THAAYAMANGALAM MUTHU MAARIYAMMAN THIRUVIZHA தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருவிழா

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இளையான்குடியில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது புகழ்பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில். இங்கு பங்குனி விழா விமரிசையாகக் கொண்டாடப்படும்.
ஒரு முறை, இப்பகுதியில் வசித்து வந்த அன்னை மீனாட்சியின் பக்தரான ஒரு வணிகர், வியாபாரத்திற்காக அடிக்கடி மதுரைக்கு சென்று வருவார். அவ்வாறு செல்லும்போது மீனாட்சியம்மையை வணங்கி, தனக்கு புத்திரபாக்கியம் வேண்டுமென்று வேண்டிக் கொண்டு வருவார்.
அவருடைய குறைதீர திருவுளம் கொண்ட அம்பிகை, ஒரு முறை அவர் மதுரை சென்றுவிட்டு ஊருக்கு திரும்பும்போது வழியில் ஒரு கள்ளிக்காட்டில் ஒரு சிறுமி வடிவில் அழுது கொண்டு நிற்க, அருகில் யாரும் இல்லாததால், அன்னை மீனாட்சியே தன் குறை தீர அக்குழந்தையைக் கொடுத்ததாக மகிழ்ந்து, அவளை ஆசையுடன் அழைத்து வரும் வழியில் அக்குழந்தை காணாமல் போய்விடுகிறது.
பின்னர், இதை தன் மனைவியிடம் கூற, அவளும் பெரிதும் வருத்தமுற, அந்த வருத்தத்துடனேயே துயில் கொள்ள, அவர்கள் கனவில் அம்பிகை சிறுமியாகத் தோன்றி, தான் இருக்குமிடத்தைக் கூறி, அங்கு தனக்கு சிலை செய்து வைத்து வணங்கும்படி தெரிவித்தாள். அதன்படியே, அக்குழந்தை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அக்குழந்தையின் பாதச் சுவட்டைக் கண்டு, அந்த இடத்தில் மண்ணெடுத்து, அம்மன் சிலை செய்து, சிறு கோயில் கட்டி, வழிபட்டு வந்தனர். இன்றளவும் சுற்றுப்பட்டு 22 கிராம மக்களுக்கும், தாயாகவும், மாங்கல்ய பாக்கியம் அருளும் நாயகியாகவும் இருந்து அம்மன் அருள்பாலிக்கும் ஊர் என்பதால், "தாய்மங்கலம்' என இவ்வூர் அழைக்கப்பட்டு, அதுவே, பின்னர் தாயமங்கலமாக மாறியது என்பர். பிற்காலத்தில் அம்பிகைக்கு கற்சிலை வடித்து கோயில் பெரியளவில் கட்டப்பட்டது.
அம்பிகை இத்திருத்தலத்தில் சிரசில் அக்னி கிரீடம் தரித்துக் கொண்டு, தன் நான்கு திருக்கரங்களில் கரங்களில், உடுக்கை, கத்தி, சூலம், அக்னி ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிறுமியாக வந்ததால் இவளை கன்னித்தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறார்கள். அதனால் இவளிடம் திருமண வரம் வேண்டி கோரிக்கை வைக்கும் பெண்கள், அம்மனுக்கு தாலி அணிவிக்காமல், தாலிப்பொட்டு செய்து, அதை அவள் திருப்பாதத்தில் வைத்து பூஜிக்கின்றனர். திருமணம் ஆகவும், குழந்தை வரம் கிடைக்கவும் இந்த அம்மனை வேண்டிக்கொண்டு அங்குள்ள வில்வ மரத்தில் தாலியும், தொட்டிலும் கட்டி வழிபடுகின்றனர். குழந்தை பிறந்தவுடன் கரும்புத்தொட்டிலில் இட்டு பிரார்த்தனையை நிறைவேற்றுவது இத்தல அம்மனின் சிறப்பாகும்.
கண் நோய்கள் தீர இங்கு அம்மனை கண் மலர் செய்து வைத்து பிரார்த்திக்கின்றனர். அம்மன் சந்நிதியில் கொடுக்கும் அபிஷேக நீரை சாப்பிட்டால் அம்மை நோய் நீங்குகிறது. பங்குனியில் நடைபெறும் திருவிழாவின் போது லட்சக்கணக்கானவர்கள் கரும்புத்தொட்டில் இடுவதை காணமுடியும்.
தென்மாவட்ட மக்கள் வழிபடும் சக்திவாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதம் பங்குனி 15 -ஆம் (29.03.2019) தேதி முதல் 10 நாட்களுக்கு பங்குனி திருவிழா மிக விமரிசையாக நடைபெறும். விழா துவங்குவதற்கு முந்தைய ஒரு நல்ல நாளில் கோயில் வளாகத்தில் கைப்பிடியளவிற்கு மண் எடுத்து வைத்து, அதையே அம்பாளாகப் பாவித்து தீபாராதனையுடன் பூஜை செய்கின்றனர். மதுரை, பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்களிலிலிருந்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். விழாவையொட்டி, தினந்தோறும் இரவு அம்மன், சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள்.
இத்திருவிழாவின் ஏழாவது நாள், பொங்கல் திருவிழாவாகும். இதனையொட்டி கோயிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வரும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி காணிக்கை மற்றும் அக்னிச்சட்டி, கரும்பு தொட்டில் எடுத்தும் வழிபாடு செய்வர்.
அம்மனுக்கு பொங்கலிட்டு வேண்டிக் கொண்டால் அரிசி, பால், வெல்லம் சேர்த்து பொங்கி வரும் பொங்கல் இன்சுவை தருவது போல், நம் வாழ்விலும் இனிமை பொங்கி, எல்லா வளமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
எட்டாவது நாள், இரவு தேரோட்டமும் அதற்கு மறுநாள் பால்குடம் எடுத்தலும் அன்று மாலையில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. அன்றிரவு பூப்பல்லக்கில் ஸ்ரீ முத்து மாரியம்மன் பவனி வருவாள். அடுத்த நாள் தீர்த்தவாரி உத்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நாட்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படுகின்றன.
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
இந்த போஸ்ட்னால எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டை இன்னிக்கு காலைலக் கேட்டேன்.."நிறைஞ்ச மனசு" வீரமணி ஐயா பாடினது..அது கேட்கறச்சே நாம எங்க இருந்தாலும் அம்மா பக்கத்தில இருக்கற மாதிரி உணர்வு..தாயமங்கலம் மாரியம்மன் பாட்டோடத் தொடக்கத்திலையே வருது..அதில வர நிறைய கோவில் போயிருக்கேன்..ஆனா இதுவரைக்கும் தாயமங்கலம் தாயை தரிசிக்கவில்லை..அவங்க கூப்பிறச்சேத்தான் போகமுடியும்..இன்னிக்கு உங்களால மனசுலையே அவங்கிட்ட போயிட்டு வந்திட்டேன்..நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top