ப்ரியசகியே 9

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
சகி-9




சுந்தரியும் மாதுவும் அந்த ஒரு நாளிலேயே இன்னும் நெருங்கிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
என்ன பேசினார்கள் ஏது பேசினார்கள் என்று கேட்டால் சத்தியமாக அவர்களுக்கு தெரியாது.
அவள் ஜாமுன், ஜாமுன் என்று கெஞ்சியதும், அவரோ வேண்டுமென்றே அவளிடம் முறுக்கிக்கொண்டதும், அவளது கிண்டல் கேலிகளும் அதற்கு அவர் விழுந்து விழுந்து சிரித்ததும், எல்லாமே அவளுக்கு புதிது. இப்படி கிண்டலடிப்பது, அவரிடம் ஒரு ஜாமுனுக்காக கெஞ்சியது எல்லாமே. அவள் நினைத்தால் வாங்க முடியாததா இல்லையே, ஆனாலும் அவளுக்கு என்னவோ அவர் தந்த அந்த ஜாமுன் தான் மிகவும் தித்திப்பாக தெரிந்தது.
அவள் யாரிடமும் இதுவரை இப்படி கெஞ்சியதில்லை, ஆனால் அவர் முறுக்கிக்கொள்ளும் போது அவரிடம் கொஞ்சி கெஞ்சுவதுக்கூட சந்தோஷத்தை தந்தது.
மதிய உணவை முடித்துக்கொண்டு அவரிடம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.அவரும் அவளது பாஸ் அவளை திட்டிவிட கூடாதென்று தலையாட்டிவிட்டார்.ஆம் அவருக்கு அவளது பெயரைத்தவிர வேறெதுவும் தெரியாது. மாதுவின் காரும் அவ்வளவு விலை உயர்ந்ததல்ல ஏனோ அவள் இதுவரை ஆடம்பரத்துக்காக எதையும் வாங்கியதில்லை. ஆடம்பரத்தைவிட சவுகர்யமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடிய ஆள் அதனால்தானோ என்னவோ அவருக்கு அப்படி யோசிக்க தோன்றவில்லை.
அவர் அவளுக்காக அவளிடம் பழகினார், அவருக்கு அவளை அவள் குணத்திற்காக பிடித்தது பணத்திற்காக அல்ல.
அவரிடம் கையசைத்துவிட்டு கிளம்பியவளுக்கு என்னவோ போலிருந்தது.
ஏதோ ஒரு முக்கியமான ஒன்றை மறந்துவிட்டதுபோல், ஏனோ அவளுக்கு அந்த இடத்திற்கு போக வேண்டும்போல் ஒரு உணர்வு. வண்டியை திருப்பிவிட்டாள்.
அதே இடம், அதே குளம், அன்று போல் இன்றும் அந்த பறவைகளின் சத்தம், ஆனால் அவன் மட்டுமில்லை என்று நினைத்துக்கொண்டே திரும்பியவளுக்கு தூரத்தில் யாரோ ஒருவன் உட்கார்ந்திருப்பது தெரிந்தது, அவன் குளத்தை வெறித்துக்கொண்டிருந்தான். தூரத்தில் இருந்ததாலோ என்னவோ இவளுக்கு சரியாக முகம் தெரியவில்லை.
ஆனால் என்னவோ, அவள் இதயம் மட்டும் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது.
ஏதோ ஒரு உந்துதலில் கூப்பிட்டுவிட்டாள்.
ஆனால் அவன் திரும்பிய மறுநொடி அவள் இதயம் ஒரு நொடி நின்றுத்தான் விட்டது.
கடந்த ஆறு வருடத்தில் எத்தனை முறை இங்கு வந்திருக்கிறாள்.ஆனால் இன்று பார்த்துவிட்டாள். பெயர்கூட தெரிந்துவிட்டது, இதையெல்லாத்தையும்விட முக்கியமான ஒன்று இனி அவனை தினமும் பார்க்கப்போகிறாள்…..
ஏனோ இதையெல்லாம் நினைத்துப்பார்த்தவளுக்கு நிம்மதியான தூக்கமும் அழகான கனவுகளும் வந்தது.
பத்தொன்பது வயதில் பொறுப்பேற்றுக்கொண்டு இத்தனை வருடத்தில் பல மடங்கு லாபத்தை உயர்த்தியிருக்கும் மாதுரியும் இன்று சுந்தரியிடம் விளையாடிய மாதுரியும் ஒன்றுதான்.
மற்றவர்களிடம் பொறுப்பாக நடப்பவள் அவரிடம் சிறுபிள்ளையாகிவிட துடித்தாள்…


மறுநாள்

மற்றநாட்களைவிட சற்று சீக்கிரமாகவே கிளம்பிவிட்ட மாதுரியை சாப்பிட வைத்து அனுப்புவது வள்ளியம்மாவுக்கு பெரிய வேலையாகத்தான் இருந்தது.பின்னே வைத்த இரண்டு இட்லியிலும் பாதியை விழுங்கிவிட்டு எழ பார்த்தவளை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
அவள் இருந்த மன நிலையில் சாப்பாடெல்லாம் அவள் கண்ணுக்கு தெரியவேயில்லை.
அவளது மனம்தான்
‘ஊ லலலா’ பாடிக்கொண்டிருந்ததே….
 

Preetz

Writers Team
Tamil Novel Writer
கதை நல்லா இருக்கு
ஆனால் சின்ன சின்னதாய் போடுறீங்க
கிருஷ்ணா மாதுரி கம்பெனிக்கு
வேலை செய்ய போகிறான்
Thank you!!! Inimel perusa poda try panren...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top