மண்ணில் தோன்றிய வைரம் 9

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
டாக்டரின் அறிவுறுத்தலுக்கமைய மாலை கிருஷ்ணன் ஐ.சி.யூ வில் இருந்து நார்மல் வாடிற்கு மாற்றப்பட்டார். அஸ்வின் அவ்விடைவேளையில் தன் சித்தியிடம் கிருஷ்ணரின் நிலையை பற்றி கூறினான். அவனை தடுத்த வருணிடம் " இல்லை வருண். சித்திக்கு சித்தப்பாவின் உடல்நிலை பற்றி தெரிந்தா தான் அவங்க ரொம்ப கேர் எடுத்து பார்த்துப்பாங்க. அவங்க தான் எப்பவும் சித்தப்பா கூட இருப்பாங்க.சோ ஒரு எமர்ஜன்சினாலும் ஏதும் செய்வதற்கு அவங்களுக்கு சித்தப்பா ஹெல்த்தை பற்றி தெரிந்து இருக்கனும். சோ என்னை தடுக்காதே."

கிருஷ்ணரின் உடல்நிலை பற்றி அறிந்த சித்ரா முதலில் பயந்து அழுதாலும் அஸ்வினின் பேச்சாற்றலால் சித்ராவே அவனுக்கு தைரியம் சொல்லும் அளவிற்கு அவரை தைரியமூட்டியிருந்தான்.
கிருஷ்ணரை அறைக்கு மாற்றிய பின் அவருக்கு துணையாய் இருக்கின்றேன் என்று அடம்பிடித்த சித்ராவை சில பல காரணங்கள் கூறி வற்புறுத்தி அஸ்வின் வீட்டிற்கு அழைத்து செல்ல வருண் கிருஷ்ணருக்கு துணையாய் ஆஸ்பிடலில் இருந்தான்.
வீட்டிற்கு சென்றவுடன் குடும்பத்தாரை உரிய முறையில் சமாதானப்படுத்தி விட்டு சித்ராவிடம் கிருஷ்ணருக்கு தேவையான பொருட்களை எடுத்து வைக்குமாறு கூறி விட்டு தன் அறை நோக்கி நகர்ந்தான். குளித்து தயாராகிக்கொண்டிருந்தவனது கவனத்தை கலைத்தது சாருவின் அழைப்பு.
"ஹலோ அஸ்வின். நான் சாருணி பேசுறேன். அங்கிள் இப்போ எப்படி இருக்காரு??"
"ஹலோ மாம். ஈஸ் பைன் நௌ"
"ஓகே. என்னாச்சி அவருக்கு??"
"ஹார்ட் அட்டாக் மேம். பைபாஸ் பண்ணனும்னு டாக்டர் சொன்னாரு.ஆனால் அவரோட ஹார்ட்டுக்கு ஆப்பரேஷனை தாங்குறதுக்கான வலு இல்லையாம். சோ வன் மண்த் டிரீட்மன்ட் கொடுத்து ஹார்ட்டை வலுபடுத்திவிட்டு பிறகு பைபாஸ் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க"
"ஹோ.. அஸ்வின் நீங்க பயப்படாதீங்க அங்கள் சீக்கிரம் ரிகவர் ஆகிருவாரு. இப்போ நீங்க எங்க இருக்கீங்க ??"
"நான் சித்தப்பாவோட திங்ஸை எடுத்துட்டு போகலாம்னு வீட்டுக்கு வந்தேன்.ஏன் மேம் ??"
"அந்தப்பக்கம் வருகின்ற வேலை ஒன்று இருந்தது. அதான் அப்படியே அங்கிளையும் பார்த்துட்டு போகலாம்னு பார்த்தேன்."
"சாரி மேம். நைட் விசிட்டர்ஸ் நாட் அலாவ்ட்."
"ஒகே அஸ்வின் நாளைக்கு வந்து பார்க்கின்றேன்."
"ஓகே மாம். அப்புறம் ஒரு ரிக்வஸ்ட். ஒரு டூ டேஸ் எனக்கு லீவ் அப்ரூவ் பண்ணனும். நான் உங்களது மெயிலுக்கு என்னோட லீவ் ரிக்வெஸ்ட் லெட்டரை சென்ட் பண்ணுறேன்."
"ஓகே அஸ்வின் ரிக்வஸ்ட் அப்ரூவ்ட்."
"தாங்கியூ மேம். டேக் கேர்"
"ஓகே பாய்."
அன்று போனை அணைத்த சாருவை பார்த்தவாறு அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தான் சஞ்சய்.
"என்ன சஞ்சய் அப்படி பார்க்கிறாய். ஏதோ பார்க்காததை பார்த்தது மாதிரி பார்க்கிற??"
"அதான் நீயே சொல்லிட்டியே இதுவரைக்கும் பார்க்காததை பார்த்தேன்னு"
"என்னடா நான் சொன்னதையே எனக்கு ரீவைன் பண்ணுறியா??"
"இல்லையே.. நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன்."
"மிஸ்டர். சஞ்சய் நீங்க பேசுவது எனக்கு சத்தியமா புரியல. கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க."
"யாரு உனக்கு புரியவில்லையா?? இதை நான் நம்பனுமா??"
"ஆமா சஞ்சய் நீ நம்பி தான் ஆகனும். சரி சொல்லு ஒன்றும் இல்லாத உன் மண்டைக்குள் என்ன ஓடுது??"
"என்ன சொன்ன ?? என்னோட மண்டையில் ஒன்றும் இல்லையா?? "
"ஐயோ சஞ்சய் அதை பிறகு சொல்கின்றேன். இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"
"அந்த பயம் இருக்கட்டும். சரி இப்போ உன்னோட மேட்டருக்கு வருவோம். இப்போ ஜி.எச் போற வழியில் உனக்கு என்ன வேலை இருக்கு?? அதுவும் எனக்கு தெரியாம??"
" உனக்கு தெரியாமல் என்ன இருக்கும். சரி அதையேன் நீ கேட்கிறாய்.??"

"இப்போ மேடம் தானே போனில் சொன்னீங்க அதான் கேட்டேன்"
"அதுவா.. சும்மா ஒரு பார்மாலிட்டிக்காக சொன்னேன்." என்று மழுப்பிய சாருவை
"சாரு நீ என்னதான் ட்ரை பண்ணாலும் உனக்கு நடிக்க வரவில்லை சோ உண்மையை சொல்லு.."
"டேய் நான் உண்மையை தான் சொல்றேன்."
"ஓ அப்போ நீ அஸ்வினை லவ் பண்ணுற உண்மையை சொல்ல மாட்ட??" இந்த வார்த்தைகளை கேட்டதும் தன் நண்பனை உச்ச கட்ட அதிர்ச்சியில் பார்த்தாள் சாரு.
"என்ன அப்படி பார்க்குற அதானே உண்மை??"
"சஞ்சய் உனக்கு எப்படி..."
"சாரு உன் கண்ணசைவிலே நீ என்ன நினைக்கிறனு தெரிந்து நடப்பவன் நான். என் கண்ணில் உன்னோட மாற்றங்கள் தென்படாம போகும்னு நீ எப்படி நினைத்தாய்?? நீ என் உயிர்த்தோழி சாரு. எல்லாரையும் விட உன்னை பற்றி எனக்கு தான் நல்லா தெரியும்." என்று தன்னுடனான உண்மையான நட்பினை உணர்த்திய சஞ்சயின் பேச்சு சாருவை கண் கலங்க வைத்தது.
"சஞ்சு இவ்வளவு நாளும் எனக்குனு யாரும் இல்லையே அப்படிங்கிற ஒரு உணர்வு என்னை வாட்டி வதைக்கும். ஆனால் எனக்காக ஒரு தோழனா ஒரு அப்பா ஸ்தானத்தில நீ இருக்கனு நினைக்கும் போது என்னை விட யாரும் அதிஷ்டசாலியா இருக்க மாட்டாங்கனு தோனுது." என்று கண்கலங்கிய சாருவை அமைதிப்படுத்தும் முகமாக
"அடிப்பாவி உன்னை ஒரு கேள்வி கேட்டேனு சொல்லி அப்பானு அங்கிள் ரேஞ்சிற்கு கொண்டு போய்ட்டியே?? இப்படி ஒரு பழியை போட்டு என்னை பேச்சுலராவே சாவதற்கு சதி செய்றியா?? அந்த அபாண்டமான பழிச்சொல்லில் இருந்து என்னை காப்பாற்ற யாருமே இல்லையா??" என்று போலியாய் புலம்பிய சஞ்சயிடம் "இப்போ உனக்கு உண்மை கதையை சொல்லனுமா வேணாமா??" என்ற கேள்வியை கேட்டு வாயடைக்க வைத்தாள் சாரு.
"சரி சொல்லு" என்றவாறு கதை கேட்க தொடங்கினான் சஞ்சய்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top