வீர மாகாளி

Advertisement

நடு இராத்திரி பனிரெண்டு மணி.அந்த கிராமமே இருளில் மூழ்கிக் கிடந்தது.ஒரு பெரிய வீட்டில் வயதான பெண்மணி நடுத்தர வயது பெண்மணி ஒரு எண்பது வயது மதிக்கத் தக்க பெரியவர் நால்வரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு ஓட்டு வீட்டில் பச்சிளம் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது.அந்த வீட்டில் அதற்குப் பசியாற்ற ஒன்றும் இல்லை.அந்த வீட்டின் தலைவன் தன் மனைவியைப் பார்த்து ஏதாவது கொடுத்து அந்த சனியனின் அழுகையை நிப்பாட்ட முடியலையா உனக்குனு கத்தினான்.

அவன் மனைவியோ நீ கொண்டு வந்து கொடுத்ததெல்லாம் நானா முழுங்கிட்டேன்.புழைப்பு தலைப்பு இல்லாம வீட்டிலேயே உட்கார்ந்து வித்து வித்து தின்னுகிட்டிருந்தா எங்கே இருந்து பணம் கிடைக்கும்.நான் என்னடி பண்ண முடியும்.மழையே இல்லாம விவசாயத்தை எப்படி பண்றது.எனக்கு அதைவிட்டால் வேறு வேலை தெரியாதேடினு சொல்லும் போதே அவன் குரல் உடைந்து போயிருந்தது.

அவன் வீட்டில் மட்டும் இந்தப் பிரச்சனை இல்லை.அந்த கிராமத்தில் இருந்த அத்தனை வீடுகளிலும் இதே புலம்பல்களும் அழுகையுமாக இருந்தனர்.அந்த இருட்டில் ஒரு ஐம்பது மதிக்கத் தக்கவரும் தொண்ணூரு வயது மதிக்கத் தக்கவரும் இன்னும் நாலைந்து பேரும் நிறைய மூட்டை முடிச்சுகளுடன் ஒரு ஜீப் இருளைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து வந்தது.

எவ்வளவு சீக்கிரம் கிராமத்துக்குள் நுழைய முடியும் என்ற உத்வேகத்தில் சீறிப் பாய்ந்து வந்து நேரே பெரிய வீட்டின் முன் வந்தது.அந்த வீட்டின் முன் ஜீப் நிற்பதற்கும் கிராமத்து மக்கள் அனைவரும் அந்த வீட்டின் முன் கூடினர்.அந்த ஜீப்பில் இருந்த அனைவரும் இறங்கி நின்றனர்.தொண்ணூறு வயதுப் பெரியவர் பார்ப்பதற்கு கேரள நம்பூதிரி மாதிரி இருந்தார்.

அவர் ஜீப்பில் இருந்து இறங்கி அந்த ஊர் மண்ணில் கால் வைத்ததுமே அவர் உடலில் ஒரு அதிர்வும் முகத்தில் அதிர்ச்சியுமாகத் தெரிந்தது.அந்த வீட்டின் பெரியவர் அங்கு நின்றிருந்த இளவட்ட பசங்களிடம் டேய் வாங்கி வந்த பாலை யாருக்குத் தேவையோ எடுத்துக் குடுங்க.வாங்கிட்டு வந்த அரிசி மளிகை சாமான் காய்கறிகளைப் பிரிச்சுக் குடுங்கனு சொன்னார்.

கேரள நம்பூதிரி இது எதையும் கண்டுக்காம கால் போன போக்கிலே நடந்து போனார்.அவரைத் தொடர்ந்து அவருடைய சீடர்களும் அவரைத் தொடர்ந்தனர்.இதைப் பார்த்த கிராமத்தார்களும் சென்றனர்.கேரள நம்பூதிரி இது எதையும் கண்டுக்காமல் சென்றவர் கால்கள் ஒரு கோவிலின் முன் தானாக நின்றது.

முதல் அத்தியாயம் எழுதியிருக்கேன் மக்காஸ்.நான் இன்னும் யார் பெயரையும் சொல்லலை.அடுத்த அத்தியாயத்தில் இருந்து கதை போக்கில் புரிந்து கொள்வீர்கள்.படித்துப் பார்த்து கருத்துக்களைச் சொல்லவும்.

இந்துமதி
3.1.2020
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "வீர மாகாளி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இந்துமதி டியர்
 

தரணி

Well-Known Member
அருமையான தொடக்கம்.... எனக்கு ஒரு சின்ன சந்தேகம் பெரிய வீட்டுல 3 பேர் தானே இருந்தாங்க ஆனா நீங்க 4 பேர்னு சொல்லி இருக்கீங்க..... அமனுசியம் உள்ள கதையா இது....
 
அருமையான தொடக்கம்.... எனக்கு ஒரு சின்ன சந்தேகம் பெரிய வீட்டுல 3 பேர் தானே இருந்தாங்க ஆனா நீங்க 4 பேர்னு சொல்லி இருக்கீங்க..... அமனுசியம் உள்ள கதையா இது....
ஆமா சகோ.நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top