பிரிவு : அறத்துப்பால், இயல் : இல்லறவியல், அதிகாரம் : 20. பயனில சொல்லாமை, குறள் எண்: 192 & 196.

Sasideera

Well-Known Member
#1
குறள் 192:- பயன்இல பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலின் தீது.

பொருள் :-பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லாத செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
 

Sasideera

Well-Known Member
#2
குறள் 196:-பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்.

பொருள் :- பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்றே சொல்ல வேண்டும்.
 

Sasideera

Well-Known Member
#3
அதிகார விளக்கம் :-

பயனில சொல்லாமையாவது வீண்வார்த்தைகளைப் பேசாமலிருப்பது. இது பொதுவாக யாவரிடத்திலும் எந்தச் சூழலிலும் பயனற்ற பேச்சுகளைப் உரைக்காமல் இருப்பதைக் குறிக்கும். பயனில்சொல்வான் சீரும் சிறப்பும் இழப்பான் என்று சொல்லப்பட்டு, அவன் நயனிலன் என்றும் மனிதப்பதர் என்றும் இவ்வதிகாரத்தில் இகழப்படுகிறான். சான்றோர், அறிவினார், மாசறு காட்சியவர் போன்றோர் பயனில சொல்லமாட்டார்கள் என இங்கு கூறப்படுகிறது. இயல்பான வாழ்க்கையில் எல்லாமே கருத்தாழம் மிக்க பேச்சுக்களாக இருக்க முடியாது. அதில் அறியாமையுடன் கூடிய மகிழ்ச்சிச் சொற்களுக்கும் இடம் உண்டு. எனவேதான் பயனில சொல்லாமையை மிகப்பெரிய கொடிய குற்றமாகக் கருதாமல் இத்தொகுப்பில் வள்ளுவர் அறிவுரை வழங்கியுள்ளார் போல் தெரிகிறது. பல்லார்முன், பல்லாரகத்து என்ற தொடர்கள் வருவதால், பலபேர் கூடியுள்ள இடத்தில் வெற்றுரைகள் கூறவேண்டாம் என்பது வலியுறுத்தப்படுகிறது.
 

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes