பெண்ணியம் பற்றி ஒரு வினா???

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#1
வணக்கம் நட்புக்களே....
ஒரு விளக்கம் கேட்கவே இந்த போஸ்ட்....
கடந்த சில நாட்களாக ஒரு கேள்வி என்னிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது... அது பற்றி பல விளக்கங்களை தேடிய பொழுதும் அது என் குழப்பத்தை தீர்க்காமல் இன்னும் சில முரணான கருத்துக்களை கேள்வியாக என் முன்னால் எழுந்து நிற்குது....
அது என்ன கேள்வினா பெண்ணியம் என்றால் என்ன??? பெண் சுதந்திரம் என்றால் என்ன??? இந்த வார்த்தைகளூடாக எதை விளக்க முற்படுகிறார்கள்???
இது தான் என்னோட கேள்வி....
பல கட்டுரைகள் விளக்கங்களை வாசிச்சப்போ ஆண்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கு வழங்கப்படுவது என்ற மையப்பொருள் தான் எல்லா கட்டுரைகளிலும் இருந்தது... ஆனா உரிமைகள் அப்படிங்கிற வார்த்தையில எவை உள்ளடங்குகிறது?? எல்லாம் அப்படினா பிள்ளைகளின் பெயரின் surname இல் அப்பா பெயரை மட்டும் போடாமல் அம்மா பெயரையும் சேர்த்து போடலாமே..... பிள்ளையை பத்து மாதம் சுமப்பவளுக்கு அந்த உரிமையை கொடுப்பதில் என்ன தவறு???
இப்படி சில முரணான கருத்துக்கள் என் மனதில் எழுந்து குழப்பத்தை கிளப்பியுள்ளது.....
ஆண்கள் செய்யும் அனைத்தையும் செய்வது என்ற கருத்தும் இப்போது சமூகத்தில் நிலவி வருகின்றது.... அந்த கருத்து வேலை, சமூகப்பங்கெடுப்பு ஆகிய நிலைகளில் இருந்து பார்க்கும் போது சிறப்பானதாக தோன்றினாலும் சில கேளிக்கைகள், கொண்டாட்டங்களில் சம உரிமை பற்றி எடுத்துரைப்பது சரியா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.....
ஆண்கள் செய்யும் அனைத்தையும் பெண்களால் செய்யமுடியாது... பெண்களால் செய்ய முடிந்த அனைத்தையும் ஆண்களால் செய்ய முடியாது... முடியாது என்று கூறுவதை விட செய்தால் சமூகம் சீரழிவுகள் மற்றும் குழப்பநிலைகள் உண்டாவது நிச்சயம்..... இப்படி சம உரிமை என்ற வார்த்தை பல முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது... என்னுடைய கேள்வி என்னவென்றால் சம உரிமையில் எந்தெந்த உரிமைகள் அடக்கம்??? அதனை எவ்வாறு அறிவது என்பதே.....

இது என்னுள் எழுந்த சந்தேகமே ஒழிய வேறு எந்த எண்ணமும் இல்லை... .எதை செய்யும் முன்னும் ஏன் செய்கிறோம் என்று ஆராய்ந்து அதற்கான விளக்கத்தை அறிந்து கொள்ளும் பழக்கம் என்னிடம் உண்டு... சமூகத்தில் நிலவும் சில கருத்துகளுக்கு சரியான விளக்கங்கள் கிடைக்காதலால் அதை நான் ஆதரிக்காத சந்தர்ப்பங்களும் உண்டு.... இதுவும் அது போன்ற ஒன்றே... நானும் பெண் என்பதால் சில கட்டுப்பாடுகளுடனேயே வளர்க்கப்பட்டேன்... ஆனால் சமூகத்தில் பிறர் நடந்துகொள்வதை பார்க்கும் போது நமது எண்ணங்கள் சரிதானா என்ற எண்ணமே தோன்றுகிறது..... அதற்காகவே இந்த கேள்வி.... இது என் சந்தேகம் என்பதை மீண்டும் கூறிக்கொள்கின்றேன்.....

உங்கள் பதில்கள் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் என்று நம்புகின்றேன்...
 
Last edited:

Gomathianand

Well-Known Member
#2
Ungalukku maattum Alla palarukkum intha kulappam undu....
Ennai poruthavarai pennurimai enbathu verum initial poduvathal kidaipathu Alla..
Oru pennuku thannudaya padippu,velai,thirumanam pondra seyalkalil indrum viruppangal mathikkapaduvathillai antha nilai maaravendum....
Aankal seyyum anaithaiyum pengalum pengal seyyum anaithaiyum aankalum seiya aarambithal samugam romba abathamaai maari vidum....aankal pol pengalum cigarette,liquor pondra palakkangalai seithaal penniyam agi viduma....
Intha manitha padaippil aanin udalukkum pennin udalukkum verupaattinai vaitha kaaranamum ithuve... oru aan avanudaya kudambathukkaga ulaikum valu ullavan
Penkal athai veithu kudambathai thanathu thiramayal nadatha koodiyaval..
Ithu ennudaya thanipatta karuthu..
Enakkum penniyam pattri sila kulappangal ullana...
 
#3
பெண் சுதந்திரம் என்பது பெண்களுக்கு பிறர் கொடுப்பதில்லை. அவர்களிடமே இருக்கிறது. எந்த நல்ல விசயத்தையும் அவர்களும் முடிவு செய்யும் உரிமை . அவர்களின் முடிவை தீர்மானிக்க தைரியமாக முன்வர வேண்டும்.
 
malar02

Well-Known Member
#4
அப்போ ஆண்ணியம் ஆண் சுதந்திரம் ஆண் உரிமை பற்றிய கட்டமைப்பு பற்றிய சந்தேகம் நிவர்தியாகிவிடாதா ???
அதை பற்றி கொஞ்சம் விளக்குங்கள் ........பீளீஸ் .............
இங்கு ஒரு விளக்கம் மட்டும் கொடுக்கிறேன் எந்த மிருககுழந்தைகளும் பிறந்தவுடனோ பிறகும் அப்பாமிருகத்தை தேடுவதில்லை என்றால் தேவையில்லை
ஆனால் மனிதனுக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டதால் அதை மேன்படுத்த
இங்கு மனிதக்குழந்தைகளுக்கு தந்தை என்பது இனம் காட்டபட்டிருக்க வேண்டும் அதுவே மார்ஜின் ...............நீங்கள் சொல்லும் இன்ஷியல்
அந்த குழந்தையின் அனைத்து தொடர்களுக்கும்
பேப்பர் என்னவோ பெண
இதில் மார்ஜின் போடுவது போடாது அவங்க அவங்க இஷ்டம் கஷ்டம்
மார்ஜின் போட்ட தொடர் மதிப்பெண் பெறுகிறது
அவ்வ்ளவுதான் மதிப்பெண்தான் முக்கியம் எப்பவும் நமக்கு
ஐந்தறிவுகள் எல்லாமும் பிழைத்த கொள்ளும் ஆறறிவு ஜீவராசிகள் மட்டும் பிழைக்க தெரியாதவை
எனக்கு இவ்வளவுதாங்க தோன்றியது ஏன்னென்றால் ஆணையம் என்பது எதுவரை தெரிந்தால் பெண்ணியத்தை வரையறுக்கலாம்
 
Eswari kasi

Well-Known Member
#5
ஆண்ணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கத்தை மீறாமல் அவங்க உரிமைக்காக தைரியமாக எதுவும் பேசலாம் செய்யலாம்

ஆண் பெண் படைப்பில் உடல் மட்டும் வேறுபாடு இல்ல மனதளவிலும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

ஆண் என்பவன் வேறு பெண் என்பவள் வேறு என்றைக்கு இரண்டு பேரும் ஒன்றாக முடியாது.

ஆணும் பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் எப்படி அடிமைப்படுத்தலாம் அப்படிங்கற நிலையில் தான் நம் சமூகம் உள்ளது,

அவங்க அவங்க ஒழுக்கம் கடைமை இதில் சரிவர இருந்தாலே சமூகம் நன்றாக இருக்கும் என்பது என் தனிபட்ட கருத்து.
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#6
பெண்ணியம் - நிறைய பேர் இதுக்கான அர்த்தத்தை தவறாதான் புரிஞ்சிட்டு பேசுறாங்கன்னு எனக்கு எப்பவுமே தோணும்..

பெண் உரிமை.. பெண் சுதந்திரம்.. அது இதுன்னு... ஹா ஹா நம்ம உரிமை நம்மக்கிட்ட தான் இருக்கு.. நம்ம சுதந்திரம் நம்மக்கிட்ட தான் இருக்கு..

ஆனா அந்த உரிமையும், சுதந்திரமும் எப்போ எப்படி எந்த வகையில நம்ம கையாள்றோம்னு தான் இருக்கு..

எனக்கு முழு சுதந்திரம் இருக்குனு நம்ம எப்படிவேணா இருக்கலாம்னு இல்லை.. இப்படிதான் இருக்கணும்னு ஒரு வரைமுறை இருந்தா தான் ஆண் ஆகினும் சரி பெண்ணாகினும் சரி அவங்களோட வாழ்க்கை சிறக்கும்..

அதேபோல எனக்கு உரிமை இருக்குன்னு எதுவும் பேசலாம் செய்யலாம்னு இல்லை.. மொத்ததுல நம்ம நடந்துக்கிற விதம் தான் நமக்கு மரியாதை தேடி கொடுக்கணுமே தவிர, உரிமைகளோ, சுதந்திரமோ தேடிக் கொடுக்காது..
 
Lakshmimurugan

Well-Known Member
#7

சூப்பர் சிஸ் நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களும் சரி,இப்போது உள்ள பெண்கள் இதை புரிந்து கொள்ளாமல் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்கிறார்கள்.
 
Sainandhu

Well-Known Member
#8
அப்போ ஆண்ணியம் ஆண் சுதந்திரம் ஆண் உரிமை பற்றிய கட்டமைப்பு பற்றிய சந்தேகம் நிவர்தியாகிவிடாதா ???
அதை பற்றி கொஞ்சம் விளக்குங்கள் ........பீளீஸ் .............
இங்கு ஒரு விளக்கம் மட்டும் கொடுக்கிறேன் எந்த மிருககுழந்தைகளும் பிறந்தவுடனோ பிறகும் அப்பாமிருகத்தை தேடுவதில்லை என்றால் தேவையில்லை
ஆனால் மனிதனுக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டதால் அதை மேன்படுத்த
இங்கு மனிதக்குழந்தைகளுக்கு தந்தை என்பது இனம் காட்டபட்டிருக்க வேண்டும் அதுவே மார்ஜின் ...............நீங்கள் சொல்லும் இன்ஷியல்
அந்த குழந்தையின் அனைத்து தொடர்களுக்கும்
பேப்பர் என்னவோ பெண
இதில் மார்ஜின் போடுவது போடாது அவங்க அவங்க இஷ்டம் கஷ்டம்
மார்ஜின் போட்ட தொடர் மதிப்பெண் பெறுகிறது
அவ்வ்ளவுதான் மதிப்பெண்தான் முக்கியம் எப்பவும் நமக்கு
ஐந்தறிவுகள் எல்லாமும் பிழைத்த கொள்ளும் ஆறறிவு ஜீவராசிகள் மட்டும் பிழைக்க தெரியாதவை
எனக்கு இவ்வளவுதாங்க தோன்றியது ஏன்னென்றால் ஆணையம் என்பது எதுவரை தெரிந்தால் பெண்ணியத்தை வரையறுக்கலாம்
இனிஷியலுக்கு அருமையான ,அர்த்தம் பொருந்திய விளக்கம்,....(y)
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#9
சூப்பர் சிஸ் நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களும் சரி,இப்போது உள்ள பெண்கள் இதை புரிந்து கொள்ளாமல் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்கிறார்கள்.
ஏட்டிக்குப் போட்டித்தான்.. ஆண்கள் உடைகள் நாங்களும் போடுவோம்.. அவங்க சிகரட் பிடிக்கிறாங்க நாங்களும் பிடிப்போம்.. இப்படி இன்னமும் சில.. முதல்ல சிகரட் பிடிக்கிறது நல்ல விசயமா என்ன???!!!

சரியான விசயங்களுக்கு உரிமை குரல் கொடுக்கிறது வேற.. அடிப்படையே தப்பா இருக்கிற விசயங்களுக்கு உரிமைக் குரல் கொடுக்கிறதும், சுதந்திரம் வேணும்னு சொல்றதும், நம்ம காலுக்கு கீழ நம்மலே குழி பறிக்கிறது போல..

எல்லாமே மாறும்.. மாறணும்னு எல்லாரும் நினைக்கிறோம்.. சரிதான்.. ஆனா எதோ ஒருவகையில் மாற்றம் அப்படிங்கிறது முன்ன இருந்த அந்த ஆதி புள்ளி நோக்கித்தான் நம்மை நகர்த்திக்கொண்டு போகுது..

எனக்கு எப்பவும் பெண்ணியம் அப்படிங்கற கான்சப்ட்ல உடன்பாடே இல்லை.. நம்ம என்னவா இருக்கோம்.. எப்படி இருக்கோம்.. நம்ம செயல்கள் என்ன?? இது தான் நமக்கான அடையாளமே தவிர ஆண் செய்ற அத்தனையும் பெண்ணும் செய்றதுதான் பெண்ணியம் இல்லை.. போன வாரம் ஒரு மீம்ஸ் பார்த்தேன் புது திருமண தம்பதிகள், பெண் மணமகனுக்கு தாலி கட்றது போல.. நார்த் இந்தியால நடந்திருக்கு..

ஹா ஹா பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது..

தாலி மாற்றிக் கட்டிட்டா எல்லாம் மாறிடுமா என்ன?? வெறும் attention seeking இதெல்லாம்..
 
#10
எனக்கு தெரிந்த ஒருவர் மத்திய அரசு ஊழியர்,அவருக்கு மனைவி இல்லை இரு பெண் குழந்தைகள்,அரசு பெண்ஊழியர்களுக்கு ஒரு சலுகை உண்டு குழந்தைகள் படிப்பிற்காக லீவு எடுக்கலாம் என்று,அவரின் பெரிய பெண் இந்த வருடம் +2 அவர் மனைவி இல்லை நான் தான் என் பெண்ணின் படிப்பை கவனித்து கொள்ள வேண்டும் என்று காரணத்தை கூறி லீவு வேண்டி விண்ணப்பித்தார் அவரின் விண்ணப்பத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை பெண்களுக்கு மட்டுமே இந்த சலுகை என்று கூறி விட்டது, ஏன் இந்த முரண்பாடான சட்டம் ஆண் என்பதால் தானே அவரின் விண்ணப்பம் நிராகரிக்கபட்டது.
 
Advertisement

New Episodes