Then Thelikkum Thendralaai - Intro

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்

எல்லாரும் எப்டி இருக்கீங்க? உங்க எல்லோருடைய அன்பு அஷ்மியை கூட்டி வந்துவிட்டேன். ஆம், இன்றிலிருந்து வாரம் மூன்று நாள் அஷ்மி உங்களுடன்.

தேன் தெளிக்கும் தென்றலாய்

அஷ்மிதா - பிரசாத்.

இவர்களுடன் உங்களுக்கு பரிட்சயப்பட்ட பல நபர்களும் இக்கதையில்.

மனதில் பட்டதை தவறென்றால் அப்படியே கேட்டுவிடும் நாயகி, யார் என்ன நினைத்தாலும் சரியோ தவறோ தனக்கு தோன்றியதை மட்டுமே செயல்படுத்தும் ஒட்டுமொத்த திமிரின் அவதாரம் நாயகன்.

கிட்டத்தட்ட ஒரே குணாதிசயம் கொண்ட இருவர் வாழ்வில் இணைந்தால்?

எளிதில் யூகிக்க கூடிய கதைதான். எதை வேண்டாமென்று எந்த தவறை ஏற்க முடியாதென்று ஒரு உறவை விலக்கி விலகினாளோ கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்றை செய்தவனை வாழ்க்கையாக ஏற்கும் நம் நாயகி அஷ்மிதா அதை எப்படி ஏற்று கடந்துவருகிறாள் என்பதுதான் கதை களம்.

காதலெனும் தேனை யார் மீது யார் தெளிக்கிறார்கள் என்பதை கதையில் தெரிந்துகொள்வோம்.

கதையிலிருந்து உங்களுக்காக சில வார்த்தையாடல்கள்...

“ஆடி அடங்கும் வாழ்க்கையடா...” அஷ்மி பாட,

“ஏய் உனக்கு சொன்னா புரியாதா?...” ரத்தினசாமி எகிற,

“என்ன மயிலு ஆடாம அசையாம அடக்கமா, அமைதியா, அழகா ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கியேன்னு ஷார்ட்டா பாட்டுல சொன்னேன். நீ ஓவராத்தான் கொதிக்கிற...” என்று சிரிக்க,

“உன்னை எந்த நேரத்துல உங்கப்பன் பெத்தான்னு தெரியல. கல்யாணப்பொண்ணா அடக்க ஒடுக்கமா ஒரு இடத்துல உக்காந்து தொலை...” ரத்தினசாமி எரிந்துவிழ,

“அட அட அட, அழக பத்தி சொன்னதும் செல்லத்துக்கு வெக்கத்த பாரேன். முகம் சிவக்குது போ. இங்க பொண்ணு நானா நீயான்னு எனக்கு டவுட்டே வந்துருச்சு மயிலு...” என அஷ்மி உதட்டை பிதுக்க சேரிலிருந்து படாரென எழுந்தேவிட்டார் ரத்தினசாமி.

----------------------------------------------------------------------------------
கண் மூடி திறக்கும் முன்னால் பிரசாத் அறைந்திருந்தான் அஷ்மிதாவை. ஒரு நொடி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை அஷ்மிதாவிற்கு.

“டேய் என்னடா அடிச்சுட்ட?...” என கேட்டவளுக்கு கோவம் வருவதற்குள்,

“ஒரு அறையோட விட்டேன்னு சந்தோஷப்பட்டுக்க. உன்னை பாத்த நிமிஷம் என்ன பண்ணனும்னு நினச்சேன். ஆனா இருக்கிற கோவத்துக்கும, நிக்கிற இடத்துக்காகவும் மட்டும் தான் இந்த அடி...”

“நீ அடிச்சா நான் வாங்கிட்டு போகனுமோ?...” அவனை திரும்பவும் அறைந்துவிடும் வேகம் அஷ்மிதாவின் பேச்சில் தெறிக்க அதை கண்டுகொள்ளாதவனின் அலட்சியம் இன்னமும் அவளை சூடேற்றியது.

“என்கிட்டையே உன் திமிரை கட்டுறையா?...” என்று எகிறிய அஷ்மியின் பேச்சு எதுவும் பிரசாத்திடம் எடுபடவில்லை. அவளை அவனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தான்.


இனி அஷ்மிதாவின் கையில் எதுவும் இல்லை.

-----------------------------------------------------

“மிஸ்டர் தூக்குதுரை...” என்ற அழைப்பில் அவன் சுற்றிலும் பார்க்க,

“தம்பி அந்த பொண்ணு உங்களத்தான் கூப்பிடுது...” என பந்தில் அமர்ந்திருந்த பெண் அவனுக்கு சொல்ல திரும்பி பாத்தவன் அஷ்மிதாவை கண்டதும் எரிச்சலானான்.

“வெள்ளலி என்ன நக்கலா?...” என முறைப்பாய் நிற்க,

“ப்ச், இவங்களுக்கு சாம்பார் வேணுமாம். சாம்பார் வாளியை தூக்கி வச்சிருக்கற துரை நீங்கதான. சோ கால்ட் தூக்குதுரை...” அஷ்மி கண்ணடிக்க கையிலிருந்த வாளியை டேபிளில் வைத்துவிட்டு,

“அடிங்க...” என அவளை துரத்திக்கொண்டு ஓடினான் அவன்.

-------------------------------------------------------------------------

வாழ்க்கையில் அனைத்தும் முடிந்துவிட்ட உணர்வு. இனி அடுத்த நொடியை கடக்கமுடியாத அளவுக்கு மூச்சுமுட்டு சுமை அவனின் நெஞ்சினில்.

அவ்வளவு தானா? இதுவரை எதுவும் அவளே தான் இனி என்றிருந்த அவனுக்கு அனைத்தும் அவ்வளவு தானா என்று தோற்றம் அரும்ப தொடங்கியது.

உடைந்து சிதறி அனைத்தும் முடிந்தது என நினைக்கும் பொழுதில் வாழ்வின் வெளிச்சதுகள்களாய் அவள் பிம்பம்.

அத்தனை வேதனையிலும் புன்னகைத்தான் பிரசாத்.

--------------------------------------------------------------------

போதும்னு நினைக்கிறேன். எனது முந்தைய கதைகளுக்கு கொடுத்த ஆதரவினையும், ஊக்கங்களையும், உற்சாகத்தையும், கருத்துக்களையும் இந்த கதைக்கும் கண்டிப்பா தருவீங்கன்னு நம்பறேன்.

கருத்து என்னவா இருந்தாலும் சந்தோஷப்படுவேன். சரியில்லைனா கண்டிப்பா சொல்லுங்க திருத்திப்பேன்.

புதன் கிழமை முதல் அத்தியாயத்துடன் உங்களை சந்திக்க வருகிறேன் உங்கள் அஷ்மியுடன்.
 

Joher

Well-Known Member
Tks ஹேமா......

அஷ்மிக்கு ஜோடி பிரசாத்......
அஷ்மிக்கே ஒரு அஷ்மியா.........
செம..........

தூக்குதுரை.........
வெள்ளெலி..........:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:


தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா ..
நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
ஆசை கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ........

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ ...
சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் மொட்டுண்டே ...
படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ ...ஒ ...
மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ ....ஒ ...
இமைகளும் உதடுகள் ஆகுமோ ...
வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரை தானோ...........


கருத்து என்னவா இருந்தாலும் சந்தோஷப்படுவேன். சரியில்லைனா கண்டிப்பா சொல்லுங்க திருத்திப்பேன்........
epi எதிர்பார்த்தால் 8 லைன் போடுறீங்களே.........
டக்குனு மாத்திடுங்க........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''தேன்
தெளிக்கும் தென்றலாய்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top