E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
வலி கொடுத்தாய்
வழியே கொடுத்தாயோ
உடல் வலி கொடுத்தாய்
அதன் வழி
உன் வழி சேர
ஒரு வழி கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிர் கொடுத்தாய்
ஓரணைப்பில் உயிரும் எடுத்தாய்
மறுவார்த்தை பேசேன் நான்
பின்னே வந்திடுவேன்
உன்னை அறியேன் நான்
ஆனாலும்
உண்டெனக்கு காதலுமே
ஒரு ஆழி காதலுமே
கண்மூடிக்காதலா அது
கண்மூடும் முன் போகாது
வழித்துணை நீ இருந்தால்
வலிதனை மறக்கலாம்
மறைக்கலாம்
வேறுதுணை வேண்டாமே
உன்துணை இருந்தாலே
பழங்காதல் உண்டென்றாய்
பழங்காதல் அல்ல அம்மா
அது பலமான காதல் அல்ல
அது காதல் என்றெண்ணி
கன்னியிடம் சரியென்றேன்
நீலவிழி காணும் முன்னே
காத்திருக்க சொல்லிருந்தேன்
ஏமாற்றம் என்றாயே
ஏமாற்றம் இல்லையது
என் மாற்றம் என்பேன் நான்
உன்னை கண்டு மாறியதால்
தடுமாற்றம் வந்ததுவே

கண் வழி வந்த மாற்றம் இது தடுமாற்றம்
இப்போது NO மாற்றம்
சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
மல்லி,இனிய காலை வணக்கம்.....

அவளின்...
எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம்
அதனால் விளைந்த சினம்
சினத்தினால் ஏற்பட்ட தனிமை
தனிமை தந்த வெறுமை
வெறுமையினால் வந்த இயலாமை
வெளிப்படுத்த முடியா உணர்வுகள்
அதனால் ஏற்படும் மனப் போராட்டங்கள்...
அவற்றின் காரணகர்த்தாவான அவனின்
மீது ஏற்படும் கட்டுக்கடாங்க கோபத்தை
வன்முறை தாக்குதலாக வெளிப்படுத்துகிறாள்....

வன்முறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்
வர்ஷினியின் இந்த பரிமாணம் எதிர் பாராத ஒன்று...


உணர்வுகளை கையாளுவதில்,கொண்டுவருவதில்
You are so different.....Malli..

Emotionally well balanced ,an unique episode....
உங்களால் மட்டுமே சாத்தியமாகும் ஒன்று....
Wishes with thanks...


happpppy Sunday ....:)








அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே நீ பூ எறிந்தால் எந்த
மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக்
கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே உன் காலடியில் நான்
விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ முடிக்கொண்டாய்
நான் குழுங்கிக் குழுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
பொருத்தமான பாடல் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
hi friend MM MM MM.......
1534515m.gif

பார்ட் i
அவன் மேல் இருந்து இறங்காத வர்ஷினியின் வாழ்க்கையை ஏக்கம் இயல்பான செய்கையை அருமை
அடலாஸ்ட் கடைசியா ஈஷ் என்ன வசனம் பேசனமோ சரியாக பேசிவிடடான் வர்ஷ்யை பற்றி அவனையும் உணர்ந்து சொல்லிவிடடானா
சூப்பர் அவளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும் பிரச்னை அவள் வாயிலாக ......
இப்போதைய கதையின் பிரச்னையும் வந்தாச்சு அவனின் வாக்குமூலம் அவளின் மூர்க்கம் எக்ஸாக்டா அவளின் ஏமாற்றத்தின் உணர்வு awesome .....
பார்ட் 2
பாசத்துக்கு ஏங்கும் உணர்வுஅலைகள் அதில் காதலும் கலந்து இருப்பதை உணர்வாளா
ஈஷ்யின் புரிந்து கொளுத்தலின் தன்மை அருமை... அவள் மன தேவையின் உணர்வை புரிந்து கொண்டான் அடலாஸ்ட்
என்ன பண்ணுவது உப்பை திண்றவன் தண்ணி குடித்துதானே ஆகவேண்டும் இருந்தும் அவன் காயங்கள் அவள் மன காயங்களுக்கு வடிகாலாய்
//அவனின் வேண்டுதல் இது இதுதான் ஒரு ஒரு பெண்ணின் விருப்பமும் உலகில் சூப்பர்//
இது தான் வர்ஷியாக வருவாள் என்று எதிர்பார்த்திருந்தேன் அவளின் தனிமை அவளுள் மூர்க்கத்தை ஏற்படுத்தி இருந்தது இன்று அவளால் வந்த காயத்தின் வலி அவனைவிட அவளுக்கே அதிகமா தெரிகிறது வருடலில் தவறு செய்த குழந்தையை அடித்துவிட தாயின் பிற்பாடு செயல் தாய்மை எப்படி தன்னை ஒளித்து கொள்ள முடியும் .
ஐயோ உங்க ஸ்டைல் இன்னும் தலை துக்க காணாமே என்று பார்த்திருந்தால் வந்துவிட்ட்து கொன்னுட்டு என்று சொல்லி அதை தொடர்ந்து happy happy ....
வாவ் சூப்பர் டைலாக் டெலிவரி ஈஷ்க்கு
உண்மை அவனின் செயலுக்கு அவனுக்கே விளக்கம் இல்லாத நிலை அன்றிலிருந்து
பார்ட் 3
இவ்வளவுக்கும் நடுவே அவளின் வலிகளினால் அடைந்த தாக்கத்தின் விளைவால் தெளிவாக கொளுத்தி போடறா ஒரு வார்த்தையாய் அவனை வீழ்த்த
உண்மையாய் காதலிக்கும் மனைவியை யாரிடமாவது விட்டு கொடுக்க முடியுமா.....
ஆஹா கிளாஷ் ஆயிடுச்சி பூனைக்குட்டி வெளியே வரும் நேரம் அமைந்து விட்ட்து
பாவம் ஐஸ்..... விதி வலியது அதை தாங்கித்தான் ஆகவேண்டும் ஒரு கட்டத்தில் வாழ்வில் எல்லோரும் ..
இந்த கதை ஆரம்பித்து இருந்து பல கேள்விகளுடன் முடிந்தது ஒவ்வொரு தடவையும் ஆனால் இன்று கேள்விகள் தோன்றாமல் நிறைவை உணர்கிறது ஹாபிய எண்டிங்க நோக்கி நகர்ந்து விட்டதா
Jns4XPL1IuIjkAsAdIpHHjgZM0wJPkhoSr6xb7-LryE8ZhfHmgeymGeeTeOJgaPP9Qk=w120

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா
கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே
எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே
நாம் இருவரும் நம் அன்பின்
பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே
உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா
என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
அன்பு
*******

ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான். அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.
இவ்வாறிருக்க ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு
படிப்படியாக குறைவடையத் தொடங்கியது. அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.
ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.
நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை
உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.
அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து
கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள். அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள். அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.
தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.
அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்து

"
எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?
எனக் கேட்டான்.
அதற்கு அவன்

நான் குருடன் இல்லை. எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.
அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள். அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.
அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்" எனப் பதிலளித்தான்.
பிறரின் குறைகள் கண்களுக்கு தென்படாமல் இருக்க சில வேளைகளில் நாமும் குருடன் போன்று பாசாங்கு காட்டுவது அவசியம்...


 

murugesanlaxmi

Well-Known Member

எனக்கு பிடித்த அருமையான கதை*... படியுங்கள்
கப்பல் ஒன்று கடலில் வழிதவறி
செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.
♥“இறைவாஇங்கிருந்து
எப்படியாவது என்னை தப்பிக்க
வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த
தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்கவேண்டாமா??” என்று பிரார்த்திக்கிறான்.
ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு
உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன.
தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு
ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான்.
அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த
தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.. இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன.
இவன் பிரார்த்தனையை மட்டும்
விடவில்லை. கடவுள் ஏதாவது
ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக் கொண்டான்.
ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட
வைத்தது. பட்ட காலிலே படும் என்பது
போலஎது நடக்ககூடாதோ அது நடந்து விட்டது.
இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே
குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து
எரிந்துகொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும்
தீக்கிரையாகியிருந்தன.
அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த
மிச்ச சொச்ச பொருட்களும்
போய்விட்டது..இறைவாஎன்னை
காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ.என்னவென்றால்
இருப்பவற்றையும் பறித்துக். கொண்டாயேஇது தான் உன் நீதியோ…?” என்று கதறி அழுகிறான்.
மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது.
அப்பாடாநல்ல வேளைஒரு
வழியாக இங்கிருந்து தப்பித்தோம்.
யாரோ நம்மை.காப்பாற்ற வருகிறார்கள்.
என்று உற்சாகத்தில் துள்ளி
குதித்தான்.
கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து சென்றார்கள். தான் இங்கே மாட்டிக்கொண்டிருப்பது
எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை
எழும்பியதை பார்த்தோம்….
யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று
நினைத்தோம்என்கிறார்கள் அவர்கள்.
அப்போது இறைவன் குடிசையை
எரித்த காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி
சொன்னான்.
அந்த வழியில் கப்பல்கள் வருவதே
மிக மிக அரிதான நிலையில்,
குடிசை மட்டும் தீப்பிடித்து
எரியவில்லை என்றால் தன்
நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது.
அவசரப்பட்டு இறைவனை
நிந்தித்ததை நினைத்து
வெட்கினான்.
வாழ்க்கையில் பல
சந்தர்ப்பங்களில் நாம்
இப்படித்தான் இறைவனை
அவசரப்பட்டு தவறாக
எடைபோட்டுவிடுகிறோம்.
நம்மை காக்கவே அவன்
ஒவ்வொரு கணமும்
காத்திருக்கிறான். அவன் தரும்
சோதனைகள் அனைத்தும் நம்மை
வேறொரு மிகப் பெரிய
ஆபத்திலிருந்து காக்கவே
என்று நாம்
புரிந்துகொண்டால், எதைப்
பற்றியும்
அலட்டிகொள்ளவேண்டியதில்லை.
சோதனை
என்றால்இறைவனின்
அருட்பார்வை உங்கள் மீது
விழுந்துவிட்டது விரைவில்
நல்லது நடக்கும் என்று
நம்புங்கள்...








 

murugesanlaxmi

Well-Known Member
ஒரு கிராமத்திற்கு
ஒரு முனிவர் வந்திருந்தார்.....
ஊருக்கு மத்தியில் இருந்த

மரத்தடியில் அமர்திருந்தார்......
யாருமே ஊரில் அவரைக்

கண்டு கொள்ளவில்லை.
முனிவர் அல்லவா
?
கோபத்தில் சாபமிட்டார் அந்த
ஊருக்கு ..
இன்னும் 50 வருடங்களுக்கு இந்த
ஊரில் மழையே பெய்யாது.வானம் பொய்த்துவிடும்
இந்த சாபம் பற்றி கேள்விப்பட்ட அனைவரும் என்ன
செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின்
காலடியில் அமர்ந்து
மன்னிப்பு கேட்டனர்.
சாபத்திற்கு விமோசனம்

கிடையாது என்று
கூறிவிட்டார் முனிவர்..
வேறு வழியின்றி

அனைவருமே அவரின்
காலடியில் அமர்ந்து இருந்தனர்..
மேலிருந்து

இதைக் கவனித்த பரந்தாமன்
தனது சங்கினை எடுத்து
தலைக்கு வைத்து
படுத்துவிட்டான்
(
பரந்தாமன் சங்கு ஊதினால் மழை
வரும் என்பது
நம்பிக்கை ).
இன்னும்
50
வருடங்கள்மழை பெய்ய
வாய்ப்பில்லை என்பதால்
இனி சங்குக்கு ஓய்வு
என்றே வைத்து விட்டான் …)
அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது..
ஒரே ஒரு உழவன்

மட்டும் கலப்பையைக்
கொண்டு தினமும்
வயலுக்குச் சென்று வந்து கொண்டு இருதான்.
அவனை அனைவரும் பரிதாபமாகவே
பார்த்தனர்.
மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன

செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு..
அவனிடம் கேட்டேவிட்டனர்.நீ செய்வது

முட்டாள்தனமாக
இல்லையா என்று.. அதற்கு அவனின் பதில்தான்
நம்பிக்கையின் உச்சம்
”’ 50 வருடங்கள் மழை பெய்யாது
என்பது எனக்கும் தெரியும்.
உங்களைப் போலவே நானும்

உழுதிடாமல் இருந்தால் 50
வருடங்கள் கழித்து உழுவது
எப்பிடி என்றே எனக்கு
மறந்து போயிருக்கும்..
அதனால்தான் தினமும் ஒருமுறை
உழுது கொண்டு இருக்கிறேன்
என்றான்.
இது வானத்தில் இருந்த

பரந்தாமனுக்கு கேட்டது.
அவரும் யோசிக்க ஆரம்பித்தார்..

"50 வருசம்
சங்கு ஊதமால் இருந்தால்
எப்பிடி ஊதுவது என்று
மறந்து போயிருமே"
என்றே நினைத்து சங்கை எடுத்து

ஊதிப் பார்க்க ஆரம்பித்தார்..
இடி இடித்தது..
மழை பெய்ய

ஆரம்பித்தது..
நம்பிக்கை

ஜெயித்து விட்டது..
"தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்
"Self confident never fail"

வெற்றி நிச்சயம்

 

murugesanlaxmi

Well-Known Member
#படித்து_ரசித்தது
சிந்தனை சிறு கதைகள்....
ஒரு பெரும் செல்வந்தன்
தம்மை சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய்
தனக்குச் சொந்தமான தோப்பு,
வயல் வரப்புகளைப்
பெருமையுடன் காட்டி....
இவையெல்லாம் என்னுடையது
சுவாமி...என்றான்....
அதற்கு துறவி ...இல்லையேப்பா இந்த நிலத்தை என்னுடையது என ஒருவன் சொன்னானே...என்றார்.
யார்அவன்
? எப்போது சொன்னான்? என்று செல்வந்தன் சீறினான்.
ஐம்பது வருடங்களுக்கு முன்

என்றார் துறவி...
அது என் தாத்தா தான்..ஐம்பது ஆண்டுகளாக இந்த நிலத்தை

நாங்கள் யாருக்கும் விற்க வில்லையே...என்றான்...
"இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரே"?
என்று கேட்டார் துறவி.
அவர் என்
#அப்பாவாக இருக்கும்... என்றான் செல்வந்தன்...
நிலம்
#என்னுடையது.. #என்னுடையது.. எனக் காட்டிய
அந்த இருவரும் இப்போது எங்கு இருக்கிறார்கள்??..
எனக்கேட்டார் துறவி...
அதே வயலுக்கிடையில் தெரிந்த

இரு மண்டபங்களைக் காட்டி அங்கேதான் அவர்களைப்
புதைத்து வைத்திருக்கிறோம்...
என்றான் செல்வந்தன்..
துறவி சிரித்துக்கொண்டே...

இப்போது சொல்..
நிலம் அவர்களுக்குச் சொந்தமா??
அல்லது
நிலத்திற்கு அவர்கள் சொந்தமா?? #என்நிலம்..#என்சொத்து...
#என்செல்வம்.. என்றவர்கள் எல்லாம் நிலத்திற்கு சொந்தமாகி விட்டனர்.
அவர்கள் இப்போது இல்லை..ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது... இது
என்னுடையது. எனக்கூறும் நீயும் ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய்...
உன் மகன் வந்து இது

என்னுடையது எனக்கூறுவான்...
எதுவும் யாருக்குமே எப்பொழுதும்

நிரந்தரமில்லாதவை... எதிர்காலம்
எப்படியும் அமையலாம். இன்றைய
தேவையில் இல்லாதவர்களுக்கு
பகிருங்கள்...
நம்மில் அனைவருக்கும்

அப்பாற்பட்ட சக்தி...
இயற்கையாய் வியாபித்திருக்கும்
இறை் ஒன்றே நிலையானது.
மற்றவை நிலையற்றவை.
எனக் கூறி முடித்தார்....
துறவி...

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top