இல்லாம, வெச்சி செய்றேன் அப்போ தான் நான் மிஸ் பண்ண என்னோட, நாட்களுக்கு எல்லாம், ஒரு திருப்தி."


நாதனின், மகள், என்ற, கர்வம், தைரியமான பெண் என்ற மன உறுதி, அவளின் திடம், அவளை அப்படி பேச செய்தது .தன்னை மீட்டெடுக்க வைத்தது.
உண்மையில் அன்புவின் திருமணத்தை, நேரில் பார்க்கும் வலிமையற்று, அங்கு இருந்த ஒளியவே ஊருக்கு செல்ல முடிவெடுத்தாள் .
அதற்குள், தேவகியே , இருவருக்கும், ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தார்.


அன்னையின் முன்பு எதுவும், பேச வேண்டாம், என்று அதிதியிடம் கண்ணசைத்து, அவள் அன்னை எடுத்து கொண்டு வந்த பொருட்களை எல்லாம், இருவரும், ஆளுக்கு ஒன்று என்று வாங்கி கொண்டனர் .

"எவ்வளவு நேரம், நான் கூப்பிட, இரண்டு பேருக்கும் காது கேட்கலை, அதான் நானே எல்லாம் எடுத்து வந்தேன்," என்று அன்னையை, ரேஷ்மி, கட்டி கொண்டாள் .
"ஹே, என்ன டா, தூக்கம் வருதா, முதல, இந்த ஜூஸ் குடி," என்றதற்கு, இன்னும் அவர் மடியில் தலை வைத்து, முகத்தை அன்னையின் வயிற்றோடு, ஒட்டி கொண்டு, முகம் புதைத்தாள் ரேஷ்மி.


அதிதி, இது போன்ற பாசம் தனக்கு கிடைக்கவில்லையே, என்று வருந்தினாலும் தோழியின் செயலை, உணர்வு பொங்கு கண்ணெடுக்காமல், புன்னகையுடன் பார்த்துக்கொண்டே இருந்தாள் .

"இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க நீ ", என்று, அவள் சிகையை கோதி கொண்டே, கேட்க அன்னையிடம், "ஹ்ம்ம் , ஆமா அம்மா, என்ன திருப்பியும் சின்ன குழந்தையா, மாற்றி, உன் வயிற்றுக்குள்ளேயே, வெச்சிக்கோ".
"நான் ரொம்ப பாதுகாப்பா இருப்பேன்".
அன்னையை கண்டதும், அவளின் வேதனை, வார்த்தையாக வெளி வந்தது.
"ஹ்ம்ம் , சரி தான், எங்க காலம் எல்லாம் முடிஞ்சுது, இன்னும் உங்களேயே , பார்த்துட்டு இருந்தா, நீங்க எப்போ எங்களை கவனிக்கிறது, என்று சிரிப்புடன், தேவகி, அவளை எழுப்பினார் .


அதிதிக்கும், அவளுக்கும் கொண்டு வந்த உணவு பொருட்களை, கொடுத்து, சிறிது நேரம் மூவரம் பேசிக்கொண்டிருந்தனர்.
அதிதி புறப்பட்டு விட்டாள் ,அவள் இல்லத்திற்கு.
அன்னை மூலமாக, விஷாகாவுக்கு, தகவல் கடத்த பட்டது.
எப்போ, பேசி இருப்பான், ஒன்னும் தெரியலையே, என்று குழப்பத்தில் இருந்தால், விஷா .


என்ன பேசுனான், என்னை சொல்லி இருப்பானா, நான் எப்படி வீட்டுக்கு போறது.
என்று ஒரே தவிப்பு, அவளிடம் .
விஷா, அன்று மாலையே, தேர்வு முடிந்து பிறகு வருவதாக, கூறி அவள் அன்னையை, கெஞ்சி, கொஞ்சி, ஒரு வழியாக, பெங்களூரு பயணப்பட்டாள் .
அவளால், அங்கு இருக்கவே முடியவில்லை.
தனிமை தேவை பட்டது .
தோழிகளும், அவளுடன் இப்பொழுது இல்லை, ஆகையால், ஹாஸ்டலில், அவள் அறையில் சென்று முடங்கி கொண்டால், யாரையும் பார்க்க பிடிக்காமல்.
விமானத்தில் சென்றதால், அன்று இரவே, விடுதி வந்து சேர முடிந்தது.


முதலில் அன்பவுக்கு, அழைத்து, "மாமா, இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, உங்க கல்யாணத்திற்கு .
நீங்க என்னை பற்றி கவலை படமா உங்க திருமணத்தில் இன்வோல்வ் ஆகுங்க .


"இப்போ கூட, இந்த டைம்ல இருக்கும் என்ஜோய்மென்ட், என்னால நீங்க மிஸ் பண்ண கூடாது, அது என்னையே மன்னிக்காது ."
"என்னை நான் பார்த்துப்பேன் மாமா ,ஐம் நார்மல்."
"இதுல உங்க தவறு எதுவும் இல்லை, இதுல இருந்து, நான் எப்படி என்னை மீட்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்."
அவனை இந்த குற்ற உணர்ச்சியில் இருந்து, கடத்தவே, ரேஷ்மி, அவனிடம் மீண்டும் ஒரு முறை பேசினாள் .


அன்பவுக்கும், புரிய தான் செய்தது.
கல்யாண மாப்பிளை, என்ற உல்லாசமோ, மகிழிச்சியோடா, அவனால் இருக்க முடிகிறது, தினம் ஒரு பிரச்சனை, அன்னையின் புலம்பல், இப்பொழுது, ரேஷ்மி கூறியது, அவனும் அதில் அவன் தவறு இல்லை என்று நினைத்தாலும், ரேஷ்மியை பற்றிய கவலை .
அவள் பேசிய பிறகு தான், கொன்ஜம் மனம் தெளிந்து அவன் நேராக வீட்டிற்கு செல்ல பிடிக்காமல், கம்பெனிக்கு சென்று விட்டான் .


அடுத்த நாள், அவனின் பெரியம்மா, அவனுக்கு கொடுத்த சொற்பொழிவில், கம்பெனிக்கு மட்டும்,திருமணத்திற்கு என்று ஒரு வாரம் விடுமுறை எடுத்து கொண்டான் .
உண்மையில் அவனுக்கு வேளைகள் வரிசை கட்டி இருந்தது .


திருமாங்கல்யம் வாங்கியதும் , அவனின் திருமண பட்டுவேட்டி, முகுர்த்த புடவையுடன் , வைத்து, பொங்கல் செய்து பூஜை நடைபெற்றது.
அடுத்த நாள், பந்தகால் நடப்பு என்றும், அன்றில் இருந்து எங்கும் வெளியே செல்ல கூடாது, என்று வீட்டினரால் கட்டளை .


அவர்களை எல்லாம் சமாளித்து, இந்து நாட்களும் வீட்டில் இருக்க முடியாது, என்று, ட்ராவல்ஸ் சென்று வந்தான் .
விஷாகா, அவளிற்கு இருந்த குழப்பத்தில், சுமதியை பார்க்க அவள் வீட்டிற்கு கூட செல்ல முடியவில்லை.
அதில் சுமதியின் உறவினர்களின் வருகை வேறு, அவளை இம்சித்தது.


தம்பியிடம், அவன் என்ன பேசினான், என்று கேட்பதற்கு முடியாமல், தயக்கம் .
அவர்கள் முன் ஒன்றும் பேசிவிட முடியாதும் கூட .
விஷாகா இல்லை என்றால் என்ன, அன்புவின், பெரியன்னை, மகள், அன்புவுக்கு, அக்கா செய்முறை, என்று, முதல் நலங்கு ஆரம்பித்து வைத்தாள் .
அதில் சுமதி மகளை நினைத்து வருந்தினாலும், பெரிதாக காட்டிக்கொள்ள வில்லை .
விஷகா விஷயம் கேள்வி பட்டு,அதற்கும் வானத்திற்கும் பூமிக்கும் என்று குதித்தாள், அவளின் முதன்மை, பறிக்க பட்டதாக .


சுமதியின் அண்ணி , "இது நீயா செய்யணும், உனக்கு அழைப்பு கொடுப்பாங்களா, வாங்குறதுக்கு மட்டும் உரிமை இல்லை டீ மா, அதே போல செய்யணும், வந்துட்டா, சண்டைக்கு மட்டும்,எல்லாம் கேட்டு கேட்டு செய்தா, எங்க புள்ளை வாழ்க்கை, எப்படி சிறக்கும் , மனசார செய்யணும், உனக்கு அப்படினா என்னனு தெரியுமா," என்று ஒரு அதட்டல் போட்ட பின், கோபத்துடன், அங்கிருந்து சென்றாள் .

ஆனால், தேவகி அது போன்று இல்லாமல், கணவரிடம் அவரின் முறை கூறி, அடுத்த நாள் சிறப்பாகவே, செய்தார்.
நாதனுக்கு மனைவியை மீறி, எதுவும் இல்லை, அவளின் விருப்பத்திற்கு விட்டு விட்டார்.
அதிலும் விஷாகா நெஞ்சம் பொறுமியது, வீட்டினர் தன்னை இதில் முடிவு கேட்காமல் இருப்பது .


தேவகிக்கு இது எல்லா இவ செய்யணும்னு தெரியாது, என்ற கேள்வி மனதில் ஓடினாலும் , வெளியே காட்டி கொள்ளாமல், எப்பொழுதும் போல் இருந்து விட்டார்.
இனியாவின் வீட்டில், சொந்தங்களின் கலாட்டா தான், இனியா ஒவ்வொவொரு நொடியும் மகிழ்ந்தாள் சுற்றங்களுடன், நேரம் செலவளிப்பதில் .


இந்திராவின் உறவுகளும் வந்து விட்டனர் .
அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை .
அனைவரும் ஒரு ஒரு வேலை என்று, மோகனுக்கும் இந்திராவுக்கும் கை கொடுத்தனர் .


மோகனின் முதல் அண்ணனின் மனைவி, யமுனா, என்பவர் அந்த வீட்டில் பெரியவர், என்பதால், அவரிடமே, அணைத்து சடங்கு சாங்கியதையும் கேட்டு கேட்டு செய்தனர்.
மோகனின் பெரியண்ணன், பத்து வருடத்திற்கு முன்பே இறந்து விட்டார்.
இருப்பினும் குடும்பத்தில் நடக்கும் அணைத்து நிகழ்வுக்கும் முதலுரிமை யமுனாவிற்க்கே கொடுக்க பட்டது.
நம் வீட்டு பெண்ணை, நாம் தான் முதலில் மதிக்கனும் என்று, குடும்பத்தில் உள்ள அணைத்து, திருமணத்திலும் யமுனாவே முன்னின்று, திருமண நிழச்சியை பங்கேற்க வைத்தனர், மோகனின் உடன் பிறப்புக்கள்.
இதில் எல்லாம் மோகன் சொந்தங்கள், அனைவரும் நல்ல உள்ளம் கொண்டவர்களே .
அவர்களுக்குள் பூசல்கள் இருந்தாலும் வெளி ஆட்கள் முன் சொந்தத்தை எங்கும் விட்டு கொடுக்க மாட்டார்கள் .


அதிலும் இலக்கியவை, செழியன் திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு என்று அனுப்பி வைத்தது வேறு, அவள் அக்காவுடனே சுற்றி கொண்டிருந்தாள் .
தங்கைக்கு, நகை ஆடை எது அணிவது, என்று அனைத்திலும் உதவியாக இருந்தாள் .


அவளின் அத்தை மகன் தான், அவள் கிடைக்காத சோகத்தில் அடிக்கடி சோகமே உருவாக, அவள் கண்களில் படுமாறு அங்குமிங்கும் சுற்றி கொண்டிருந்தான் .
அவனை நினைத்து இளங்கோவுக்கு ஆத்திரம் வந்தது என்றால் இனியாவுக்கு, "அவன் ஏதோ காமெடி செய்றான் விடு டா," என்று கூறி தம்பியை தேற்றினாள் .


அவள் இல்லத்திலும் பூஜை, பந்த கால் நடப்பு, மூன்று நாட்கள் நலங்கு, என்று நாட்கள் அதி வேகத்தில் சென்று, மண்டபத்திற்கு செல்லும் நாளும் விடிந்தது .

வியாழன் மதியம் போல் முதலில் பெண் வீட்டார், மணடபத்திற்கு சென்று விடுவர் .
மாலை, நிச்சயம் முடிந்து, வரவேற்பு நிகழ்ச்சி என்றும், அடுத்த நாள், வெள்ளிக்கிழமை காலை, ஆறிலிருந்து, ஏழு முப்பத்திற்கு முகுர்த்தம்.


அனைவரையும் திருமணத்திற்கு அழைக்கிறேன், நட்புக்களே.
அன்புவையும் இனியாவையும் வாழ்த்துங்கள்.
திருமண கலாட்டாவில் என்னுடன் பங்கேற்குமாறு, வேண்டுகிறேன்.


 

sumee

Well-Known Member
Nice update. Reshmi vanthavudan tharamana sambavangal iruku. Aavaludan ethir parkkirom.
Marriage function kku nanga illamaya. Vanthiduvom.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top