அத்தியாயம் – 15

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான்

அத்தியாயம் – 15

இன்றைய விடியல் வேம்புவிற்கு உண்மையான விடியல் போலும் நேற்றைய மன உளைச்சல் கலையெடுத்து இருந்தது சீயானின் நெருக்கம் இருந்தும் சற்றுப் பயமாகத் தான் இருந்தது.

ஊர் கூடி நிற்கும் இடத்தில் கடந்த காலத்தின் இச்சங்களை அம்பல படுத்துவது அத்தனை சரியாகத் தெரியவில்லை மீண்டும் ஓர் பேச்சுத் தன்னைக் கொண்டு என்ற எண்ணமே பெண்ணைச் சோர்வடையச் செய்தது இருந்தும் சரியான நேரத்துக்கு கிளம்பி சென்றுவிட்டாள் வேம்பு.

பத்து மணியளவில் பஞ்சாயத்து என்பதால் விரைவாகச் சென்று இருந்தான் சீயான் முதல் நாளே அனைத்தையும் முத்துக்குச் சொல்லி சென்றதால் அவனும் சரியாக வந்து விட்டான்.

முனியாண்டி தலைமையில் கூட்டம் அதுவும் அவர் குடும்பத்திலே என்பதால் பார்வையாளராக அமர்ந்தது இருந்தார்.

பொன்னுரங்கமும் அவர் மனைவியும் தங்களது சக்தி அனைத்தையும் இழந்து விட்டது போல் நின்றுந்தனர்.பிச்சியும் அவரது தாயும் வேம்புவுடன் நின்று கொள்ள அவரக்ளுக்கு எதிர் புறம் வேம்புவின் இறந்த காலத்தின் பெற்றவர்கள் நின்றுந்தனர்.

சபையில் அமர்ந்திருந்த பெரியவர் எழுந்து சபைக்கு ஓர் வணக்கம் வைத்துப் பேச்சை தொடங்கினர் “எல்லாருக்கும் வணக்கம் நம்ப ஊர் பஞ்சாயத்து கூடி இருக்கு அதுவும் நம்ப ஐயா முனியாண்டி குடும்பத்துல பிராடு கொடுத்தது நம்ப முனியாண்டி ஐயா மவன் யாரு மேலன்னா வேம்பு முதல் திருமணம் பண்ண பையன் மேல” இதைச் சொல்லும் பொதுத் தலையைக் குனிந்து கொண்டாள் வேம்பு.

இது மாதிரி பேச்சுக்கு தானே அவள் பயந்தது அவள் நிலை உணர்ந்தாலும் சீயான் அமைதியாக இருந்தான்.சில வலிகளுக்கு கசப்பு மருந்தை கொண்டு தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.

“ஏப்பா சீயான் என்ன பிராடு நீ சொல்லு” என்றதும் முன்னால் வந்த சீயான்

“எல்லாருக்கும் வணக்கம் என் மாமன் பொண்ணுகுறதை விட இனி எந்தப் பொண்ணும் பாதிக்கக் கூடாதுனு தான் இந்தப் பஞ்சாயத்தைக் கூட்டினேன் இல்லனா எங்க வுட்டு செய்தி அதுவும் என் வருங்காலப் பொஞ்சாதிய பத்தி பொதுவுல பேசுறதுக்கு ஒன்னும் இல்லை” என்றவன் சில நேர மௌனங்களுக்குப் பிறகு.

தனது எதிரில் நிற்கும் கணவன் மனைவியைச் சுட்டி காட்டி “இதா இருக்காங்களே இவங்க என் மாமன் பொண்ண அவங்க சீக்காளி மகனுக்குக் கண்ணாலம் பண்ணி அவ வாழ்க்கையைக் கெடுத்து புட்டாக” கோபத்தை காட்ட முடியாத இயலாமையில் சீயான்

“தெளிவா சொல்லு சீயான் அம்புட்டு சனத்துக்கும் புரிய வேண்டாமா”

“ஐயா இவங்க மகனுக்குச் சக்கரை நோய் இருந்து இருக்கு கண்ணாலத்துக்கு முன்னாடியே, அதை மறைச்சு பொண்ணு கட்டி இருக்காக” சீயான் பேசி கொண்டு இருக்கும் போதே மகனை பெற்ற மகராசி துள்ளி கொண்டு வந்தாள்

“நாங்களா வீடு தேடி வந்து பொண்ணு கேட்டோம் என் மவன் மவுச பார்த்து பட்டணத்து பையன்னு உங்க மாமன்காரன் தான் என் வூட்டுக்கு நடையோ நடைனு நடந்து பொண்ணு கேட்டான்” என்றதும் பொண்ணுரெங்கம் குலுங்கி அழுக தனது மனைவியின் கையைப் பிடித்து இழுத்து அடக்கினார் அவரது கணவன்.

அந்த பெண்ணின் பேச்சில் கோபம் வர பெரியவர் “என்ன சோமசுந்தரம் மவனே நீ இந்த ஊர் தானே பட்டணத்துக்குப் பொழைக்கப் போனா ஊர் மக்களும் மரியாதையும் மறந்துடுமா பொஞ்சாதிய பேச விட்டு வெடிக்கப் பார்க்குற” பெரியவர் கோபமாகக் கேட்க தலையைக் குனிந்து நின்றார் மனிதர்.

“நீ சொல்லு சீயான்”

“எனக்கும் வேம்புக்கும் மாமன் மகள் அத்தை மகன் உறவு மட்டுமே அதான் நிச்சியம் பண்ணும் பொது நான் எதுவும் பண்ணல அன்னக்கி நடந்த வற்றைத் தெளிவாக எடுத்து சொல்ல அனைவருக்கும் ஒருமாதிரி ஆகி விட்டது.

கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் நினைவு கூர்ந்தனர் மக்கள் இது தெரியாமல் தாங்கள் பேசிய பேச்சு

அதுமட்டும் இல்ல கண்ணாலம் ஆகி பட்டணத்துல நான் பார்க்கும் பொதுச் சீக்காளி மனுஷனை வச்சுக்கிட்டு அழுதுகிட்டு இருக்கு நானும் ஐயன் கிட்ட வந்து சொல்லி இரண்டும் பெரும் விசாரிச்சுப் பொதுத் தான் செய்தி தெரிஞ்சுது என்றவன் வேம்பு பட்ட துன்பத்தைச் சொல்ல துடித்து நின்றனர் பெற்றவர்கள்.

அங்காயி சத்தம் போட்டு கதறி அழ ஊரே சற்று நடுங்கி தான் போனது பெண்ணை பெற்றவர்கள் இனி பயந்தே தான் ஆக வேண்டும் என்ற நிலை போலும்.

“என்னய்யா இது சொந்த ஊரே காரனே ஏமாத்துனா மத்தவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க தலையைக் குனிஞ்சு நின்னா ஆச்சா பதிலை சொல்லு” பெரியவர் ஆதங்கமாக அதட்ட”

ஐயா! எல்லாரும் மனுச்சுடுங்க ராஜாவாட்டம் பிள்ளை, நல்ல படிப்பு, வேலை இருந்து வாழ கொடுத்துவைக்கலை அவன் வரிசையாவது பார்த்துடலாம் தான் நானும் என் பொஞ்சாதியும் கண்ணாலம் பண்ணி வச்சோம்”

“அது சரி உம்ம வதைக்கு எங்க பொண்ணு புனையா’ கணவனைக் கேள்வி கேட்பதை தாங்க முடியாமல்

“இப்போ என்ன உங்க பொண்ணு இரண்டவது கண்ணாலம் கட்டி நல்லாத்தானே இருக்கு நாந்தேன் மவன பறி கொடுத்துட்டு நிக்கிறேன்” அங்காரமாகக் கத்த கூட்டத்தில் அத்தனை சலசலப்பு என்ன பெண் இவள்?

“சீயான் இது வேலைக்கு ஆகாது ஒரு பொண்ணு வாழ்க்கையே போச்சு அதுகூட யோசிக்காம இந்தப் பொம்பள இந்தக் கத்து கத்துது இது சரி வராது நீ சட்டப்படி பாரு” என்றதும் பதறியவர்

ஐயா! என் மவன் உசுருக்கு போராட ஆரம்பிச்சதுல இருந்து அவ அப்படிதான் இருக்கா அவளுக்காக நான் எல்லாருகிட்டையும் மன்னிப்புக் கேட்டுக்கிடுறேன் நாங்க இந்த ஊர் பக்கமே வரல விட்டுருங்க” என்றவர் சபையில் அத்தனை பேருக்கு முன்னாடி கை கூப்பி விழுந்து விட்டார் கணவனது செயலில் அதிர்ந்த அவரது மனைவி பெருங்குரலெடுத்து அழுக.

அனைவரும் பார்த்திருந்தனர் தவிர யாரும் எதுவும் பேசவில்லை சீயான் தான் அவரை எழுப்பி விட்டான்.

ஐயா! என் நோக்கம் யாரையும் சங்கடப்படுத்துறது இல்லை வேம்புக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது அதானுக என்ன எண்ணம்.

வசதி வாய்ப்பு இருந்தும் ஊருல பெரிய தலை கட்டு எங்க அப்பாவும் மாமாவும் என் குடும்பத்துக்கே இந்த நிலைமைன்னா மத்தவங்கள என்ன சொல்லுறது

“சரிதான் சாமி”

“ஆசைக்குப் பொண்ணு பெத்து பொத்தி பொத்தி அருமை பெருமையா வளர்ந்து அடுத்தவனுக்குக் கொடுத்து அது சீரழியவா சொல்லுங்க.

படிப்பு வேலை இருந்தா மட்டும் போதுமா அதுவும் இந்தக் காலத்துல இனி ஒவ்வொருத்தவனுக்கு ரெத்த பரி சோதனை பண்ணி தான் கண்ணாலம் பண்ணனும் போல”

“அதைச் சொல்லு சீயான்”

“வேம்பு நமக்கு ஒரு பாடம் அது மனசு என்ன வலிக்கும் தப்பே பண்ணாம சிலுவை சுமக்குற வலி இருக்கே அப்...பா அதைச் சொல்லி மாளாது அப்படி இருந்தும் எனக்காகப் பஞ்சாயத்துல வந்து நிக்கிறா ஏன் ? இனி இது போல யாருக்கும் நடக்கக் கூடாதுங்குற ஒரே காரணம் தான்.

“சரிதான் சீயான்” என்றவர் தனது அருகில் கண்கள் சிவக்க அமர்ந்திருக்கும் முனியாண்டியை பார்த்து “இனி நீ சொல்லு முனியாண்டி நீ என்ன சொன்னாலும் பஞ்சாயத்தும் ஊர் மக்களும் கட்டுப்படுறோம் என்னப்பா சொல்லுறீங்க என்று மக்களைப் பார்த்து கேட்க

அவர்களும் ஆமோதித்தனர் ஓர் நிமிடம் அந்தக் கணவன் மனைவியைப் பார்த்தவர் “இனி உங்களுக்கும் இந்த ஊருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை நீங்க இருந்த தடயமே இருக்கக் கூடாது உங்கள கொன்னு புதைந்த வெறி இருக்கும் இருந்தும் பொண்ணு வாழ்க்கை கையைக் கட்டி போடுது இது தலைமுறை சாபம் போல “என்க

மறுவார்த்தை பேசாமல் கையெடுத்து கும்பிட்டவர் தனது மனைவியை இழுத்துக் கொண்டு செல்ல கூட்டத்தில் அத்தனை வசவு அவர்களுக்கு.அவர்கள் சென்றதும் மக்கள் அனைவரையும் பார்த்தவர்

இதுக்கு மேல பேச ஒண்ணுமில்லை வேம்பு இனி என் மருமக என் மகன் கேட்டதுக்காகத் தான் இந்தப் பஞ்சாயத்து இல்லனா எங்க வூட்டு வுட்டு புள்ளய இங்கன நிறுத்தி இருக்க மாட்டேன் ............ எல்லாரும் கண்ணாலத்துக்கு வந்துருங்க” என்றவர் பெரியவர்களைத் பார்த்து மரியாதையை நிமித்தம் வரேன் என்றவர் வீட்டை நோக்கி நடந்து விட்டார்.

இனி தாங்காது என்பது அவரது எண்ணம் அவர் பின்னே பொண்ணுரெங்கம்,அங்காயி,பிச்சி,முத்து என அனைவரும் சென்றனர்

அவர் செல்வதை பார்த்து கொண்டே தொடர்ந்தான் சீயான் ஐயா! இனி நம்ப ஊருல இல்ல உறவுல மாப்பிள்ளை பார்த்தா இளந்தாரி பசங்கள விட்டு விசாரிங்க முடிஞ்ச அளவுக்குக் குடும்பத்தைச் சுத்தி விசாரிங்க ரெத்த பரிசோதனை எல்லாம் சாத்தியமானு தெரியல ஆனா சாத்திய படுற மாதிரி பல வழிகளை ஊர் கட்டுப்பாடா கொண்டு வரலாம்,

சரிதான் சீயான் எந்த வீட்டுல கண்ணாலம் முடிவு பண்ணாலும் ஊர் சார்புல நாலு பசங்கள வச்சு விசாரிச்சு புடுவோம்

“நன்றிங்க” என்றவன் அத்துடன் பேச்சை முடித்துக் கொள்ள அந்தப் பெரியவர் தொடர்ந்தார்

“கேட்டுக்கிடுங்க செய்தியை என் வயசுக்கு இந்த அனுபவம் ரொம்பப் புதுசு பொண்ண பெத்த மகராசன் அம்புட்டு பெரும் தூக்கத்துல கூட விழிப்பா இருக்கனும் போல சூழல் அப்புடி ஆகி போச்சு கலியுக சாமி இது........ வசதி படைச்ச குடும்பம் அங்காளி பங்காளி இம்புட்டு பேர் இருந்தும் அந்தப் புள்ளைய காப்பாத்த முடியல,

வசதி இல்லாத வீட்டு புள்ள சாதி சனம் துணையும் இல்லனா என்ன பண்ணுறது சொல்லுங்க வேம்புக்கு சீயான் கிடைச்சான் மத்தவங்களுக்கு அது சாத்தியமா? பெரியவர் கேள்வியில் உள்ள நியாயம் அனைவரையும் கதி கலங்க வைத்தது.

“அதுனால இனி வரும் காலத்துல பெரியவங்க ஒன்னு கூடி அடுத்த வார பொதுக்கூட்டத்தில் சில முடிவுகளை எடுக்கலாம் பொறுப்பான இளவட்டம் பசங்கள வச்சுப் பார்த்துக்கிடலாம் என்ன சொல்லுறீங்க” என்றதும் கூட்டம் எதிர்ப்பில்லாமல் ஆதரித்தது.

“சரிப்பா பிறவு பார்ப்போம் கூட்டத்தை முடுச்சுக்கிடலாம்” என்றவர் கை கூப்பிச் செல்ல அவருடன் பேசி கொண்டே கூட்டம் கலைந்து சென்றது அனைவரும் சென்றவுடன் சில மணி நேரத்துல அத்தனை அமைதி அந்த இடத்தில் தலையை உயர்த்திய வேம்பு எஞ்சி நின்ற சீயானை ஓடி வந்து அனைத்து கொண்டாள்.

Nirmala senthilkumar

Nirmala vandhachu
Welcome back dhanuja ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top