அத்தியாயம் - 9

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
சீமை சீயான் – 9

நடந்தவை பேசி ரணத்தைக் கீறி தங்களது வலியை மறைக்கப் போராடினார்கள் இருவரும் மேலும் பெருமூச்சுடன் தொடர்ந்தான் சீயான்.நானும் ஐயாவும் வரதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு அவன் கடந்த காலத்தை முடிக்க மௌனமாகக் கண்ணீர் சிந்தினாள் வேம்பு. அவளது அழுகை அவனுக்கு எரிச்சலை தான் தந்தது.

அவள் வாழ்க்கையை அவளே சிக்கல் ஆகிக்கொண்டு பேசும் நேரம் பேசாமல் இப்போது அழுதால் எல்லாம் சரியாகி விடுமா என்ன? சீயானுக்கு ஒன்று புரியவில்லை காலம் மட்டுமே முடிவு செய்யும் ஒரு விடயத்தை அவள் எப்படிக் கணிக்க முடியும் காலமும் விதியும் சேர்ந்தால் அங்கே பலப்படும் நமது தலை எழுத்து.

“எதுக்குடி இப்படி பிழிந்து பிழிந்து அழகுற”

அவனது பேச்சில் அழுகை மட்டுப்படக் கோபமாக அவனை பார்த்தவள் “அழுகாம என்ன பண்ணுவாங்க சொல்லுங்க என்னால நடந்தத மறக்க முடியல” அவளது பேச்சில் அப்படி ஒரு கோபம் மூண்டது நமது சீயானுக்கு.

“ஓ! அப்படி வாழ்ந்தியோ அவன் கூட மறக்க முடியாத அளவுக்கு” அவள் தனது விதியை நொந்து சொல்ல அவனோ வேறு விதமாக எண்ணி கொண்டு வதைத்தான்.

“நல்ல பேசுங்க என்ன எம்புட்டுத் தூரம் பேச முடியுமோ பேசுங்க அன்னக்கி நான் வாயத் திறக்காம இருந்ததுக்கு எனக்கு இந்தப் பேச்சு வேணும் உப்ப தின்னுபுட்டேன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்”

“எதுக்கு எதடி எனகூற்றவ”

“நீங்க மட்டும் பேசுறீங்க அவர் முகம் கூட என் மனுசுல பதியல ஒரு உயிர் அதுவும் எனக்கு நெருக்கமான உறவு கொண்ட உயிர்.கண்ணு முன்னாடி துடித்து இறக்கும் போது இப்படி இருக்கும் யோசுச்சு பாருங்க.

அவன் நல்லவனோ? கெட்டவனோ? என் வாழ்க்கைக்குள்ள வந்துட்டானே என்ன பண்ண..... என்னால யாரையும் எதிர்த்து நிற்க முடுஞ்சுதா அந்த இயலாமை அழுது தீக்குறேன்”

சிறு பிள்ளையாய் கோபம் கொண்டு பேசியவளை பார்க்க உயிர் வதை தான் கொண்டவனுக்கு.அவளது நிலை சீயானுக்கும் புரிய தான் செய்தது இருந்தாலும் அதையே எண்ணி காலம் கடத்தினால் அந்த எரிச்சலில் தான் அவளை வார்த்தையால் நெறிப்பது.

அவளது அழுகை குறைந்து அவள் விசும்பி கொண்டே இருக்க வேம்புவிற்கு எதிர் திசையில் இருந்தவன் அவள் புறம் வந்து நெருங்கி அமர்ந்து அவள் கண்ணீரை துடைத்தான்.

"அழுகாதடி எனக்குக் கோவம் வரும்போதெல்லாம் திட்டுவேன் கண்டுக்காத. நடந்ததை மறக்க முடியல உங்க அப்பாரு என்ன எப்படி அவமான படுத்துனாரு அதுக்கு மேல நம்பச் சனம் நான் என்னோமோ உன் பின்னாடியே சுத்துன மாதிரியும் நீ என்ன வறுஞ்சு வறுஞ்சு காதோல் பண்ண மாதிரியும்,

என்ன!... பேச்சு!.... அதுகூடப் பரவாயில்லடி தாங்கிக்குவேன் ஒருத்தன் எங்கிட்ட வந்து கேட்டான் பார் ஒரு கேள்வி ‘என்ன மாப்புள்ள என்னென்னமோ பேசுகிறாங்க உண்மையா சொல்லு உனக்கு எத்தினி பசங்கனு’ இந்தக் கொடுமைய எங்கடி போய்ச் சொல்ல”

என்கிட்ட பேசவே காசு கேட்ப சும்மா சீண்டுவேன் அப்படியே பேசுனாலும் நல்ல இருக்கியா? என்ன? ஏது? சாப்பிட்டியா? இப்படி தான் பேச்சு போகும்.அப்படி இருக்க இவனுக என்னை பேசுனா கோவம் வராதாடி சொல்லு.

பத்தாததுக்கு நீ பேசாம அழுதுகிட்டே உள்ளர போயிட்ட அதுவும் அவனுகளுக்குத் தோதா போச்சு” ஆதங்கமாக அன்று கொண்ட வேதனையைக் கொட்டி தீர்த்தான் நமது மதுரை சிங்கம் ஐயோ பாவம் சிங்கம்.

சீயானை இன்னும் நெருங்கியவள் அவனது தாடையைத் தன் புறம் திருப்பி அவனது முகத்தைக் கையில் ஏந்தி “மன்னிச்சுக்கோ மாமா” ஒன்னுமே இல்லாத விசயத்தை நாந்தேன் பெருசாக்கி புட்டேன் நான் மட்டும் பேசி இருந்தா......

பேசி இருந்தா உனக்கு இந்த நிலைமை வந்து இருக்காது அந்நிலையிலும் தன்னை எண்ணி பேசும் அவனது அன்பு புரிய மேலும் அழுகை வெடித்தது ப்ச்… என்றவன் அவளை இறுக்கக் கட்டிக்கொண்டான் அந்த இறுக்கத்தில் அனைத்தையும் மறக்க எண்ணியதோ இரு மனங்களும்.

பிச்சியின் மூலம் செய்தி அறிந்த முத்துவோ “இன்னும் என்னத்த பேசுதுங்க” என்றவன் அவர்கள் இருக்கும் இடம் தேடி வர கண்டது என்னவோ சீயானின் தோளில் தனது முகத்தைப் புதைத்திருக்கும் வேம்புவை தான் இருவரும் இருந்த நெருக்கத்தை பார்த்த முத்து

ஐயோ!.... ஐயோ!...... வாயில் அடித்துக் கொண்டே “என்னத்த சொல்லுவேன் ஏது சொல்லுவேன் டேய் சீயான் என்ன காரியம் பண்ணுற விலகுட அடியேய்! ஐத்த மவளே விலகுடி” என்றவன் இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்து கொண்டான்.

அவனது அக்கப்போரை பார்த்த நமது மதுரை சிங்கம் அசராமல் “இப்போ வந்து என்ன பண்ண" புருவம் உயர்த்திக் கேட்க அவன் எதை சொல்கிறான் என்ற அறிந்த வேம்பு வெட்கம் கொண்டு ஓடி விட்டாள்.

வெகு நாட்கள் சென்று அவளது முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பார்த்த ஆண்களுக்கு அப்படி ஓர் நிறைவு என்ன இருந்தாலும் கூட வளர்ந்தவள் அல்லவா.போகும் அவளைப் பார்த்தவாறே பேசினான் முத்து “என்னடா சீயான் எல்லாம் சரிதானே” பேச்சு சீயானிடம் இருந்தாலும் பார்வை ஓடி செல்லும் வேம்புவிடம் தான் இருந்தது.

“இன்னுமில்லடா முத்து பாதி கடல் தான் தாண்டி இருக்கு இன்னும் இருக்கே பார்ப்போம்”

“அவனுகள எதாவது பண்ணனும்டா ஒரு இரண்டு குத்தாவது அந்தப் பொம்பள மூஞ்சில குத்தணும்”

“பொறுமையா இரு முத்து கண்டிப்பா ஐயா எதாவது பண்ணுவாரு நம்ம வேடிக்கை மட்டும் பார்ப்போம்”

“சரி விடுடா எவனோ பண்ண தப்புக்கு இத்தனை வருஷம் நம்பப் பட்டாச்சு இனி மேலாவது நம்பச் சந்தோசமா இருப்போம்.சரி பாப்பா கிட்ட பேசுனியா உனக்குப் பாப்பாவ புடிச்சு இருக்கா முத்து? கட்டாயத்துக்காக நீ கட்டிக்கலையே?

சிறு சிரிப்புடன் “ஏன்! சீயான் இப்படி ஒரு கேள்வி”

“இல்லடா நீ தான் கட்டிக்க மாட்டேன் சொன்னியாமே பாப்பா ரொம்ப அழுத்துச்சு அதான்”

“உன் பாப்பா செம கேடி அவ அழுகுறத நம்பாத சீயான் ராட்சசி குரவளை கடிச்சு மொத்த உசுரையும் குடிச்சிபுட்டா” என்றவன் சரி நான் கிளம்புறேன் அதே சிரிப்புடன் திரும்பி நடந்து கொண்டே “டேய் இனி உன் பாப்பாவ பத்தி கவலை படமா வேம்பு புள்ளைய பாரு”

“சரிடா தம்பி” சீயானின் சீண்டல் புரிய

அவனது விழிப்பில் சற்று நின்றவன் மெதுவாகத் திரும்பி “உன்னை எல்லாம் அண்ணன் கூப்பிட முடியாது ஓடி போயிடு…. ஒழுங்கா முத்துன்னு கூப்புடு”

“ஹா...ஹா........” என்றவன் அதே சிரிப்புடன் தனது தந்தை இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.முகம் முழுக்கப் புன்னகையுடன் வரும் மகனை நிறைவாகப் பார்த்தவர் “ஏஞ்சாமி சிரிச்சிகிட்டே வாரீக”

“ஒண்ணமிலங்க ஐயா” என்றவன் வேலை இருப்பது போல் அவருக்கு எதிர் புறம் சென்று விட்டான்.இன்னும் முனியாண்டியிடம் ஒரு பயம் கலந்த மரியாதையை உண்டு அந்த அன்பு மகனுக்கு. செல்லும் மகனை ஆசையாகப் பார்த்துக் கொண்டு இருந்தவரை கலைத்தது வேலை செய்யும் காத்தான் குரல்.

ஐயா! தேங்கா ஏத்தியாச்சுங்க

“சரிப்பா மீதி வேலைய பார் நான் வீட்டுக்கு போயிட்டு செத்த கண் அசந்துட்டு வரேன்”

“சரிங்கைய்யா" என்றவன் தயங்கியவாறே ஐயா ஒரு செய்தி சொல்லணுமுங்க”

“சொல்லுப்பா”

“செத்த நேரத்துக்கு முன்னாடி உங்க மச்சான் வந்தாருங்க நானும் உங்கள பார்க்கத்தானு இருந்தேன் ஆனா அவர் வடகாலப் போயிட்டாரு அப்புறம் கொஞ்சம் நேரம் செண்டு பார்த்தா அழுது கிட்டே போறாரு என்ன செய்தின்னு தெரியல அவர் போற வேகம் சரியா படலங்க அதான் காதுல போட்டு வச்சேன்”

அவன் சொல்லுவதை யோசைனையுடன் “சரிப்பா நீ போ" என்றவர் தனது போனை எடுத்து சீயானுக்கு அழைத்தார். தந்தையின் அழைப்பை ஏற்றவன் "ஐயா சொல்லுங்க".

“அப்பு உடனே உங்க மாமன் வூட்டுக்குக் கிளம்பு செத்த நேரத்துக்கு முன்னாடி இங்கன வந்தவன் அழுது கிட்டே போனான்னு காத்தான் சொல்லுறான் என்ன செய்தின்னு பார்”

“சரிங்க ஐயா” என்றவன் அவர் எப்போ தோப்புக்கு வந்தார் நம்ப அங்கன தானே இருந்தோம் சிறிது நேரம் யோசித்துப் பின்பு பலம் கொண்டு தனது தலையில் அடித்துக் கொண்டு ஓடினான்.

தாங்கள் பேசியதை கேட்டு விட்டார் போலும். ஆம் அவன் எண்ணம் உண்மையே முனியாண்டியை பார்க்க வந்த பொன்னுரங்கம் அனைத்தையும் கேட்டு விட்டார்.அவன் தலை தெறிக்க ஓடியதை பார்த்த ஒருவன் முத்துவிடம் சொல்ல அவனும் என்னவோ ஏதோவென்று ஓடினான்.

விரைந்து பொன்னுரங்கத்தின் வீட்டை அடைந்தவன் கேட்டது இரு பெண்களின் கதறலை தான் நொடியும் தாமதிக்காமல் அவன் செல்ல அங்கே பூட்டிய கதவை இரு பெண்களும் தட்டி கொண்டு இருந்தனர்.

“அப்பா வாங்கப்பா ப்ளீஸ் ப்பா”

“என்னங்க வாங்க எனக்கு உங்கள விட்டா வேற நாதியில்ல” இரு பெண்களும் தவித்துக் கதறி அழுக இருவரையும் தள்ளியவன் ஓங்கி கதவை உடைத்தான்.

அங்கே கண்கள் மேல சொருகியவரே மூச்சுக்குத் தவித்துக் கொண்டு இருந்தார் ரெங்கன்.மாமா!... அப்பா!..... என்னங்க!......... மூவரும் அதிர்ந்து அழைக்க அதனை உணர முடியாத மயக்கத்துக்குச் சென்றார் பொன்னுரெங்கம்.

சீயான் பின்னில் ஓடி வந்த முத்து நடப்பதை உணர்ந்து விரைந்து காரை எடுத்துவர அவசரமாகத் தங்களது காரில் அள்ளி கொண்டு சென்றனர்.வேம்பு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு பொன்னுரெங்கத்தை ஏந்தி கொண்டு அப்பா! அப்பா! என்று கதறி தீர்த்தாள்.

அப்பா எனக்கு மட்டும் ஏன்ப்பா இப்படி நடக்குது? ஏன்ப்பா இப்படி பண்ணீங்க? என்று கதற சீயானால் அவளது கதறலை கேட்க முடியவில்லை. சற்று முன் அவள் வெட்கம் கொண்டு புன்னகை முகமாக ஓடியது கண் முன் வந்து வதைத்தது.

********************************

அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பொன்னுரங்கத்தை சேர்த்தனர்.சீயான் ஓய்ந்து போய் அமர முத்து தான் அடுத்து என்ன என்று யோசித்துச் செயல் பாட்டன்.

சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் எதனால் என்ற கேள்வி பிறக்கும் அது தற்கொலை முயற்சி என்று தெரியவந்தால் எதனால்? என்ற கேள்வி பிறக்கும் அதனை எல்லாம் எப்படிச் சரிக்கட்ட என்று முத்து தவிக்க அதற்குள் செய்தி சொல்லப்பட்டு முனியாண்டி-அங்காயி மற்றும் பிச்சியின் குடும்பம் அடித்துப் பிடித்து ஓடி வந்தனர்.

இனி ஒரு இழப்பை சந்திக்க இங்கு யாருக்கும் தெம்பில்லை அல்லவா தளர்ந்து அமர்ந்திருக்கும் மகனின் தோளில் கை வைத்தார் முனியாண்டி அவரது தொடுகையில் நிமிர்ந்தவன்

ஐயா!...... அவனது தளர்ந்த அழைப்பு முனியாண்டியை கலங்க செய்தது.

என்ன பாவம் செய்தது என் பிள்ளைகள் பூத்து குலுங்கும் வயதில் தரிசாகக் கிடைக்கிறதே என்று மருகி போனார் அதைத் தான் அங்காயி வாய்விட்டுக் கதறிக் கொண்டு இருந்தார்.வாழ்க்கையில் சில மனிதர்கள் தவறே செய்யாமல் தண்டிக்கப் படுகிறார்கள் இதற்குக் கடவுள் வைத்த பெயர் கர்மம்.

எவனோ ஒருவன் வேம்புவின் வாழ்க்கையில் வந்து இங்கு மொத்த குடும்பத்தையும் ஆட்டுவித்துச் சென்று விட்டான் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பது இது தான் போலும்.தெரியாமல் செய்த பிழைக்கு யாரை குற்றம் சொல்வது விடை விதியின் வசமே.

தனது மகளின் நிலையை எண்ணி இனி இந்த உயிர் வேண்டுமா என்ற நிலையில் கண் மூடி கிடந்தார் பொண்ணுரெங்கம்.சுமார் அரை மணி நேரம் போராடி பொன்னுரங்கத்தைக் காப்பாற்றினர் மருத்துவர்கள்.

மருத்துவர் வெளியில் வந்து யாராவது ஒருவர் மட்டுமே செல்லும் மாறு சொல்லிவிட்டு சென்றார் அனைவரையும் தவிர்த்து விட்டு முனியாண்டி தான் சென்றார். முனியாண்டி சென்று அவரிடம் அமர்ந்து அவரது கைப்பற்றி மச்சான் என்று அழைக்க கண் முழித்தார் பொண்ணுரெங்கம்.

நம் வாழ்க்கையில் யாரை எந்தவித தவறும் செய்யாமல் ஒதுங்கி செல்கிறோமோ அவரிடமே விதி நம்மை கொண்டு சேர்க்கும் மறுக்கப்படாத உண்மை.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top