Chitrasaraswathi
Well-Known Member
Nice
nyc precapஅனுராகாவோ பதில் சொல்லாது அமைதியாய் இருக்க, “என்ன அனு.. ஆன்சர் பண்ண முடியலையா??!! ஏன் உன் மனசுக்கு உண்மை என்னன்னு தெரியாதா..?? அப்படி என்ன உனக்கு பிடிவாதம்..” என்றதும்,
“ஏன்.. என்மேல தப்பு இல்லைங்கிறப்போ.. நான்.. நான் பிடிவாதம் செய்யக் கூடாது..” என்றவள் “உனக்குமா என்னை புரியலை..” என,
“நிஜமா புரியலை.. அந்த பிரஷாந்த் போறான்னா போனான்னு விட வேண்டியது தானே.. அவனைப் பார்க்கப் போறேன்னு கிளம்பி இப்போ தீபன் வரைக்கும் பிரச்னை இழுத்து வச்சிருக்க..” என்றாள் நிஜமான அக்கறையோடு.
ஆனால் அனுவோ, தன் தோழி வந்து எப்படி இருக்கிறாய் என்றுகூட கேட்காது வந்ததுமே இப்படி அர்ச்சனை ஆரம்பிக்கவும், முகம் வாடிட,
“இப்போ நீ என்னை திட்டத்தான் வந்தியா??” என்றாள் இறங்கிப்போன குரலில்.
-------------------------------------------------------
“மேம் உங்களுக்கு ட்ரெஸ்..” என்று ஒன்றை நர்ஸ் நீட்ட, வாங்கிப் பார்த்தவளுக்கு அது அவளின் உடை என்று நன்கு தெரிந்தது.
D – வில்லேஜில் இருந்தது.. தீபன் அவளின் பொருட்களை கொண்டு வர செய்திருக்கிறான் என்று புரிய,
நர்ஸிடம் “தீபன்கிட்ட என்னோட போன் இருக்கு.. நான் கேட்டேன் சொல்லுங்க..” என்றுசொல்லி அனுப்பினாள்.
உடல் அசதி இருந்தாலும், மனதில் நிறைய யோசனைகளை.. என்னவோ விடுபடவே முடியாத ஒரு சுழலில் வந்து சிக்கிக்கொண்ட உணர்வு அனுராகாவிற்கு.
நர்ஸ் சென்று தீபனிடம் கேட்டதற்கு “நீங்க போங்க.. நான் பார்த்துக்கிறேன்..” என்றவனுக்கு,
------------------------------------------------
“நீ போய் தீபன் வர சொல்லு..” என்றாள் வார்த்தைகளை கடித்துத் துப்பி..
“அனு...!!”
“டூ வாட் ஐ சே நீரூ..” என்று அப்போதும் கத்த,
“தீ.. தீபன் இங்க இல்லை.. கிளம்பியாச்சு???” என,
“என்னது??!!!!” என்று மேலும் அதிர்ந்து போனாள் அனுராகா..
ஆம்.. தீபன் கிளம்பிவிட்டான்.. அவளோடு இருந்திடவேண்டும் என்று நிறைய நிறைய ஆசைகள் இருந்தாலும், ‘இங்கிருந்து போயிடு டா..’ என்று அவனின் மனது
சொல்லிக்கொண்டே இருந்தது.
ஒருபக்கம் அனுவின் பேச்சு.. இன்னொருபுறம் மிதுன் அனைத்தையும் தன் பொறுப்பாக்கிக் கொண்டது. இன்னொருபுறம் அவனின் அம்மா.