மனம் பொய்த்த பொழுதுகள் - பொழுது 3 - ஒரே அறை

#1
அனைவருக்கும் வணக்கம்.

நலம் தானே? ”மனம் பொய்த்த பொழுதுகள்” புதினத்தின் பொதுவான முன்னோட்டத்திற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கும், கருத்திட்டு ஊக்கமளித்தவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

நியாயமாக, “புகழ் மயக்கம்” உடன் வந்திருக்க வேண்டும். அதை எழுதியும் விட்டேன். அந்த மயக்கத்திற்கு இந்தப் புதினத்தில் கட்டாயம் இடம் உண்டு. ஆனால், அந்த மயக்கத்தை இப்பொழுதே இட்டு உங்களை மயக்கத்திற்கு இட்டுச் செல்ல வேண்டாமே என்று தோன்றியதால், ஆண்டு 1996 இலேயே கதையை பயணிக்க விட்டு, புதியவன், அவன் இருவரையும் உங்கள் கணிப்புப் படியே வெளிப்படுத்தி, மிக மிக அடிப்படையான சில தகவல்களுடன் இந்த பொழுதும் விரிகிறது.

இந்த ”மனம் பொய்த்த பொழுதுகள்” மூன்றாம் பொழுது - ”ஒரே அறை”யில் யார் யாருக்கு அறை கொடுத்தார்கள்? யார் கன்னம் வீங்கியது என்று வாசித்து அறிந்து கொள்ளுங்கள். :p:cool: இன்னும் கதை அடிப்படை அளவில்தான் நிற்கிறது. :oops: நீங்கள் கொடுக்கும் ஆதரவில்தான் விரைந்து ஓட்டமெடுக்கும். உங்கள் ஆதரவினை எதிர்பார்த்து,

அரசிளம்பரிதி.
 
#7
நன்றி சகோதரிகள் சித்ரா சரஸ்வதி, விஜயா ஆர் எஸ், பானுமதி ஜெயராமன், சித்ரா ஜெயராமன், ரபி, மற்றும் விருப்பம் தெரிவித்த ஜானவி, சஜி சகோ.

அடுத்த அத்தியாயமும் 96 இலேயே பயணிக்கும். நிகழ்வுகளின் அடிப்படையிலான கதை என்பதால், அடிப்படைகளை வெகு கவனமாகக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுதே முதல் அத்தியாயத்தையும், இந்த அத்தியாயத்தையும் எடுத்து வாசித்தால், நிறைய முரண்பாடுகள் வரும். கவனித்துப் பார்ப்பவர்களுக்கு எளிதில் முரண்பாடுகள் புரியும். உண்மைகள் அவ்வாறானவையே. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது வெகு சிலவற்றிற்கு மட்டும்தான் பொருந்தாது. (அப்படியா? உலகில் மாறாதவை உண்டா என்ன?)

முரண்பாடுகள் நிறைந்ததுதான் வாழ்க்கை. அந்த முரண்களைக் குறிக்கவே சுவையற்றதாகத் தோன்றும் எனத் தெரிந்தும், இந்த பொழுதுகளை விவரித்து எழுதுகிறேன். பார்ப்போம், எவ்வளவு விரைவாக இவற்றை கடந்து நாம் செல்கிறோம் என்பதை. மீண்டும் ஒருமுறை ஊக்கமளித்திடும் அனைவருக்கும் நன்றி.
 

Advertisement

New Profile Posts

Kshipra mam ka mu ka pi epo varum sis
hello friends, waiting for mallika to give link. epi is ready
Neela mam ud yeppo post panringa