Salasalakkum Maniyosai - final

Advertisement

Gomathianand

Well-Known Member
Wonderful story hema dear
Kinginimanginiya marakka mudiyaathu aval pesura slang sema..... Karthik ini eppovum maamiyaar veetu kavanippula kathikalanga poraan:LOL:
 

Santhiya s

Active Member
Really we miss Karthik and Kanmani... very nice Story.. I liked all the dialogues in all the episodes.. thank so much for the lovely and charming story..
 

Hema Guru

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


இந்த கதை ஆரம்பிக்கும் பொழுது இத்தனை பெருசா நான் நினைக்கவே இல்லை. ஆனா பெருசா எழுதிட்டேன். :)

இந்த கதையில் என்னோடு பயணித்த வ்வொருவரும் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஆகிட்டீங்க. எல்லாருக்குமே தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்ன்ற ஒரு வார்த்தையில் முடிச்சிக்க முடியாது தான். இருந்தாலும் தேங்க்ஸ் மட்டுமே சொல்ல முடியுது என்னால :)

இதே மாதிரியான உற்சாகத்தை என்னுடைய ஒவ்வொரு கதைக்கும் நீங்க குடுக்கனும்னு விரும்பறேன் :)

சலசலக்கும் மணியோசை - இறுதி பதிவு ( 1 )
சலசலக்கும் மணியோசை - இறுதி பதிவு ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)


அஷ்மியை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கீங்க. இன்னைக்கு என்னால முடியலை ப்ரெண்ட்ஸ். ஸாரி. முடிந்தால் நாளை அஷ்மி பிரசாத் வரலாம். பார்க்கலாம் :)
மிக அருமை, கிராமத்து பாஷை சூப்பருங்கோ
 

malar02

Well-Known Member
hi @Kani-hema :)

வட்டார வழக்கு மொழி தான் படிக்கவே தூண்டியது
எனக்கு இது போல் பல தமிழ் வழக்கு படிக்க மிகவும் பிடிக்கும்
அதுவும் நீங்கள் அதை கதை முழுவதும் ஒருபக்கம் வட்டார வழக்கும்
இன்னொருபக்கம் நாம் பேசும் மொழி நடையும் கலந்து
பேச்சில் கொண்டுவந்தது மிக அருமை திறமை
போக போக கதையும் என்னை ஈர்த்தது
ஒரு நடைமுறை வாழ்க்கையில் யதார்த்தத்தை உணர்ந்து தன் வாழ்வை வெற்றிகரமாய் கொண்டு செல்லும் தம்பதியின் குணங்களும் அதன் போகும்

கண்மணி கேரக்டர் ஒரு பாஸிட்டிவ் கேரக்டர் தன்னை குறையாக உணராதவள் மிகைப்படுத்தி கொள்ளாதவள் நடைமுறை வாழ்க்கையின் யாதார்த்தை அர்த்தத்தை உணர்த்துபவளாய்

கார்த்திக் தனக்கு என்ன வேணும் என்று உணர்ந்து வாழ்பவன் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பவன்

படிக்காத தனக்கு டாக்டர் கணவன் வாய்ததை அலட்டி கொள்ளாமல் அவள் கடைசிவரை வாழும் பாங்கு செம
அதுவும் வாழ்வில் காதலும் ஒரு அம்சம் அது பின்னி பிணைந்து இருக்க வழிமுறைகளை கையாண்டு கொண்டு போனவிதம் நல்ல இருந்தது.
அவளின் உறவினர்களாக வருபவர்கலின் அன்பும் அரவணைப்பும் யாதர்த்தமும் கிராமத்தின் கலாசாரத்தை விடாமல் காட்டியதும் நல்ல இருந்தது
வேண்டாத மருமகள் நின்ன குத்தம் உட்காந்தா குத்தம் என்று மகாதேவியின் அலட்டல்களை அனாசியமாய் சமாளிக்கிறாள்
தன் கணவனின் தாய் என்ற மரியாதையையும் அன்பையும் கடைசி வரை விடாமல் பாதுகாத்து

இந்த கதையின் மிக சூப்பர் கேரக்டர் மணிகண்டன் தன் மனைவியால் வாழ்வே ஆட்டம் கண்டாலும் கடைசிவரை தன் மனைவி மேல் வைத்த காதலையும் பாசத்தையும் கடமையும் கைவிடாமல் இருப்பது

கதையின் ஸ்பெஷல் கேரக்டர் அதீத நெகடிவ் அப்ரொசோடு எல்லோரையும் பார்கும் மகா இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் இருக்கலாம் மாறமாட்டேன் என்று குற்றஉணர்வும் வேணாம் குறுகிபோயிம் நிற்கவேணாம் என்று இருப்பவர்கள் தான் செய்யும் நல்லவையை கூட தன் நெகடிவால் மறைத்து கொள்ள விழைபவர்கள் ஏனென்றால் திருந்திட்டேன் என்று பறை சாற்றி கொள்வது மிக பெரிய வலி கொடுக்கும் மரணம் வரை தன் இயல்பை துலைப்பது எதையும் கொட்டி கொட்டி கொடுத்தாலும் இழப்போடு வாழ்வது

உறவுகள் என்பது பலம் என்ற பாசிட்டிவ் அப்ரோச்சோட கதை நகர்ந்த விதம் நல்ல இருந்தது கதை ஒரே விஷயத்தை சுற்றி வந்தாலும் இன்டெரெஸ்டிங்கா கொண்டு போனது பேச்சு நடை வாழ்த்துக்கள்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top