Kaathal Kondaenae 16

Advertisement

Adhirith

Well-Known Member

Crucial episode of the story....
அர்த்தமுள்ள அர்த்தங்கள் பொதிந்த
வரிகளை உடைய பதிவு.....
கமெண்டுக்களுக்கு அப்பாற்பட்ட a perfect episode...
இப்படி ஒரு பதிவைத் தர ,உங்களை அன்றி
வேறு யாராலும் முடியாது......மல்லி....:)
 
Last edited:

fathima.ar

Well-Known Member
சரவணனும், ராதிகாவும் தான் எல்லார்ட்டயும் வாங்கி கட்டிக்க போறாங்க..

அருள் அளவுக்கு எனக்கு சரவணனும் பிடிக்கும்...
இரண்டு பேரையும் சரியாக பாலன்ஸ் செஞ்சிருக்காங்க...
ராம்நாட் எபி வரும்போது தான் அருள் ஹீரோன்னு எனக்கு தெரியும்..
முதல் தடவை படிக்கும் போது...

ராதிகா--- தி பெஸ்ட்..
 
Last edited:

Manimegalai

Well-Known Member
யாருடைய விருப்பு, வெறுப்பு ,என்று பாராமல் அருள் நல்லபடியாக தனது திருமணத்தை முடித்துக் கொண்டான்..
திரைப்படத்தில் வரும் கொடூர அப்பா போல இல்லை அருள் அப்பா..
 
Joher

Well-Known Member
யாருடைய விருப்பு, வெறுப்பு ,என்று பாராமல் அருள் நல்லபடியாக தனது திருமணத்தை முடித்துக் கொண்டான்..
திரைப்படத்தில் வரும் கொடூர அப்பா போல இல்லை அருள் அப்பா..

அவர்கள் செல்வியின் வாழ்க்கை என்பதை விட தன் பையனின் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள்......... விருப்பமில்லாவிட்டாலும் படிப்பு எல்லாவற்றையும் மறக்கவைக்கும் என்று பையனின் வாழ்க்கையை சரி செய்துகொள்ள உதவி செய்கிறார்கள்.......

அதனால் தான் செல்வி-அருள் வாழ்க்கை in-laws கூட எப்படியிருக்கும் என்று ஏதாவது ஒரு கதையில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.........
 
malar02

Well-Known Member

கதை தான் என்ற்றாலும் அருளின் இந்த செய்கையை இங்கே வைத்து அதாவது தன் தங்கையின் சந்தோஷ் தினத்தில் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை இந்த விதத்தை அவன் காதலை ரசித்தேன் அவனின் காத்திருப்பையும் ரசித்தேன் ஆனால் இதை மட்டும் ஏற்று கொள்ள முடியவில்லையே..... காதல் தீவிரவாதி தன் தீவிரவாதம் எந்த அளவுக்கு என்பதை காண்பித்துவிட்டான் சுயநலத்தின் உச்சவாதமாய் போனதே..... பாவம் எல்லோரும்......... நம்பிக்கை துரோகம்........ என்பது நல்லவன் நல்லவிஷமென்று அவனாய் முடிவு செய்து செய்வதும் தப்புதான் ஆனால் உங்கள் எழுத்தில் எல்லாப்பக்கத்தையும் நீங்கள் தொடுவீர்கள் திறமையாய் கையாளுகிறீர்கள்
 
அவனிடம் வேறு option இல்லையே....
அவன் என்ன செய்வான் .....
கலப்பு திருமணம் என்பது இன்றளவும்
ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்று...
Honour killing....வரை செல்லும் ...
காதல், கல்யாணம், பற்றியே
எண்ணங்களே இல்லாத செல்வி...
நன்றிக்கடன் என்ற தளையில் கட்டுண்டு கிடப்பவள்...
ஐயாவும்,அக்காவும் முன்னறி தெய்வம்,
அவளைப் பொருத்த வரை....

எழிலின் திருமண நாளுக்காத்தான்
அருள், செல்வி,எழில் மூவருமே காத்திருந்தனர்....
அவனின் காதலை வெளிப்படுத்த ....
அதனால் ஏற்படும் பின்விளைவுகளை தவிர்க்க தான்
எழிலின் திருமண நாளை,
தன்னுடைய திருமண நாளாக மாற்றிக்கொண்டான்....

“ ஜாதிகள் இல்லையடி பாப்பா.....
குல தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்....”
இந்த வரிகள் தான் ஞாபகம் வரும்....
இந்த கதையினைப் படிக்கும் போது.....
அவன் செய்த பாவத்திற்குரிய பிராயசித்தம் ஆக
தான் அவனின் திருமணத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்
 
Option இல்லை என்று சொல்லமாட்டேன் அதுக்கு விவரணையாக சொல்லணும் நிறைய இருக்கு அவனே ஒரு போலீஸ் ஆனவன் அவன் இந்த முறையை கையாண்டு இருக்கக்கூடாது எதிர்த்து நிற்கும் துணிவு இருந்திருக்கணும் கலப்பு திருமணம் என்ற விஷயத்திற்கு வலு சேர்த்திருக்கும் தன காதலை அழமாய பதித்து இருக்கனும் நம்பிக்கை கொடுத்திருக்கணும் நீ எனக்கு பக்கபலமாய் இல்லாவிட்டாலும் பக்கத்துணையாக இரு மனதினில் நமக்கான போராட்டத்திற்கு என்று காத்திருக்க சொல்லி இருக்கலாம் அவள் காத்திருப்பதில் பிரச்சனையும் அவள் பக்கமில்லை என்னும்போது இல்லை காதலை அவசரமாய் காணவிழைந்தானெறால் தனியாக அவளை அழைத்து திருமண பந்தத்தில் முதலில் அவளை சிக்கவைத்து அவளுக்கு ஏற்று கொள்ள டைம் கொடுத்திருக்கலாம் இப்படி பல பல சொல்லி கொண்டே போவேன் ராணிமா என்னை விட்டுடுங்கோ ஜூட்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top