ப்ரியசகியே 9

Preetz

Well-Known Member
#1
சகி-9
சுந்தரியும் மாதுவும் அந்த ஒரு நாளிலேயே இன்னும் நெருங்கிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
என்ன பேசினார்கள் ஏது பேசினார்கள் என்று கேட்டால் சத்தியமாக அவர்களுக்கு தெரியாது.
அவள் ஜாமுன், ஜாமுன் என்று கெஞ்சியதும், அவரோ வேண்டுமென்றே அவளிடம் முறுக்கிக்கொண்டதும், அவளது கிண்டல் கேலிகளும் அதற்கு அவர் விழுந்து விழுந்து சிரித்ததும், எல்லாமே அவளுக்கு புதிது. இப்படி கிண்டலடிப்பது, அவரிடம் ஒரு ஜாமுனுக்காக கெஞ்சியது எல்லாமே. அவள் நினைத்தால் வாங்க முடியாததா இல்லையே, ஆனாலும் அவளுக்கு என்னவோ அவர் தந்த அந்த ஜாமுன் தான் மிகவும் தித்திப்பாக தெரிந்தது.
அவள் யாரிடமும் இதுவரை இப்படி கெஞ்சியதில்லை, ஆனால் அவர் முறுக்கிக்கொள்ளும் போது அவரிடம் கொஞ்சி கெஞ்சுவதுக்கூட சந்தோஷத்தை தந்தது.
மதிய உணவை முடித்துக்கொண்டு அவரிடம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.அவரும் அவளது பாஸ் அவளை திட்டிவிட கூடாதென்று தலையாட்டிவிட்டார்.ஆம் அவருக்கு அவளது பெயரைத்தவிர வேறெதுவும் தெரியாது. மாதுவின் காரும் அவ்வளவு விலை உயர்ந்ததல்ல ஏனோ அவள் இதுவரை ஆடம்பரத்துக்காக எதையும் வாங்கியதில்லை. ஆடம்பரத்தைவிட சவுகர்யமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடிய ஆள் அதனால்தானோ என்னவோ அவருக்கு அப்படி யோசிக்க தோன்றவில்லை.
அவர் அவளுக்காக அவளிடம் பழகினார், அவருக்கு அவளை அவள் குணத்திற்காக பிடித்தது பணத்திற்காக அல்ல.
அவரிடம் கையசைத்துவிட்டு கிளம்பியவளுக்கு என்னவோ போலிருந்தது.
ஏதோ ஒரு முக்கியமான ஒன்றை மறந்துவிட்டதுபோல், ஏனோ அவளுக்கு அந்த இடத்திற்கு போக வேண்டும்போல் ஒரு உணர்வு. வண்டியை திருப்பிவிட்டாள்.
அதே இடம், அதே குளம், அன்று போல் இன்றும் அந்த பறவைகளின் சத்தம், ஆனால் அவன் மட்டுமில்லை என்று நினைத்துக்கொண்டே திரும்பியவளுக்கு தூரத்தில் யாரோ ஒருவன் உட்கார்ந்திருப்பது தெரிந்தது, அவன் குளத்தை வெறித்துக்கொண்டிருந்தான். தூரத்தில் இருந்ததாலோ என்னவோ இவளுக்கு சரியாக முகம் தெரியவில்லை.
ஆனால் என்னவோ, அவள் இதயம் மட்டும் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது.
ஏதோ ஒரு உந்துதலில் கூப்பிட்டுவிட்டாள்.
ஆனால் அவன் திரும்பிய மறுநொடி அவள் இதயம் ஒரு நொடி நின்றுத்தான் விட்டது.
கடந்த ஆறு வருடத்தில் எத்தனை முறை இங்கு வந்திருக்கிறாள்.ஆனால் இன்று பார்த்துவிட்டாள். பெயர்கூட தெரிந்துவிட்டது, இதையெல்லாத்தையும்விட முக்கியமான ஒன்று இனி அவனை தினமும் பார்க்கப்போகிறாள்…..
ஏனோ இதையெல்லாம் நினைத்துப்பார்த்தவளுக்கு நிம்மதியான தூக்கமும் அழகான கனவுகளும் வந்தது.
பத்தொன்பது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டு இத்தனை வருடத்தில் பல மடங்கு லாபத்தை உயர்த்தியிருக்கும் மாதுரியும் இன்று சுந்தரியிடம் விளையாடிய மாதுரியும் ஒன்றுதான்.
மற்றவர்களிடம் பொறுப்பாக நடப்பவள் அவரிடம் சிறுபிள்ளையாகிவிட துடித்தாள்…


மறுநாள்

மற்றநாட்களைவிட சற்று சீக்கிரமாகவே கிளம்பிவிட்ட மாதுரியை சாப்பிட வைத்து அனுப்புவது வள்ளியம்மாவுக்கு பெரிய வேலையாகத்தான் இருந்தது.பின்னே வைத்த இரண்டு இட்லியிலும் பாதியை விழுங்கிவிட்டு எழ பார்த்தவளை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
அவள் இருந்த மன நிலையில் சாப்பாடெல்லாம் அவள் கண்ணுக்கு தெரியவேயில்லை.
அவளது மனம்தான்
‘ஊ லலலா’ பாடிக்கொண்டிருந்ததே….
 

Saroja

Well-Known Member
#2
கதை நல்லா இருக்கு
ஆனால் சின்ன சின்னதாய் போடுறீங்க
கிருஷ்ணா மாதுரி கம்பெனிக்கு
வேலை செய்ய போகிறான்
 

Preetz

Well-Known Member
#7
கதை நல்லா இருக்கு
ஆனால் சின்ன சின்னதாய் போடுறீங்க
கிருஷ்ணா மாதுரி கம்பெனிக்கு
வேலை செய்ய போகிறான்
Thank you!!! Inimel perusa poda try panren...
 

Latest profile posts

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தான
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் ன்னும் வேண்டும் என்று
ராதை மனம் எனைத் தேட
ஒரு நாளில் பல காலங்கள்
நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு இதழ் ஊற்றிக்கொடு
கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க
மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண

வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து அழுகும்
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா
கவிதைக்குப் பொய்யழகு போல்
கதைக்கு கற்பனையழகு
வாய்மைக்குப் பொய் சொல்லாதிருப்பதேயழகு
சொர்ணாவுக்கு சஸ்பென்ஸ் வைப்பதேயழகு
நோ உருட்டுக்கட்டை பீளீஸ்...

Sponsored