P18 எந்தன் காதல் நீதானே

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi friends :)

long break really sorry. Not well for past few days. Will come with epi tomorrow. Here comes the precap.

************************************************************************************************

மண்டபத்திற்கு சென்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில், உடைமாற்றி அலங்கரித்துக் கொண்டு வெண்ணிலா வரவேற்புக்கு தயாராகி வர... திருமணத்திற்கு பிறகு அவளை இப்போதுதான் பார்ப்பதால்... உறவினர்கள் அவளை நலம் விசாரித்தனர்.

ஜெய் வெண்ணிலாவின் திருமணத்திற்கு அவள் வீட்டினர் எல்லோரையும் அழைக்கவில்லை. முதலில் நிச்ச்யகபட்ட திருமணம் நின்று போனதால், முக்கியமானவர்களை மட்டுமே அழைத்திருந்தனர்.

சிலருக்கு அவளுக்கு திருமணம் ஆனதே தெரியவில்லை. அதனால் அவளது திருமணக் கதை தான் அலசி ஆராயப்பட்டது. அவளைப் பார்ப்பதும் பிறகு தங்களுக்குள் ரகசியம் பேசுவதையும் வைத்து வெண்ணிலாவுக்கும் விஷயம் புரிந்தது.

நம் கணவன் தீர்க்கதரிசி தான். இதுதான் நடக்கும் என்று முன்பே சொன்னான் தானே. நல்லவேளை அவன் வரவில்லை. இதெல்லாம் பார்த்தால் இந்நேரம் கடுப்பாகி இருப்பான் என நினைத்தவள், மணமகளுடன் மேடையில் சென்று நின்று கொண்டாள்.

மறுநாள் அதிகாலை முகுர்த்தத்தில் திருமணம் முடிந்து, அன்று மதியமே விருந்தும் உண்டுவிட்டு வெண்ணிலா வீட்டினர் கிளம்பினர். கற்பகமும் இவர்களுடனே வந்துவிட்டார்.

*********************************************************************************************

மறுநாளும் அவள் தெளியாமல் இருக்க, “ஏன் டி அம்மா வீட்டுக்கு வந்தா படுத்துகிட்டே இருக்கனும்னு இருக்கா என்ன? உங்க அம்மா தனியா வேலைப் பார்க்கிறா, நீயும் போய் கொஞ்சம் கூடமாட ஒத்தாசை செய்யக் கூடாது.” என்ற பாட்டியிடம்,

“எனக்கு மட்டும் இல்லையா பாட்டி. ஆனா எழுந்துக்கவே முடியலை. படுத்தே இருக்கணும் போல இருக்கு.” என்றவளை பார்வையால் ஆராய்ந்த கற்பகம்.

“மசக்கையா இருக்கியோ என்னவோ.” என்றதும், மகேஸ்வரியின் முகம் மலர, மகளை விசாரிக்க ஆரம்பித்தார்.

ஐந்து நாட்கள் தான் தள்ளி இருந்தது. கர்ப்பமா என சோதித்து பார்க்க நாற்பது நாட்கள் ஆகட்டும் என்றார் கற்பகம்.

மறுநாள் ஜெய் வெண்ணிலாவை அழைக்க வருவதாக இருந்தது. இந்த நேரம் மகளை அனுப்ப மகேஸ்வரிக்கு விருப்பம் இல்லை.

**********************************************************************************************

“அம்மா வேண்டாம் மா.. உறுதியானதும் சொல்லிக்கலாம். ஏற்கனவே அத்தை ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்திட்டு இருந்தாங்க. சொல்லிட்டு அப்புறம் இல்லைனா கஷ்டமா போயிடும்.” என வெண்ணிலா அஞ்சுவதைப் பார்த்து மகேஸ்வரிக்கும் யோசனையாக இருந்தது.

திருமணம் முடித்த இரண்டாம் மாதத்தில் இருந்தே அமுதா வெண்ணிலாவிடம் ஆர்வமாக கேட்கும் விஷயம் தான். ஒருமுறை ஜெய் இருப்பது தெரியாமல் கேட்டுவிட்டு, அவனிடம் நன்றாக வாங்கியும் கட்டிக் கொண்டார்.

“இருந்தா நாங்களே சொல்ல மாட்டோமா.... கல்யாணம் பண்ணதும் குழந்தை பெத்து குடுத்திடனும்னு எதாவது சட்டம் இருக்கா...”

“கல்யாணம் ஆனதும் இன்னும் ஒன்னும் இல்லையா இல்லையான்னு கேட்டு கேட்டே... நிறைய பேருக்கு மனஉளைச்சல் வந்திடுது. அதுவே சில நேரம் அழுத்தமா மாறி, நல்லா இருந்தா கூட குழந்தை உண்டாக நாள் ஆகும் தெரியுமா?” என அவன் பேசுவதைக் கேட்டு அமுதா பயந்து போனார். அன்றிலிருந்து மகனுக்கு பயந்து வாய் திறந்து கேட்கவில்லை என்றாலும், மனதில் எதிர்பார்ப்போடு தான் இருந்தார்.

“நான் அத்தான்கிட்ட பேசிக்கிறேன். உறுதியானதும் அத்தைகிட்ட சொல்லலாம்.”

அன்று இரவு வெண்ணிலா ஜெய்யை அழைத்து சொல்ல, அதுவரை குழந்தையைப் பற்றி பெரிய எதுர்பார்ப்பு இல்லையென்றாலும், அந்த நேரம் இது குழந்தையாகவே இருக்க வேண்டும் என மனம் விரும்பியது.

************************************************************************************************

தோட்டத்தில் விளைந்த காய், கனிகள், வாழை, கடலையோடு மருமகளுக்கு பிடிக்கும் என அமுதா ஆற்று மீன் குழம்பும் வைத்துக் கொண்டு வந்திருந்தார்.

மருமகளின் கன்னம் வழித்து திருஷ்ட்டி கழித்தவர், அவளுக்கு பிடித்த மல்லிகை பூவையும் தலையில் வைத்து விட, எல்லோரும் சந்தோஷமாக பார்க்க, இது என்ன பெரிய அதிசயம் என்பது போல கற்பகம் பார்த்துக் கொண்டிருந்தார்.

“இதெல்லாம் உங்க தோட்டத்துல இருந்தா?” என கேட்டவர், “பரவாயில்லை சும்மாவே எல்லாம் கிடைச்சிடுது.” என வாய்விட, அதுவரை முழு கவனைத்தையும் மனைவி மேல் வைத்திருந்தாலும், கற்பகம் சொன்னதும் ஜெய்க்கு சுர்ரென்று ஏறிவிட்டது.

காசு கொடுத்தா வாங்கி வந்தார்கள் எல்லாம் ஓசி தானே என்ற அர்த்தத்தில் தான் கற்பகம் சொன்னதும்.

“என்னது இதெல்லாம் சும்மா வந்ததா?”

“எப்படி? ஒண்ணுமே பண்ணாம எல்லாம் சும்மா வருமா?”

“என் அப்பாவும் சித்தப்பாவும் தோட்டத்தில பாடுபட்டு உருவாகினது. இதுல எதாவது ஒன்னு நீங்க விளையவச்சு காட்டிடுங்களேன் பார்க்கலாம்.” என ஜெய் நக்கலாக சொல்ல,

தான் பேசியதை அவன் இப்படி பிடித்துக்கொள்வான் என கற்பகம் நினைக்கவில்லை.

“எனக்கு இதெல்லாம் தெரியாது பா... நாங்க காசு கொடுத்து தான் வாங்குவோம்.” என கற்பகமும் நக்கலாக பதில் கொடுக்க,

“நீங்க என்னதான் கடையில காசு கொடுத்து வாங்கினாலும், இதா மாதிரி இயற்கை உரம் போட்டு விளைய வச்சது எல்லாம் கிடைக்காது.” என்றதும், “அது என்னவோ வாஸ்த்தவம் தான்.” என்றார் ராஜகோபால்.
 

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் கல்யாணத்துக்கு போகலையா நீ???
உனக்குன்னே வந்து வாய்க்குறாங்க போல ஜெய் :p:p:p
கிழவிக்கு இது பத்தாதே.......
மாமனார் கிட்ட ஒரு கம்பளைண்ட் போடேன்......
இல்லைனா இனி அடிக்கடி வரப்போ கடுப்பேத்துமே கிழவி......

ஒரு பொருள் நம்ம வீட்டுலேயே விளைவிக்கிறதுக்கும் வாங்கி திங்குறதுக்கும் வித்தியாசம் இல்லையா???
எங்கம்மா 6 7 தேங்காய் 100 ரூபாய்க்கு குடுக்க நாங்க 4 தேங்காய் 125 க்கு வாங்குறோம்.......
வாழைப்பழமும் அப்படிதான்.......
அனுபவிச்சவனுக்கு தான் அதோட அருமை தெரியும்.......
இல்லைனா கொழுப்பெடுத்து சக்கரம் குடுத்தா வாங்க முடியாதா என்னனு தான் பேசத்தோணும் :mad::mad::mad:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Take care Ramya...

நல்லவேளை ஜெய் கல்யாணத்துக்கு வரல.. இல்லையினா அடுத்த பஞ்சாயத்து நடந்து இருக்கும்.:p:p

சும்மாவே எல்லாம் கிடைசிடுதா?? o_Oo_O இந்த கற்பகம் கிழவியை நாலு நாள் பட்னி போடுங்கப்பா... அப்பதான் வாய் கொழுப்பு அடங்கும்... :devilish::devilish:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்

ஜெய் வர மாட்டேன்னு சொன்ன கல்யாணத்தில் வீண் வம்புப் பேச்சா?
புருஷன் சொன்னால் இனியாவது கேட்டுக் கொள், வெண்ணிலா
பார்றா
ஜூனியர் ஜெய் வரப் போறாரா?
அமுதா மாமியாரே மருமகளைப் பார்க்க வந்துட்டாளா?
சபாஷ் ஜெய்
கூனிக் கிழவிக்கு நல்லாக் கொடுத்தான்
உண்மைதான்
நாம் பாடுபடாமல் தோட்டத்தில் எல்லாம் சும்மா வந்து விடுமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top