கொலுசொலி 7

Advertisement

achuma

Well-Known Member
ஹரே கிருஷ்ணா

அருண் காவ்யா திருமணம் அனைவரின் ஆசியோடு, சிறப்பாகவே நடந்தது.
புண்ணியகோடியின் அண்ணன் குடும்பமும் திருமணத்திற்கு வந்தனர்.
விசாலம் மனதார வாழ்த்தினார் என்றால் திலகா, திருமணம் எப்படி நடந்தது, மன மகள் அணிதிருந்த நகை உடை என்று இவை எல்லாம் பொறாமையோடு பார்த்து கொண்டிருந்தார்.
அவர் முன்பே அவர் வீழ்த்திய குடும்பம் வளர்ந்து வருவதை பார்க்க பார்க்க ஒரு பொறாமை .


பெரியவர்களிடம் ஆசி பெற்று, புதுமண தம்பதியினர், புண்ணியகோடி மற்றும் ரங்கநாதன் குடும்பம் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த அருணின் நெருங்கிய நண்பர்கள் என்று முக்கியமானவர் இப்பொழுது மும்பை நோக்கி விமானத்தில்.

ப்ரியாவின் திருமணத்தின் போது மட்டுமே, இங்கு காவ்யா அழைத்து வர பட்டாள் .
அதன் பிறகு காமாட்சி அல்லது கார்த்திக் மட்டுமே வருடத்திற்கு ஒரு முறை சென்று வருவர்.
அதோடு, ப்ரியா வீட்டினர் மட்டுமே, சென்னை வந்து செல்வது, அது கூட எப்பொழுதேனும் மட்டுமே.
இதோ இப்பொழுது, பெற்றவர்களை விட்டு மும்பையில் அவளின் வாழ்க்கை பயணம் .
ஏதோ ஒரு பயம்.
அவளின் விருப்பமெல்லாம் நினைக்கும் நேரம் அவள் பிறந்த வீட்டினரை பார்த்து வர வேண்டும், மாப்பிளை பக்கத்து ஊரில் அல்லது சென்னையில் இருந்தால் மட்டுமே அது நடக்கும் என்று நினைத்திருந்தான் .


இப்பொழுது அப்படி நினைக்கும் நேரம் பார்த்து வர முடியாதே .
ப்ரியாவும் அடிக்கடி வருவதில்லையே அந்த பயமே அவளிடம்.
அருகினில் அவளின் முக மாற்றத்தை கண்டு கொண்டிருக்கும் அருண் கூட அவள் கண்களுக்கு தெரியவில்லை.
அவள் சிந்தனை முழுதும் தானும் பெற்றவர்களை விட்டு தொலைவில் இருப்போமே என்ற எண்ணமே.


"கவி," என்று மென்மையாக அழைத்தான் அருண் .
அதற்கே திடுக்கிட்டு, அவன் பக்கம் திரும்பி பார்த்தாள் .
"ஒய், ஏன் இவ்வளவு பயம், மெதுவா தானே கூப்பிட்டேன்."
" பிளைட் வரது பயமா, என் கை பிடிச்சுக்கோ." "பெல்ட் போட சொல்றாங்க, நீ ஏதோ யோசிச்சிட்டே இருக்கியா, அது தான் கூப்பிட்டேன்."
இல்லை என்பது போல், தலையாட்டினாள்.


"நான் எவ்வளவு பேசுறேன், நீ பதிலே சொல்லாம, தலையாட்டுற ."
"அதிகம் பேச மாட்டியா, குட், யாரவது ஒருத்தர் அமைதியா இருந்தா தான் லைப் ஸ்மூத்தா போகும்."
"நான் நிறைய பேசுவேன்." என்று கூறி சிரித்தான்.


"ஆமா இவன் பேசி தான் எல்லார் வாயும் அடைப்பான்."
" நாங்க எல்லாம் அப்படி தான் மா அடங்கி இருக்கோம்."
"நீயும் அப்படியே இருக்காத, இவன் கிட்ட கொஞ்சம் விறைப்பாவே இரு." என்று முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ரமா கூறினார்.


அதற்கும், அருணிடம் ஒரு புன்னைகையே.
"சரியான இளிச்சவாயன் போல, இளிச்சிகிட்டே இருக்கான்," என்று காவ்யா நினைத்து கொண்டாள் .
அவளின் அமைதி பார்த்து யாருமே, அவள் பெல்ட் அணியா கை வைத்ததும், "நானே " என்று காவ்யா வாய் திறந்தாள் .



அவளை முழுதும் பேச விடாமல், நான் தான் இருக்கனே, இனிமேல் நாம தான் சேர்ந்து லைப் ட்ராவல் பண்ண போறோம்."
"நான் இருக்கும் போது நீ என் டியர் ஸ்ட்ரைன் பண்றே."


அவளுக்கு தான் அவள் இடை பக்கம் இருந்த பெல்ட் எடுக்கும் போது கூச்சமாக இருந்தது.
அவள் நெளிய ஆரம்பித்ததும், அசையமா இருந்தா உனக்கு நல்லது, அப்பறம் என் கை வேற எங்கயாச்சு போச்சுன்னு, என்ன தப்பு சொல்ல கூடாது," என்றதும் காவ்யா கப்சிப்.


அருண் அவன் அருண் நண்பர்களின் கிண்டல், காமாட்சி அருகினில் புண்ணியகோடியை ஏதேனும் திட்டி கொண்டே வந்தது.
விக்ரம், ரமா ரங்கநாதன் அனைவரும் அருணை விட்டு கொடுக்காமல் அருண் நண்பர்கள் அவர்களுடன் சரிக்கு சமமாக பேசுவது, என்று அனைத்தும் வேடிக்கை பார்த்து கொண்டே, மும்பை நகரத்தில் வந்து இறங்கினாள் காவ்யா .


நேராக மண்டபம் சென்றனர் அங்கு மாலை கிட்ட தட்ட ஐந்து மணி.
நேராக வரவேற்பிற்கு என்று, அங்கு கொடுக்க பட்டுள்ள அறையில் ஒவ்வொருவரும் அடுத்த வேலைக்கு என்று அடைந்து கொண்டனர்.


காவ்யாவிற்கு தான், மிகவும் களைப்பாக இருந்ததும்.
அவள் எந்த வேலைகளும் இல்லை என்றாலும், விடியற்காலை, திருமணம், உடனே விமான பயணம், இங்கும் நேராக மணடபத்திற்கு அழைத்து வர பட்டது, இதில் காலையில் இருந்தது கணவன் என்றாலும், தந்தை மற்றும் அண்ணன் தவிர்த்து, புது ஆடவனுடன் அருகினில் அமர்ந்து வந்தது என்று அவளுக்கு அசதி.


"என்ன கவி, உட்காந்துட்டே, போய் முகம் கழுவிகிட்டு வா மா," என்று சேலை மாற்றி கொண்டே காமாட்சி மகளிடம் அடுத்து வரவேற்பிற்கு அவளை தயாராக சொன்னார்.
"கவி, இதோ இவங்க தான் உனக்கு மேக் அப் பண்றவங்க " என்று அந்த அறைக்கு, பிரியா இரு பெண்களை அழைத்து வந்தாள் .
"இதோ பாரு உன் அக்கா அதுக்குள்ள சேலை மாத்திட்டா ."
"ப்ரியா உனக்கு இந்த சந்தன நிற புடவை எடுப்பா இருக்கு டி."


இரு மகள்களையும் கண்ணில் வழியும் ஆனந்த கண்ணீரோட பார்த்தார்.
இரு குழந்தைகளுக்கு தாயாகி பொறுப்பான மருமகளாக மிளிரும் மூத்த மகளையும், அன்று பூத்த புது மலர் போல், திருமண உடையில் கழுத்தில் மங்கல்யம் அணிந்து, தேவதையாக இருக்கும் அவரின் இளைய மகளையும் பார்க்க கண்கள் கோடி வேண்டும்.


இந்த சமுதாயத்தில், எந்த கெட்ட பெயரும், எந்த ஆபத்தும் நெருங்காமல், இரு பெண்களை கட்டுக்கோப்பாக வளர்த்த பெருமை காமாட்சியின் முகத்தில்.

"அண்ணி, என்ன இது நல்ல நாள் அதுவுமா கலங்கிட்டு," என்று ரமாவும் தயராகி காவ்யாவை காண வந்தார்.
"இல்ல அண்ணி, எனக்கு இருந்த பிரச்சனையில, இவங்கள வளர்க்க போதும் போதும்ன்னு
ஆகிடுச்சு ."


"வேலைக்கு போனா கூட, இவங்க நினைப்பு தான். "
"பள்ளி கூடம் முடிஞ்சி பசங்க வரதுக்குள்ள, வீட்டுக்கு போய்டணும்ன்னு , ஓடுவேன் ."
"வீட்டு வேலை செய்ற இடத்தில, அவங்க திடீர்ன்னு அதிக பாத்திரம் போடுவாங்க, இல்லை, இன்னிக்கு இது எல்லாம் சுத்தம் செஞ்சிட்டு போனா தான் ஆச்சுன்னு, ஏதாவது புது வேலை கொடுப்பாங்க."


"அது எல்லாம் முடிச்சிட்டு, பசங்க வரதுக்குள்ள, போய் வீட்டுல விழுந்துண்ணும்ன்னு நினைப்பேன்."
"எனக்கு அக்கம் பக்கம் கூட நம்பிக்கை போய்டுச்சு."
"ஒரு ஒரு நாளும் ஒரு யுகாம கழியும் அண்ணி."


"கார்த்தி வளர்ந்த பிறகு, அவன் பத்திரமா அவன் தங்கச்சிங்கள பார்த்துக்கிட்டான்."
"அதுக்கு பிறகு தான் கொஞ்சம் பரவாயில்லை."
"இந்த சமுத்தியத்தில, பொம்பள புள்ளையே வளர்க்குறது அவ்வளவு சுலபமில்ல ."
"இதோ அந்த ஆண்டவன், இரண்டு பொண்ணையும் நல்ல இடத்தில வாழ வெச்சிட்டான் ."
"உங்க ரெண்டு பேருக்கும் சொல்றேன், ஒரே இடத்தில மருமகளா இருக்குறீங்க, எப்பவும் ஒத்துமையா இருங்க கண்ணுகளா எனக்கு அது போதும்," என்று கண்ணீரை துடைத்து கொண்டார்.


"அது எல்லாம் நம்ம பசங்க தங்கம் அண்ணி, நீங்க அழாதீங்க, நல்ல பார்த்துப்பாங்க , பாருங்க கவியும் உங்கள பார்த்து அழுறா ."
"கவி மா, ரெடியாகு டா, நீயும் எதுக்கு அழுற ," என்று மருமகளின் கண்ணீர் துடைத்து விட்டார் ரமா .


"அப்பறம் நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாருங்க, அந்த ஷினி, வந்து இருக்கா ப்ரியா."
"என்ன அத்தை சொல்றீங்க," ப்ரியாவிற்கும் பதற்றம், ஏதேனும் வம்பிற்கு பேசுவாரா என்று.


"எப்போ, அவ மரியாதையில்லாம பேசினாலோ, அப்போவே அவ உறவு முடிஞ்சுதுன்னு நினைச்சேன்."
"எங்க இங்க இருக்குற சொந்தம்ன்னு உன் மாமா, பத்திரக்கை வெச்சி அழைச்சிருக்காரு."
"அப்பவும் போன்ல குதிச்சா, இப்போ குடும்பத்தோட வந்து இருக்கா."


"அவ ஏதாவது பேசுனா, எதுவும் கண்டுக்காதீங்க."
"நம்ம கவி கூடயே இரு."
"அவ வீட்டுக்காரர் வந்து இருக்காரு, அவருக்காக கொஞ்சம் பொறுத்து தான் ஆகணும், பாவம் அப்பாவி மனுஷன்."


ரமா கூறிய ஷினி பற்றி காமாட்சிக்கும் தெரியும்.
ப்ரியா திருமணத்தின் போது, எதிலும் குறை கண்டுபிடித்தவர்.


மாப்பிளை வீட்டார் என்று காமாட்சி வாயை மூடி கொண்டிருந்தது பெரிய விஷயமே .
இப்பொழுதுமா என்று நினைத்து கொண்டார் காமாட்சி.
இவர்கள் பேசுவதை ஒன்றும் புரியாமல் காவ்யா முழித்து கொண்டிருந்தாள் .


"சரி சரி, இவங்க உனக்கு அலங்காரம் பண்ணுவாங்க கவி மா, ஆறு மணிக்கு மேல, அக்கா வந்து உன்னை, அழைச்சிப்பா," என்று ரமா கூறி மற்றவரை வெளியே அழைத்து சென்றனர்.

மண்டபத்தில், ஆளுக்கு ஒரு வேலையில் இருந்தனர் என்றால், பெரியவர்களை கார்திக்க்கும் விக்ரமும் முதல் வரிசையால் அமர செய்தனர்.

அதற்கு பக்கத்தில் தான் சிவகாமி, அவர் கணவர், மகள் ஷாக்ஷியுடன் அமர்ந்து இருந்தது.
ரங்கநாதன் பேருக்கு தங்கையிடம் தலையசைத்து விட்டு, ஷினியின் கணவரிடம் நலம் விசாரித்தார்.


அது கூட பெண்கள் இருவருக்கும் பொறுக்க முடியாமல், "நேரம் பார்த்தியா சாக்ஷி மா, வீட்டுக்கு புது சொந்தம் வந்ததும் தங்கச்சி கண்ணுக்கு தெரியாம போய்ட்டா ."

"எனக்கு அப்பவே சந்தேகம் தான், இந்த குடும்பம் என் அண்ணன் வீட்டுல இன்னும் என்ன என்ன ஆட போகுதோ" என்று காமாட்சி மற்றும் புண்ணியகோடியை பார்த்து கொண்டே கூறினார்.
காமாட்சி ரமா கூறியதற்கு கட்டுப்பட்டு தன்னை அடக்கி கொண்டார்.


"தேவையில்லாம பேசாத சிவகாமி, என் சம்மந்திக்கு தர மரியாதை எனக்கு தர மாதிரி பார்த்து நடந்துக்கோ," எச்சரித்தார் ரங்கநாதன் .
"ம்க்கும், அக்காகாரி, விக்ரம கைக்குள்ள போட்டுக்கிட்டா, இப்போ தங்கச்சி எங்க அருணை வளைச்சி போட்டுடா, நல்ல குடும்பம்."
"எப்படி தான் இப்படி இருக்காங்களோ ."


"போதும் நிறுத்து ஷினி, நான் சும்மா இருக்க மாட்டேன், என் மருமகளங்களை பற்றி நீயும் உன் பொன்னும் பேச எந்த தகுதிதியும் இல்லை" என்றார் ரமா.
"போதும் அண்ணி, நான் ஏன் பேச கூடாது, இந்த அன்னக்காவடி குடும்பத்திலேயே போய் எப்படி உங்க இரண்டு பசங்களும் விழுறாங்க ."
"என் பொண்ணுங்களுக்கு என்ன குறைச்சல்."
"நூறு பவுன் நகை போடுறேன்னு சொன்னேன், அது விட்டுட்டு, பெரியவ வரும் போது,இங்க வெறும் கைய வீசிக்கிட்டு தான் வந்தா."


"இப்போ தங்கச்சியும் அருணுக்கு கட்டி வெச்சிடீங்க."
ஷினியால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரின் ஆதங்கத்தை இப்படி வார்த்தைகளால் கொட்டி தீர்த்தார்.
தன்னை மீறி இங்கு ரங்கநாதன் குடும்பத்திற்கு யார் பெண் கொடுக்க முடியும் என்ற இறுமாப்பில் இருந்தார்.
சொந்தத்தில் யாரிடம் கூறினாலும், அருணை பற்றி ஏதேனும் தவறாக பழி கூறினால், பெண் கொடுக்க தயங்குவர், இறுதியில் தன் மகளே அவ்வீட்டிற்கு மருமகள் ஆவாள் என்று நினைத்திருந்தார்."


ஆனால் ப்ரியாவின் தங்கையே என்றதும் அவரின் கற்பனை கோட்டை இடிந்து விழுந்ததில் அவரால், ஒரு நிலையில் இருக்கமுடியாமல் தவித்தார்.

மண்டபத்தில் இப்படி என்றல், மணமகள் அறையில்
அலங்காரம் செய்யும் ஒப்பனை பெண்களிடம் தன்னை ஒப்படைத்து அவள் அமைதியாக இருந்து கொண்டாள் .
காவ்யா, முதன் முறையாக அந்த காக்ரா சோலி உடையை அவள் வாழ் நாளில் உடுத்தி இருந்தாள் .
இத்தனை வேலை பாடுகள் அமைந்து இந்த ஒரு நாள் கூத்திற்கு இந்த உடை தேவையா என்று தான் நினைக்க தோன்றியது.


ஆகாய வண்ணத்தில் பாவாடை போன்றும் அதில் வெள்ளி மணிகள் வைத்து, பூக்களை தெளித்தார் போன்ற அமைப்பில் பார்க்க அவளுக்கு அதன் வேலைப்பாடுகள் ஆச்சர்யம் மூட்டியது .
ஒப்பனை பெண்கள் அவ்வுடையை பார்த்து ஏதோ பேசுவது எல்லாம் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
மொழி தெரியாத ஊரில் நான் என்ன குடித்தனம் பண்ண போறேனோ என்று அவளுக்கு அவளே நினைத்துக்கொண்டாள்.


அவர்களின் மொழியும் புரியாமல், அரிதாக பேசும் ஒன்றிரண்டு வார்த்தையும் இப்பொழுது இல்லை.
ஓப்பனைக்கு பிறகு, அவளாலே அவளை நம்ப முடியாமல் மீண்டும் கண்ணாடியை பார்த்து கொண்டாள் .
ப்ரியா வந்து அவளை மேடைக்கு அழைத்து சென்றாள் .
அருண் மனைவியின் அலங்காரத்தில் கண்களை அவள் பக்கம் இருந்து நகர்த்த முடியாமல், தன்னை கட்டுக்குள் கொண்ட வர பெரிதும் பாடு பட்டான்.
ஷினியும் ஷாக்ஷியும் அவளின் அழகில் வாயை பிளந்தனர்.
அந்த உடையின் விலை எவ்வளவு இருக்கும் என்று ஷாக்ஷிக்கு தெரியும்.
அதிலும் ஏதோ கடல் தேவதை போல், அவனின் அருகில் காவ்யா நின்று கொண்டதை பார்க்க பார்க்க அவளுக்கு அழுகையும் கோவமும் ஒருங்கே வந்தது.
அதிலும் காவ்யாவின் சாந்தமான முகம், அவளையே கண்ணெடுக்காமல் பார்க்கும் அருணின் காதல் பார்வை என்று ஷாக்ஷி தன்னிலை இழந்தாள்.


தன்னிடம் பேசுவதற்கு கூட யோசிக்கும் அருண் இன்று மண்டபத்தில் அத்தனை பேரின் முன்பு, மனைவியை இப்படி கண்கொட்டாமல் பார்த்து நிற்கிறானே என்று பொறாமை.
காவ்யாவின் கலையான முகம், பெரிய கண்கள் இடை வரை விரிந்து இருக்கும் கூந்தலிலும் சில மணிகள் கோர்க்க பட்டு, அவளின் அழகின் முன், தான் ஒன்றுமே இல்லை என்று ஷாக்ஷிக்கு நன்றாக தெரியும் .
இருந்தும் அதனை ஏற்க மனம் இல்லை.


"அம்மா, என்ன விட அவ என்ன கலர் கம்மியா தானே இருக்க, எப்படி அருணுக்கு இவளை பிடிச்சுது."
இதற்கு மேலும் அமைதியாக இருந்தால், நன்றாக இருக்காது என்று மீண்டும் ரமாவே இவர்கள் இருவரையும், திட்டி விட்டார்.
"ஷாக்ஷி, இதோட நிறுத்திக்கோ, உங்க அம்மா பேசும் போது நான் பேசுனேன் , ஆனா நீ பேசுனா, என் கை தான் பேசும்."
"சின்ன பொண்ணு மாதிரி பேச கத்துக்கோ."
"இப்போவே பொறாமை, என்ன மைதா மாவு மாதிரி நிறத்தில் இருந்துட்டா பசங்க அப்படியே, மயங்கிடுவாங்களா."
"என்ன பேச்சு மா பேசுற நீ, உனக்கு யாரு இப்படி எல்லாம் சொல்லி கொடுத்தா."


"கவியோட உன்னை ஒப்பிட்டு பேசின பாரு அதுனால நானும் பேசுறேன் "
"அழகு இருந்தும் உன் கண்ணுல திமிரு தெரியுது, ஆனா என் மருமக முகத்துல அமைதி, குழந்தை "
மாதிரி அவ."
"என் சம்மந்தி அம்மாவும், பொண்ணுக்கு எந்த கெட்டதும் சொல்லி வளர்க்கள ."


"வெறும் அழகு பார்த்து வாழ்க்கை கிடையாது."
"வந்த இடத்தில மரியாதை கிடைக்கனும்ன்னா, நீங்களும் மரியாதையா இருந்துக்கணும் ," என்று இருவரையும் எச்சரித்து விட்டே, காமாட்சியையும் உடன் அழைத்து கொன்டு ரமா மேடைக்கு அருகில் சென்று நின்று கொண்டார்.


"அண்ணி, வீட்டுக்கு போனது இரண்டு பேருக்கும் சுத்தி போடணும், என் கண்ணே பட்டுடும், என்று கூறி கொண்டே அப்பொழுது தான் மகளின் உடை அணிந்த விதம் பார்த்து மகளை முறைத்தார் காமாட்சி.


காக்ரா பாவாடையும் அதன் சட்டையும் அணிந்து, மேலங்கி அணியாமல், இரு கையிடுக்கில், அதன் ஷால் இரு பக்கம் தொங்க விட பட்டிருந்தது.

"ஷால் நம்ம மேல போட்டுக்க தானே, இது என்ன இதை என் கையில மாட்டி விட்டுட்டாங்க, எனக்கு ட்ரெஸ்ஸே இல்லாத மாதிரி ஒரு பீல் அக்கா, எனக்கு இப்படி வேண்டாம் ப்ளீஸ்."
"இப்படி தான் இந்த டிரஸ் போடணும் டா, கொஞ்சம் பொறுத்துக்கோ."


அக்கா தங்கை ஏதோ பேசுவதும், மீண்டும் காவ்யா ஒரு முறை அந்த உடையை பார்த்து கொண்டதில் அருணும் புரிந்து கொண்டான் அவளின் தவிப்பை.
"வா கவி, என்று கை பிடித்து, மேடையில் இருந்து இறங்கி, அண்ணா, எனக்கு பதில் கொஞ்ச நேரம் போட்டோக்கு போஸ் கொடு, அண்ணி அங்க தனியா இருக்காங்க பாரு ."


"டேய் இப்போ எங்க டா, நீ கவியோட போற."
"ப்ரோ, உங்க கல்யாணத்துக்கு அப்பறம், நீயும் அண்ணியும் இப்படி கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க."
"ஒழுங்கா நாங்க வர வரைக்கும், நான் சொன்ன வேலைய பாரு."
இவன, எனக்கு இவன் அண்ணனா, இல்லை, நான் இவனுக்கு அண்ணனா ஒன்னும் தெரிய மாட்டிங்குது.


"என்ன டா அருண் எங்க போறான், "
"எல்லாரும் என்னையே கேளுங்க மா, நான் கேட்டதுக்கு, ரொம்ப நல்ல பதில் சொல்லிட்டு போனான் பாருங்க," என்று நொடித்து கொண்டான் வீக்ரம் .


"கவி " அறைக்குள் வந்ததும் மனைவியை மென்மையாக அழைத்தான் .
"உனக்கு இந்த ஷால் இப்படி போட வேண்டாம்ன்னா, அவங்க கிட்ட சொல்லி இருக்கலாமே, இல்லை என்கிட்டயாச்சும் சொல்லணும் இல்ல."
"அடுத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு, நினைக்குறத முதல்ல விடு."


அவனே அவள் கைகளில் வைத்திருந்த ஷால் எடுத்து, இடையின் வளைவில் கொண்டு சென்றான்.
அடுத்து என்ன செய்வான் என்று அறிந்து காவ்யா அவனிடம் தானே அணிந்து கொள்வாதாக கூறினாள் .
"நானே போட்டுக்குறேன் ," உடனே வந்து விழுந்தது பதில் .
அதில் சிரித்து கொண்டே அருண் "நானேன்னு நீ சொல்லும் போது தான் நான் செய்யணும்ன்னு தோணுது கவி."
"இப்பவும் பிளைட்ல சொன்னதையே சொல்றேன் மா, அசையாம நில்லு, நானே உனக்கு போட்டு விடுறேன்."
"அப்பறம் நீ அசைஞ்சு என் கை அங்க இங்க பட்டுச்சுன்னா, நா பொறுப்பில்லை ."
மீண்டும் அமைதி காவ்யா.


அழகாக ஒரு பக்கம், சேலை போல், மடித்து, அவள் மீது போட்டு விட்டு, மற்றோரு ஷாலினி முனையை அவனே இடுப்பில் மாட்டி விட்டான்.
கண்களை இருக்க மூடி கொண்டு நின்று விட்டாள் பெண்ணவள் .
அவளின் உணர்வு புரிந்து அருணும், அதன் பிறகு ஒன்றும் சீண்டாமல் "இப்போ, ஓகே வா ," என்று அழைத்து சென்றான்.
காமாட்சியும் இப்பொழுது தான் மகளை மெச்சும் பார்வை பார்த்தார்.
அவனின் பல கலாட்டாக்களுடன், விழாவும் சிறப்பாக முடிந்தது.


சென்ற பதிவிற்கு உங்களின் விருப்பங்களும், கருத்துக்களுக்கும் நன்றி நட்புக்களே.
இப்பதிவினையும் படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பகிருங்கள் .
All take care
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top