முத்தக் கவிதை நீ!! (டீஸர்)

Gory

Writers Team
Tamil Novel Writer
#1
IMG_20190530_180453.png


வணக்கம் கண்மணீஸ்!! நான் இந்த தளத்திற்கு புதுவரவு. உங்களது ஆதரவு தேவை மக்களே!! எனது கதையான "முத்தக் கவிதை நீ" யில் இருந்து ஒரு சின்ன டீஸர். இது என்னுடைய ஐந்தாவது நாவல். டீஸர் படிச்சிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கப்பா

டீஸர்:

"ஆர் யூ சீரியஸ்? யூ டோண்ட் ரிமம்பர் மீ?" குரலில் ஆச்சர்யத்துடன் ஏமாற்றத்தின் வலியும் போட்டிபோட்டது மைக்கேலுக்கு. வேறு யாரும் தன்னை நினைவில்லை என்று சொல்லியிருந்தால் இவ்வளவு தைத்திருக்காதோ? யாருக்காக ஆறு வருடங்கள் காத்திருந்தானோ, யாருக்காக கடல்கடந்து சொந்தம் பந்தம் தாய்மண் என அத்தனையையும் விட்டுவிட்டு வந்தானோ அவளுக்குத் தன்னை தெரியவில்லையா? நம்ப முடியாத பார்வை ஒன்றைப் பார்த்தான்.


'இவன் எப்போதடா வழிவிடுவான் நாம் வகுப்புக்குப் போகலாம்?' என்று சிந்தித்தவாறே தன் ஜீன்ஸ் பாண்ட்டின் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு கால் மாற்றி கால் நின்று தன் பொறுமையின்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் நேத்ரா. பென்சில் ஹீல்ஸ் அணிந்தும் கூட அவனைவிட குள்ளமாகவே தெரிந்தாள். அதுவேறு கடுப்பாக இருந்தது.

"யூ ஹேட் லாங் ஹேர் பிஃபோர். ஐ நோ இட்ஸ் யூ. உனக்கு ஞாபகமில்லையா?" இவளுக்காக தான் கற்றுக் கொண்ட தமிழில் மழலை கொஞ்ச பரிதாபமாகக் கேட்டான் மைக்கேல். "ஐம் சாரி. ஐ கெஸ் நீங்க யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசறீங்க. ஐம் நாட் ஹூம் யு திங்க். ஒகே!" என்று உறுதியாகச் சொல்லிவிட்டு ஒதுங்கி அவனிடம் இருந்து விலகி நடந்து தன் வகுப்பிற்குள் நுழைந்தாள்.

படபடப்பு அதிகமாகியது. முன்னே பின்னே பொய் சொல்லி பழக்கமிருந்தால் பரவாயில்லை. முதன்முதலாக பொய் சொன்னால் இப்படித்தான் ஆகுமோ. வகுப்பிற்குள் வந்து தன்னிருக்கையில் அமர்ந்து தண்ணீர் அருந்தியும் படபடப்பு குறையவே இல்லை. ஒருவேளை அவன் வகுப்பிற்கும் வந்துவிடுவானோ என்ற பயம் அதிகமாகவே இருந்தது.

யாருக்கும் தெரியாமல் ஓரப்பார்வையால் வாயிலை நோக்கவும் வகுப்பிற்கு வெளியில் இருந்த தூணில் சாய்ந்து அவளையே வெறித்தபடி அவன் பார்க்கவும் சரியாக இருந்தது. மாட்டுனியா நேத்ரா!!!!!

ஒரு அறுந்த வாலுக்கும் ஆஸ்திரேலியாகாரனுக்குமான கதைதான் பா இது. சீக்கிரமா வருவாங்க ரெண்டு பேரும்.
 
#6
:D :p :D
உங்களுடைய "முத்தக்
கவிதை நீ"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
கௌரி டியர்
 
Last edited:

Advertisement

New Episodes