பெண்ணியம் பற்றி ஒரு வினா???

Advertisement

Joher

Well-Known Member
நம்மோட வளர்ப்பில் பெண்ணுக்கு தான் அதிக பொறுப்பு especially வீடு குழந்தைகள்......
அப்பா இல்லாத குழந்தைகளை விட அம்மா இல்லாத குழந்தைகள் தான் ரொம்ப miss பண்ணும்......
குழந்தைகளுக்கு யார் சொல்லிக்கொடுத்தாங்க அம்மா தான் முக்கியம்னு......
பசிக்கிறதென்றாலும் அம்மாவை தேடித்தான் வரும்......

நம்மோடது வெறும் தேவை சார்ந்த உறவில்லை......
மனம் சம்பந்தப்பட்டது......
ஆணோ பெண்ணோ மனசார வாழ்ந்தால் தான் வெற்றி.......

இதில் நான் நீ போட்டி தேவையில்லை......
ஒரு பொண்ணா வீட்டில் இளவரசி மாதிரி இருந்தாலும் புகுந்த வீட்டில் எத்தனை பேர் கணவனால் மாமியாரால் அடிமை ஆக்கப்படுறாங்க......

அந்த மாமியாரும் ஒரு பெண் தான்......
தனக்கு இருக்கும் சுதந்திரம் மருமகளுக்கு ஏன் இருக்கக்கூடாது......

So பெண்களுக்கே இங்கே சமஉரிமை இல்லை......
இதில் ஆணுக்கு பெண் நிகர்????
நிகராகலாம்...... படிப்பில் பேச்சில் வேலையில் (both house and profession) ஆளுமையில்......

But ஆண் மாதிரி dress activities பண்ணி ஆணுக்கும் பெண்ணுக்கும் சமஉரிமை சொல்றது என்ன உரிமைன்னு தெரியல.......

வீட்டுக்கு வெளியே விடாமல் வளர்க்கப்பட்டாலும் படிக்க பேச சொத்து என்று எல்லாவற்றிலும் ஆண் பெண் பேதமில்லாமல் கொடுக்கப்பட்டது......
சுதந்திரமாக இருந்தோம் எல்லைக்குள்.....
மீறும் போது எல்லைகள் சிறைகளாகும்......

So இது அவரவர் வாழ்க்கை முறை பொறுத்து மாறலாம்......
வீட்டில் எப்படியோ வெளியே இடம் பொருள் ஏவல் அவசியம்......

பெண்ணியம் நம் கையில் தான்......
சமூகத்தில் அதை எதிர்பார்ப்பதை விட அதை கொடுக்கும் வைகையில் நாம் இருந்தாலே போதும்......

கட்டுக்குள் இருக்கும் சுதந்திரம் நல்லது தான்........
கட்டுப்பாடற்ற சுதந்திரம் தான் இப்போ பெண்ணியமோ????
Because it is also having ism.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top