P14 Sangeetha Swarangal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“உங்க அப்பா உன்னை என்ன பார்த்துகிறார்? எங்க அப்பா என்னை எப்படி பார்த்துப்பார் தெரியுமா? அதே உங்க அப்பாவை எப்ப கேளு நேரம் இல்லை.” என திலோ பாவனாவிடம் அரவிந்தனைப் பற்றி போட்டுக் கொடுக்க...
“ஆமாம் மேடம், எனக்கு டைம் இல்லை. என்னால பார்த்துக்க முடியலை. அதுதான் நீங்க இருக்கீங்க இல்ல மேடம். அப்புறம் அம்மான்னா சும்மாவா.” என்றான்.
“இதெல்லாம் அம்மா தானே டா பண்ணனும்.” அவன் பாவனாவிடம் கேட்க, அவள் ஆமாம் என்றாள்.
இருவரும் பாவனா முன்பே செல்ல சண்டை போட்டு, அவளையே பஞ்சாயத்திற்கு வேறு கூப்பிடுவார்கள். அவள் இவர்கள் இருவர் அடிக்கும் கூத்தை பார்த்து சிரித்துக்கொள்வாள்.


********************************************************************************************************************

வழக்கமாக விழிப்பது போல அரவிந்தன் வந்துவிட்டானா என அவள் கண் திறந்து பார்க்க.. பக்கத்தில் அவன் இல்லை. அறைக்கு வெளியே வந்து தேட... அவன் வீட்டுக்கு வந்த சுவடே இல்லை. நேரம் அப்போதே பதினோரு மணி.
ஏன் இன்னும் வரவில்லை. திலோவுக்கு கொஞ்சம் பதட்டமாகி விட .. உடனே அவனை கைபேசியில் அழைத்தாள்.
“வீட்டு கிட்ட வந்துட்டேன் திலோ. இன்னைக்கு ஒரு எமர்ஜன்சி. அதுதான் லேட். நீ தூங்கி இருப்பேன்னு தான் போன் பண்ணலை.” என்றான்.
அவன் வந்துவிடுவான் என்றதும், திலோ உறங்காமல் அவனுக்காக விழித்து இருந்தாள். உணவை எடுத்து சூடு செய்து வைத்தாள்.
தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்து கொண்டு வந்தவன், ஹாலில் மனைவி உட்கார்ந்திருப்பதை பார்த்து திகைத்துத்தான் போனான்.
“ஹே...நீ திரும்ப படுத்து தூங்கி இருப்பேன்னு நினைச்சேன்.”
“இன்னைக்கு பாவனா சீக்கிரம் தூங்கினாளா, நானும் சீக்கிரமே தூங்கிகிட்டேன். இப்ப எழுந்ததுக்கு அப்புறம் தூக்கம் வரலை.” என்றாள்.


***************************************************************************************************************

அவளிடம் இருந்து விலகி, “திலோ, இன்னைக்கு லேட்டா தூங்கினா பரவாயில்லையா...” என அவன் அனுமதி கேட்க,
அவளையும் தூண்டி விட்டுவிட்டு, இப்படிக் கேள்வி வேறு கேட்டு வைத்தால், அவளுக்கு கோபம் வராது. அவள் அவனைப் பார்த்து முறைத்து வைக்க,
“ரொம்ப சொதப்புறேனோ...” என சிரித்தவன், எழுந்து சென்று அறைக் கதவை நன்றாக மூடிவிட்டு வந்தான்.
 

Joher

Well-Known Member
Tks ரம்யா........

மம்மி அம்மாவாகிட்டாங்க.......... அசத்துங்க டாக்டர்.......
பாவனாவே பஞ்சாயத்து தலைவரா???????

அரவிந்தா திலோ சொல்ற மாதிரி ரூம் போட்டு தான் யோசிக்கிற........
ரொம்ப சொதப்பிட்டியே.........

வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே என்ன...........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால்
பொருளென்னவோ?..................

சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்,
இலை வடிவில் இதயம் இருக்கும்,
மலை வடிவில் அதுவும் கனக்கும்.
சிரித்து சிரித்து சிறையிலே,
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால்
பொருளென்னவோ?
அதிசயமாய் அவசரமாய் மொழித்
தொலைந்தால் பொருளென்னவோ?

சொல்லத் துடிக்கும் வார்த்தை.............

நிலம், நீர், காற்றிலே மின்சாரங்கள்
பிறந்திடும்.
காதல் தரும் மின்சாரமோ
பிரபஞ்சத்தைக் கடந்திடும்.

நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
பனியாய் பனியாய் உறைகிறேன்.
ஓளியாய் நீ என்னைத் தீண்டினால்,
நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
காதல் வந்தாலே வந்தாலே,
ஏனோ உலறல்கள் தானோ?

அதிசயமாய் அவசரமாய் மொழித்
தொலைந்தால் பொருளென்னவோ?
அதிசயமாய்............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top