Uyirin ularal - episode 29

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
#1
உயிரின் உளறல் - அத்தியாயம் 29

அபி வாய்விட்டு அழ கூட முடியாமல் ஊமையாக அமர்ந்திருந்தாள். அப்போது ரிஷி போன் செய்திருந்தான். டிஸ்பிலேயில் அவனும் அவளும் சேர்த்து இருந்த போட்டோவோடு அது மிளிர்ந்தது.

அதை எடுத்தவள் " சின்னத்தான், சின்னத்தான் " என்று அழ ஆரம்பித்தாள்.

" அம்மு என்ன ? என்னடி ஏன் அழுகிறாய். சமாளித்து கொள்வேன் என்று நீ கூறியதால் தானே நான் தைரியமாக கிளம்பி வந்தேன். நீ நல்ல பெண் தானே என் நிலைமையை புரிந்துகொள்வாய்த்தானே ? " என்று கேட்டான் அவளை சமாதானம் செய்துகொண்டு கவலையாக.

" ம், அழமாட்டேன். நீ சீக்கிரம் வந்திடு " என்றாள் அழுகையுடன்.

ரிஷிக்கு என்னவோ தப்பாகபட்டது. தாயிடம் பேசியவன் அவளை பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான்.

அதன் பிறகு வந்த இரண்டு நாளும் அவன் போன் செய்த போதும் இவள் பட்டும் படாமல் பேசினாலே தவிர முன்பு இருந்த நெருக்கம் இல்லை அதில். கண்டிப்பாக ஏதோ பிரச்சனை என்று நினைத்தான் ரிஷி. தாயிடம் எதுவும் கேட்கவும் தயங்கினான்.

கற்பகம்மாளும் அபியை கவனித்தார் ஆனால் மகன் ஊருக்கு சென்ற வருத்தத்தில் மருமகள் இருக்கிறாள் என்று நினைத்தார் அவர்.

" அம்மா நம்ப அம்மு அம்மாவின் முகம் சரியேயில்லை, ஏதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கு " என்றார் அன்னம்மாள்.

" ரிஷி ஊருக்கு போன வருத்தமாக இருக்கும் " என்றார் கற்பகம்மாள்..

" இல்லம்மா இரண்டு நாள் சும்மாதானே இருந்தது. இரண்டு நாளைக்கு முன்பு அந்த ப்ரியா இந்த புள்ளகிட்ட தோட்டத்தில் வைத்து தனியாக ஏதோ பேசியது, அதில் இருந்துதான் அம்மு இப்படி இருக்கு " என்றார் அவர்.

கற்பகம்மாள் யோசனையில் ஆழ்ந்தார்.

ரிஷி தன் PA மனோவை கடித்து கொண்டிருந்தான் போனில். " மனோ நீ உன் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய். நான் போட்ட பிளானில் சேன்ஜ் செய்து இரண்டு நாள் முன்பே வருவது என் பெர்சனல் மேட்டருக்காக. நீ அதை ஆபீஸ் டூட்டியாக மாற்றிவிட்டாய். இப்போது எதற்காக இந்த அவசர மீட்டிங். அடுத்த வாரம் வைத்துக்கொள்வோம் என்று நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே" என்றான் ரிஷி கோபத்தில்.

" சாரி சார். அந்த கிளைன்ட் அவசரமாக பாரின் போறாங்களாம், அடுத்தவாரம் இருந்த மீட்டிங்கை சேன்ஜ் பண்ண முடியுமா, அதுவும் நாளைக்கே என்று கேட்டார்கள். இது பெரிய ப்ராஜெக்ட் வேற. மீட்டிங் எல்லாம் சும்மா கண் துடைப்புக்கு சார். அவர்கள் அக்ரீமெண்ட் பேப்பரில் சைன் பண்ண மட்டும்தான் வாறாங்க. பிளான் எல்லாம் ரெடி ஒரு அரைமணிநேர டிஸ்கேசன் அப்புறம் அக்ரீமெண்ட்ல சைன் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க. ஒருமணி நேரத்தில் முடிந்துவிடும் இந்த மீட்டிங்கை விட்டா அப்புறம் இந்த ப்ராஜெக்ட் கைமாறிவிடும். இது கிடைத்தால் நமக்கு வெளியூர் ப்ராஜெக்ட் எல்லாம் தேவைப்படாது. அதனால் தான் ஏற்பாடு செய்துவிட்டேன்." என்று பணிவாக விளக்கினான் மனோ.

" என்னமோ செய்து தொலை, ஆனா மகனே உன் வைப் டெலிவரி முடிந்த பிறகு அவர்கள் அம்மா வீட்டிற்கு அனுப்புவதாகத்தானே பிளான் வைத்திருக்கிறாய். அப்போது உனக்கு நைட் டூட்டி போட்டு சாகடிக்கிறேன் பாரு" என்றான் ரிஷி.

" ஓஒ தாராளமா. என் மனைவி இல்லாத வீட்டில் எனக்கு தனியே என்ன வேலை. இப்போது கோபம்படாதீங்க. நான் உங்களை ஏர்போர்ட் வந்து பிக்அப் பண்ணிக்கிறேன், நீங்க மீட்டிங் முடித்துவிட்டு உடனே வீட்டுக்கு போயிடலாம் " என்றான் மனோ.

" என்ன ? நீ என்னை பிக்கப் பண்ணி ஆபீஸ் அழைத்து போறியா ? ஆமாண்டா உன் முகத்தை பார்க்கத்தான் நான் இப்படி இரவும் பகலும் வேலை பார்த்து இரண்டு நாள் முன்பே வருகிறேன் பார். ஏர்போர்ட் பக்கம் வந்த கொன்னுட்டேன். வீட்டிற்கு தெரியாமல் காரை மட்டும் அனுப்பு. நான் வீட்டிற்கு போயிட்டு அப்புறம் ஆபீஸ் வருகிறேன் " என்றான் ரிஷி.

மனோ ஏதோ மறுப்பு சொல்ல வாயை திறக்க, " டேய் உனக்கு என் வயசுதான் ஆகுது, அதற்குள் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகிவிட்டாய், ஆனால் நான் மட்டும் என் மனைவி முகத்தை பார்க்க கூட உன்னிடம் இப்படி மல்லுக்கட்ட வேண்டியிருக்கு. எல்லாம் என் நேரம். பேசாமல் நான் சொல்வதை செய். தாமதிக்காமல் மீட்டிங் வருவேன் " என்று ரிஷி வாக்கு கொடுத்த பிறகுதான் மனோஜ் அமைதியானான். ஆனாலும் ரிஷி வீட்டிற்கு வந்து இறங்கிய பத்து நிமிடத்தில் அவனும் அங்கே வந்துவிட்டான் ரிஷியை கையோடு அழைத்து போக.

அபி அப்போதுதான் ஆபீஸில் இருந்து வந்திருந்தாள். உடுத்திருந்த புடவையை கூட மாற்றாமல் கையில் போனை வைத்திருந்தபடி சோபாவில் அமர்ந்து கண்ணை மூடியிருந்தாள்.

காரில் இருந்து இறங்கிய ரிஷியை கண்ட பானுவோ அதிர்ந்து போனாள். " இவன் எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தான், அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் " என்று நினைத்தவள் தங்கையை அழைத்தாள்.

அபியிடம் ப்ரியா பேசி பேசியே தன் கருத்தை அவள் மூளைக்குள் ஏற்றிவிட்டாள். இன்னும் இரண்டு நாளில் மெல்ல அவளை ரிஷியின் வாழ்க்கையில் இருந்தே வெளியேற்றிவிடலாம் என்று நினைத்தால் பாவி இப்படி வந்து நிற்கிறானே என்று பானு புலம்பினாள்.

ப்ரியாவுக்கு அதே கவலைதான், அத்தோடு இந்த அபி அவனிடம் எல்லாவற்றையும் கேட்கிறேன் என்ற பெயரில் உடனே சொல்லி தொலைத்துவிட்டால் முடிந்தது கதை.. அவர்கள் பிளான் படி அபி அவனிடம் எதுவும் கேளாமல் அவனை விட்டு விலக வேண்டும். அதற்குள் வந்து விட்டான் அவசர குடுக்கை. எப்படியாவது அபியை எச்சரிக்கை செய்ய வேண்டும் அவள் எதுவும் சொல்வதற்கு முன் என்று நினைத்தவள் அபிக்கு போன் செய்தாள்.

ஆனால் அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ரிஷி போன் செய்வான் என்பதற்காக அபி அதை அணைத்து வைத்திருந்தாள். இது தெரியாமல் அக்காளும் தங்கையும் அதற்காக வேறு அபிக்கு தனியாக அர்ச்சனை செய்தார்கள்.

ரிஷி எங்கேயும் செல்லாமல் யாரையும் பார்க்காமல் நேரே தன் அறைக்கு வந்தான் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க. ஆனால் கதவை தட்டாமல் உள்ளே வந்த அவனுக்கோ அவன் மனைவி சர்ப்ரைஸ் கொடுத்தாள்.

ரிஷி உள்ளே வந்த பிறகும் அபி அதை உணரவில்லை. கண்ணை மூடியிருந்த அவளின் முகம் வேதனையில் சுருண்டு இருந்தது. அவளை நின்று பார்த்துக்கொண்டிருந்தவன் அவளிடம் அசைவை காணாமல் அங்கிருந்தே போன் செய்தான். அது சுவிட்ச் ஆப் என்றவுடன் இவனின் நெற்றி யோசனையில் சுருங்கியது.

" அம்மு " என்று அழைத்தான் பதிலில்லை.

" அம்மு " என்றான் சத்தத்தை உயர்த்தி.

பட்டென்று கண்ணை திறந்தவளின் கண்ணில் அவனை பார்த்து கொஞ்சம் சந்தோசம் தெரியவில்லை. காலை சென்று மாலை வீடு திரும்பினாலே அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு முகத்தை முழுவதும் முத்தத்தால் நிரப்பும் அவனின் மனைவி, ஐந்து நாள் கழித்து வந்த இன்றோ அந்த இடத்தை விட்டு அசையாமல் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி அசையாமல் நேராக அங்கே இருந்த காலண்டரை பார்த்தாள். அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவன்

"என் ஆசை மனைவி என்னை காணாமல் தவித்து போய்விடுவாளே என்று வேலையை சீக்கிரமாக முடித்துவிட்டு இரண்டு நாள் முன்பாகவே வந்தேன் " என்றான் குத்தலாக.

அவன் பேச்சில் இருந்த குத்தலை கண்டுகொண்டவள் அந்த பேச்சு பிடிக்கவில்லை என்பதை " ச்ச " என்ற கை உதறலுடன் வெளிக்காட்டிவிட்டு அவனை காண பிடிக்காதது போல அவனை சுற்றிக்கொண்டு கதவை நோக்கி செல்ல முயன்றாள்.

ரிஷிக்கோ ஆத்திரம் ஏறியது. ஐந்து நாள் இந்த பெண்ணை காணாமல் ஏங்கி தவித்துப்போய், அன்று போனில் அழுதாலே என்ன பிரச்சனையோ ? என்று பதறி போய் இரண்டு நாள் இரவு பகல் தூங்காமல் இருந்து வேலையை முடித்து கொண்டு இங்கே ஓடிவந்தால் இவள் என்னை ஏதோ வழியில் போகிற பொறுக்கி மாதிரி எண்ணி கொண்டு எழுந்து செல்கிறாள் இவளை " என்று எண்ணியவன் அவள் கையை பிடித்து நிறுத்தினான்.

அவன் பிடியில் இருந்து கையை உருவ போராடியவளிடம் " எங்கே போற " என்றான் இறுகிய குரலில்.

" ஆபீஸ் போகிறேன், ஒரு பைலை எடுக்க வந்தேன், அது இங்கே இல்லை அதான் போகிறேன் " என்றாள் அவள்.

" ஆபீஸ் போறியா ? பைலை தேட வந்தவள் ஏதோ குடியே மூழ்கின மாதிரி அமர்த்திருந்தாய். ஐந்து நாள் கழித்து ஒரு மனுஷன் உன்னை பார்க்க ஓடி வந்து நிற்கிறேன் ? எப்படி இருக்கிறாய் என்று கேட்கவேண்டாம், ஏன் வந்தாய் என்று கேட்பது போல கையை உதறிவிட்டு போகிறாய். என்னை பார்த்தால் உனக்கு கேனயன் மாதிரி இருக்கா ? ஐந்து நாளுக்கு முன் அப்படி உருகின, இப்போ இப்படி எரியுற ? அப்படி என்னடி உனக்கு என் மேல் கோபம். நான் என்ன தப்பு செய்தேன் என்று சொல்லிட்டு நீ எங்கே வேண்டும் என்றாலும் போ " என்று உறுமினான் ரிஷி.

மனதில் அவன் குரலின் மாற்றம் குளிரை பரவ செய்தாலும் " ஒன்றும் இல்லை, விடுங்கள் என்னை " என்றாள் அபி.

" ஒன்றும் இல்லையா ? உனக்கு என்றுதான் ஏதாவது இருந்திருக்கிறது இன்று இருக்க, இனி உன்னிடம் வாயால் பேசி பிரயோஜனம் கிடையாது" என்றவன் அவளை தன்னிடம் இழுத்தான்.

வலுக்கட்டாயமாக போராடி அவனிடம் இருந்து விடுபட்டவள் பின்னோக்கி சென்றாள் கண்ணில் பயத்துடன். போனவள் சுவற்றில் முட்டிக்கொண்டு நின்றாள். அவளை நோக்கியே போனவன் அவள் சுவரரோடு சாய்ந்து நிற்கவும் தன் இரு கையையும் சுவற்றில் ஊன்றி அவளுக்கு அணை போட்டான்.

அபி அவன் என்ன செய்ய போகிறான் என்பது தெரியாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாள். கண்டிப்பாக திட்டுவான் என்றுதான் நினைத்துக்கொண்டு அப்படியே நின்றாள் அபி. ஆனால் அவனோ அவள் எதிர்பாராத நேரம் அவளை இழுத்து அணைத்து அவளின் இதழை தன் இதழால் அழுத்த சிறைபிடித்தான்.

எப்போதும் போல ஷேக்கன் முத்தம் கொடுக்கிறான் என்று நினைத்த அபி, அவனுடைய முரட்டுத்தனமான வேகத்தில் சிக்கி மீள முடியாமல் திமிறினாள். அவள் அவனிடம் இருந்து விடுபட துடிப்பதை உணர்த்த ரிஷியின் வேகம் கூடியது கோபத்தில்.

அவள் விடாமல் திமிர ரிஷி அவளுடைய பின் கழுத்தை அழுத்த பிடித்தவனின் கை அவளின் கூந்தலில் அளைந்து எதையோ தேடியது. அவன் தன் கேசத்தை பிடிக்கிறான் என்று நினைத்துக்கொண்ட அபியோ எட்டி அவனை போலவே அவன் பின் தலையின் கேசத்தை அழுத்த பிடித்து இழுத்தாள் பதிலுக்கு.

ரிஷியோ அவளின் செய்கையில் தன் நிலை மறந்து அவளின் இதழுக்குள் இன்னும் ஆழமாக இறங்கினான். அவன் கை விடாமல் அபியின் கேசத்தில் தன் வேலையை செய்ய அபியின் திமிறல் மெல்ல படிப்படியாக அடங்கி அவனுடைய கேசத்தை மென்மையாக அளைந்தாள். அவள் மெல்ல மெல்ல தன்னை தொலைத்து அவன் கையில் நெகிழ தொடங்குவதை உணர்த்த ரிஷியின் கோபம் வந்த பாதையில் திரும்பி சென்றது, அவன் கோபம் காதலாக கசிந்து உருகியது.

இரண்டு உள்ளமும் எதையோ தங்கள் உதடுகள் வாயிலாக தேட அபியை யாரோ தூரத்தில் இருந்து அழைப்பது போல சத்தம் கேட்டது. அது மிக அருகில் கேட்பது போல உணர அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் சற்று அதிகம்தான்.

அபி அந்த சத்தத்தில் தன்னிலைக்கு வந்தவள் அவனை ஒரு வேகத்தில் தள்ளிவிட்டாள், இவ்வளவு நேரம் என்று வரையறுத்து கூறமுடியாமல் கூடியிருந்த உதடுகள் பிரிந்ததில் ரிஷிக்கோ ஏக வருத்தம். அபியோ பயந்து நடுங்கி போய் நின்றாள். அவள் தள்ளிவிட்ட வேகத்தில் அவன் விடுவித்தது அவள் உதட்டை மட்டும்தான். ஆரம்பத்தில் நின்றது போலத்தான் அவளை விடாமல் இரண்டு கையையும் அரணாக வைத்திருந்தான்.

" அபி " என்ற சின்ன அழைப்புடன் கதவு தட்டும் சத்தம் மிக வேகமாக கேட்டது. அந்த தட்டலில் ஏதோ உயிர் போகும் அவசரம் இருந்தது. அபி பயந்து போய் ரிஷியின் சட்டை காலரை பிடித்துக்கொண்டு அவனுள் ஒளிந்தாள். மீண்டும் மனைவியை இழுத்து ஒரு அவசர முத்தம் கொடுத்தவன் அவளுக்கு தன்னை திடப்படுத்திக்கொள்ள அவகாசம் கொடுத்து தானே சென்று கதவை செல்ல முயன்றான்.

அவனை கரத்தை பிடித்து தடுத்த அபி எம்பி அவனின் கலைந்திருந்த கேசத்தை சரிசெய்தாள். மறந்தும் கூட அவனின் கண்ணை பார்க்கவில்லை அவள். அதில் காதலும் காமமும் கலந்த கலவை நிரம்பி இருந்தது.

ரிஷி போய் கதவை திறந்தான்.
அங்கே கையில் சில பேப்பருடன் ப்ரியா நின்றாள்.

அவளை பார்த்து கேள்வியாய் புருவத்தை உயர்த்தியவன் " யாருக்கு என்னாச்சு ?" என்றான் மொட்டையாக.

" என்ன ? என்னாச்சு ?" என்று புரியாமல் பதில் கேள்வி கேட்டாள் ப்ரியா.

ரிஷிக்கு ஆத்திரத்தில் என்னன்னவோ கேட்க தோன்றினாலும் " இல்லை உயிர் போகிற அவசரம் போல கதவை இடித்தாயே அதான் யாருக்கு என்னாச்சு ? என்று கேட்டேன்" என்றான் பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு.

" வந்து உங்களுக்காக உங்கள் PA கீழே காத்திருக்கிறார் அதான் உங்களிடம் கூற வந்தேன், அப்புறம் அபியிடம் இந்த.... இந்த பேப்பரை கொடுத்திட்டு போகலாம் என்று " என்று இழுத்தாள் ப்ரியா.

" ஸோ நான் மேலே என் அறையில் என் மனைவியுடன் இருப்பது தெரிந்துதான் நீ அவளிடம் அவசரமாய் இந்த பேப்பரை கொடுக்க வந்தாயா ?" என்றான் ரிஷி.

" நான் பேப்பரை கொடுப்பதற்காக வரவில்லை, உங்களுக்காக உங்கள் PA காத்திருப்பதை கூற வந்தேன், சரி அந்த வேலையோடு இதையும் சேர்த்து கொடுத்துவிடலாமே என்று நினைத்து எடுத்து வந்தேன். நீங்கள் இப்போது கிளம்பி விடுவீர்கள்தானே, அப்படினா நானே இதை அவளிடம் கொடுத்துவிடுகிறேன் " என்று ப்ரியா அறைக்குள் எட்டி பார்த்தாள்.

அவளை முறைத்தவன் " பரவாயில்லை நானே கொடுத்துவிடுகிறேன், அத்தோடு வீட்டின் விருந்தினரிடம் தான் வந்திருக்கும் தகவலை கூற சொன்ன என் PA வுக்கும் சேர்த்து கொடுக்கிறேன், அவன் வந்திருப்பதை என்னிடம் தெரிவிக்க அவனுக்கு போன் இல்லையா ? இப்படி விருந்தினரை அலையவைத்திருக்கிறான்? " என்று பல்லை கடித்தான் ரிஷி.

நீ இந்த வீட்டுக்கு விருந்தாளி. உன் எல்லைக்கும் நில் என்பதை தனக்கு புரிய வைக்க நினைக்கிறான் என்பது புரிந்தாலும்,

"இல்லை இல்லை அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை, நான்தான் " என்று திணறியவள் "இதை அபியிடம் கொடுத்துவிடுங்கள் " என்று பேப்பரை ரிஷியிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள்.

ரிஷி கோபத்தில் அதை கட்டிலில் எறிந்தவன் அபியின் புறம் திரும்பினான். அவள் நார்மலாகிவிட்டாள் என்பதற்கு அறிகுறியாக அவன் கொண்டுவந்த உடையை எடுத்துக்கொண்டிருந்தாள்.

யார் என்று கூட யோசிக்காமல் கேட்பார் பேச்சை கேட்டுக்கொண்டு தன் மேல் கோபத்தில் கொதிக்கும் அபியின் மேல் கோபம் இருந்தாலும் சற்று முன் தன் முத்தத்தின் தாக்கத்தில் கிறங்கி போய் நின்ற மனைவியின் மேல் அந்த கோபத்தை பிடித்து வைக்க முடியவில்லை அந்த 29 வயது இளைஞனுக்கு.

அவள் பின்னோடு சென்று அபியை அணைத்தான் ரிஷி.

" விடுங்க " என்றவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசியவன் அவள் காதில் ரகசியமாக பேசினான்.

" ஆக என் மனைவியின் பாரா முகத்துக்கு காரணம் அவளின் புதிய தோழி, சரிதானே ?" என்றான் ரிஷி.

அபி ஒருநிமிடம் நிமிர்ந்து நாணாக நின்றாள் அமைதியாக. பின்பு " நந்து நாம் இரண்டு பேரும் பிரிந்துவிடலாம் " என்றாள்.

ரிஷிக்கு இப்போது கோபம் வரவில்லை. எய்தவர் யாரோ இருக்க அம்பை நொந்து என்ன பயன். ஆனால் அந்த அம்புக்கு எதிரே நிற்பது யார்? நம்பிக்கைக்கு உரியவரா ? இல்லையா ? என்பதை புரியவைக்க வேண்டும் ஆனால் வேறுவழியில் என்று நினைத்தவன்

" ஓகே உன் விருப்பம் போல செய்யலாம், ஆனால் உன்னால் என்னை பிரிந்து இருக்க முடியுமா ?" என்றான் அவள் காதோரம் தன் உதட்டால் வருடிய படி.

உன்னால் இருக்க முடியுமா ? என்றுதானே கேட்கிறான். என்னால் இருக்க முடியாது என்று கூற அவனுக்கு வாய் வரவில்லையே என்று எண்ணி வருந்தினாள் அபி.

அப்போது ரிஷியின் கை அவளின் இடையை தழுவியிருந்த புடவையை சற்று விலக்கி அவளின் வயிற்றில் கோலமிட்டது.

அபி அவனது செய்கையில் அவஸ்த்தையாக நெளிந்து கொண்டு " இருக்க முயற்சி செய்வேன் " என்றாள் பிரயாசப்பட்டு.

" அந்த முயற்சியை நீ ஏன் நாம் சேர்ந்து வாழ செய்ய கூடாது " என்றவன் அவளது இடையை அழுத்த பிடித்தான்.

அபி மூச்சை ஆழமாக இருந்துகொண்டு, மூச்சு விட மறந்தவளாய் அவன் கேள்விக்கு பதில் கூறாமல் இருந்தாள்.

ரிஷியின் தொடுகையில் அவளின் பட்டுபோன்ற இடையின் மென்மை கூடி, அவள் உடல் எங்கும் ஏற்பட்ட சிலிர்ப்பை ரிஷியின் கை உணர்ந்தது. அவளை இன்னும் தன்னோடு இறுக்கியவனின் போன் நேரம் காலம் தெரியாமல் சட்டமிட்டது.

" கரடி " என்று முனங்கியவன் அதை எடுத்து தன் காதுக்கு கொடுத்தான். அபியோ அவன் கையை அகற்றும் முயற்சியில் இருந்தாள்.

" ஹலோ, வரேன் வரேன் " என்றவன் போனை வைத்துவிட்டு " சாரி செல்லம், ஒரு மணி நேர வேலை. சீக்கிரம் வந்து மிச்சத்தை பேசுகிறேன் " என்று அவளை விடுவித்தான்.

கீழே சென்றவன் கற்பகம்மாளை பார்த்து தான் வந்துவிட்டதை தெரிவித்துவிட்டு அன்னமாவை அபிக்கு துணைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டான்.

கற்பகம்மாள் ஏன் ? எதற்கு ? என்று எதையும் கேளாமல் அன்னம்மாவை அனுப்பினார்.

" அன்னம்மா அபி ரூமில் இருக்கிறாள், களைப்பாக தெரிகிறாள், அவளை யாரும்... யாரும் தொந்திரவு செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நான் ஒரு மணி நேரத்தில் வந்து விடுகிறேன். யார் கேட்டாலும் நான் தான் இப்போது அவளை பார்க்க கூடாது என்று கூறினேன் என்று கூறுங்கள். " என்று கூறிவிட்டு மனோவுடன் கிளம்பி சென்றான்.

" சார் நீங்க இரண்டு நாள் முன்னே வந்தது சிலருக்கு பிடிக்கவில்லை போல " என்றான் மனோ காரை ஓட்டிக்கொண்டு.

ரிஷி பதில் கூறாமல் சிரித்தான்.
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஷ்வபூமி டியர்

வீணாப் போன அக்காளும் தங்கச்சியும் அபிக்கிட்டேயிருந்து நந்துவை பிரிக்கிறதிலேயே குறியா இருக்காளுங்க
நாசமாப் போற பிரியா
கொஞ்சம் நேரம் கூட புருஷன் பொண்டாட்டியை கொஞ்ச விட மாட்டேங்கிறாள்
 
Last edited:

Saroja

Well-Known Member
#6
ஏன் இந்த பொம்பள பிசாசுங்க
இப்படி செய்றாங்காப்ப
சப்பனு அரை விட்டு தொரத்த
யாரும் இல்லையா
அபி புள்ள கொஞ்சம் புருசன
புரிஞ்சுக்கலாம்
 
#7
ஏன் இந்த பொம்பள பிசாசுங்க
இப்படி செய்றாங்காப்ப
சப்பனு அரை விட்டு தொரத்த
யாரும் இல்லையா
அபி புள்ள கொஞ்சம் புருசன
புரிஞ்சுக்கலாம்
எப்படி துரத்த முடியும்?
பானு அந்த வீட்டின் மருமகள்
ப்ரியா அவளுடைய தங்கச்சி
அபி ஒரு லூசுதான்
ஏழெட்டு வருஷமா தேள் மாதிரி பானு கொட்டிக் கொட்டி அபிநேஹா ஒரு வழியாகிட்டாள்
 
Nasreen

Active Member
#10

Nice ud
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement