மண்ணில் தோன்றிய வைரம் 3 & 4

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#3........
சித்ரா வழங்கிய காபியினை குடித்துவிட்டு உறங்க தொடங்கிய அஸ்வின் மற்றும் வருணை மூன்று மணிநேரத்திற்கு பின் துயில் கலையச்செய்தது கவித்ராவின் "அண்ணா இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவிங்க" என்ற குரலும் கதவு தட்டப்படும் சத்தமும்.
கண் விழித்த வருண் அஸ்வினை எழுப்ப அவனோ மறுப்பக்கம் திரும்பி படுத்துக்கொண்டான். சரி நாமே சென்று கதவை திறப்போம் என்று கதவை திறந்த வருணை வரவேற்றது கவியின் தண்ணீரபிஷேகம்.
"ஐயோ" என்று அலறிய கவியின் குரலை தொடர்ந்து ஒலித்தது "ஷிட்" என்ற வருணின் குரல்.
"ஹாஹா காலையிலேயே கவி கையால நீராபிஷேகம் வாங்கிட்டியா??" என்று கட்டிலில் இருந்தவாறே சிரித்த அஸ்வினை நோக்கி
"அடப்பாவி தெரிஞ்சி தான் அப்படி திரும்பி படுத்துகிட்டியா? உயிர் கொடுத்தான் நண்பன்னு கேள்வி பட்டுருக்கேன். நண்பன் மொக்கை வாங்க சதி செய்த நண்பனை இன்னைக்கு தான் பார்க்குறேன்."
"சாரி அண்ணா நான் அஸ்வின் அண்ணானு நினைத்து தான் இப்படி பண்ணேன்"
"பரவாயில்லை மா. வா நீ செய்ய நினைத்ததை இப்போ செய்யலாம்" என்றவாறு அஸ்வினிடம் காவேரியை அழைத்து சென்றான் வருண்.
அவர்களது எண்ணம் அறிந்த அஸ்வின் சட்டென குளியலறையில் புகுந்தான்.
"டேய் பாத்ரூம்ல போய் ஒளிஞ்சா தப்பிச்சுட்டதா அர்த்தம் இல்லை.நீ திரும்பி வெளிய வந்து தான் ஆகனும் வாட உனக்கு இருக்கு கச்சேரி." என்றவாறு இவர்களது ரகளை தொடர அதில் வந்து கலந்து கொண்டான் அவ்வீட்டின் குட்டி இளவரசன் மாதேஷ்.

இரண்டு வாரங்களுக்கு பின் தன்னை இன்டர்வியூவிற்க்கு அழைத்திருந்த "பெஸ்ட் ஓப்ஷன் கண்ஸ்ரக்ஸன்ஸ்" தலைமை காரியாலயத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தான் அஸ்வின்.செல்லும் வழி நெடுக அன்றைய தேர்வில் அவன் தேர்வாக வேண்டும் என்பதற்காக தன் குடும்பத்தார் செய்த செல்ல குசும்புகளை நினைத்து சிரித்தவாறு அவனது பயணம் தொடர்ந்தது.
விபூதியை அஸ்வினின் நெற்றியில் வைத்தவாறே அவனது பாட்டி"கண்ணா நீ பயப்படாம போ நம்ம பதினெட்டு பட்டி கருப்பண் உனக்கு காவலா இருப்பாரு"
"எங்க பாட்டி கம்பனி வாசலிலா இல்லாட்டி இன்டர்வியூ ரூம் வாசலிலா??"
என்று தன் பாட்டியை வம்பிழுத்தாள் கவி.
"அவ கிடக்குற நீ கவலைப்படாத கண்ணா இந்த இன்டர்வியூல நீ தான் செலைக்ட் ஆவாய் சித்தி சொல்லுறேனு பார்த்துக்கோ"
" நீங்க எப்ப இருந்துமா ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சீங்க??" என்று தன் அன்னையை வம்பிழுத்தான் மாதேஷ்.
"டேய் மாது கொஞ்சம் பேசாம இரு. ஆல்த பெஸ்ட் அஸ்வின். நல்லபடியா இன்டர்வியூ அட்டன்ட் பண்ணு"
"தாங்யூ சித்தப்பா. தாத்தா எங்க சித்தப்பா?"
"அவர் காலையிலேயே கோவிலுக்கு போய்ட்டாரு இன்னேரம் வந்திருக்கனும். சரி நீ கிளம்பு உனக்கு லேட்டாகுது"
"அச்சு அண்ணா ஆல்த பெஸ்ட். நீ என்னோட அண்ணானு எல்லாரும் சொல்லி பெருமை படுற அளவுக்கு இன்டர்வியூல பர்போம் பண்ணனும் ஓகேயா?" என்ற கவியிடம்
"உத்தரவு மகாராணி" என்றும்
"அண்ணா சும்மா தெறிக்க விட்டுருங்க" என்று சினிமா பாணியில் வாழ்த்திய தன் தம்பியிடம் விடைப்பெற்றவாறு அவனது அன்றைய நாள் தொடங்கியது.

#4.......
அங்கே பெஸ்ட் ஓப்ஷன் கண்ஸ்ரக்ஷனில் இன்டர்வியூவிற்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்திருந்தான் அஸ்வின்.
அன்று அசிஸ்டன் மனேஜருக்கான நேர்முகத் தேர்விற்கு அவனோடு சேர்த்து மேலும் ஏழு பேர் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தனர். இறுதி தேர்வு நாடியான அஸ்வின் நேர்முகத்தேர்வு நடக்கும் அறைக்கு அழைக்கப்பட்டான்.
அறையினுள் நுழைந்த அஸ்வினுக்கு சிறு அதிர்ச்சி.
அவனது அதிர்ச்சிக்கான காரணம் அங்கு அவனை பரிச்சீட்க அமர்ந்திருந்தது ஒரு இளம்பெண் என்பது.
தன் முகத்தில் தோன்றிய பாவனையை நொடி நேரத்தில் மாற்றிக்கொண்டு தனது சீட்டை நோக்கி நகர்ந்தான்.
காலை வணக்கத்துடன் ஆரம்பமானது அவனது நேர்முகத்தேர்வு. அவனது ரெசுயூமி ஐ வாங்கி ஆராயத்தொடங்கிய அந்த இளம் பெண் அதிகாரி யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் அஸ்வினுக்கு உண்டானது. ஆனால் அவனது மூளையோ "டேய் நீ இன்டர்வியூவிற்க்கு வந்துருக்க அந்த பொண்ணு உன்ன இன்டர்வியூ பண்ணுறானா அவளோட டெசிக்னேஷனும் அதுக்கு ஏத்த மாதிரி பெரிசா தான் இருக்கும் அதுனால கொஞ்சம் உன்னோட வாலை சுருட்டிகிட்டு இரு" என்று அறிவுறுத்த ஆர்வமாய் அப்பெண்ணை கவனிக்க தொடங்கிய விழிகள் தற்காலிகமாக அதற்கு விடுதலை விட்டது.
ரெசியூமியை பார்த்து முடித்த அப்பெண் அதிகாரி அஸ்வினின் கல்வித்தகைமை தொடர்பாகவும் அவனது வேலை அனுபவங்கள் தொடர்பான வினாக்கள் என்று சுமார் அரை மணிநேரம் நேர்முகத்தேர்வு நடைப்பெற்றது.
தேர்வின் முடிவில் அப்பெண் அதிகாரி "வெல்டன் அஸ்வின். யூ ஆர் காலிவைட் இன்னாப் போ திஸ் ஜாப். ஷால் வீ சைன் த கண்ட்ராக்ட்??"
"தாங்கியூ மாம். ட்ஸ் மை பிளஷர்."
"பைன். ஒரு சின்ன கிளரிபிகேஷன். நீங்க அவுஸ்ரேலியா ல மாஸ்டர்ஸ் முடிச்சிட்டு அங்க ஒரு மல்டிநெஷனல் கம்பனில வேர்க் பண்ணி இருக்கிங்க. சோ சேலரியும் ஓகேவா தான் இருந்துருக்கும். பட் நீங்க ரிசைன் பண்ணிட்டு இங்க வந்ததுக்கான ரீசனை எஸ் யோர் எம்பிளோயரா நான் தெரிஞ்சிக்கலாமா??"
" ரொம்ப சீரியஸ்ஸா ஒன்றும் இல்லை மேம். கஷ்டமோ நஷ்டமோ குடும்பத்தோட இருக்கனும்னு தோணிச்சி அதான் அங்க இருந்து கிளம்பி வந்துட்டேன்."
"தட்ஸ் குட். நீங்க நாளைக்கே வந்து சார்ஜ் எடுத்துக்கோங்க. அன்ட் ஆல்த பெஸ்ட்"
"ஸ்யூவர்.தாங்ஸ் அகெயன்"
என்றவாறு வெளியேறத்துவங்கிய அஸ்வின் சட்டென நியாபகம் வந்தவனாக,
"எக்ஸ்கியூஸ்மி மேம். சாரி போ இன்டரப்டிங் யூ அகென்.வுட் யூ மைண்ட் டெல்லிங் மீ யூர் டெசிக்னேசன்"
"அயம் த சார் பர்சன் ஒப் திஸ் ஆர்கனைசேஷன்"
"அப்போ நீங்க தான் சாருணியா??"
"ஆமா.."
" தாங்கியூ மாம்" என்றவாறு வெளியேறிய அஸ்வினிற்கு பெருத்த ஆச்சர்யம்.
நேர்முக தேர்விற்கு தயாராகும் போது கம்பனி பற்றி தேடியறிய வேண்டி இருந்தது. அதனை "டெஸ்க் ரிசேச்" என்று அழைப்பர். அந்நேரத்தில் கம்பனி சார்மன் சாருணி என்று கம்பனி இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மிஸ் என்று குறிப்பிட்டிருந்ததை வாசிக்க தவறிய அஸ்வின் சாருணி என்பவர் ஒரு வயதான பெண்மணி என்றே நினைத்திருந்தான். ஆனால் ஒரு இளம்பெண்ணே அந்த பெயருக்கு உரியவள் என்று அறிய நேர்ந்த போது அவனிடத்து பெருத்த ஆச்சர்யம். ஒரு சிறு பெண் இப் பெரும் தொழில் சாம்ராச்சியத்தை திறம்பட நடத்துவது பாராட்டப்படக்கூடிய விஷயமே. இதனை இயக்கும் அவளது ஆளுமையும் அறிவும் வியக்கத்தகு விடயமே. இவை அனைத்தும் அஸ்வினை அவளது அன்பிற்குறிய விசிறி ஆக்கியது. ஆனால் அஸ்வின் மதி மயங்கி நின்றது சாருணியின் கூர் பார்வையை கொண்ட விழிகளை தாங்கி நின்ற குழந்தைத்தன்மை நீங்கிய அந்த அழகிய வதனம்.
இவ்வாறு அவனது மனம் தடம்புரண்டு வேறு பாதையில் செல்ல மனதை கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக தன் நண்பனுக்கு அழைத்தான் அஸ்வின்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top