அத்தியாயம் – 7

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 7

அம்பலத்தானுக்கும் சிவகாமிக்கும் இன்று விடியலைத் தரும் விடியல் போலும். இரவு முழுவதும் அம்பலத்தானின் பேச்சும் நெருக்கமும், விடிந்தால் என்ன ஆகுமோ என்ற பயமும் சேர, உறக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்ய, தவித்துப் போனாள் சிவகாமி.

ஒரு வழியாக உறக்கம் வருகையில் கிழக்கே தோன்றினான் கதிரவன், அம்பலத்தானின் கூட்டாளி போலும். இமை மூடி ஆழ்ந்த உறக்கம் செல்லும் வேளையில், கதிர்கள் கொண்டு உறக்கத்தை களவாடிச் சென்றான், பொல்லா கதிரவன்

தில்லையில் இன்று ஆனந்த தாண்டவம் என்ற நிலையில் வெகு ஜோராக இருந்தார் அம்பலத்தான். முகம் கொள்ளாப் புன்னகையுடன் ஓடி ஆடி வேலை ஏவிக் கொண்டு இருந்தார்.
மச்சினன் துணையுடன் சந்தைக்குச் சென்று மதிய உணவிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வந்து விட்டார்.

இன்னும் சில மணி நேரத்தில் அப்புச்சி தலைமையில் அனைத்து உறவினர்களும் வந்து விடுவார்கள். அதனால் ஆண்கள் பெரியவர்கள் அமர தோதாக, கம்பளம் நாற்காலியென எடுத்து வைக்க.

மீனம்மாள், சங்கரி மற்றும் அன்புவின் மகன்கள் கூட மாமனுக்கும் தனது தகப்பன்மார்களுக்கும் உதவிக் கொண்டு இருந்தனர்.
தாய் மாமன் மீது அளவு கடந்த பாசம். அதைத் தாண்டிய பயமும் இருப்பதால், ஓர் இரு வார்த்தைகளுடன் பேரன்கள் மற்ற பேத்திகளும் நிறுத்திக் கொள்ள, உலகம்மை மகள் மட்டும் வேலை செய்து கொண்டு இருந்த அம்பலத்தானிடம் வாயாடிக் கொண்டு இருந்தாள்.

வீட்டில் அது தான் கடை குட்டி. ஏழு வயதென்றாலும் நாச்சியின் பேத்தி என்பதை, தனது பேச்சில் காட்டி விடுவாள் கள்ளி.

"மாமா...."
குயிலின் குரலுக்கு மயங்கிய அந்த மாமன்,

“என்னடி சிவப்பி? மாமனுக்கு என்ன வச்சு இருக்கீக..”

“நான் உங்க மேல கோபமா இருக்கேன்.” என்றது அந்தப் புஷ்டியான முயல் குட்டி.

“ஏன்டி கோபமா இருக்குறவ?”

“நேத்திக்கு வந்த என்னை வான்னு சொல்லல. கண்டுக்கிடல. அந்தச் செவத்த ஐத்தயைப் பார்த்துகிட்டே இருக்கீக. நானும் மாமா மாமானு கையைப் புடுச்சு இழுக்கேன். ஹ்ம்ம்... பேச்சே இல்லை.
ஆண்கள் அனைவரும் கர்ம சிரத்தையாக வேலை செய்து கொண்டு இருந்தவர்கள், முயலின் பேச்சில் கல கலவெனச் சிரிக்க…

அடுக்களைக்குள் வேலை செய்து கொண்டு இருந்த பெண்கள், கொல்லெனச் சிரித்து வைத்தனர்.

சிவகாமி சங்கடத்துடன் நெளிந்து கொண்டே உலகை கடிந்து கொண்டாள்.

“என்னடி சிரிப்பு. பிள்ளையைப் பெக்கச் சொன்னா குட்டி சாத்தானை பெத்து வச்சுயிருக்கே! அப்ப..ப்பா... என்ன வாய்? நேத்துல இருந்து என்கிட்ட வம்பு செய்யுறா உன் பொண்ணு, நோக்கு தெரியுமா?”

“நீ அவ கிட்ட, அவுக மாமாவ திட்டுனா, அப்படிதான் சொல்லுவா! அண்ணேங்கிட்ட பேசுற ஒரே ஆளு என் பொண்ணு தான். நேருக்கு நேர் நின்று பேசுவா! சண்டை கட்டுவா! ஆனா, விட்டுக் கொடுக்க மாட்டா. இரண்டும் கூட்டாளி.” பெருமை பொங்க உலகம்மை பேச….

“நல்ல கூட்டு..” என்று செல்லமாக அலுத்துக் கொண்டாள் சிவகாமி. செவி மட்டும் சின்னவளிடமே இருந்தது.

“ப்ச் மாமா.... என்னைப் பாருங்க”

“என்னடி சிவப்பி அலம்பு பண்ணுறவ?”

“இனிமே சிவப்பி சொல்லாத! அந்த ஐத்த, என்னை விடச் சிவப்பா இருக்காக.”

“ஓ! அப்போ நீ சின்னச் சிவப்பி. அவ பெரிய சிவப்பிண்டு வச்சுக்குவோம்.”
கையை அகல விரித்து சொன்ன மாமனை, கண்ணைச் சுருக்கிக் கொண்டு பார்த்த முயல் குட்டி.

“ஹான்! அம்புட்டு பெரிய சிவப்பி இல்லை. என்னைவிட இரண்டு அடி தான் பெருசு.” என்று மாமன் கையை சுருக்கிக் காட்டியது.
வழமை போல் வெடித்துச் சிரித்தார் அம்பலத்தார். இதனைக் கேட்டுக் கொண்டு இருந்த சிவகாமி, உலகம்மையை அடித்தே விட்டாள்.

“அப்படியே வளர்த்து வச்சு இருக்கா. பாவி பாவி என்னமா பேசுறா பார்! நான் குள்ளம்னு சொல்லுறாடி.”
சிணுங்கிய மாமியைப் பார்த்து அடக்க மாட்டாமல்

“ஹா.. ஹா.. ஹா…!” பெண்கள் அனைத்தும் ஆர்ப்பாட்டமாகச் சிரித்தது.

“ஏன்டி சிவப்பி, என் பொஞ்சாதி மானத்தை வாங்குற. சும்மாவே மிளகா கடிச்சவளாட்டம் காரமா இருக்கா. நீ வேற!” போலியாக அலுத்துக் கொள்ள,
அதற்கும் ஏதோ வாயாட வந்த முயலின் பேச்சை நிறுத்தியது, வாசலில் கேட்ட பேருந்துச் சத்தம்.

“ஐ! தாத்தா வந்துட்டாக.” முயல் துள்ளி ஓட, அவள் பின்னால் அம்பலத்தானும் ஏனைய ஆண்களும் சென்றனர்.

பேருந்தா? ஆம், அதுவும் இரண்டு அப்புச்சி தலைமையில் அறுபது தலைக்கட்டும் ஆஜர்.

குடும்பத்துக்கு ஓர் கணவன் மனைவி கணக்கில் நூறைத் தாண்டியது கூட்டம்.

“தம்பி துரை, அம்புட்டு பொடிசையும் மச்சிக்கு கூட்டிட்டுப் போ! நான் சொல்லுற வரை கிழ வரக் கூடாது என்ன சாமி!” என்று மீனம்மாள் தனது பெரிய மகனிடம் சொல்ல, அவனும் அக்கூட்டத்தின் பெரிய பிள்ளையாக அனைவரையும் அள்ளி கொண்டு சென்றான்.

பெண்கள் அனைவரும் கூடத்தில் வந்து உறவினர்களை வரவேற்க, சிவகாமி ஒரு மூலையில் பதுங்கிக் கொண்டாள்.
பெரிய நாச்சி வந்தவர் இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி, “வாங்க மக்கா! என் மக்களுக்கு வழி பண்ணித் தாங்க சாமி!” என்று உருக்கமாக கண்ணீருடன் நின்றவரை நெருங்கிய சுப்பு,
“என்ன அக்கா நீங்க, ஒரு வழி தானே! பண்ணிப் புடலாம்.” என்றவர் சிறிதும் நேரம் கடத்தாமல்.

“அம்பலம், உன் மாமியார் மாமனார் வர சொல்லிப்புட்டீகளா?”

“செல்வம் மச்சான் போயிருக்காக அப்புச்சி. உள்ளர போலாம். எல்லாரும் வாங்க” அம்பலத்தான் பொதுவாக அழைக்க.

“சரிதான்” என்றவர் உள்ள சென்று அமர, வந்த அனைவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
“ஏன் சரளா மதனி தான, எப்படி இருக்கவ” மீனா கேட்க
“சுகம் தான். மீனா எங்க புள்ளைங்களக் காணோம்.”

“அம்புட்டையும் பெரியவன் பொறுப்புல, மச்சில விளையாடுது.”

“சரி வா, வந்தவங்களுக்கு தண்ணி கொடுப்போம்.”

“காப்பி சூடா இருக்கு, ராணி மதனி”

“வேணாம் அப்புச்சி. வர வழில சாப்பிட வச்சுத்தேன் கூட்டியாந்தாக. எங்க சிவாப் பொண்ணு?”

“உள்ளார கிரிஜா அக்கா.”

“என்ன உடுத்தி இருக்கு?” கேட்டு கொண்டே உள்ளே செல்ல,
“சாதா புடவத்தேன்”

“அதுகிட்ட இதைக் குடு. நான் மதனி கிட்ட போயி நகை நட்டு வாங்கியாறேன். பொண்ண ஜோடிச்சு விடு மீனா.” என்ற ராணி
சங்கரியிடம் திரும்பி சிவா ஆச்சி, மருது ஆச்சி, சொக்கி பெரியம்மா, காலா ஐத்தனு முப்பது பொம்பளைங்க ஆள் இருக்கு. அம்புட்டு பேருக்கும் பூ குடு சாமி” என்று ஏவியவர், நிற்க நேரமின்றி பெரிய நாச்சியை நோக்கிச் சென்றார்.

வீட்டுக்கு மூப்பனாக வரும் வழியில், அனைத்தையும் சொல்லித் தான் அழைத்து வந்தார், சுப்பு. பெண்களுக்கும் என்ன பேசுவது ஆண்களுக்கும் என்ன பேசுவது என்று சொல்லியவர், அவர்களது கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டார்.

வேறு இனம் என்பதால் பதமாகத் தான் பேச வேண்டும். கண்ணாடி பாத்திரம் கையாளும் நிலையில் பெரியவர்கள் அனைவரும்.
(கதை 1967 தொடங்கி 1980 வரை மக்களே! இன்று உள்ளது போல் அந்தக் காலத்தில் கலப்பு மனம் என்பது அத்தி பூ. அதிலும் சில முன்னோர்கள் வாழ்ந்து தான் காட்டினர்)

மணப்பெண்ணாக அலங்கரிக்கப் பட்ட சிவகாமி, பதுமையாக சபைக்கு அழைத்து வர, சல சலத்துக் கொண்டு இருந்த கூட்டம் அனைத்தும், ஓர் நொடி மௌனம் கொண்டது.
அனைவருக்கும் ஆறு வருடத்திற்கு முன் பாவாடை தாவணியில் பார்த்த பெண்ணா இது என்று வாய் பிளந்தனர். சும்மாவா? பிறந்தகம் கொடுத்த அழகும், களையும், படிப்பு கொடுத்த அறிவும், பெரிய நாச்சி கொடுத்த கம்பீரமும், தைரியமும் பெற்று அழகே உருவாக வந்து நின்ற சிவகாமியைப் பார்த்து, அதிசயித்து நின்றனர்.

அம்பலத்தானுக்கு சித்தப்பன் முறையில் உள்ள ஒருத்தர்,
"அப்புச்சி, என்ன பொண்ணு இம்புட்டு அழகா இருக்கு. அம்பலத்தான் ஆறு வருசத்தை வீணாக்கிப் புட்டான்.” அப்புச்சி காதை கடிக்க

“ஹ்ம்ம்!.... நடக்கனும் இருந்திருக்கு, அன்பு. எல்லாம் விதி! நம்ம கைல என்ன இருக்கு? ஆனா, அன்னைக்கு நம்ப அவுங்களுக்குத் துணையா நின்னு இருக்கலாம்.”

“அம்பலத்தானே வேணான்னு சொல்லும் போது, நம்ப என்ன செய்ய முடியும் அப்புச்சி.”

“அதுவும் சரிதான். ஆனா கிளியாட்டம் புள்ள, மனசு கேட்கல அன்பு. எங்க அக்கா அந்தக் காலத்துல ஐத்தானை விட்டுப் புட்டு தனுச்சு நின்னப்ப அம்புட்டு தகிரியாம இருந்துச்சு. அம்புட்டுப் பக்குவமா பேசி, பாங்கா குடும்பத்தைக் கொண்டு வந்துச்சு. அது மாதிரியே இருக்கு, இந்த சிவா பாப்பா.

எங்க அக்கா நாச்சிக்கு அடுத்து, குடும்பத்துக்கு இந்த பேச்சித்தேன் கட்டி ஆளப் போறா பாரு.”

“கண்ணு குளிர்ந்தா சரிதான் அப்புச்சி.”

இவர்கள் பேசி கொண்டு இருக்க, அப்புச்சி மனைவி மீனாள் பேச்சை தொடங்கினர்

“அம்பலம் நல்ல நேரம் போகுது சாமி. பொண்ணு பக்கத்துல வந்து நில்லு.” என்றவர் சக்தியிடம் திரும்பி,

“சக்தி, அம்புட்டு பேருக்கும் அட்சதை கொடு!
நாச்சி மதனி முன்னாடி வாங்க!”
வீட்டுக்கு பெரிய பெண்மணியாக ஆணைகளை பிறப்பிக்க, காரியம் படு வேகமாக நடந்தது. அதற்குள் சிவநேசன் சுந்தர் பட்டர் கண்ணாம்பாளுடன் உள்ளே நுழைந்தார்.

முதல் நாளே அம்பலத்தான் முறையாகச் சென்று பேசி வந்து விட்டார்.

ஓர் இரு வரிகளில் 'நாளைக்கி வீட்டு பெரியவுக முன்னாடி, எண்ட கண்ணாலத்தை உறுதி செய்யுறேன். காலம் முழுக்க சிவகாமி தான் பொஞ்சாதி!’ என்றவர் எழுந்து நின்று வரேன் என்று வெளியேறி விட்டார்.

ஒரு தண்ணீர் கூடக் குடிக்கவில்லை, கொடுக்கப் படவுமில்லை.

அந்த அளவிற்கு பெரியவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர். பாவம், நீண்ட நெடிய வருடத்திற்கு பின் மருமான் தரிசனம். அதுவும் நற் செய்தியுடன் சொல்லவா வேண்டும்.

வாங்க! வாங்க! அனைவரும் மரியாதை நிமித்தம் கை கூப்பி அழைக்க, அனைவருக்கும் பொதுவாக, கை கூப்பினார், சுந்தர் பட்டர்.

கண்ணாம்பாள் மயக்கத்தில் இருந்தார் போலும். அம்பலத்தானும் சிவகாம சுந்தரியும் திருமணக் கோலத்தில் இருக்க, மற்றவர்கள் எல்லாம் மாயமாகிப் போயினர் அந்தத் தாய்க்கு.

மீனாள் “வாங்கம்மா” என்று பெண்கள் புறம் கண்ணம்பாளை இழுத்துக் கொண்டார்.

“அம்பலம் பெரியவுக அம்புட்டு பேரையும் ஒட்டுக்கா கும்புடு சாமி.” என்க.

சிவகாமியின் கை பற்றி அனைவரையும் வணங்க, அனைவரும் அட்சதை தூவி வாழ்த்தினர். இரு தரப்பு பெற்றவர்களின் நிலை தான் மோசம், கண் கலங்கி பேச்சற்று நின்றனர்.

பின்பு பால் பழம் கொடுத்து, சில சடங்குகள் செய்து, பெண்கள் குழு சிவகாமியை தங்கள் புறம் அழைத்துக் கொள்ள..

அம்பலத்தான் எதிரில் அமர்ந்தார். பெரிய நாச்சியின் வீட்டில் குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து நூற்றி ஐம்பதை தாண்டியது ஜன தொகை. மாடியில் உள்ள பொடிசுகள் கூட்டம் ஆர்வமாக மேலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் வரையில் இது விழா போலும்.

வீட்டுக்கு பெரியவராக அப்புச்சி பேச்சைத் தொடங்கினார்.
“சுத்தி வளைச்சு பேச விரும்பல. கூடியது என்ன செய்திக்குனு எல்லாருக்கும் தெரியும். நான் உங்களுக்கு முன்ன சொன்னது தான்.

இதே இடத்துல ஆறு வருசத்துக்கு முன்னாடி ஒரு சங்கடம். நம்ம சிவா பாப்பா, இந்த வூட்ட விட்டு போச்சு. அவுக பக்கம் இருக்க நியாயம் சரிதான். ஆனா, நாணயம் மாதிரி இரண்டு பக்கமும் நியாயம் இருக்கலாம் தானே! அம்பலத்தான் பக்கமும் நியாயம் இருக்குன்னு எனக்குத் தோணுது.”

அவர் பேச்சை முடிக்கும் முன்பே பாய்ந்து வந்தாள் சிவகாமி.
“என்ன நியாயத்தைக் கண்டேள் உங்க அம்பலத்தானிடம்?”

“சிவா…!”

“அப்பாடி! மாபுள்ள, நல்ல வேலை உன் பொஞ்சாதி கோபத்துல போடா வாடானு சொல்லல. பெயரை சொல்லி புடுச்சு. அந்த நடராஜன் மானத்தைக் காப்பாத்திட்டான் அம்பலம்.”

“ஈ...... ஈ...” வாய் கொள்ளப் புன்னகையுடன் நமது சிவநேசன்.
 
Last edited:

Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
அத்தனை சொந்தங்களுக்கு
நடுவில் ஜோடியாய்
தம்பதிகள் காட்சியே
அழகாக இருக்கும் போல

இது என்ன சிவகாமி
கோபத்தோட அம்பலத்தான
சபையில வம்பு வளக்கபோறாளா :ROFLMAO::D:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top