Uyirin ularal - episode 6

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 6

காலம் மாயாஜாலம் தெரிந்த ஒரு மந்திரவாதி. எப்படிப்பட்ட காயத்தையும் ஆற்றும் வல்லமை படைத்தது. அபிநேஹா காயமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஐந்து வருட கல்லூரி வாழ்க்கை அவள் மன காயத்தை கொஞ்சம் மறக்க செய்தது. அவளுக்கு அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்தனர். எல்லோரிடமும் பேசினாள், பழகினாள் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டாள். அவளுடைய தோழமையில் முக்கியமானவர்கள் மானு ராகேஷ், அமிதாப் மற்றும் ஜனனி.

ஜனனி சென்னையை சேர்த்தவள்தான், மற்ற மூவரும் மும்பையை சேர்த்தவர்கள். இவர்கள் தோழமைக்கு காரணம் இவர்களின் எண்ணத்தின் ஒற்றுமை. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி. ஐந்து பேரில் யாரும் வசதிக்கு குறைந்தவர்கள் கிடையாது ஆனால் யாரும் அனாவசிய செலவு செய்பவர்கள் கிடையாது. தங்களால் ஆன உதவியை மற்றவர்களுக்கு செய்வார்கள்.

அதிலே அமிதாப் அபிநேஹாவின் மனதை அறிந்தவனாக இருந்தான். அதனால் அங்கே இங்கே என்று நடக்கும் அத்தனை துக்க செய்தியும் அபிநேஹா காதுக்கு கொண்டுவருவான்.

" ஏண்டா பேக்கு நீ ஏன் எப்போ பாரு கெட்ட செய்தியை பற்றியே பேசுற " என்று மானு சலித்து கொண்டாள்.

" அப்போ தான் நம் சமுதாயம் என்ன நிலைமையில் இருக்குன்னு நமக்கு தெரியும்" என்பான் அவன்.

" என்னமோ போடா, நீ சொல்றதையெல்லாம் கேட்க கேட்க நாம் எவ்வளவு பயங்கரமான சொஸ்ட்டியில் இருக்கிறோம் என்று பயமாயிருக்கு " என்றாள் ஜனனி.

" அப்படியில்லை ஜனனி, இதை நீ பயமா பார்க்க கூடாது. இது நமக்கு ஒரு அலட் அப்புறம் நம்மை போல மனிதர்கள் படும் கஷ்டத்தை பார்த்து கடவுள் நம்மை எப்படி வைத்திருக்கிறார் என்று கடவுளுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும், அப்படித்தானே அபி " என்றான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அபிநேஹாவை பார்த்து. அவளும் ஆமாம் என்று தலையாட்டிவைத்தாள்.

அபிநேஹா சிறுக சிறுக தனக்கு தான் கட்டிவைத்திருந்த கூட்டை விட்டு வெளியே வந்தாள். வெளியே வந்தது அவள் மட்டும் இல்லை, அவளுடைய திறமையும் தான். பொருளாதாரத்தை பற்றிய அவளுடைய திறமை நண்பர்களை வியப்புக்குள் ஆக்கியது. அந்த துறையின் hod அவளுக்கு பக்கபலமாக இருந்து அவளை மெருகேற்றினார்.

படிப்பு முடிந்து நண்பர்கள் அனைவரும் வெவ்வேறு பாதையில் செல்ல இவள் ஒரு ஆடிட்டரிடம் போய் சேர்ந்தாள்.

அவளை பார்க்க ரிஷினந்தன் அடிக்கடி வருவான். ஆரம்பத்தில் அவனை தவிர்த்தவள் பின்பு அவனிடம் பேச ஆரம்பித்தாள். அவளுடைய பேச்சு முழுவதும் அவளுடைய படிப்பு, நாட்டின் பொருளாதாரம், அரசியல் பற்றியதாகவே இருக்கும். ரிஷினந்தனும் அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கண்டு மகிழ்ந்தான். ஆனால் அவனின் வாழ்க்கை போக்கை கண்டுதான் அவனால் மகிழமுடியவில்லை.

அண்ணன்மார்கள் அனைவரும் ஒருபேச்சுக்கு அவனை தங்கள் கம்பெனிக்கு வருமாறு அழைத்தனர். அவர்கள் அழைப்பை மறுத்துவிட்டான் இவன். " வேண்டாம் அண்ணா நான் என் நண்பர்களுடன் தொழில் தொடங்க உள்ளேன் " என்று கூறி யாரிடமும் சிக்காமல் தப்பிவிட்டான் ஆனால் பானுவிடம் மாட்டிக்கொண்டான்.

பானு இவன் வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்த போதே பிளான் போட்டுவிட்டாள் இவனை நம் வீட்டின் தலையாட்டி பொம்மையாக்கி விடவேண்டும் என்று. அதற்கு ஏற்கனவே ஆளை ரெடியும் செய்துவிட்டாள். வேறு யாரும் இல்லை அவளுடைய அருமை தங்கைதான்.

ப்ரியா நவநாகரிக நங்கை. பானு அழகிதான் ஆனால் மாநிறம். அவள் தங்கை ப்ரியாவோ பேரழகி தங்க நிறம். பார்ப்பவர்கள் சொக்கி போகும் அழகு. நடை, உடை பாவனை என்று சகலத்திலும் A1. அவளிடம் குறை என்று எதையும் சொல்ல முடியாது. பேசி பழகவும் பாந்தமான பெண்தான். ஆனாலும் அக்காவின் குணம் அவளிடம் இல்லாமல் இருக்காது என்று என்ன நிச்சயம்?

என் தங்கை தன் கடைசிவருட படிப்பை என்னுடன் தங்கி முடிக்கப்போகிறாள் என்று அறிவித்தாள் பானு, அபிநேஹா மும்பை சென்றவுடன்.

அதற்கு யாருமே எதிர்ப்போ, சம்மதமோ சொல்லவில்லை. ஒருவருடம் இங்கே தங்கி இருந்தவள் ரிஷிநந்தனிடம் நன்றாகவே பேசி பழகிவிட்டாள். அவளை காலேஜில் டிராப் செய்யும் அளவுக்கு போனது அந்த பழக்கம். அதன் பிறகும் ப்ரியாவை தன் தாய் வீட்டிற்கு அனுப்ப விருப்பம் இல்லை பானுவுக்கு. அவளுடைய திட்டம் எல்லாம் வந்து இரண்டு மாதத்தில் அந்த அபிநேஹாவிற்காக தன்னை அவமானபடுத்திய அந்த ரிஷிநந்தனை தன் தங்கை முலமாக அடக்கி ஆள வேண்டும். இதற்கு அவள் தாயுக்கு முழு சம்மதம்தான் என்றாலும், தந்தைக்கு இல்லை. அவரும் தலையாட்டி பொம்மைதான் என்றாலும் குடும்ப கெவுரவம் என்று வரும் போது கொஞ்சம் தலை ஆட்டுவதை நிறுத்திவிடுவார்.

படிப்பு முடிந்து தன் வீட்டிற்கு சென்ற ப்ரியா அங்கே போகாமளே இருந்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு இங்கே அடிக்கடி வந்தாள். கற்பகம்மாளுக்கு உள்ளூர கலக்கம் இருந்தாலும் வளர்ந்து நிற்கும் மகனுக்கு அறிவுரை செய்ய தயங்கினார். பானுவின் எண்ணத்தை அறிந்துகொண்டவர் மகனின் விருப்பம் போல வாழட்டும் என்று விட்டுவிட்டார்.

" அம்மா அந்த ப்ரியா பொண்ணு பார்க்க நல்ல பொண்ணு மாதிரி தெரிஞ்சாலும் அந்த பொண்ணுகிட்ட என்னவோ தப்பு இருக்கிற மாதிரி எனக்கு தோணுதுமா " என்றார் அன்னம்மா.

" உனக்கு தோணுது, ஆனா எனக்கு முடிவே ஆகிட்டு. சின்னவன் தப்புன்னா யாரு என்னன்னு பார்க்காம பேசிவிடுவான். அதனால அக்காளும் தங்கையும் சின்னவனை மடக்க நினைக்கிறாங்க. ப்ரியாவுக்கு நல்ல மாப்பிள்ளையும் ஆச்சு, பானுவுக்கு தன்னை எதிர்த்து பேசியவனை தன் தங்கைக்கு கட்டிவைத்து அவள் கணவனை போல இவனையும் அடக்கி ஆளலாம் என்று பார்க்கிறாள். பாவம் அவள், அவள் எண்ணம் சின்னவனிடம் பலிக்காது என்பது தெரியாமல் ஆடுகிறாள். விடு நடப்பது போல நடக்கட்டும் " என்றார் கற்பகம்மாள்.

" ஐயோ என்னம்மா இப்படி சொல்றிங்க, அக்கா போடுற ஆட்டமே தாங்க முடியல, தங்கச்சியும் சேர்ந்தா வீடு என்னம்மா ஆகிறது " என்றார் அன்னம்மா பதறியபடி.

அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சிரித்துக்கொண்டார் கற்பகம்மாள்.

**********

" ஏன்டி ப்ரியா நீயெல்லாம் அழகி என்று வெளியே சொல்லிவிடாதே, ஐந்து வருடம் ஆகியும் இன்னும் ஒரு ஆண் பிள்ளையை மயக்க தெரியல " என்றாள் பானு.

" அக்கா சும்மா என் வாயை கிளறாதே, எல்லா ஆண் பிள்ளையும் உன் கணவனை போல இருக்கமாட்டார்கள். அந்த ரிஷியிடம் எந்த மயக்க மருந்தும் செல்லாது. இந்த ஐந்து வருடத்தில் நான் செய்யாத முயற்சி இல்லை. என் மனம் அவருக்கு தெரியாமல் இல்லை. ஆனால் ஒரு மாற்றமும் இல்லை அந்த கல்லிடம். ஐந்து வருடமாக மிகவும் நல்லவளாக நடித்து நடித்து வெறுத்து போனேன் " என்றாள் ப்ரியா சலிப்பாக.

" ஒருவேளை அவருக்கு நீ இன்னொருவரை காதலித்துக்கொண்டிருப்பது தெரியுமோ என்னமோ?" என்றாள் பானு இடக்காக.

" அக்கா இப்படி பேசாதே. பரத்தை நான் காலேஜில் காதலித்தது உண்மைதான், ஆனால் அப்பவே எங்கள் இருவருக்கும் பிரேக் அப் ஆகிட்டு." என்றாள் எரிச்சலாக.

" ஆனால் நான் அப்படி கேள்விப்படலேயே " என்றாள் பானு கேள்வியாக.

" யாரு அம்மா சொன்னார்களா, அவர்களுக்கு வேற வேலை இல்லை " என்றாள் ப்ரியா.

" இங்க பாரு ப்ரியா, நான் உன் நன்மைக்குத்தான் சொல்றேன், என்னிடம் உண்மையை சொல்லு " என்றாள் பானு விடாம.

" யாரு நீ என் நன்மைக்கு..... நம்பிட்டேன். கதை விடாதே, உனக்கு அந்த ரிஷியையும், அபியையும் பிடிக்காது, அதனால் நீ என்னை அவனுக்கு கட்டிவைக்க பார்க்கிற, சரி சொல்லுறேன் கேட்டுக்க. அந்த பரத் இப்பவும் என்னை தான் காதலித்துக்கொண்டிருக்கிறான், நான் தான் உன் பேச்சை கேட்டு அவனை கழற்றிவிட்டேன். ஆனால் இப்போ ஒரு இரண்டு வருடமா ஏதோ மண் குதிரையை நம்பி அதன் பின்னே ஓடுறதா எனக்கு பட்டதால் பரத்துடன் போனில் டச்சில் உள்ளேன், பேசுவேன் அவ்வளவுதான். ஐந்து வருடம் ஆகியும் எந்த பதிலும் சொல்லாமல், மறுக்கவும் இல்லாமல் இருக்கும் இந்த ரிஷியை நம்பி அந்த பரத்தையும் விட்டுட்டா என்னாவது ? " என்றாள் தோளை குலுக்கியபடி.

" சும்மா பரத் பரத் என்று சொல்லாதே, இந்த ரிஷியை விட அவன் எதில் உயர்ந்தவன் ? அழகிலும் கிடையாது, பணத்திலும் கிடையாது அப்புறம் என்ன ?"என்றாள் பானு.

" அது உண்மைதான், பரத் ரிஷியை போல அழகன் இல்லைதான், பணத்திலும் ஏணி வைத்தாலும் எட்டாது, ஆனால் ஒன்றில் அவன் இவனை விட உயர்ந்தவன். ஐந்து வருடம் ஆகியும் என்னையே நினைத்துக்கொண்டிருப்பவன் பரத். அதே ஐந்து வருடம் ஆகியும் என்னை கொஞ்சமும் கண்டு கொள்ளாத ரிஷி. அப்புறம் பணம் இல்லாவிட்டாலும் அவனிடம் வேலை இருக்கிறது. வெளிநாட்டில் வேலை செய்கிறான், நல்ல சம்பளம், அவனுடன் நன்றாக ஊரை சுற்றலாம், எல்லாவற்றிற்கும் மேலாக என் இஷ்டப்படி நான் வாழலாம், அவனையும் ஆட்டிப்படைக்கலாம். " என்றாள் ப்ரியா.

" முடிவா என்னதான் சொல்ற, ரிஷியா ? பரத்தா ?" என்றாள் பானு கோபமாக.

" இதில் உனக்கு என்ன டவுட், நிச்சயமாக ரிஷிதான். அவனை தான் கல்யாணம் செய்வேன். அப்படி எதுவும் நடக்கல, என்னால் முடிந்தவரை அவன் வாழ்க்கையை காம்ப்ளிகேட் ஆக்குவேன். அப்புறம் இருக்கவே இருக்கான் பரத் " என்றாள் சிரித்துக்கொண்டே.

" சூப்பர், ஆனா எனக்கு ஒரு சின்ன டவுட், நீ இரண்டுபேரில் யாரை கல்யாணம் செய்தாலும் கல்யாணத்திற்கு பிறகாவது உன் கணவரை உண்மையாக லவ் பண்ணுவியா ?" என்றாள் பானு.

ஏதோ பெரிய ஜோக்கை கேட்டதுபோல சிரித்தவள் " கண்டிப்பா லவ் பண்ணுவேன், என் இஷ்டம் போல நடந்துக்கிட்டா " என்றாள் ப்ரியா.

*********

ரிஷி யோசனையாகவே இருந்தான். ப்ரியாவுக்கு என்ன பதிலை சொல்வது என்று தெரியாமல். இரண்டு வருடத்திற்கு முன்புவரை ப்ரியாவிடம் நல்லபடியாகத்தான் பழகிக்கொண்டிருந்தான், அண்ணியின் தங்கை என்ற முறையில். ஆனால் ஒருநாள் ரிஷி ப்ரியா அழைத்ததால் அவளுடன் ஷாப்பிங் சென்றிருந்தான். அப்போது வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒரு பெண் தோழி ரிஷியை கண்டு சந்தோசப்பட்டு ரிஷியை கட்டியணைத்தாள். அது அவர்கள் நாட்டு பழக்கம்.

" சின்னத்தான் என்ன இது " என்று ரிஷியிடம் கோபப்பட்டாள் ப்ரியா.

" ப்ரியா உன்னிடம் எத்தனை முறை சொல்லிவிட்டேன் என்னை சின்னத்தான் என்று அழைக்காதே என்று. பட்டிக்காட்டுத்தனமாக உள்ளது, பெயரை சொல்லி கூப்பிடு. அப்புறம் எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம். எலிசா என்னுடைய பிரெண்ட். அந்த நாட்டில் இதெல்லாம் சாதாரணம். ஏன் கலாச்சாரத்திற்கு பெயர்போன நம் நாட்டிலே நாகரிகம் என்ற பெயரில் இப்படித்தானே நடக்கிறார்கள். " என்றான் அவன்.

" உறவு காரரை உறவுமுறை சொல்லித்தான் அழைக்க வேண்டும், அப்போதுதான் ஒரு நெருக்கம் இருக்கும். அப்புறம் அது எந்த நாடாக இருந்தாலும் நமக்கு மட்டுமே சொந்தமான ஒருவரை யாரும் சும்மா தொட்டாலும் கோபம் வரத்தான் செய்யும், புரியும் என்று நினைக்கிறேன் " என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

ரிஷி அதிர்ந்து நின்றான். இது என்ன புது சோதனை. உறவுக்கார பெண், அதுவும் பானுவின் தங்கை. இவளிடம் சற்று இணக்கமாக நடந்துகொண்டால் இவள் அக்கா தன் ஆட்டத்தை கொஞ்சம் அடக்கி வாசிப்பாள் என்று நினைத்தால் இவள் என்னவோ எனக்கு மட்டுமே சொந்தம் பந்தம் என்று உளறி கொட்டிவிட்டு போகிறாள். இவள் அக்காவே என் அம்முவை ஒரு வழி ஆக்கிவிட்டாள், இவள் என்ன செய்ய காத்திருக்கிறாளோ " என்று எண்ணியவனின் நியாய புத்தி இவனை இடித்தது.

" உன் அம்முவிடம் பானு அடக்கி வாசிக்க வேண்டும் என்று, நீ இன்னொரு பெண்ணின் மனதில் ஆசையை வளர்க்கலாமா " என்று.

தப்புதான் என்று ஒத்து கொண்டவன் அதன் பிறகு ப்ரியாவுடனான பேச்சை சற்று குறைத்துக்கொண்டான். அவள் என்னன்னவோ முயற்சி எடுத்தும் பயனில்லை. ரிஷியின் 100% எண்ணம் முழுவதும் அபியை சரிசெய்வதிலும், அவள் பிஸியான நேரத்தில் இவனுடைய பிஸினஸை பற்றியும் மட்டுமே இருந்தது. இதில் எங்கே போய் ப்ரியாவின் முயற்சியை பார்க்க. அவள் இவன் மேலே வந்து விழுந்தாலும் " விழுந்துவிட்டு நீயே எழுந்து போ, உன்னை தூக்கிவிட நேரம் என்னிடம் இல்லை " என்பான்.

ரிஷி ப்ரியாவின் குணத்தை பற்றி எண்ணியது தவறு என்று அவளே அவளை அறியாமல் தன்னை காட்டிக்கொடுத்தாள்.

ப்ரியாநடித்து நடித்து சோர்ந்து போனாள். அபியை பற்றி அடிக்கடி அவனிடம் விசாரிப்பாள். ஏனென்றால் அப்போதுதான் பேச்சை வளர்க்க முடியும், அந்த கல்லுளி மங்கன் அதற்குத்தான் உடனே வாயை திறப்பான் என்று ப்ரியா தன் அக்காவிடம் அடிக்கடி கூறுவாள். அப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் போதுதான்

" சின்னத்தான் எனக்கு நம்ம அபியை பார்க்க வேண்டும் போல ஆசையாக இருக்கு, அடுத்த முறை நீங்கள் அவளை பார்க்க போகும் போது நானும் உங்களுடன் வருவேன் " என்றாள். அப்படியாவது அவனுடன் தங்கலாம் என்ற எண்ணத்தில்.

உடனே " தேவையில்லை " என்ற ஒற்றை வார்த்தை பதில் அம்பாக வந்து விழுந்தது.

நான் கேட்டு ஒருவன் மறுப்பதா ? என்ற எண்ணத்தில் தன்னுடைய நடிப்பை மறந்து
" அப்படி நான் அவளை என்ன செய்துவிடப்போகிறேன் சின்னத்தான். சரி நான் வரவில்லை. கோழி தன் குஞ்சை காப்பது போல பொத்தி பொத்தி அவளை வைத்திருக்கிறீர்கள், பார்த்து ஏதாவது ஒரு கழுகு அவளை கொத்தி தனக்கு இரையாக்கி விடாமல் பார்த்து கொள்ளுங்கள் " என்றாள் வன்மத்துடன்.

" உன் அக்காவை விட பெரிய கழுகு உலகத்தில் உண்டா ?" என்று கேட்டுவிட்டு எழுந்து போய்விட்டான் ரிஷி.

அவன் பேசிய அந்த ஒரு வாக்கியம் ப்ரியாவை தான் ஏதோ உளறி கொட்டிவிட்டோம் என்று நினைக்க வைத்தது ஏனென்றால் அந்த வாக்கியம் வந்த வேகம் அப்படி.

அதன் பிறகு என்ன முயற்சி செய்தும் ப்ரியாவால் ரிஷியை நெருங்க முடியவில்லை, ரிஷிக்கு ப்ரியா ஒரு தலைவலியாக தோன்றினாள். தவிர்க்க வழி தேடினான்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
ரிஷிநந்தனிடம் ப்ரியாவின் பப்பு வேகவில்லை
பானுவின் கனவு பலிக்குமா?
 

Saroja

Well-Known Member
கண்றாவி அக்கா தங்கை பேச்சு
ரிஷி மாட்டாம தப்பிக்கனும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top