மெல்லிய காதல் பூக்கும் P24

mila

Writers Team
Tamil Novel Writer
#1
கம்ப்ளீட் பண்ண முடிஞ்சா நாளை UD போடுறேன் ப்ரெண்ட்ஸ்:geek::geek:8 (14).jpg

"என்னடா அமுதா... அந்த மினிஸ்டர் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல. பொண்ண விட அந்த கீதா தான் முக்கியமா போய்ட்டாளா? என்னடா பண்ணலாம்?" பிரதீபன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க அமுதனும் பலத்த யோசனையில் இருந்தான்.

"கட்டின மனைவியின் மீது நம்பிக்கையில்லை பெற்ற மகளின் மீது அன்பில்லை. அப்படி என்ன பாசம் கூடப் பிறந்தவள் மீது?" அமுதன் அங்கும் இங்கும் நடந்தவாறே கோபத்தை கட்டுப் படுத்தகீதாராணி தலைமறைவாகிட்டாள் என்றதும் கண்டிப்பாக ரத்னவேலின் உதவியில்லாமல் இது சாத்தியமில்லை என்று தோன்றவே பிரதீபன் அவரை கண்காணிக்க ஏற்பாடு செய்ததில் அது உறுதியானது."கீதாராணிய அரெஸ்ட் பண்ணி இருந்தா பாதி பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். இப்போ என்ன செய்றது?" அமுதன் ப்ரதீபனை ஏறிட

"எல்லாம் பக்காவா திட்டம் போட்டோமே... எப்படிடா இப்படியாகிருச்சு?" செய்வதறியாது பிரதீபன் திணற

"அந்தாள நாம குறைச்சு எடை போட்டுட்டோம்" அமுதனும் குழம்பினான்.


images (54).jpg


"யோவ் என்னய்யா பண்ணிக்க கிட்டு இருக்க? எவனோ ஒருத்தன் என் பொண்ண கடத்தி என் தங்கச்சிய லாக் பண்ண பாக்குறான். அந்த கமிஷ்னர் வேற அரெஸ்ட் பண்ணியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்க கிட்டு அலையிறான். அவளை பத்திரமா அனுப்பி வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிருச்சு. இப்போ என் பொண்ண காப்பாத்த என்ன நடவடிக்கை எடுத்திருக்க" டி.ஜி.பியின் முன் அமர்ந்திருந்த ரத்னவேல் கொதித்துக் கொண்டிருந்தார்.ரத்னவேலின் ஒரு கண் கீதா என்றாள் மறு கண் மலர். இருவரையும் விட்டுக் கொடுக்க மாட்டார். யாதவ் மாதவ் சொல்வதை செய்வது போல் செய்து நம்பத்தகுந்த அடியாளை மாறு வேஷத்தில் அனுப்பி கீதாவை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அவள் தலை மறைவாகிட்டாள் என்ற புரளியை கிளப்பினான். இதில் தன்னுடைய பங்கு எதுவும் இல்லையென்று யாதவ் மாதவ் நம்பினால் மலருக்கு ஆபத்து எதுவும் வராது என்று நினைத்து இவ்வாறு செயல் பட்டு தனக்கு கட்டு பட்டிருக்கும் டி.ஜி.பியின் முன் நின்று மலரை தேட சொல்லி கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்."ஐயா.... உங்க மகள் போன் வீட்டுல இருக்கு. அவங்கள வீட்டு புகுந்து கடத்தினாங்களா? போன வீட்டுல விட்டுட்டு வெளிய போன நேரம் கடத்தினங்களானே தெரியல. கடத்தினவன் டிமாண்ட் கீதாராணி அரட்ஸ்ட் பண்ணுறது. அவங்க வேற தலை மறைவாகிட்டாங்க. இனி அவனே போன் பண்ணினா தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரைக்கும் ஏரியா, ஏரியாவா சேர்ச் பண்ணிக்க கிட்டுதான் இருக்கோம்""என் பொண்ணுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு.... ஒருத்தனும் உசுரோட இருக்க மாட்டீங்க" கர்ஜித்தார் அகன்றார்.images (12).jpg

தன் விரல் கொண்டு கண்ணீரை துடைத்தவாறே "பேபி டால் என்னடி பிரச்சினை உனக்கு? சொன்னாத்தானே எனக்கு புரியும். இப்படி அழுது உன் உடம்ப கெடுத்துக்கலாமா? பேசேன்""என்னை இன்னும் மன்னிக்கவே இல்லையா? பழிவாங்கத்தான் இவ்வாறு நடந்து கொள்கிறாயா?" மனம் முழுக்க கேள்விகள் மாறி மாறி வர எங்கே தான் கேட்கப் போய் ஆமாம் என்று சொல்லிவிடுவானோ என்ற அச்சம் மனதில் குளிர் பரப்ப தியாவோ வாயை திறந்து பேசினாலில்லை.
 
rajienia

Well-Known Member
#4
ada pavi ena da nee apadi ena thangachi pasam :unsure::unsure:evanunga sivarkarthigeyan Aishwarya rajesh aah minjiruvanunga polaye:rolleyes: malar ponu enga kanam o_Othiya nee onum worry panatha parthi (unta) dummy piece than kanna thoda kanna thoda :LOL::LOL::ROFLMAO:
 
#7
அய்யய்யோ கீதாராணி தப்பிச்சுட்டாளா?
அப்போ கனி அமுதன் பிரதீபன் இவங்க கதி?
அடேய் பிரதீப்
என்னடா எப்போப் பாரு அந்த தியாப் புள்ளையை அழ வைச்சுக்கிட்டே இருக்கியே
போடா இப்படி இருந்தால் எப்போ ஸ்ரீராமுக்கு பொண்ணு பெத்து தருவே,?
நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டே, பிரதீப் தம்பிரி
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes