Uyirin ularal - episode 4

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
" அதெப்படி முடியும், விளிம்பில் தேர்ச்சி பெற்ற பெண்ணுக்கு நகரத்தில் பிரபலமான அந்த கல்லூரியில் எப்படி இடம் கிடைக்கும்" என்று இதோடு 10முறைக்கு மேலாக கேட்டுவிட்டாள் பானு ஆனால் அவளுக்கு பதில்தான் கிடைக்கவில்லை.

" நீ ஏன் புலம்புற பானு, அவன் இதைவிட பெரிய காலேஜிலேயே ஸீட் வாங்கியிருப்பான், அம்மா பெண் பிள்ளை ரொம்ப தூரத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றார். அதனால்தான் பக்கத்தில் இருக்கும் மும்பைக்கு அனுப்பியிருக்கிறான்" என்றான் ராம்கோபால்.

" என்ன மும்பை பக்கத்தில் இருக்கும் காலேஜ்ஜா ?" என்று பானு முறைக்க

"அவனுக்கு அது பக்கம் தான். நினைத்த நேரத்தில் பிளைட்டில் போயிட்டு போயிட்டு வருவான். நீ அதை விடு, குழந்தையை பார்" என்ற கணவனை முறைத்தாள் பானு.

" யாரு அப்பன் வீட்டு காசில் யாரு யாரை படிக்கவைப்பது ? எப்படியும் சில லட்சங்களை கொடுத்துதான் சீட் வாங்கியிருப்பார் உங்கள் தம்பி. அவரின் படிப்பே இப்போதான் முடிந்திருக்கிறது, இதில் நினைத்த நேரத்திற்கும் மும்பை போக அவருக்கு பணம் யாரு கொடுப்பது ?" என்றாள்.

" முட்டாள் மாதிரி பேசாதே பானு, அண்ணன் தம்பிக்குள் அதிக வயசு வித்தியாசம் என்பதால் எங்கள் அப்பா ஏற்கனவே ஒவ்வொருவரின் பேரில் ஒரு தொகையை ஏற்கனவே டெபாசிட் செய்திருக்கிறார். அதில் வரும் வட்டியே எங்கள் செலவுக்கு அதிகம், அப்புறம் வெளிநாட்டில் என் தம்பி படிப்பை மட்டும் பார்க்கவில்லை, பார்ட் டைம் வேலையும் பார்த்திருக்கிறான். அந்த தொகையை வைத்து தன் நண்பர்களுடன் அடுத்த மாதம் தொழில் தொடங்க போறானாம். அதனால் யாரிடமும் உதவி கேட்கும் நிலையில் அவன் இல்லை. அவனிடம்தான் நாங்கள் உதவி கேட்கவேண்டும் " என்றான் ராம்.

" உங்க அப்பா உங்கள் பெயரில் மட்டும்தான் டெபாசிட் செய்தாரா? இல்லை அந்த அபிநேஹா பெயரிலுமா ?" என்று கேட்டாள்.

அவள் கேள்விக்கு உண்மையான பதிலை சொல்ல அவன் விரும்பவில்லை. காரணம் இவர்களின் பெயரில் டெபாசிட் செய்திருப்பதை விட அபிநேஹா பெயரில் மூன்று மடங்கு அதிகமாக செய்யப்பட்டிருந்தது. அதுமட்டும் இல்லை அது யாருக்கும் சொல்லாமல் வைக்கப்பட்டிருந்தது. தந்தை மறைவுக்கு பிறகுதான் இது மற்றவர்களுக்கே தெரியும். மைனரான அபிநேஹாவின் வட்டிப்பணம் அனைத்தும் ரிஷினந்தனின் பெயரிலே சேர்ந்தது. இதுவும் அவன் அப்பாவின் ஏற்பாடுதான். தாயின் பெயரில் போனால் பிள்ளை பாசத்தில் மற்ற பிள்ளைகளுக்கு கற்பகம்மாள் பங்கிட்டுகொடுத்துவிடலாம், அதை தவறென்றும் கூற முடியாது. ஆனால் ரிஷிநந்தனிடம் அது நடக்காது என்று அப்பா நினைத்தார். ஆனால் மற்ற மருமகள்கள் மாதிரி, முக்கியமாக என் மனைவி மாதிரி ஒரு மனைவி அவனுக்கு வந்து வாய்த்தாள் அப்பாவின் நம்பிக்கை தடம் தெரியாமல் போய்விடாதா ? என்று எண்ணியவன்
" இல்லை " என்று பதிலுரைத்தான் மனைவியிடம்.

பானு நம்பினாலோ இல்லையோ ஆனால் அப்போதைக்கு அமைதியாகிவிட்டாள்.
**********

" எப்படிம்மா அவளை அண்ணி இந்த நிலைக்கு ஆளாக்கும் வரைக்கும் விட்டிர்கள், உங்களால் தடுக்கமுடியாவிட்டால் நீங்கள் என்னிடமாவது சொல்லியிருக்கலாமே ?" என்று ஆதங்கப்பட்டான் ரிஷிநந்தன் தாயிடம்.

" அம்முவிடம் நீ படிக்க போன பிறகு ஏகப்பட்ட மாற்றம், உன் பாட்டி, அப்பா மறைவுக்கு பிறகு அது ரொம்பவே அதிகமாகிவிட்டது. என்னால் அவளை சரியாக கவனிக்கமுடியவில்லை. அதனால் தான் பானுவிடம் அவள் அண்டியபோது விட்டுவிட்டேன், ஆனால் இப்படி ஆகும் என்று நான் நினைக்கவில்லை " என்றார் அவர்.

" என்ன மாற்றம் அம்மா " என்று கேட்டான்.

" அவளுக்கு காலேஜ் திறக்க இன்னும் ஒரு மாதம் இருக்குதானே, நீ இங்கேதானே இருப்ப, உனக்கே தெரியவரும் " என்றார் அவர்.

நீயும் ஆண்தானே என்று அபிநேஹா சொன்னது ரிஷிநந்தனுக்கு மனவருத்தத்தை உருவாக்கியிருந்தது. தான் வளர்த்த பெண், தன்னை விட்டு விலகாமல் தன் தோளிலே தொங்கிய பெண் இப்படி பேசிவிட்டாலே என்று, அதனால் அவளை அட்மிஷனுக்காக மும்பைக்கு அழைத்து சென்றபோதும் அவன் அவளிடம் ஒரு இடைவெளியை உருவாக்கி கொண்டான். அதிகம் பேசவும் இல்லை. இப்போதுதான் அதை நினைத்து பார்க்கிறான், அவன் அப்படி நடந்துகொண்டதற்காக அவளிடம் எந்த வருத்தமும் தென்படவில்லை. பயணம் முழுவதையும் அவள் உறக்கத்திலேயே கழித்தாள். மற்ற நேரம் ஏதோ யோசனையிலேயே இருந்தாள். இவனும் அதை கண்டுகொள்ளவில்லை.

அதன் பிறகு அவன் அவளை கவனிக்க ஆரம்பித்தான். பானு அவளை அழைப்பதில்லை. சிறு சிறு உதவியை அவளுக்கு செய்த பிறகு மற்ற நேரங்களில் தன் அறைக்குள் அடைந்தே இருந்தாள். அதிகமாக தூங்கினாள். எழுப்பினால் கோபத்தில் கத்தினாள்.

ஒருநாள் இவன் பொறுமை இழந்து " ஏன் இப்படி தூங்கிக்கொண்டே இருக்கிறாய், ஏதாவது உருப்படியான வேலையை செய்தால் என்ன ?" என்று திட்ட

கோபத்தில் உறுத்து விழித்த அவள் விடாமல் நகத்தையே கடித்தாள். அவள் பார்வை இவனை விட்டு அகலவே இல்லை.
" என்ன ?" என்று இவன் அதட்டவும் பார்வையை அங்கிருந்த டேபிள் மேல் திருப்பினாள்.

" உன்னைத்தான் அம்மு " என்றான் அவன்.

உடனே அவள் அருகில் இருந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துவீசினாள். " நான் யாருக்கும் அம்மு இல்லை, என்னை அப்படி கூப்பிடாதே, எனக்கு யாரும் இல்லை, என்னை யாருக்கும் பிடிக்காது, நான் அநாதை, நான் யாரு மேல பாசம் வைத்தாலும் அவர்கள் என்னை விட்டுப்போய்விடுவார்கள், என் பாட்டி, மாமா, இரண்டு அத்தானும் அப்புறம் என் ரிஷி, என் நந்து, என் சின்னத்தான், என் சின்னத்தான்" என்று சொன்னதையே சொல்லிக்கொண்டே இருந்தாள்.

ரிஷிநந்தன் அப்படியே அதிர்ந்து நின்றான். அவள் அருகில் சென்றவன் அவனை பிடித்து உலுக்கினான்.

" அம்மு அமைதியாக இரும்மா, பாரு உன் நந்து, ரிஷி, சின்னத்தான் எங்கேயும் போகல இங்கேதான் இருக்கேன், பாருடா என் செல்லம் இல்ல அமைதியாக இரு " என்று சொல்ல சொல்ல அவள் புலம்பல் அதிகமானது.

" எல்லோரும் என்னை திட்டினாங்க, அநாதை கழுதை என்று சொன்னாங்க, அப்புறம் அந்த வேலைக்காரன் சண்முகம் என்னை என்னை தப்பா தொடவந்தான், தப்பு தப்பா பேசினான், அம்பிகா அக்கா அசிங்கமா திட்டினாங்க, உடம்பு அரிப்பு அப்படி ஏதேதோ சொல்லி பெரியத்தான் கூட பேசவேவிடல, என் உடம்பு அசிங்கமா இருக்காம், அதனால் தான் எல்லோரும் என்னை தொட்டு தொட்டு பேசுறாங்களாம், நானும் அது புடிச்சு போய்த்தான் சிரிக்கிறேனாம், நான் எத்தனை நாள் அழுதேன், ஆனா என்னை அழாதேன்னு சொல்ல நீ இங்கே இல்லவே இல்லை. நீ போயிட்ட, போயே போயிட்ட என்னை விட்டுட்டு, நீ என்னையும் கூட்டிட்டு போகல, தனியே என்னை விட்டுட்டு போயிட்ட, என் நந்து என்னை விட்டுட்டு போயிட்டான், என்னை காப்பாத்த வரவேயில்லை. " என்று விடாமல் புலம்பினாள், வெறி கொண்டவளை போல அவனை அடித்தாள்.

செய்வதறியாது அவளை அணைத்துகொண்டு அனைத்தையும் தாங்கி நின்றான். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் புலப்பம் நின்று மயங்கி சரிந்தாள். பதறியவன் அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்து கட்டிலில் படுக்கவைத்தான்.

கண்ணை திறந்தவள் அவனை கண்ணை சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். கண்ணில் தானே கண்ணீர் வடிந்தது.

" சின்னத்தான் நீயாவது என்னை நம்புவாயா? எனக்கு எந்த பிஸிக்கல் டச்சும் தேவைப்படல, நான் பாசத்தில்தான் உன்னுடன் பழகினேன் என்று " என்று கேட்டாள்.

" ஸ்ஸு அப்படியெல்லாம் பேசாதே அம்மு, நீ சின்ன குழந்தை, உன்னை யாரும் அப்படி நினைக்கமாட்டாங்க" என்றான்.

" இல்லத்தான் எல்லோரும் அப்படிதான் நினைப்பாங்களாம், நீ உன் ரூமுக்குக்கு போயிடு, உன்னை இங்கே யாராவது பார்த்தா அப்படிதான் பேசுவாங்க, எனக்கு முன்பு போல உன்னுடன் இருக்கத்தான் ஆசை ஆனால் இனி அது முடியாது. நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணுவியா? உனக்கு கல்யாணம் முடிவதற்குள் ஒரே ஒரு நாள் என் பழைய சின்னத்தானாக இருப்பியா ?" என்று கேட்டாள்.

" உளறாதே அம்மு, நான் எப்பவும் உன் சின்னத்தான் தான்." என்றான் இவன்.

" நீதான் உளறுற, பானுக்கா என்னிடம் பாசமாகத்தான் இருக்கிறாங்க, ஆனா ஒரு நாள் பானு அக்கா கார்டனில் இருந்திருக்காங்க, ராமத்தான் ரூமில் இருந்தாரா அது தெரியாம நான் அவங்க ரூமுக்கு போயிட்டேன், அக்கா வந்து ரொம்ப திட்டினாங்க, யாரும் பார்த்தா தப்பா நினைப்பாங்க என்று " என்றாள் கண்ணை உருட்டிக்கொண்டு.

" நீ சொல்ல வேண்டியதுதானே, நான் பிறந்தது முதல் இங்கேதான் இருக்கேன் என்று " என்றான்.

" அப்படி சொல்ல கூடாது, ஏன்னா நான் இப்போ பெரிய பொண்ணு, அப்புறம் அவங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு" என்றாள் இவள் பெரிய மனுஷிபோல.

" அவங்க எப்படியும் போய் தொலையட்டும், ஆனால் எனக்கு நீதான் பஸ்ட் " என்றான்.

" நீ பாவம், உனக்கு எதுவுமே தெரியல, உனக்கு கல்யாணம் முடிந்தபிறகு உன் வைப்தான் உனக்கு பஸ்ட் " என்றாள்.

" கல்யாணம் முடிந்த பிறகுதானே, இப்போ எதுக்கு அதை பற்றி பேசணும், எனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல, அப்புறம் நான் பிஸினெஸ் செய்து சம்பாதிக்க வேண்டும், அப்படி எவ்வளவோ இருக்கு. சரி சொல்லு நான் உனக்கு பார்த்திருக்கும் காலேஜ் பிடிச்சிருக்கா ?" என்று பேச்சை மாற்றினான்.

ஆனால் அவளோ மீண்டும் பழைய கதைக்கே வந்தாள். " அதான் சொன்னேனே, உனக்கு என்னை பிடிக்கவே இல்லை என்று. அதனால் தான் நீ சென்னையில் காலேஜ்ஜே இல்லை என்று மும்பையில் கொண்டு என்னை தள்ளுகிறாய். ஒன்று நீ வெளியூர் போவாய், இல்ல என்னை எங்காவது கொண்டுபோய் விடுவ, இரண்டும் ஒன்றுதானே " என்றாள் அவள் ஒரு கசந்த சிரிப்புடன்.

" நியாயமாக பார்த்தால் நான் தான் உன்னை இப்படியெல்லாம் பேசணும். உனக்குத்தான் என் மேல நம்பிக்கையே இல்ல, எவ்வளவுநாள் கழித்து நான் வீட்டுக்குவந்தேன். ஏர்போர்ட் வருவேன்னு பார்த்தேன் ஆனா நீ நான் வீட்டுக்கு வந்த பிறகே அரைமணிநேரம் கழித்துதான் வெளியே வந்த, அதுவும் நான் உன்னை கூப்பிட்டபிறகு, அப்புறம் கொஞ்சம் கோபம் பட்டுட்டேன்னு வையென். ச்ச நம்ம அம்முக்குட்டியை திட்டிட்டமே என்று பாசத்தில் ஒரு முத்தம் கொடுத்தால், நீயும் ஆண்தானே என்று சொல்லி என்னை வேதனை படுத்தின, இப்போ உனக்கு என்னை பிடிக்காது, பிடிக்காதுன்னு என்னை நம்பவே மாட்டேங்குற " என்றான் வருத்தத்துடன்.

" அப்படியில்லை சின்னத்தான், நீ பாரீனுக்கு போய் படிக்காம இருந்திருந்தா என்னை யாரும் கஷ்டப்படுத்த விட்டிருக்கமாட்டேல" என்றாள்.

" சரிதான், ஆனா அப்பா என்னை பாரினுக்கு அனுப்பி படிக்கவைப்பதில் ரொம்பவே பிடிவாதமாக இருந்தார். ஏன்னு எனக்கே தெரியல, அப்பொழுது எனக்கு ரொம்ப கோபம் கோபமாக வந்தது, சரியாம படிக்க கூட இல்லை நான், அப்புறம் அப்பா என்னிடம் பேசினார். அண்ணன்கள் மேல அப்பாவுக்கு அப்போதே அவ்வளவா நம்பிக்கை இல்லை. எங்களுக்கு இடையே ஆன வயசு வித்தியாசம்தான் அதுக்கு காரணம். அதனால தான் நான் நல்லா படிக்கணும் என்று நினைச்சிருக்காரு. நீயே சொல்லு நான் படிச்சு முடிச்சிட்டேன், ஆனா எனக்கு முன்பாகவே மூன்று பேரும் தொழிலை பிரித்து எடுத்துகிட்டாங்க, இனி நான் போய் எனக்கும் தொழிலில் பங்கு தாங்க என்று போனால் அண்ணனை விடு அண்ணிங்க மனம் வந்து தருவார்களா ? சட்டப்படி எனக்கும் தொழிலில் பங்கு இருக்கு ஆனாலும் பிடிக்காம அவங்க தரும் பங்கில் எனக்கு ஈடுபாடு இல்லை. அப்பா எனக்கு நல்ல படிப்பை தந்திருக்காரு, தேவையான பணத்தையும் பேங்கில் போட்டிருக்காரு, நான் என் சொந்த காலில் நிற்பேன், அப்படியே உன்னையும் நிற்க வைப்பேன்." என்றான் அவளுக்கு புரியும் வகையில்.

" சாரித்தான், நீ உண்மையிலேயே ரொம்ப பாவம், நீ புதிதாக தொடங்கும் தொழிலில் பார்ட்னர் யாரையும் சேர்க்காதே, நீ தனியே சாதித்து காட்டு." என்றாள்

" பணம் " என்றான் அவன்.

" உன்னிடம் இருக்கிற பணத்தை போடு, அத்தையிடம் கேள், அப்புறம் என் நகை எல்லாம் அத்தையிடம் இருக்கு, எல்லாவற்றையும் வாங்கிக்க, லோன் போடு" என்று ஆலோசனை வழங்கும் அவளை ஆச்சரியமாக பார்த்தான். கொஞ்ச நேரம் முன்னாடி அவள் நடந்துகொண்ட முறை என்ன ? இப்போது அவள் பேசும் பேச்சு என்ன ? இதுதான் அவள், அவளிடம் உள்ள திறமை அவளுக்கே தெரியாமல் போனதுதான் கொடுமை, ஆனால் ரிஷினந்தன் அதை நன்றாகவே தெரிந்துவைத்திருந்தான்.

" ok நீ சொன்ன மாதிரியே செய்றேன். நீயும் நான் சொல்ற மாதிரி செய்ய வேண்டும் சரியா. பஸ்ட் உன்னை எதுக்கு மும்பைக்கு படிக்க அனுப்புகிறேன் என்றால் நீ உன் ug கோர்ஸ்ஸை முடித்த பிறகு CA படிக்க போற, அதுக்கு மும்பைதான் சரியான இடம். அங்கே எனக்கு தெரிந்த ஒரு பேமஸ் ஆடிட்டர் இருக்கிறார். அவரிடம் நீ ஜூனியராக சேரவேண்டும், அப்புறம் இந்த அண்ணி லூசுகள் எல்லாம் அங்கே உன்னை பார்க்க வராதுக, வந்தாலும் பார்க்க முடியாது. அந்த காலேஜ் அப்படி, உனக்கு கார்டியன் என்று நான்தான் கையெழுத்து போட்டிருக்கிறேன். என் தலை தெரியாமல் உன்னை பார்க்க அங்கே யாருக்கும் அனுமதி கிடையாது. உனக்கு அங்கே வித்தியாசமான சிந்தனை கொண்ட நிறைய நண்பர்கள் அங்கே கிடைப்பாங்க. ஆண் என்று நீ யாரையும் ஒதுக்காதே, ஆண்களிலும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அப்புறம் உன் வாழ்க்கையை உன் இஷ்டப்படி நீ வாழலாம். உனக்கு சரி என்று பட்டதை தைரியமாக செய். உனக்கு அங்கே யார் மேலயாவது விருப்பம் வந்து அவனை லைப் பார்ட்னராக செலக்ட் செய்ய நினைத்தாலும் உனக்கு என் முழு சப்போர்ட் இருக்கும், ஆனால் அதற்கு முன்பு நீ என்னிடம் அவனை பற்றி கொஞ்சம் சொல்லு, அவன் எப்படி பட்டவன் என்று விசாரிக்க சரியா " என்றான்.

பதிலுக்கு அபிநேஹா வாய்விட்டு சிரித்தாள் சந்தோசமாக.

அவள் துக்கம் மாறி சந்தோசமாக சிரித்ததை பார்த்தவன் அவள் கையை எடுத்து அவன் வாய் வரை கொண்டுபோனான் முத்தம் கொடுக்க ஆனால் பாதியிலேயே நின்றான், சிரித்துக்கொண்டிருந்த அபிநேஹா " எனக்கு எல்லாமே குழப்பமாக இருக்கு, எது சரி, எது தப்பு என்று சரியாக இனம் காண தெரியல, ரொம்ப யோசித்தால் ரொம்ப கோபம் வருது, என்னை ஏதோ நோயாளி என்று நினைத்து நான் பேசியதை மறக்க மாட்டியா சின்னத்தான் " என்றாள் கெஞ்சலாக.

உடனே அவள் கையில் மட்டும் இல்லாமல் நெற்றியிலும் முத்தமிட்டவன் " அம்மு உனக்கே ஏதோ பிரச்சனை இருக்கு என்று தெரியுதுல?" என்று கேட்டான்.

" முன்னாடி தெரியல, இன்னைக்கு உன்னை பார்த்ததில், அடித்ததில் தெரிந்தது, எனக்கு என்னமோ ஆயிட்டு என்று " என்றாள்.

" அப்படின்னா நான் ஒன்னு சொல்லவா?" என்றான்.

அவள் தலையாட்டவும் " நாளைக்கு நான் டாக்டரிடம் அப்பாய்மென்ட் வாங்கவா?" என்று கேட்டான்.

அமைதியாக இருந்தவள் " டாக்டர் நான் பைத்தியம் என்று யாரிடமும் சொல்ல மாட்டார்ல " என்று கேட்டாள் சின்ன குரலில்.

" டாக்டர் ஏன் பொய் சொல்ல போறார். முதலில் நீ உன்னை தாழ்த்தி பேசுவதை விடு. பைத்தியம் என்றெல்லாம் ஏன் பெரிய பேச்சு பேசுகிறாய். சில விச கிருமிகள் உன் மனதில் விஷச்செடியை நட்டுவிட்டனர். அதை பிடிங்கி போட கொஞ்சம் கவுன்சிலிங் உனக்கு தேவைப்படுது அவ்வளவுதான், புரியுதா ? " என்று கேட்டான்.

தலையை ஆட்டியவள் " எனக்கு தூக்கம் தூக்கமாக வருது, நான் தூங்கவா ? " என்று கேட்டு கண்ணை மூடிக்கொண்டாள்.

தூங்கும் அவளை இமைக்காமல் பார்த்தவன் அறையை விட்டு வெளியே வந்தான்.
 

banumathi jayaraman

Well-Known Member
உறவுகளின் ஆதரவு தேடும் ஒரு சின்னப் பெண்ணை வீட்டுக்கு வந்த மருமகள்கள் என்ன பாடுபடுத்தியிருக்காளுங்க
அதிலும் என் பெயரில் பாதி கொண்டவள் ரொம்ப மோசமானவளாக இருக்காளே
அபிநேஹா ரொம்பவே பாவம்
இவளை பைத்தியமாக்கிட்டாங்களா?
பார்டரில் பாஸ் செய்தவளை பெரிய காலேஜ் சேர்த்து படிக்க வைத்த ரிஷிநந்தனே அபியைக் கல்யாணம் செய்திருக்கலாமே
ஏன் செய்யவில்லை?
என்ன காரணம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top