Ramadan 2020- Prophet Yusuf- Day14

Advertisement

fathima.ar

Well-Known Member
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். – அல்-குர்ஆன் 12:3

இவ்வாறு அல்லாஹ் ஸூரா யூசுபில் தனது வார்த்தையிலேயே அழகான வரலாறு என்று கூறுகிறான்.

நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள் அவரது மூத்த மனைவி “ரய்யா”வின் குழந்தைகள் 10 பேர். இரண்டாவது மனைவி “ராஹிலா’வின் வாயிலாக பிறந்த குழந்தைகள் இரண்டு. அதில் மூத்தவர் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரண்டாவது புன்யாமின் இந்த புன்யாமின் பிறக்கும் தருவாயில் ராஹில் என்ற அம்மையார் இறந்து விடுகிறார்கள்.

தாயை இழந்த தன்னுடைய இரு மகன்கள் மீது நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாசத்தை அதிகமாக காட்ட ஆரம்பித்தார்கள்.

நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம்அவர்களது அழகை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் அழகு என்ற அந்த தோற்றத்தை அல்லாஹ் இரு பாதியாக பிரித்து அதில் ஒன்றை நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் மற்றும் ஒன்றைத்தான் நாம் இவ்வுலகில் அழகு என்று எதனை கூறுகிறோமோ அதன் அனைத்திற்கும் அல்லாஹ் பங்கிட்டு வழங்கியதாக.’

நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தந்தை அவர்கள் மீதும் அவரது தம்பியின் மீது அதிக நேசம் வைத்திருப்பதை கண்ட அவர்களது மூத்த சகோதரர்கள் 10 பேர் அவர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள் அதனை கண்ட யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மேலும் அதிகமாக இவ்விருவரையும் நேசிக்க தொடங்கிவிட்டார்கள். ஏன் என்றால் நாமும் இவரை பராமரிக்காவிட்டால் பெரிய இன்னல்களுக்குள் ஆட்பட்டுவிடுவார்கள் என்று அஞ்சினார்கள்.

நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நேசிக்க காரணம் அந்த குழந்தைகள் தனது தாயில்லாமல் கஷ்டபடுவதால் அந்த குழந்தைகள் மீது அதிக நேசமாக இருந்தார்கள்.
அவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் தந்தையிடம்,

“என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் – (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது. – அல்குர்ஆன் 12:4
அப்பொழுது நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்

என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான். – அல்குர்ஆன் 12:5 என்று கூறினார்கள்.

இந்த சம்பவத்தில் இருந்து மேலும் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நேசம் அதிகமாகி விட்டது. எந்நேரமும் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருப்பதையே விரும்பினார். இதனை கண்ட மற்ற பத்து சகோதர்களுக்கு மேலும் வெறுப்பு அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் நம் தந்தை அவர்கள் மீதே அன்பு காட்டுகிறார்கள் என்று மேலும் அவர்கள் இணைந்து ஒரு சதி திட்டம் தீட்டினார்கள். அதனை அல்லாஹ் தனது குர்ஆனில் குறிப்பிடுகிறான்.


12:8. யூஸுஃபுடைய சகோதரர்கள் கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் – நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),

12:9. “யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,

12:10. அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் – அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.

12:11. (பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.

12:13. (அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.

12:14. (அதற்கு) அவர்கள் “நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்“ என்று கூறினார்கள்.

12:15. (இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்

12:16. இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.

12:17. “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது – ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்

12:18. (மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்...

12:19. பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் – (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.


12:20. (இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.

12:21. (யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் – ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.

12:22. அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.
மேலும் ஒரு முறை ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் உரையாடி கொண்டிருக்கும் வேலையில் ஒரு சகாபி அல்லாஹுவின் தூதரே உலகத்தில் மிகவும் சங்கையானவர் யார் என்று வினா தொடுத்தனர்

அதற்கு நமது நாயகம் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் சங்கையானவருடைய மகனுடைய சங்கையானவருடைய மகனுடைய சங்கையானவருடைய மகன் என்று பதில் கூறினார்கள். இது சகாபக்களுக்கு புரியவில்லை.


அதற்கு நமது நாயகம் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இபுராஹீமுடைய மகன் இஸ்ஹாக், இஸ்ஹாக்குடைய மகன் யாகூப், யாகூபுடைய மகன் யூசுப் என்று.
ஏன் ஏன்றால் அல்லாஹ் எந்த ஒரு நபிக்கும் நான்கு தலைமுறையாக நபித்துவத்தை கொடுத்ததில்லை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை தவிர யாருக்கும் கொடுக்கவில்லை...

நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த வீட்டிலேயே வாழ்கிறார் . நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் அவரது எஜமானனின் மனைவி அந்த பெண்ணின் பெயர் ஜுலைகா என்று மார்க்க அறிஞர்களால் அழைக்கபடுகிறது..

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் – (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் – அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.

12:24. ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் – ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

12:25. (யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.

12:26. (இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.

12:27. “ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்..


12:28. (யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் – நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!

12:29. (என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.
இதை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மூன்று குழந்தைகளை அல்லாஹ் தொட்டிலில் இருக்கும் பொழுதே பேசவைத்தான். அதில் ஒருவர் மரியமின் மகன் ஈஸா அலைஹி வசல்லம். இரண்டாவது இபுனு ஜுரைஜ் என்றவரை அல்லாஹ் பேசவைத்தான். மூன்றாவதாக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு சாட்சியாளனாக அல்லாஹ் பேச வைத்தான் என்று.

இந்த விசயம் சிறிது சிறிதாக கசிந்து அந்த பட்டணத்தில் உள்ள பெண்கள் கூறினார்கள், என்ன அமைச்சருடைய மனைவி தனது அடிமையிடம் காதல் கொண்டு தவறாக நடக்க பார்த்திருக்கிறாள் நிச்சயமாக அவள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறாள் என்று ஊர் பெண்கள் பலவாரியாக பேச தொடங்கி விட்டனர்.


அவர்கள் பேசியவை அனைத்தும் அந்த பெண்மணி அறிந்த பொழுது அனைத்து பட்டின வாசிகளில் உள்ள பெண்கள் அனைவரையும் அழைத்து ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தாள். அனைவரும் விருந்து சாப்பிட்டுவிட்டு அனைவருடைய கைகளிலும் ஒரு பழத்தையும் கத்தியையும் அவள் கொடுத்தாள். அவர்கள் அந்த பழத்தை வெட்டும் சமயத்தில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை நீர் அந்த பெண்களுக்குள் நடந்துவா என்று கூறினாள். இந்த சூழ்ச்சி அறியாத நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்குள் செல்ல அவரின் அழகை பார்த்த அந்த பெண்கள் அனைவரும் கத்தியால் பழத்தை அறுப்பதற்கு பதிலாக அவர்களுடைய கையை அறுத்து கொண்டார்கள். மேலும் அந்த பெண்மணிகள் கூறினார்கள் இவர் நிச்சயம் ஒரு மனிதரே இல்லை இவர் ஒரு மலக்காகதான் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்..

அப்பொழுது அந்த பெண்மணி ஜுலைகா கூறினாள் எவரை பற்றி நீங்கள் என்னை இழிவுபடுத்தி கொண்டிருந்தீர்களோ அந்த அடிமை இவர்தான். ஒரு கணம் பார்த்ததற்கே உங்கள் கைகளை வெட்டி கொண்டீர்கள். நான் இவருடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனக்கு எவ்வாறு இருக்கும் என்று பதில் கூறினாள். .மேலும் அவள் கூறினாள் நான்தான் அவரை என் ஆசைக்கு இணங்குமாறு அழைத்தேன். ஆனால் அவர் மனவுறுதியுடன் நின்றுவிட்டார்.
ஆனால் என்றாவது ஒருநாள் என் ஆசைக்கு அவர் இணங்கவில்லை என்றால் அவர் நிச்சயம் சிறையில் அடைக்கபடுவார் அவர் இழிவானவர்களில் உள்ளவராக மாறிவிடுவார் என்று கூறினாள்.
இதனை கேட்ட நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர் அல்லாஹுவிடம் பிராத்தித்தார் ‘என்னுடைய ரட்சகனே இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறாரோ அதைவிட எனக்கு சிறைச்சாலையே எனக்கு விருப்பமானது. மேலும் இப்பெண்களின் சூழ்ச்சியில் இருந்து நீ என்னை காப்பாற்றவில்லை என்றால் அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவேனோ என்று நான் அஞ்சுகிறேன் மேலும் அறிவீனர்களில் ஒருவராக நான் ஆகிவிடுவேன் என்று கூறினார்.


12:34. எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
இந்த சம்பவங்களை அறிந்த அந்நாட்டு அரசன் நம் பெண்களின் இழிவான செயலிலிருந்து அவரை காக்க அவரை சிறையில் அடைத்தான். பிறகு சிறிது காலம் அவர் சிறை வாசம் அனுபவித்தார். சிறையில் இருக்கும் வேளையில் அல்லாஹுவின் ஆற்றலை மக்களுக்கு எடுத்துரைத்து இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டும் இருந்தார்...
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Continuation s புரிந்து கொள்ள முடிகிறது..
நான்கு தலைமுறை தொடர் வது சிறப்பு...
நன்றி...
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top