ராதையின் கண்ணன் இவன்-4

Advertisement

E.Ruthra

Well-Known Member
" ஆளு சும்மா ஹீரோ கணக்கா இருந்தாலும் என்னா பதுசா பேசுறாங்க, பார்த்த பெரிய இடத்து புள்ள போல இருக்கு, ஒரு வேளை மலையாளியா இருக்குமோ, ஆனா பேசுற தமிழ் பார்த்த அப்படியும் தெரியலேயே, என்னமா நா மட்டும் பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க ஒன்னுமே சொல்ல மாற்றிங்க" என தன் போக்கில் ஆரம்பித்த முத்து ராதிகாவிடம் கேள்வியோடு நிறுத்த ராதிகாவோ

"என்ன சொல்லனும் அண்ணா" என ஒரு சிரிப்புடன் கேட்க, (அவனை பற்றி எனக்கே ஒன்னும் தெரியாது, இதுல நா உங்களுக்கு என்னனு சொல்றது)

"இல்லாம உங்க பிரின்ட் இல்ல, உங்களுக்கு தெரிஞ்சி இருக்குமேனு தான்" அவனை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம். சென்னையில் பெரிய படிப்பு எல்லாம் படிக்கிற புள்ள, ராஜா கணக்கா இருக்குற புள்ள வெறும் டிரைவர் தானேனு நினைக்காம தன்னையும் மதித்து பேசிய மகிழ்ச்சி அந்த மனிதர்க்கு.

"பேசாமா ஒன்னு பண்ணுங்க என்ன எல்லாம் கேட்கணுமோ அத எல்லாம் பேப்பர்ல எழுதி வச்சிக்கோங்க, நாளைக்கு பார்க்கும் போது நீங்களே கேளுங்க என்ன" (விட்டா ரசிகர் மன்றம் எல்லாம் ஆரம்பிப்பார் போலவே, டேய் ராகவா உன்ன)

"கிண்டல் பண்ணாதீங்கமா (அழகாக வெட்கப்பட), அப்படி எல்லாம் கேட்டா தப்பாய்டும், ஆனாலும் அந்த புள்ள எவ்ளோ நல்ல புள்ள இல்லம்மா" என மறுபடியும் ஆரம்பிக்க," வேண்டாம் அழுதுடுவேன்" என்று ராதிகா மனதிற்குள் கதற முத்து அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் பொன்னிற மேனியனின் அருமை பெருமைகளை பேச ஆரம்பித்தார். ராதிகாவிற்கு புரிந்தது, ராகவின் தோற்றத்தில் ஏற்பட்ட பிரம்பிப்பு அவனின் சகஜமான பேச்சில் பல மடங்கு அதிகம் ஆகி இருப்பது.பொன்னிற மேனியனை பற்றி முத்து பெருமை பேச ராதிகாவின் மனதில் சாரலானா மழை.தில்லையின் மீது அலாதியான பக்தியும்,அந்த தில்லையே மிரட்டும் ராதிகாவின் மீது அதிக பாசமும் கொண்டவர். டிரைவர் என்று அழைக்கும் ஸ்வேதாவை விட அண்ணா என அழைத்து தன்னுடன் உரையாடும் ராதிகா அவருக்கு எப்போதும் தனி தான்.அதனால் தான் ராதிகா, தெய்வா வீட்டில் தங்கி படிக்க போவது உறுதியானதும், ராதிகாவின் பயன்பாட்டிற்கு என தனி காரையும், முத்துவையும் இங்கு அனுப்ப தில்லை முடிவு செய்தது. இங்கு நிலவரம் சரி இல்லை என்பது அறிந்ததே, அவரும் உடன் இல்லாத போது நம்பிக்கையான, ராதிகாவின் மீது பாசமானவர்கள் தேவை என்பாதலே வெளியில் முத்துவும், வீட்டில் ஒரு ஆளும் என ஆக மொத்தம் தில்லை தெய்வானையை மட்டும் நம்பி அனுப்பவில்லை என்பது திண்ணம்.

"தெய்வானை இல்லம்" என்று பெயர் பொறிக்கப்பட்ட அந்த பிரம்பாண்டமான இல்லத்தில் கார் நுழையவும் ராதிகா முதலில் பார்த்தது, சண்முகம் அல்லது ஸ்வேதாவின் கார் உள்ளதா என்பதை தான். அவர்களின் வாகனம் இல்லை எனபதை உணர்ந்து ஒரு ஆசுவாச பெரு மூச்சுடன் இறங்கி உள்ளே சென்றாள். இப்படி எத்தனை நாள் அவர்களை தவிர்க்க முடியும் அதும் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே என்ற எண்ணமும் எழாமல் இல்லை.

அந்த வீடு அங்குலம் அங்குலமாக அழகான கலைநயம் மிகுந்த பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளரின் அழகின் மீதுதான ஆர்வத்தை பறைசாற்றியது. வெளிதோற்றம் மட்டும் அழகா இருந்து என்ன பிரையோஜனம், அகமும் அழகா இருக்க வேண்டாமா, வீட்டின் அகம் என்பது அங்கு வசிக்கும் மனிதர்கள் அல்லவா, இந்த வீட்டு மனிதர்களையும், அவர்களின் குணை இயல்பை அறிந்தால் என்னவோ அந்த கலைநயம் மிக்க பொருட்கள் ராதிகாவின் வதனத்தில் ஒரு விரக்தி புன்னகையை தோற்றுவித்தது.

அந்த கூடத்தில் அவளுக்காக தெய்வா ஆர்வமுடன் அவளுடன் பேச காத்து இருக்க அவரை கண்டும் காணாமல் கடக்க முடியாமல் தயங்கினாள் ராதிகா. அவளின் தயக்கமே போதும் என்பது போல், சமையல் அறை நோக்கி "கமலாக்கா ராதிகா வந்துட்டா பாருங்க அவளுக்கு டீயும், ஸ்னாக்ஸ்சும் எடுத்துட்டு வாங்க" என்று உத்தரவுவிட்டபடி ராதிகாவிடம் திரும்பி "காலேஜ் பஸ்ட் டே எப்படி மா இருந்துது, காலேஜ் பிடிச்சி இருக்கா, ராகிங் பிரச்னை இல்லை இல்ல, ஏதும் இருந்தா சொல்லுமா நா இவர்கிட்ட சொல்லி என்னனு பார்க்க சொல்றேன்" என எங்கே விட்டால் அறைக்கு சென்று விடுவாளோ மிக வேகமா கேள்விகளை அடுக்க, ராதிகாவோ மூன்றாம் மனிதரிடம் பேசும் தோரணையில் "நல்ல போச்சி, பிரச்னை எல்லாம் ஒன்னும் இல்ல" என்ற ரத்ன சுருக்கமாக பதில் அளிக்க, அடுத்த கேள்வியை தெய்வா கேட்கும் முன்னர் கமலா கையில் கோப்பையுடன் வந்தார்.

"ராதிகாமா உங்களுக்கு டீ பிடிக்காதமே பெரியம்மா சொன்னாங்க அதான் அவங்ககிட்ட கேட்டே உங்களுக்கு பிடிச்சமாதிரி காபி கலந்து இருக்கேன், குடிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க" கமலா சொல்லி முடித்ததும்,

"தேங்க்ஸ் கமலாமா, எனக்காக சிவா கிட்ட கேட்டு எனக்கு பிடிச்ச மாதிரி காபி போட்டு கொடுத்ததற்கு, அப்படியே சிவா போடுற மாதிரியே இருக்கு" என ராதிகா அவரை பாரட்டிவிட்டு திரும்பி தெய்வாவையை ஒரு பார்வை பார்க்க, கமலா ராதிகாவிற்கு டீ பிடிக்காது என்றபோதே சுருங்கிய தெய்வாவின் முகம், கமலாவை அம்மா என அழைக்கும் போதே குன்றி, உனக்கு என்னை பற்றி ஏதும் தெரியவில்லை,தெரிந்துகொள்ளவும் நீ முயற்சிக்கவில்லை எனும் ராதிகாவின் பார்வையில் இருந்த குற்றச்சாட்டில் கூனிக்குறுக கமலமோ ராதிகா காபி குடிப்பதை ஒரு பரிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

கை குழந்தையாக கமலாவுடன் பிழைப்பு தேடி வந்த அவரின் தாயாருக்கு வீட்டோடு வேலை கொடுத்து பார்த்து கொண்டனர் தில்லை தம்பதியர்.தெய்வா ஸ்வேதாவை ஆறு மாத குழந்தையாக தூக்கிக்கொண்டு சென்னைக்கு வரும் போது தனியே வீட்டையும், குழந்தையும் சமாளிக்க முடியாது என்று கமலாவை சமையல் வேலைக்கும், அவரது கணவரை தோட்ட வேலைக்கும் என உடன் அனுப்பினார் சிவா என்று ராதிகாவால் அழைக்கப்படும் சிவகாமி அம்மையார். அதற்கு பிறகு இரண்டு நெடிய ஆண்டுகள் கழித்து சிவகாமி அம்மையார் உடல்நலம் குறைவால் அவதிப்பட அவரையும், ஐந்து வயது சிறுமியாய் இருந்த ராதிகாவையும் தனியே பார்த்துக்கொள்ள முடியாமல் கமலாவின் தாயார் திணற அவருக்கு உதவவே சில நாட்கள் புதுவை சென்றார் கமலம். அங்கே அவர் கண்டது "இனிமே எனக்கு மட்டும் ஏன் அப்பா, அம்மா இல்லைனு கேட்க மாட்டேன், நீ அழதா, நீ அழுததுனால தான் உனக்கு உடம்பு சரி இல்லாம போய்டுச்சாம் தில்லை சொல்லுச்சி, எனக்கு நீயும் தில்லையும் போதும், வேற யாரையும் நா கேட்க மாட்டேன்" என சிவகாமி அருகில் கதறிய ராதிகாவை தான். அந்த பிஞ்சுக்கு என்ன புரிந்ததோ அதற்கு பிறகு அவள் பெற்றோரை பற்றி கேட்கவே இல்லை, உறவுகள் இருந்தும் இல்லாமல் வளரும் ராதிகாவின் மீது தனி பாசம் அவருக்கு. காலப்போக்கில் கமலாவின் தாயாரும் இயற்கை எய்த, தெய்வா வீட்டோடு கமலா தங்கிவிட்டாலும் வளர்த்த பாசம் காரணமாக உரிமையாக,பிரச்சனை தெரிந்த மூன்றாம் நபர் என்ற முறையில் அவ்வப்போது சிவகாமி அம்மையார் கமலாவிடம் ராதிகாவை பற்றி முறையிடுவது உண்டு. ஆனால் கமலா தன் நிலையை அறிந்து அவர் சொல்வதை கேட்பதோடு சரி, பதில் என்று ஏதும் பேசுவதும் இல்லை, விசயத்தை வெளியே சொல்வதும் இல்லை.

காபியை அருந்தி முடித்த ராதிகா "நா மேல என்னோட ரூம்க்கு போறேன் கமலாமா, கொஞ்சம் ஒர்க் இருக்கு, நாளைக்கு காலேஜ்கு எனக்கு லன்ச் கொடுங்க, கேன்டீன்ல எல்லாம் தினமும் சாப்பிட முடியாது,டின்னர் ரெடினா எனக்கு ரூம்க்கு அனுப்பிடுங்க" என தெய்வாவை கண்டுக்காமல் கமலாவிடம் சொல்லிவிட்டு மாடியில் தனக்கு ஒதுக்கி இருந்த அறைக்கு விரைந்தாள்.இன்னும் தாமதித்தால் வேறு யார் கண்ணிலாவது படவேண்டும் எதுக்கு வம்பு.

"ராதிகா என் கிட்ட ஒழுங்கா கூட பேச மாட்றா கமலாக்கா" தெய்வா பாவம் போல சொல்ல

பேச வேண்டிய நேரத்துல எல்லாம் பேசாம இப்போ வந்து அந்த பொண்ணு பேசலனு வருத்தப்பட்டா ஆச்சா என கேட்க நாவு துடித்தாலும், முதலாளி ஆச்சே அதானால் "ஒரு நாள் தானே ஆகுது, போக போக சரி ஆகிடும்மா" என்றவாறு தன் ராஜ்யமான சமயலறையில் நுழைந்தார்.

அறைக்கு வந்த ராதிகா, கை, கால் கழுவி உடை மாற்றி ,கை பேசியை எடுத்து ராகி என சேமித்து வைத்த எண்ணிற்கு தான் பாதுகாப்பாக வீடு வந்த தகவலை வாட்ஸ்அப்பில் அனுப்பி விட்டு , கல்லூரி முதல் நாளுக்காக கிறிஸ் இடம் இருந்து வந்த வாழ்த்துக்களுக்கு இவள் பதில் அனுப்பிய அடுத்த நொடி அவனிடம் இருந்து அழைப்பு. வழக்கமான நல விசாரிப்புகளுடன், முதல் நாள் என்பதால் கல்லூரியை பற்றி, சக மாணவர்கள் பற்றி பெரிய விசாரணையை ஒரு வழியாய் முடிக்க அடுத்து தில்லையிடம் இருந்து அழைப்பு, அதே கேள்விகள் வேற வரிசையில்,கடைசியாய் இருவரின் நலனை விசாரித்து பேசியை வைக்கையில் அவர்களின் பிரிவு வருத்துவதாய்.

பின்பு மடிக்கணினியை எடுத்து மின்னஞ்சல் பார்த்து கிறிஸ் வேலை தொடர்பானவற்றிற்கு பதில் அனுப்ப ஆரம்பித்தாள். அந்நேரம் அறையின் கதவை திறக்கும் ஓசை கேட்க, யாரது கதவை தட்டாமா வரது என்ற யோசனையோடு நிமிர்ந்து பார்க்க உள்ளே வந்த நபரை எதிர்ப்பார்த்து இருந்தாலும் வந்த விதம் முகம் சுளிக்க வைத்தது.

"அடுத்தவங்க ரூம் கதவை தட்டிட்டு தான் உள்ள போகணும்னு பேசிக் மேனர்ஸ் கூட தெரியாதா" என ராதிகா கேட்க,

"இது என்னோட வீடு, எங்க போகவும் எனக்கு உரிமை இருக்கு, உன்னையே அய்யோ பாவம்னு தான் இங்க இருக்க விட்டுஇருக்கோம், ஞாபகம் வச்சிக்கோ"

"அப்படியா(குரலில் போலி வியப்பு காட்டி), ஆனா இந்த ரூம்ல இப்போதைக்கு நா இருக்க, சோ நீ கதவை கண்டிப்பா தட்டி இருக்கணும், இருக்க இடம் இல்லாம நா இங்க தங்க வரல, உன்னோட அம்மா கேட்டுகிட்டதால மட்டும் தான் போனா போகுதுன்னு இருக்கேன், புரியுதா" ராதிகா குரல் உயர்த்தாமல் அழுத்தமாக பேச, அவள் சொன்னது அனைத்தும் உண்மை என்பதால் பதில் பேச முடியாமல் அவள் பேசவே இல்லை என்பது போல் பாவித்து தான் வந்த விஷயத்தை பேச ஆரம்பித்தாள் ஸ்வேதா,

" நானும் ஆர்.கேவும் லவ் பன்றோம், இன்னைக்கு மோர்னிங் நா வந்து பார்க்கலனு தான் கோவமா பேசிட்டாரு, அதனால நீ அட்வான்டேஜ் எடுத்துக்கலாம்னு நினைக்காத, இனிமே நீ ஆர்.கே கூட பேச கூடாது, உன்னை எங்கேயும் நா ஆர்.கே கூட பார்க்க கூடாது அண்டர்ஸ்டாண்ட்" என தன்பாட்டில் பேச அமைதியாய் கை கட்டி அவள் பேசுவதை பார்த்த கொண்டு இருந்த ராதிகா

"நா யாருக்கிட்ட பேசணும், பேசக்கூடாதுன்னு நீ சொல்ல கூடாது, வேணும்னா உன்னோட லவ்வர் ஆர்.கே கிட்ட சொல்லு என் கூட பேச கூடாதுனு, என்ன சொல்றியா" லவ்வர் என்பதை ராதிகா அழுத்தி உச்சரித்த விதமே நீ சொன்னதை நான் நம்பவில்லை என்பதை பறைசாற்ற,

" ஆர்.கேவை ஆசை பட கூட ஒரு தகுதி வேணும், அவர் அழகுக்கும், கலர்கும் உன்னால அவர் பக்கத்துல கூட நிக்க முடியாது, உன்கிட்ட உன்னோட கிளாஸ்ல கூட யாரும் பேசி இருக்க மாட்டாங்களே ஏன்னா நீங்க அவ்ளோ….. அழகு, இருந்தும் ஆர்.கே பேசுறார்னா, அய்யோ பாவம்னு யாருமே பேசலயேனுதான், அதை பார்த்து நீ தேவை இல்லாம ஆசைய வளர்த்துட்டு பின்னாடி கஷ்ட பட கூடாது பாரு, தெரிஞ்ச பொண்ணு ஆச்சேனு அக்கறையில் அட்வைஸ் பண்றேன், பார்த்து போழச்சிக்கோ"

இது ஒரு கேவலமான யுக்தி எதுக்கும் அசராமல் இருக்கிறவர்களை அவர்களின் குறையை, அல்லது குறையாய் நினைப்பதை குதிகாட்டி நிலைகுலைய செய்வது, ஸ்வேதாவும் அதையே செய்து ராதிகாவை அவளின் நிறத்தை கொண்டு மட்டம் தட்ட, தன் நிறத்தை குறையாய் ராதிகா நினைத்தால் தானே அவளின் யுக்தி வேலை செய்யும், ராதிகாவோ அதே அமைதியுடன் "உங்க அக்கறைக்கு நன்றி, எனக்கு செய்றதுக்கு உருப்படியா நிறைய வேலை இருக்கு சோ நீங்க" என கதவை கை காட்ட, தான் பேசிய பேச்சிற்கு ராதிகா சிறிது கலங்கி இருந்தாலும் மனது ஆறி இருக்குமோ என்னவோ ஆனால் சிறிதும் கலங்காமல் உன்னிடம் பேசுவது வெட்டி வேலைன்னு சொன்ன விதம் இன்னும் கோவத்தை கிளறி விட, அவளை ஒன்றும் செய்யமுடியாத இயலாமையுடன் அறையை விட்டு வெளியேறினாள் ஸ்வேதா.

இவள் இப்படி தான் நடந்துகொள்வாள் என அறிந்து தான் ராகவின் ஸ்வேதாவை பற்றிய நிலைப்பாட்டை அறிவது அவசியம் என ராதிகா காலையில் ராகவிடம் இவளை பற்றி பேசியது. ராகவிற்கும் ஸ்வேதாவின் மீது எண்ணம் இருக்கும் பட்சத்தில் ஒரு தோழியாககூட அவனுடன் பழகுவது வீண் பிரச்சனை, அதுமட்டும் இல்லாமல் ஸ்வேதா ராகவிடம் பேச கூடாது என்ற போது அவளின் கண்களில் இருந்த பாவம், அவனை இழந்து விடுவேன் என்ற பயம் என்றால் அது அவன் மீது கொண்ட காதல், ஆனால் அங்கு கண்டது உன்னிடம் எல்லாம் நான் தோற்பதா என்ற ஈகோ, அப்படி அவளின் ஈகோக்காக ஒரு நல்ல நண்பனை இழக்க முடியாது. ஸ்வேதா சொன்ன மாதிரி ராகவ் பரிதாபப்பட்டு இவளுடன் பேசவில்லை என்பதும் திண்ணம். இவளிடம் பேசிய போது அவனின் முகத்தில் இவள் கண்டது ஒரு தோழமையுடன் கூடிய ஆர்வம் தான். ஏற்கனவே தனக்கும் ஸ்வேதாக்கும் ஆகாது இப்போது ராகவ் ஒரு கூடுதல் காரணம் அவளின் கோவத்திற்கு. ஒரு நாளே இப்படி மூச்சு முட்டுதே, "யோவ் தில்லை உன்னால தான், இந்த சில்வண்டு பேச்சு எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு, நீ மட்டும் அங்க நிம்மதியா இருக்க" என கடுகடுப்புடன் கார்மேகம்.

இவன் ராதையின் கண்ணன்……..
 

banumathi jayaraman

Well-Known Member
நான்கு அப்டேட்ஸ் வந்தும் இன்னும்
தெளிவு கிடைக்கலையே, ருத்ரா யுவர் ஆனர்
தெய்வானை ராதிகாவுக்கு அம்மாவா?
ராதிகாவின் அப்பா இறந்து விதவையாக இருந்த தெய்வானை சண்முகத்தை
மறு விவாகம் செஞ்சுக்கிட்டாங்களா?
சிவகாமி தில்லை நாயகம் தெய்வானையின் பெற்றோரா?
பசும்பொன் படத்தில் வருவது போல ராதிகாவை தாத்தா தில்லைநாயகமும்
பாட்டி சிவகாமியும் இவ்வளவு நாள் வளர்த்தாங்களா?
அப்போ இவ்வளவு நாள் இல்லாமல்
இப்போ மட்டும் ஏன் ராதிகாவை
மகளிடம் விடணும்?
தெய்வா ஆசைப்பட்டாள்ன்னா?
ஆனால் சமையல்காரிக்கு தெரிஞ்ச
அளவு கூட அம்மா தெய்வானைக்கு
மூத்த மகளைப் பற்றி ஒண்ணுமே
தெரியலையே, ருத்ரா டியர்
யாரு அந்த கிறிஸ்?
அவன் (ர்) ஏன் ராதிகாவுக்கு பார்த்து
பார்த்து எல்லாம் செய்யுறார்?
தில்லையிடம் வேலை செய்பவரா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top