அத்தியாயம் -4

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 4

இரவில் கலவி கொண்ட மயக்கத்தில், அதி காலை பொழுது மேகங்கள் தன்னை மறந்து துஞ்ச, அதனை விழுங்கும் பொருட்டு, சீண்டிக் கொண்டு இருந்தார், கதிரவன்.
ஒவ்வொரு முறையும் அவர் விழிக்க வைக்கத் தன் கதிர்களைப் பாய்ச்ச, துயில் கலைந்த எரிச்சலில் கூட்டம் திரட்டிய மேகம், அவரது கண்களை மூடி மூடி ஆட்டம் காட்டியது. விடுவானா கதிரிவன் ஒரே பாய்ச்சலில் தனது கதிர்களை வீசி விழிக்கச் செய்து விட்டான்.

இந்த ரம்யமான காலை வேளையில் தனது வீட்டில் அப்பம் சுட்டுக் கொண்டே தனது கணவனைப் பொரிந்து கொண்டு இருந்தார், கண்ணாம்பா.

“ஏன்னா நான் கத்திண்டே இருக்கேன். நீங்க எனக்கு என்ன ஆச்சுன்னு இருக்கேள்...”

“நான் கோவிலுக்கு வரலை கண்ணு. என்னை எதிர்பார்க்காதே! சிவாச்சாரி அத்திம்பேர் இருப்பார் நேத்து துளசி தாசனை பார்க்க போனேனோ இல்லையோ! அப்போ பார்த்தேன் அவராண்ட சொல்லி வச்சுருக்கேன், நீ போ!”
“ஏன்னா பிடிவாதம் பிடிக்கிறேள். அந்தப் பகவான் கிட்ட என்ன கோவம் வேண்டிக்கிடக்கு. எல்லாம் நம் கர்மா!”

“அது சரி தான். ஆனாலும் மனசு கேட்கலைடி. எத்தனை சகாயம் பண்ணி இருக்கேன், இந்தக் கையில்! அத்தனையும் மறந்துட்டான்டி, அந்த அம்பலவாணன்.”

“மனுஷா தெய்வ ரூபனா, பெரியவா சொல்லி இருக்கா. அந்த அம்பலத்தாணுக்குப் பதில் தான் மாப்பிள்ளை இருக்காரே!” மனைவியின் பேச்சில் ஆச்சரிய பாவனை செய்தவர்,

“ஏண்டி என் பொண்ணை அவாளுக்குக் கன்னிகா தானம் செய்து கொடுக்கறச்ச, என்ன ஆட்டம் கட்டுன. இப்போ என்னடானா மூச்சுக்கு முன்னுறு முறை மருமான் புராணம் தான் போ”

“இந்தத் திருமணத்தை ஏத்துக்க ஒரு பக்குவம் வேணுன்னா. இன்னும் சில விஷயங்களை கேட்டா மனம் ஆறமாட்டேங்கிறது. ஆனாலும் மருமான் குணம் அதை யோசிக்க விடுறதில்லை.” என்று பெருமூச்சு விட்டவர்,

“சரிண்ணா, நான் போய் நோன்பு எடுத்துட்டு வரேன்.” என்றவர் விரைந்து போகும் அவரை, புன்னகையோடு பார்த்திருந்தார், சுந்தர் பட்டர்.

அவரது புன்னகைக்குக் காரணம், அவரது மகளை என்று திருமணம் செய்து வைத்தாரோ, அன்று தான் அவர் கோவிலுக்குச் செய்த கடைசி ஊழியம். பெண்ணைத் திருமணம் செய்து வைத்து விட்டு, அவரே தன் சமூகப் பேச்சுக்கு இடமளிக்காமல், தனது பொறுப்பை அவரது தமக்கை கணவனுக்குக் கொடுத்து விட்டார்.
மனம் வலித்தாலும் நிறைந்து இருந்தது. அதன் பின் நடந்தவையில் மனம் நொந்தவர், எங்கும் செல்வதில்லை எதிலும் பற்றில்லை. மனதில் சில உறுதிகளைக் கொண்டு, வீட்டிலேயே பூஜைகள் செய்து வந்தார், இன்று வரை.
என்று பூர்ண பொற்குடமாக, தனது மகள் நிறைந்து வாழ்கிறாளோ, அன்று தான் அவர் கோவிலுக்குச் செல்வது என்ற உறுதியில் இருந்தார், மனிதர்.

அதனை எண்ணி கண்களை மூடிக் கொண்டவர் மனக்கண்ணில், கர்வமாக சிரித்து நின்றார், அம்பலத்தார்.
நேரம் வந்தது என்ற இறுமாப்போ...!

திருவாதிரை விழா களைகட்டியது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் நாளன்று, நடராஜருக்கு வெகு சிறப்பாக பூஜைகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரம் மற்றும் திருவாரூரில் நடப்பது மிகவும் சிறப்புடையது.

திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜ பெருமான் ஆரோகணித்துத் தேரில் வீதி வளம் வருவார். அக்காட்சியைக் காண கண்கள் கோடி வேண்டும். இதனை ஆருத்திரா தரிசனம் என்று சொல்வார்கள்.

பிரசாதமாக திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது,

‘திருவாதரைக்கு ஒரு வாய்களி’ என்பது ஆன்றோர் மொழி.
அது மட்டுமா நடராஜனையும் தியாகராஜர் பெருமானையும் தேவர்கள் ஒன்று குடி தரிசிப்பதாக ஐதீகம் உண்டு. அதுவும் அதிகாலைப் பொழுது, இதனை பிரம்ம முஹூர்த்தம் என்றும் அழைப்பர்

இதோ வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் தனது பக்தி என்னும் காந்த சக்தி கொண்டு தில்லைநாதன் கட்டி இழுக்க, பெண்கள் அனைவரும் அவனை நோக்கிப் படையெடுத்தனர்.
அவர்களுடன் வெகு ஆண்டுகள் கழித்து அந்தக் கோவிலில் கால் எடுத்து வைத்தாள், சிவாகம சுந்தரி.

மனம் முழுதும் சொல்ல முடியா உணர்வில் சிக்கித் தவிக்க, கண்ணில் நீர் கோர்த்தது, பெண்ணுக்கு. மலரும் நினைவுகள் அது அவள் பிறந்து, வளர்ந்து தவழ்ந்த இடம் அல்லவா.

இக்கோவிலில் தான் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை என்று ஐந்து பருவங்களைக் கடந்தாள் பெண். இன்னும் சிறப்பு என்னவென்றால், தன் வாழ்க்கையைத் தொடங்கிய இடம்.

நுழைவாயில் கடக்கும் போதே பழையவை எதிர் கொண்டு வா என்று அழைக்க, தன்னைச் சமாளித்துக் கொண்டு முன்னேறினாள்.

மாம்பழ நிற பட்டு புடவையில், இளந்தளிர் பச்சை பார்டர். கழுத்தில் கம்பீரமாகத் தொங்கிய பிள்ளையார் தாலி. நான் பெரிய நாச்சியின் குள விளக்கு என்றது.

கழுத்தை ஒட்டிய பச்சை மற்றும் வெள்ளை கல் அட்டிகை, கையில் மருதாணி கொண்ட காப்பு. காலில் மெட்டி மட்டும். அம்சமாக வந்து நின்ற பெண்ணை அனைவரும் கடக்கும் போது, கண்கள் சற்று சறுக்கியே சென்றது.

பக்கத்தில் நடந்து வந்த பொன்மொழி மெதுவாகச் சிவகாமியின் புறம் சரிந்து,
"அட்டகாசமா இருக்க, மாமி. அப்படியே அள்ளிக்கலாம் போ! யார் எடுத்த புடவை ஹ்ம்ம்...” அவள் சிவகாமி அறியாதவாறு அம்பலத்தானை புகழ,

“ரொம்பப் பீத்திக்காதே! இது மீசைக்காரன் தேர்வுன்னு நேக்கு தெரியும். அவரோட சேர்ந்துட்டு நீயும் திருட்டு வேலை செய்! சரியில்லை, ஆமாம்.”

“ஆத்தி கண்டுக்கிட்டாளே” என்று அலறிய பொன்மொழி அசடு வழிய சிரித்துக் கொண்டே
“ஹி... ஹி... எப்படி மாமி கண்டு புடுச்ச”

“ஐயே! வழியறது தொடச்சுகோ! நேக்குத் தெரியாது பார்! நீ எடுக்குற நிறமெல்லாம் கண்ணைக் கூச வைக்கும் நல்ல மஞ்சள், செவப்புனு எடுப்ப. இந்தப் புடவையைப் பார்க்கிறச்ச, நேக்கு சந்தேகம் தான்!”

“அடிப்பாவி”

“அது மட்டுமில்லை அந்த மீசைக்காரருக்கு மஞ்சள் கலைந்த பச்சை பட்டு புடவை மேல் ஏக கிறுக்கு! எல்லாம் சேர்த்து நீங்க பண்ண திருட்டுத் தனம் அம்பலம் ஆச்சு.”

ஏதோ அவர்கள் செய்ததைக் கண்டு பிடித்த பெருமை பொங்கி வழிந்தது, சிவகாமியிடம்.

“ரொம்பப் பெருமை! பெரிய போலீஸ் புலி! போடி போ...! இன்னும் கொஞ்ச நேரத்துல உன் புகுந்த வீடு வரும். அங்க காமி, உன் பெருமையை!” அவள் சொல்லவும் தான் ஞாபகம் வந்தவளாகப் பதறினாள், சிவகாமி

“ஐயோ! நான் அதை நினைக்கவே இல்லை. நேக்கு மாமியப் பார்க்க சங்கடமா இருக்கும். வாடி! அவா வரதுக்குள்ள தரிசிச்சிட்டு வந்துரலாம்.” என்றவள் பொன்மொழியின் பதிலை எதிர் பார்க்காமல் அழைத்துச் செல்ல,
அங்கே அம்பலத்தான் சன்னிதானத்தில், பெரிய நாச்சியுடன் குடும்பமே இருந்தது.

தரிசனத்துக்காகப் பக்த கொடிகள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு இடையூறு இல்லாத வாறு, அம்பலத்தான் குடும்பம் இருபக்கங்களிலும் நின்றது. அதில் உமையாள் குடும்பம் அடக்கம். ஆடித் தான் போனாள் பெண். திரும்பியும் செல்ல முடியாத சூழ்நிலை.
பொன்மொழி வேண்டுமென்றே அவளை இழுத்துக் கொண்டு சென்று, சிறு இடைவெளி விட்டு நின்று கொண்டாள். பக்தி முக்தியவளை போல் கண்களை வேறு இறுக்க மூடி கொண்டாள்.
அவளது செயலில் அதிர்ந்து பின்பு எரிச்சல் அடைந்தவள்,

"பிளான் பண்ணி பண்ணறேள். இதுவும் மீசை காரர் வேலை தானே!" என்று கடிந்தவளை

“ஆசை தாண்டி! உனக்கு நான் எப்போதும் கோவில் வர மாதிரி தான் வந்தேன்.”

“ப்ச், திருட்டுக் கூட்டம்”

“அடேயப்பா! ரொம்பத் தான் போடி.”

“கொழுப்பு கொழுப்பு” என்றவளை கலைத்தது சிவாச்சாரியின் குரல்.

“ஏன்டி பட்டு? எப்படி இருக்கே? என்னை ஞாபகம் இருக்கா? நான் உன் மாமாடி. என்னமா வளர்ந்துட்ட” என்றவர் கண்களில் நீர் தளும்பியது.
அவளைப் பார்த்த அதிர்ச்சியில் பேசி கொண்டே சென்றார், மாமா.

அவளுக்கும் நீர் வரப் பார்க்க, தன்னைச் சமாளித்துக் கொண்டவள், “நன்னா இருக்கேன். நீங்க..”

“ஹ்ம்ம்..” அதற்கு மேல் நிற்காமல் கடமை அழைக்க,

“நான் அப்புறம் பேசுறேன், என்ன? செத்த இருடி.” என்றவர்,

“யார் பெயருக்குடி அர்ச்சனை?”
அவரது கேள்விக்கு சிறு மௌனம் கொண்டவள், தலையைக் குனிந்த வாறே, “என் சாமிக்கும் என் ஆம்படையானுக்கும் மாமா.”
அவளது பதிலில், “அடி கள்ளி” என்று பொன்மொழியும்
“அப்படிப்போடு…” என்று சிவநேசனும், “சபாஷ்..” என்று சிவாச்சாரி மாமாவும் எண்ணிக் கொண்டனர்.

நிம்மதி அடைந்து குறும்பு புன்னகை வர,
"பெயர் சொல்லுடி.” வம்பு செய்தார் மாமா

அவரது சிரிப்பில் அவரைப் பார்த்தவள், முறைத்துக் கொண்டே “பெரிய நாச்சி சிம்மம் ராசி, நட்சத்திரம் பூரம், அம்பலத்தான் செட்டியார் மகரம் ராசி அவிட்ட நட்சத்திரம்”

நாத்திகள் அனைத்தும் வாய் பிளந்து நின்றது. உமையாள் சிரித்துக் கொண்டாள்.

பெரிய நாச்சி உள்ளம் குளிர அவளைத் தான் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அம்பலத்தானுக்கு கேட்கவும் வேண்டுமா என்ன? கை கொண்டு தனது மீசையை ஆசையில் நீவ, அவரது செய்கையை பார்த்து சிவநேசன் நொந்தே போனான்.

“ஏன்டா அலம்பல் நாதா உனக்கு மனசாட்சினு ஒன்னு இருக்கா? என்ன இளசு மாதிரி முறுக்கிக்கிட்டு தெரியுற. எனக்குப் பதினோரு வயசுல மகன் இருக்கான்.”

“அதுக்கு நான் என்ன மாப்புள பண்ணுறது?”

“என்ன பண்ணுறதா? நான் சொல்லுறது புரியலையா உனக்கு?”

“ஹ்ம்ம்...”

“டேய் மாப்புள்ள அநியாயம் பண்ணி வைக்காதடா! ஆறு வருஷம் அந்தப் புள்ள நிழலைக் கூடப் பார்க்காம, இப்பவும் அது வந்து மூனு மாசம் ஆச்சு. இன்னும் அதைப் போய் பார்க்கல. ஆனா அந்தப் புள்ளைய வர வைக்க, என்ன என்ன வேலை பண்ணுற நீ, எமகாதகா!”

கேலி போல் பேசினாலும், சிவநேசனுக்கு மனது ஆறவில்லை. இருபது வயதில் திருமணம் முடித்து வாழ்க்கையின் நடுப் பகுதியில் இருப்பவருக்கு, தனது நண்பன் வயது கடந்து ஆரம்பப் புள்ளையிலே நிற்பது ஆற்றாமையாக இருந்தது.
நண்பனது அவஸ்தை உணர்ந்தாலும், இனி ஒவ்வொரு நிடமும் தன் வாழ்க்கையில் பொக்கிஷம் என்பது போல், பார்வை தனது மனையாளை சுற்றியே வந்தது.

அவரது பார்வையைக் கண்ட நாத்திகளும் ஓரகத்தியும் கேலி பேசி சிரித்துக் கொண்டனர்.

“பாவம் மாப்புள, சின்னப் பிள்ளை! பார்த்தே பசி ஆத்திப்பூடாத. கோவில் வேற! கொட்டித் தனம் பண்ணா, சாமி கண்ணைக் குத்தும்.”

“ஊரான் பொண்டாட்டிய பார்த்தா தான் சாமி கண்ணை குத்தும். இது என் தோட்ட ரோசா, மாப்புள்ள!”

“இதெல்லாம் வக்கனையா பேசு! சாமியப் பாருவே!”

“அதெல்லாம் அம்பலவாணன் பார்த்துக்குவான். சுந்தரருக்கே தூது போனவர்!"

“அடப்பாவி! நீ உளறிக் கொட்டுடா மாப்புள்ள!” என்று சற்று உரக்கக் கூவ,
அதுவரை தனது மருமகளாகிய மகளைக் கண்களில் நிறைத்த பெரிய நாச்சி, இவர்களை நோக்கித் திரும்பி அம்பலத்தானை நேர் கொண்டு பார்த்து,

"நான் உங்க கிட்ட எதுவும் கேட்டதில்லை. இப்ப வரமா கேக்குறேன். எனக்கு அந்தப் புள்ள வேணும். ராசா! குடுத்துப்புடுக! புண்ணியமாப் போகும்!" என்றவர் கண்ணில் நீர்.

கதறி அழ, பெண் பிள்ளைகள் அனைத்தும் பதறிப் போனது.
அவரது பேச்சை எதிர்பார்க்காத சிவகாமி, “மாமி” என்ற கூவலுடன், அவரை அணைத்துக் கொண்டாள்.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top