புரியாத பிரச்சனையே

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"பாமரன் முதல்
பணம் படைத்தவன் வரை அனைவரையும்
பாரபட்சமின்றி பாடாய் படுத்தும் பிரச்சனையே
உன் பண்பு எது என அறிய விளைகிறேன் நானே"


"தினம் ஒரு ரூபத்தில்
உன் தரிசனம் கண்டேன்
உன்னை சமாளித்திட தான்
சாமியை துணைக்கு அழைத்தேன்"


"அழையா விருந்தாளியாய்
அன்றாடம் உன் வரவு
அதனால் தினமும் திண்டாடுகிறது என் பிழைப்பு"


"இருப்பினும் நீ அவசியம் தான்
இடர் வரும் காலத்தில்
இடையிலேயே விட்டு செல்பவர்
எவர் என அறிந்திட""வீதி தோறும் நீ விரிந்து இருக்கிறாய்
உன் சிறகுகளை கொண்டு
உன்னில் சிக்கி தவிக்கிறோம்
நாங்கள் எல்லாம் உன் சிறையில் நின்று"


"உண்மை உன்னால் தான் வெளி வருகிறது
உறக்கமும் உன்னால் தான் தொலைகிறது"


"கடலாய் நீ விரிந்து இருக்கிறாய்
கட்டுமரமாய் நாங்கள் இருக்கிறோம்
புயல் காற்றில் போராடி
சுனாமியால் சூறையாடபடாமல்
சுறாக்களுக்கு இறையாகமல்
கலங்கரை விளக்கம் கொண்ட கரை அது கண்டிடத்தான்
காலந்தோறும் கத்தி ஏந்தி யுத்தமிடுகிறோம் உன்னோடு"


"கரை சேரும் போது
கடந்து வந்த பாதையில்
கற்று தந்திருந்தாய் நீ எனக்கு கடலளவு
உண்மை அன்பு வைத்து
உடன் இருப்பவர்கள் யார்?
உறவாடி கெடுத்து
நம்மை சூறையாடுபவர்கள் யார்? என்று"


"பணத்தால் வரும் சந்தோஷம் பாதியில் செல்லும் என
அன்பு மனத்தால் வரும் சந்தோஷம் தான் ஆயுள் முழுதும் வரும் என
என் புத்திக்கு எட்டும் படி
உன் புதிர்களினால் புரிய வைத்தாய்"


"போராடும் குணம் அது கற்று தந்தாய்
புது வாழ்வின் வாசல் அதில் வண்ண கோலமிட்டாய்"


"வார்த்தைகளில் வடிக்க முடியவில்லை
உன் வர்ணஜாலத்தை"


"புதிதாக புதிர் தரும்
என் புரியாத பிரச்சனையே
நீ என் நல்வாழ்விற்கு அடித்தளமா
இல்லை அநியாயம் பண்ணும் அதிகாரமா
விடை இன்றி நிற்கிறேன்
விடியலை நோக்கி"
 
Advertisement

New Episodes