Saththamindri Muththamidu 7

Advertisement

Suvitha

Well-Known Member
துளசி கண்டிப்பா பேசி இருப்பாள்..... இஷ்டம் இல்லாமல் கல்யாணம் பண்ணியிருந்தாலும் மாறுவான் என்கிற நம்பிக்கை இருக்கும்..... ஒரே நம்பிக்கையும் அவன் தான்...... எந்த ஒரு தேவைக்கும் அவனை தான் தேடவேண்டும்......

ஆனால் பதிலே கொடுக்காமல் பாராமுகமாக இருந்தால் சலிப்பு தான் வரும்.....
அதனால் கூட விட்டு போயிருக்கலாம்.....

என்னடா போன் மட்டும் பேசுறானேன்னு எனக்கு ஒரு கேள்வி...... இதுவும் புதுசு தான் துளசிக்கு.....
நான் திரும்பி வராமல் இருந்திட போறேனோன்னு பேசுறானோ என்று துளசி ஏன் நினைத்திருக்கக்கூடாது?????
இல்லை பெண்ணுக்காக பேசுறானோ....
ம்ம்....கண்டிப்பாக துளசி பேசியிருக்கலாம்.
இப்ப கூட இந்த பிரச்சினையோடு...என்னை பாருங்க ன்னு கூப்பிட்டு பேசினாளே...
அடுத்து நான் ஊருக்கு போறேன்னு சொல்றா, இவனுக்கு அனுப்ப மனசு இல்லை .ஆனால் அதை வாயைத் திறந்து சொன்னால் தான் என்ன? அதுவும் இல்லை? அனுப்பியாச்சு.
அடுத்து ஒருநாள் விட்டு ஒருநாள் அவ குரல் கேட்கிறதுக்காக phone பண்றவன் ஓரே ஒரு வார்த்தை அம்மா எங்கே? ன்னு கேட்டுருந்தா கூட தன் கணவன் தன்னை தேடுகிறான்னு தெரிந்து விடுமே.அந்த ஒரு எண்ணம்மே அவளுக்கு ....மலையளவு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் தைரியத்தை கொடுக்குமே.இது எதுவுமே இல்லையென்றால் வாழ்க்கையில் ....கண்டிப்பாக ஒரு ....கட்டத்தில் சலிப்பு வரத்தான் செய்யும் சகோதரி .
 
Last edited:

Suvitha

Well-Known Member
திரு துளசி பிரச்சனை நாலு சுவர்களுக்குல் அப்படிதான் இருக்கிறது ஆனா இஙகே பிரச்சனையே வேற
திரு துளசியோடு எதனால்.... நேருக்கு நேர் ....முகம் கொடுத்து பேசமாட்டேங்குறான் என்பது அவனுக்கு ...மட்டுமே தெரியும்.துளசிக்கு ...கூட தெரியாதுன்னே நினைக்கிறேன். ஆனால் அவங்க.... இரண்டுபேரும் ஒரத்தொருக்கொருத்தர் ....பேசிக்கமாட்டாங்க அப்படிங்கறது குடும்பத்திலுள்ள ....எல்லாருக்கும் தெரியுதே ,அந்த பிரச்சினை யைத்தான்பா நான் mention பண்ணினேன்
 

ValliRathinam

Well-Known Member
ஆனா இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் திரு துளசி பேச்ச மட்டும்தான் கேட்கிறான்னு
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊமை நெஞ்சின் ஓசைகள்
அது....
காதில் கேட்கா ஆசைகள்!

ஆசை மீறி பாசை ஆனால்
அது.....
வாழ்வில் பார்க்கா லீலைகள்......!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

vidhyaaj

Well-Known Member
திரு.....
துளசி அப்பா அம்மாவை கூட்டி வந்தது.....
மற்றவர் முன் சண்டையிட வாக்குவாதம் செய்ய விரும்பாமல் காருக்கு போன் பண்ணுறது.....
இவங்க அப்பாக்கு நீங்க பணம் கொடுக்க கூடாது என்பதற்கு ok சொல்லுவது.....
அவங்களை உள்ளே கூப்பிடுன்னு சொல்லி அவள் கண்ணீர் பார்த்ததும் வற்புறுத்தாமல் இருப்பது.....
இதெல்லாம் ok.... துளசி husbandஆ நடந்துக்குற......

நடத்தையில் இதெல்லாம் செய்யமுடிந்த உனக்கு வார்த்தை மட்டும் ஏன் முட்டுது?????

காருக்குள் ஏற்றியவுடன் போகவேண்டாம்னு சொல்லதோணுது..... ஆனா சொல்லல.....
என்ன வந்தது இவளுக்குன்னு நினைக்கிற..... அப்பவும் mute.....
பொண்ணு வலிக்குது.... ஆனா இதுனால இல்லைனு சொல்லுறான்னா அவளுக்கு எல்லாமே புரிந்திருக்கு....... இதுக்கும் mute...

Driver கிட்ட பணம் என்கிட்ட வந்து வாங்கிக்கோன்னு சொல்லுற..... புள்ளைக்கிட்ட ATM card பணம் கொடுக்குற..... இதையெல்லாம் துளசியிடம் சொல்லமுடியாதா?????
நீ என்ன எதிர்பார்க்கிறாயோ அதை மற்றவர்களுக்கும் கொடு..... நல்ல policy....
இது உன் மனைவி விஷயத்தில் மட்டும் பொருந்தாதா???

அவள் உன்கிட்ட பெருசா எதுவுமே எதிர்பார்க்கலை.....
எல்லோர் முன்னாடியும் கை நீட்டி அடித்தும் கூட இரவில் உனக்கு உடன்பட்டாள்..... சந்தோசமா ஏற்றுக்கொண்டாள்..... பதிலுக்கு நீ அவளை அளவுக்கு அதிகமாய் உதாசீனப்படுத்துகிறாய்.....

என் மனைவி எனக்கு முக்கியம் தான்னு நீ வார்த்தையால் சொல்லும் அளவுக்கு நடக்கிறாய்...... நம் வாழ்க்கை அடுத்தவர் வாய் அவலாக விடலாமா?????
நீ ஒன்னும் அவள் முகம் பார்த்தே பேசுவது கிடையாது...... அப்படியிருக்கும் போதே அவளோட ஒரு வார நிராகரிப்பை தாங்க முடியல...... அப்போ 13 வருட நிராகரிப்பின் காயம் அவளுக்கு இருக்காதா???? ஒரு மொபைலை உடைத்தால் எல்லாம் சரியாகுமா???? உன் பொண்ணு பார்க்கவில்லையா????

பிள்ளைகளுக்கு பெற்றோர் முன்னுதாரணம்...... அதுவும் பெண் குழந்தை...... தாயை போல் பிள்ளைனு easy-யா சொல்லிடுவாங்க..... உன் கண் முன் இருக்கும் சோபனாவை பார்.....

உன் வாழ்க்கையை கெடுத்தது நீ தான்..... இன்னும் கெடும் முன் சரிப்படுத்து.....
Time is a big healer..... 13 வருடம் கூட போதவில்லையா உனக்கு?????
உனக்காக உருகும் ஜீவன் ஒன்று இருக்கிறது.....
மீதி இருக்கும் உயிரையும் எடுத்துவிடாதே......
Super a analysis panringa. but ellorurm Ella neramum thanaku piditha mathiri valranga. aduthavar varutham Patti yosipathillai.namakku enna vendum entru nam than decide saiyanum. thulasi thannoda prestige kids yosiga vendam. thiruva love Panrana thiruvoda wife a nadakanum. that means thiru ponnu mathiri. avanaiyum thirumbi parka vaithurukanum
 

Suvitha

Well-Known Member
Hi uma ,ma

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

உன்னை விரும்பினேன் உயிரே...

தினம் தினம் உன்தன் தரிசனம் பெற

தவிக்குதே மனதே......

இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வும்
ஏனோ??......

துளசி அம்மா வீட்டுக்கு போயிருக்கும் போது திரு இந்த
நிலைமையில் தான் இருந்திருப்பானோ????

Situation song நல்லா இருக்கா?????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top