Nee Enbathu Yaathenil 16

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நிறைவு பகுதி
நிறைவான பகுதி..

ஜல்லிகட்டிற்காக போராடும் காளைகளல்ல..
ஐ.டியில் போராடும்
நவீன காளைகள்..

விரைந்து உணர்ந்தால்
மண்ணுக்கு சேதாரம் குறையும்..
அல்லவே நம் அன்றாட உணவிற்கே கையேந்தும் நிலையாகும்..

அயல்நாட்டினரின் முதலீட்டில் மீண்டும் ஓர் புரட்சி தோன்றுமுன்..
பசுமை தமிழகம்
தோன்ற ஒன்றுபடுவோம்..

Wow wow... super da fathi nachunu iruku kavithai...
 

RathideviDeva

Active Member
மல்லிகா,
இது தான் உங்கள் கதைக்கு நான் எழுதும் முதல் விமர்சனம். சுந்தரி.... திக்கு தெரியாமல் வாழ்க்கையின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும்(ஏன் ஆணுக்கும் கூட) நம்பிக்கை தரும் ஒளி. அவள் ஒரு முன்னோடி. எந்த நிலையிலும் தளராமல் நேர்மையாக , கடுமையாக உழைத்தால், நாம் இழந்த சொர்க்கம் கூட, நம் வாசலில் தவம் இருக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

கண்ணனைக்கூட தன் வேரை நோக்கி நம்பிக்கையுடன் வரவைத்து வாழவைத்தது சுந்தரியின் உழைப்பும் அவள் மண்ணின் மீது கொண்ட இனம்புரியாத பந்தமும் தான். அவனுக்குள் ஓரி பொறி இருந்தாலும் இதை தீபமாக எரிய வைத்தது சுந்தரி தான்.

அவளின், நிமிர்வு, உறுதி, தன்னம்பிக்கை, ........ what a woman!! She is a total inspiration.

இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை வடிவமைத்து, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சுந்தரியை நினைவுப்படுத்தியமைக்கு நன்றிகள் கோடி.
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
A VERY SMALL DEDICATION FROM OUR (VIEWERS SIDE) TO MALLI MAM
THANK YOU FOR A NOVEL WHICH IS CLOSE TO OUR FEELINGS AND CULTURE


நீ என்பது யாதெனில்
அன்றிலிருந்து இன்று வரை
தந்தையின் வழி நடந்தேன்
தாரமாய் ஆனேன்
இந்த வழி உன் வழிஇல்லையோ
தனித்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
சிறு பொறி தீயகுமாம்
என் வாழ்வில் சிறு ஐயம் பொறியானது
அதுவே தீயானது வாழ்வின் எல்லையானது
விட்டு விலகிட சொன்னாய் வெறும் ஐந்து நாளில்
வாழ்வை தொலைத்தேனோ என இறுகினேன்
என்னுள் மறுகினேன் வெளியே இறுகினேன்
என் பட்டு குட்டி வந்தான் வாழ்வில்
அந்த நாட்களின் நினைவாக
இந்த நாட்களின் நிஜமாக
என் பூமி விட சொன்னாய்
உயிரை விட சொன்னாய்
விட்டேன் நான் வாழ்வை
உன்னுடனான வாழ்வை
உயிர் என் மண்
உணர்வு அதனுலுள்ள உயிர் (கள்)
உயிரையும் உணர்வையும் இன்று
தொலைத்தோர் உண்டு
உயிரற்ற பணியில்
அதன் வழியில்
வாழ்க்கையை செலுத்தி
வாழ்க்கையை தொலைத்தோருக்கு
என் வாழ்வு ஒரு மைல் கல்
தொலைத்தேன் நானும்
உறவையே தவிர
உயிரையோ உணர்வையோ அல்ல
வந்தாய் மீண்டும்
காடு மலை தாண்டி பறந்த நீ
மீண்டு வந்தாய்
என்னை மீட்க வந்தாயோ
வாழ்வில் மண்வளம் மட்டுமல்ல
பொன்வளம் மட்டுமல்ல
மகிழ் வளம் கொடுக்க வந்தாயோ

உன்னை மட்டுமல்ல
உறவுகளையும் கொடுத்தாய்
என்னை மட்டுமல்ல
இடத்தையும் வாழ்வின்
தடத்தையும் சீராக்கினாய்

நீ என்பது யாதெனில்
இன்று
நீ என்பது யாதெனில்
நான் அல்ல
நாம்
நாம் மட்டுமல்ல
நம் பூமி
நீ மீண்டும் வந்து
மீட்க வந்த பூமி
நீ கற்க வந்து
சிறக்க வைத்த மண்
நீ பார்க்க வந்த
இன்று பார்க்க வைத்த உயிர்கள்
இங்கே மண்ணுடன் கலந்த உயிர்கள்
இறுதியாய் நம் இளையதலைமுறைக்கு
சொல்லுவது யாதெனில்
பொன்னை விற்றாலும் மண்ணை விற்காதே
கண்ணை மறந்தாலும் மண்ணை மறக்காதே
விண்ணில் பறந்தாலும் மண்ணை மறக்காதே
மீண்டு வா இங்கே
நம்மை காக்க வா
நம் மண்ணை காக்க வா
பெருமை சேர்க்க வா
இங்கே வாழ்ந்து
பெருமை சேர்க்க வா

பொன்னை விற்றாலும் மண்ணை விற்காதே
கண்ணை மறந்தாலும் மண்ணை மறக்காதே
விண்ணில் பறந்தாலும் மண்ணை மறக்காதே

super da Meera...
 

ThangaMalar

Well-Known Member
நம் மண் மணக்கும் மனம்கவர் கதை இது...
இளையவர்கள் நம் நிலம் நோக்கி தன் திறன் திருப்ப வேண்டிய தருணம் இது....
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer

என்னங்கப்பா... கமண்டே போடாம இவ்ளோ லைக்ஸ் வந்திருக்கு... இது மல்லி ஸ்டோரிக்கு மட்டுமே சாத்தியம்.....

தேங்க்ஸ்டி மல்லி செல்லம்..... மல்லியோடு சேர்ந்த நாரும் மணக்கும் போலிருக்கு.....

அழகான கதைக்கு வாழ்த்துக்கள் டா..... இப்படிதான் முடிவு வரும் என்று எதிர்பார்த்தாலும் அதை உணர்வுகளின் கலவையோடு ஒவ்வொரு மனதிலும் எதிர்பார்ப்பை தூண்டி கொண்டு சென்ற கதை நடை மிக அழகு..... சுந்தரியும் கண்ணனும் அடுத்த வீட்டுக் குடும்பம் போல எங்கள் கண் முன்னாடி வாழ வைத்ததற்கு சபாஷ்.....

கண்ணன் தவறு செய்தாலும் திருந்தி அவளுடனே வாழ்வதற்கான முயற்சிகள் எடுப்பது அழகு.... அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் மீண்டும் விட்டுச் சென்று விடுவானோ என்று அவள் தவிப்பது பேரழகு.... கணவனாக வந்தவன் காவலனாய் மாறி மெல்ல மெல்ல காதலை உணர்த்தி மீண்டும் கணவனாய் மாறியது அழகோ அழகு......

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஆதரவாய் கதையில் கொடி பிடித்ததும் அழகு...... அதற்கு நமது கதை மாந்தர்கள் துணை போனதும் பேரழகு...... மொத்தத்தில் மல்லியின் கதை மனதில் நீங்காமல் மணக்கிறது......


நீ என்பது யாதெனில் உனக்குள் இருக்கும் உண்மையே..... அதை சந்தர்ப்ப சூழல்கள் மாற்றி அமைத்தாலும் மீண்டும் நீயாகவே மீண்டு வந்தால் அதுவே உன் வாழ்வின் வெற்றியாகும்.....


சூப்பர் டா மல்லி... லவ் யூ டியர்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top