மெல்லிய காதல் பூக்கும் Epilogue

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச
தீரன்ஸ் பிரதர்ஸ் பங்கு பெற்ற
"உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்"-ங்கிற அழகான
அருமையான நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:
View attachment 5582
அந்த பெரிய சாப்பாட்டு மேசையில் அனைவரும் அமர்ந்திருக்க, இவர்கள் சென்று அமர்ந்ததும் கயல், தியா, மலர் பறிமாற ஊட்டி விடுவதும், பேச்சும், சிரிப்போடும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.



பியூஸ் பார்வதி பாட்டியின் செல்லம். தன் மகனின் மறுபிறப்பாகவே பார்க்கலானார் அவர். அப்பா.. ராசா.. என்று ஆரம்பித்து அவனுக்காக எல்லாம் செய்வது அவர். இப்பொழுதும் மடியில் வைத்து உணவூட்டிக் கொண்டிருந்தார். பிரபாத்தின் சேட்டைகளில் சிக்கி அல்லல் படும் மற்றுமொரு ஜீவன் பார்வதி பாட்டி முதுமை நன்றாகவே எட்டி இருக்க கோபமும் உச்சத்தில் ஏறும் அப்போது நிறுத்தாத ரெகார்ட் தான். அது பிரபாத்துக்கு சங்கீதமாய் ஒலிக்கும்.



"பாட்டி பாவம்டா... விட்டுடுடா..." தியா சொல்லியும் பாத்தாச்சு, அடிச்சும் பாத்தாச்சு அடங்காமல் அட்டகாசம் செய்து கொண்டிருக்கின்றான்.


View attachment 5583


"விடு தியா சின்னவன் தானே வளர வளர சரியாகிடுவான்" கயல் தியாவை சமாதானப் படுத்த



"நாய் வால நிமிர்த்த முடியாது கயல் இப்போவே இப்படி பெரியவனான இன்னும் என்னெல்லாம் பண்ண போறானோ!" இதே தான் தியாவின் புலம்பலாக இருந்து கொண்டிருக்கின்றது.

View attachment 5584



"பசங்களெல்லாம் தூங்க போய்ட்டாங்களா?" மலர்விழி தூங்குவதற்காக படுக்கையை சரி செய்தவாறு கேட்க



"இங்க வந்தா கயல்மா... ரிஷிபா... தவிர நம்ம பொண்ணுக்கு நம்மள கண்ணுக்கு தெரிய மாட்டேங்குதே! இன்னும் ரெண்டு பொண்ணாச்சும் பெத்துக்கணும் மலர்" சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவனை முறைத்துப்பார்த்தவள் தலையணையால் வீசியடிக்க அதை லாவகமாக பிடித்தவன் "எனன டி முறைக்கிற... ஓவரா பண்ணுற நீ"



"கல்யாணமான புதுசுல பபா, பபானு என் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்த பொண்ணு பொறந்ததும் அவள பபானு செல்லம் கொஞ்சிகிட்டு திரியிற இதுல இன்னும் ரெண்டு வேணுமா? அடி விழும். பேசாம போய் தூங்கு"



"உன்னோடு பெரிய ரோதனயா போச்சு டி. நீயும் இதையே சொல்லுறதும், நானும் அதையே பேசுறதும் வாழ்க போரடிச்சு போச்சு"



"என்ன சொன்ன போரடிச்சு போச்சா... வேற எவளாச்சியும் சைட் அடிக்கிறியா?"



"என்னடி நான் என்னமோ சொன்னா நீ வேறென்னமோ சொல்லுற?"



"சொன்னா சொன்னா அகல்யா எல்லாம் சொன்னா நீ எந்த காலேஜ் வாசல்ல நின்னு எந்த பொண்ண சைட்டடிச்சினு சொன்னா?" மலர்விழி முறைக்க



"அகி..... உன் கல்யாணம் அன்னைக்கு பண்ணதுக்கு இன்னுமாடி பழிவாங்குற உன்ன..." மனதால் தங்கையை வசைபாடியவன்



"அது ஒரு புளுகு மூட்டடி கோபத்துல ஏதோ பத்த வைக்க பாக்குறா அதையெல்லாம் நம்புரியே பபா... நான் சொன்னா நம்ப மாட்டியா" வளமை போல் குரலை குழைத்து பேசி மனைவியை தன் வசப்படுத்தினான் அமுதன்.



இவர்களின் வாழக்கை அகல்யாவால் சதா ஒரு சண்டை, சனியன்று சமாதானம் எனும் விதமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அகல்யா எதையும் கூட்டியோ குறைத்தோ சொல்லவுமில்லை. அமுதனின் குரும்பை அறிந்த மலர்விழி அவள் சொல்லும் பொழுது ரசித்து விட்டு அமுதனின் முன் சண்டைக் கோழியாய் சிலிர்த்து நிற்பாள். அது அவன் கெஞ்சுவதும், அதன் பின் மிஞ்சுவதினாலையே ஆகும்.


அவர்களுக்குள் சண்டையை மூட்டும் மற்றுமொரு ஜீவன் ரத்னவேல். மலர்விழி மாதம் தோறும் அவரை பார்க்க செல்ல முகத்தை தூக்கி வைத்துக் கொள்வான் அமுதன்.


View attachment 5585


"குட்டி குரங்கு தூங்கிருச்சு என்ன ஆட்டம் ஆடுறான்"



"என்ன டால் குரங்குனு சொல்லாதனு சொல்லி இருக்கேன்ல" தியாவை கடிந்த பிரதீபன் பிரபாத்தை தூக்கி கட்டிலில் கிடத்தி போர்வையையும் போர்த்தி விட



"பண்ணுறது பூரா சேட்டை, பாதி நேரம் மரத்துலதான் இருப்பான் குரங்குனு சொல்லாம"



அவளின் இடையோடு சேர்த்தனைத்தவன் கன்னத்தில் முத்தம் வைத்து "போதும் டி காலைல இருந்தே அவனை திட்ட ஆரம்பிச்சா தூங்குற வர திட்டி கிட்டே இருக்க, பேசாம அவனை போர்டிங் ஸ்கூலை சேர்த்து விடட்டுமா"



"உதைபட போறீங்க, அவன் பண்ணுறதுக்கு திட்டுறேன் அதுக்காக அவன் இல்லாம இருக்க முடியுமா? இனிமேல் திட்டல" முணுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்க்க



"ஏய் எதுக்கு இப்போ கண்ண கசக்குற சும்மாதானே சொன்னேன். சொன்ன உடனே அவனை கொண்டு போய் சேர்த்தா மாதிரி அழுற"



"உங்களுக்கு இதே வேலையா போச்சு ஏதாவது பேசி என் மனச கஷ்டப்படுத்துறீங்க"



"சும்மா சொல்லுறதெல்லாம் சீரியஸா எடுத்தா நான் என்ன பண்ணுறது பேபி டால்" மனைவியை அணைத்துக் கொண்டவன் நெற்றியில் முத்தமிட்டான்.



பிரதீபன் தியா வாழ்க்கை மூன்று குழந்தைகளோடு நிறைவாக அமைந்திருக்க இன்னுமே பிரதீபன் ஏதாவது சொன்னால் தியாவின் கண்கலங்கும். பிரதீபன் எல்லாரிடமும் ஒரே விதமாகத்தான் பேசுகிறான் தியாவுக்கு மாத்திரம் வலிப்பது காதலாலா?



"பிறவிக்குணம் டி பேபி டால் மாத்த முடியல, நீ புரிஞ்சிக்க ட்ரை பண்ணு" பிரதீபன் சொல்லி விட பூஞ்சை மனம் கொண்ட தியாவுக்குத்தான் புரியவவில்லை போலும்.

View attachment 5586

"எல்லாரும் தூங்கிட்டாங்களா" என்றவாறே அறையினுள் நுழைந்தான் ரிஷி



"ஆமா ஷஹானாவையும், மஹியையும் பார்க்கும் போது இயலையும் என்னையும் பாக்குற மாதிரியே இருக்கு"



குழந்தைகளை முத்தமிட்டவன் "என்ன வார் பேபி இந்த தடவ சிலோன் போகணும்னு சொன்ன டிக்கட் எப்போ போடட்டும்"



"இந்த தடவ நான் போகல, எல்லாருக்கும் டிக்கட் போட்டு இங்க வர சொல்லுங்க"



"இது கூட நல்லாத்தான் இருக்கு, பல தடவ சொல்லியும் வராதவங்க வருவங்களா?" ரிஷி யோசனையாக கேட்க



"எனக்கு உடம்பு முடியல அதனால இந்த முறை வர முடியாதுனு சொன்னா வந்துட போறாங்க"



"பேபி கில்லாடி நீ. ஆமா ஏன் போகல"



"ஏனோ தோணல" சாதாரணமாக சொன்னவள் கணவனின் மடியில் அமர்ந்துக் கொள்ள



"என்ன என் வார் பேபி ரொம்ப சந்தோசமா இருக்கா போல தெரியுது"



"ம்ம்.. ரொம்ப சந்தோசமா இருக்கேன். நிறைவா பீல் பண்ணுறேன்"



"அன்னைக்கி என் கண்ணுல மட்டும் நீ விலலைனா இந்த வாழ்க எனக்கு கிடைச்சிருக்காது. தேங்க்ஸ் டா வார்" மனைவியின் கைகளை பற்றி முத்தம் வைக்க



"உங்க கண்ணுல விம்பமா விழுந்தேனு சொன்னீங்கள்ள நெஞ்சுல என்னவா விழுந்தேன்?" குறும்பாகத்தான் ஆரம்பித்தாள் கயல்.



"என் நெஞ்சுல விலல முளைத்தாய் காதலாக... " ரிஷி மீண்டும் முத்தம் வைக்க



"பிரதீபன் அண்ணாவும் ரொம்ப மாறிட்டாருல்ல"



"அவன் மனசுளையும் காதல் இருந்திருக்கு தியாவ பார்த்ததும் மொட்டு விட்டு மலர ஆரம்பிச்சு இப்போ பூத்து குலுங்குது"



"அப்போ அமுதன்"



"அவனும் என்ன விதி விலக்கா என்ன?" கண்ணடித்து சிரித்தான் ரிஷி.



அனைவரின் மனதிலும் காதல் இருக்கும் சரியான துணை தேடி மொட்டு விட்டு மலர்ந்தால் அழகாக பூத்துக் குலுங்கும்.



முற்றும்.



MILA
அருமை அருமை அருமை. Hope you will write the kids life stories separately
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top