Episode 1 முன்னோட்டம்

Advertisement

surthi

Well-Known Member
வசந்தம் டீஸர் -1

2016 ஆம் ஆண்டு -ஜனவரி மாதம்


அந்த காலை நேரத் தை மாதத்து பனியை அனுபவித்த படி ரிஷி ௐர் அரை மணி நேரம் ௐடியிரூப்பான் அவன் கால்கள் தான் ௐடியதே தவிர அவன் மனம் முன் இரவு நிகழ்ந்ததை பற்றி அசைப்போட்டூக் கொண்டிருந்தது அப்போது அவன் பக்கத்தில் ஓரு பெண் கதறிக் கொண்டே அலறுவது போல் கேட்டது உடனே அவன் தன் ௐட்டத்தை நிறுத்தி விட்டூ சுற்றி முற்றி பார்த்தான் அங்கு அவனை சுற்றியோ அவன் கண்களூக்கு எட்டிய தூரம் வரையிலோ எவரும் இல்லை யாரும் இல்லை என்றவுடன் அது தன் மனபிரமை என நினைத்து தன் தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டே வீட்டின் (இல்லை இல்லை அரண்மணையின்):eek: உள் வாயிலை நோக்கி ௐடினான் .
சிறிது நேரத்தில் அவன் வீட்டின் ஹாலில் நுழைந்த போது அவன் கண்களில் பட்டது அங்கு நடூநாயகமாக மாட்டப் பட்டிருந்த இறைவனடி சேர்ந்துவிட்ட அவனின் தாய் தந்தை படத்தின் பக்கத்தில் அவன் கை பட வரைந்த அவனின் மனம் கவர்ந்தவளின் ௐவியத்தை தான் அதை பார்த்ததும் அவன் கண்களில் உண்டான கோபத்தை காண்பவரின் இதயம் அந்நிமிடமே தன் துடிப்பை நிறுத்திக் கொள்ளும் என்பது சர்வ நிச்சயம்


ரிஷியின் கோபத்தை எதிர் கொள்ளப் போவது யார்?
ரிஷிக்கு கேட்ட அலறல் சத்தம் உண்மையெனில் அலறியது யார்?
ரிஷியின் அந்த மனம் கவர்ந்தவள் யார்?

-------------------------------------------------------------

வசந்தம் டீஸர் -2

2015 ஆம் ஆண்டு -மே மாதம்


அந்த நடுஇரவு நேரத்தில் போக்குவரத்து அற்ற நெடுஞ்சாலையில் வேகு வேகமாக சென்றுக் கொண்டிருந்தது அந்த வெள்ளை நிற ஆடி கார் அதில் இருந்த மூவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர் .வண்டி ஒட்டிக் கொண்டிருந்தவன் எப்படியாவது அந்த காரில் இருந்த மற்ற பெண்களை காப்பாற்றி விடும் நோக்கத்துடன் சென்று கொண்டிருந்தான் .

அந்த காரின் பின் இருக்கையில் இருந்து பெண் (அநி) எப்படியாவது தன் மடியில் தலையில் கட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய ஷாலையும் மீறி வழிந்து கொண்டிருந்த ரத்தத்தோடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவளை காப்பாற்ற வழி கேட்டு கடவுளை மன்னாடிக் கொண்டிருந்தாள்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவளோ (அதி )அந்த உயிர் போகும் சமயத்திலும் தன்னைக் காப்பாற்ற நினைப்பவளுக்கும் தன் உயிர் நண்பனுக்கும் வரவிருக்கும் பேராபத்தில் இருந்து அவளையும் தன் உயிர் நண்பனையும் காப்பாற்ற தனக்கு உதவி புரியும் மாறு கடவுளை வேண்டிக் கொண்டாள்.சிறிது நேரத்தில் அதிக ரத்தப்போக்கின் காரணமாகவும் தலையில் பட்ட அடியின் காரணமாகவும் மயங்க ஆரம்பத்தாள் .

அதி மயங்குவதை கண்ட அநி அவளை தட்டி எழுப்பினாள். அனாமிகாவின் தட்டலினால் முயன்று தன் மயக்கத்தை உதறிய அதி தன் முடிவு தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாளோ என்னவோ அனாமிகா விடம் யதுவை காப்பாத்து யதுவை காப்பாத்து யதுவை உன்னால் தான் காப்பாத்த முடியும் என்று திக்கில் திணறி கூறினாள்.ஆனால் அதி கூறியது அனாமிக பதட்டத்தில் இருந்ததாலும் கார் சென்று கொண்டிருந்த வேகத்தால் வந்த இரைச்சலாலும் அவள் கூறியது அவளுக்கு புரியவில்லை மிகாவிற்கு காப்பாத்து என்ற வார்த்தை மட்டும் தான் புரிந்தது யாரை காப்பாத்த வேண்டும் எதற்காக காப்பாத்த வேண்டும் என்று புரியவில்லை.

ஆனாலும் அதி இந்த நிலையில் அவளுக்கு மன சமாதானம் வேண்டும் என்பதை உணர்ந்து அதி கூறியதை செய்வதாக சொல்லி அதியை நிதானமாக இருக்க கூறுகிறாள் . வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவன் இதை கவனித்ததால் அவன் தன் வண்டிக்கு நேராக வந்த லாரியை காணவில்லை ஆனால் அதி அந்த லாரியை கவனித்ததோடு நிமிடத்தில் யோசித்து கார் கதவை தன் காலால் உதைத்து திறந்து கஷ்டப்பட்டு எழுந்து அநியை பார்த்து ஸாரி அநி என்று கூறி அவளை பிடித்து வெளியே தள்ளினாள்.

இதை கண்டு அதிர்ந்த வண்டி ஒட்டிக் கொண்டிருந்தவன் அதியிடம் என்ன செய்கிறாய் என்று கத்தினான் அப்போது தான் அவன் இருப்பை உணர்ந்து முன் கதவையும் தன் முழு சக்தியையும் வெளிபடுத்தி திறந்தாள் அவள் அக்கதவை திறந்ததை அவன் உணர்வதர்க்கு முன் அவனை பிடித்து வெளியே தள்ளினாள்.

அதி தள்ளிய வேகத்தில் தன்னை கட்டுபடுத்த முடியாமல் வெளியே இருந்த புதரில் விழுந்தான் அவன் விழுந்த இடத்தில் இருந்த கல்லில் தலை முட்டியதில் அவன் பின்தலையில் மிகபலமாக அடி பட்டது . அந்த அடியையும் மீறி அவன் எழ முயன்ற போது அவன் கண்டது எதிரில் வந்த லாரி அந்த ஆடி காரை தூக்கி எறிந்து விட்டு சென்றதையும் வேறு ஓரு அதிர்ச்சிகரமாண காட்சியையும் தான் அதை பார்த்தாலும் ஏற்கெனவே பட்ட அடியாளும் மயக்க நிலையிக்கு சென்றான் ஹரிஷ் பிரபாகர்.

------------------------------------------------------

வசந்தம் டீஸர்-3

2015 ஆம் ஆண்டு - ஜூன் மாதம்


ஜனநிகாவின் மாமா மணிகண்டன் மிகவும் இடிந்து போய் இருந்தார் தன் மகளை போன்று தான் வளர்ந்தவள் இன்று இவ்வுலகில் இல்லை என்பதை இன்னமும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளின் எதிர்கால வாழ்க்கைக்காக தனக்கு திருமணம் கூட செய்து கொள்ளாதவர் ஆனால் இன்று அதற்கு எதற்கும் பலனில்லாமல் போனதை மணியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அதுவும். நிகா சாதாரணமாக இறந்திருந்தால் கூட இவ்வளவு வேதனையாக இருந்திருக்காது அவள் நான்கைந்து பேரால் கற்பழிக்கப்பட்டு ‌கொலை செய்யப்பட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

இவர் இப்படி வருந்த ஜனாவின் தம்பி வெங்கட் தன் அக்காவை கொன்றவர்கள் மட்டும் யார் என்று தெரிந்தால் அவர்களை கண்ட இடத்திலேயே வெட்டும் வெறியில் இருந்தான்.

இங்கு (கல்யாணியை தவிர) ‌‌இவர்கள் எல்லோரும் ஜனா இப்படி கொடுரமாக இறந்து விட்டாளே என்று வருந்திக்கொண்டிருக்க. லக்ஷ்மி மட்டும் அந்த முகம் தெரியாத பெண்ணிற்காக வருந்தினார் அவரின் உள்ளுணர்வு அவர்மகள் இறக்கவில்லை என்று உறுதியாக கூறியதை நம்பினார் இதுவரை அவரின் உள்ளுணர்வு பொய்யித்ததில்லை அவரும் முதலில் அந்த உடலை பார்த்து விட்டு மகள் இறந்து விட்டதாக தான் எண்ணி துவண்டு சடலத்தின் அருகில் விழுந்தார்.

அந்த உயிர் அற்ற உடலைப்பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்கள் திடீர் என மின்னியது பின் அவர் என்ன நினைத்தாரோ ஆனால் லக்ஷ்மியின் உள்மனம் அடித்துக் கூறியது அது தன் மகள் அல்ல என்று ஆனாலும் அவரின் தாய் மனம் அந்த இறந்த பெண்ணைப் பார்த்து வருந்தியது எந்த ஒரு பெண்ணிற்கும் இந்நிலை வரக்கூடாது என்றும் அப்பெண்ணை இந்நிலைக்கு தள்ளியவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் மாறு பிரார்த்தித்தது அப்போது லக்ஷ்மியின் பக்கத்தில் யார் கண்களுக்கும் புலப்படாது இருந்த அந்த புகை உருவம் அவரின் தாய் பாசத்தையும் நல்ல மனதையும் கண்டு தானும் கண்ணீர் வடிந்தது…


வசந்தம் வருமா………………..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''அவளே என்
தோழனின் வசந்தம்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
ஸ்ருதி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb முன்னோட்டம்,
ஸ்ருதி டியர்
அப்டேட்டுக்காக ஆவலுடன்
காத்துக் கொண்டிருக்கிறேன்,
ஸ்ருதி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top