நேசம் மறவா நெஞ்சம்-28Nesam Marava Nenjam

Advertisement

muthu pandi

Well-Known Member
படம் முடியவும்..... வெளியே வந்தவர்கள் ஒரு ஹோட்டலில் போய் சாப்பிட மணி ஒன்பது ஆயிற்று.....



“என்னங்க.... பெரிய மழையா பெஞ்சிருக்குமோ...... எங்க பாத்தாலும் ஒரே தண்ணியா தெரியுது......நம்ம ஊர்லயும் மழை பெஞ்சிருக்கும் தானே......”



“ம்ம்ம்... அப்புடித்தான் நினைக்கிறேன்.....”



“என்னைய நீங்க கடைக்கு சாமான் வாங்கதானே கூட்டிட்டு போறேன் அத்தைக்கிட்ட சொன்னிங்க.....இப்ப அத்தே சாமான் எங்கன்னு கேட்ட என்ன சொல்லுவிங்க....”.





“அதெல்லாம் ராமன்கிட்ட எடுத்துட்டு போக சொல்லி போன்ல சொல்லிட்டேன்.... நீ கவலை படாம வா...”. என்றபடி தன் தோளில் இருந்த கயலின் கையை எடுத்து அவளை முன்நோக்கி இழுத்தவாறு தன் வயிற்றில் வைத்தான்.....



மழை பெய்து ஆங்காங்கே தண்ணிர் கிடந்ததால் கண்ணன் மெதுவாகவே வண்டியை ஓட்டினான்.... கரண்ட் இல்லாமல் ஊரெங்கும் கரும்கும்மென்று இருட்டாக இருந்தது... கயலுக்கு பயமாக இருந்தாலும் கண்ணனின் துணையிருந்ததால் கண்ணனின் சட்டையை இருக்கமாக படித்தபடி அவன் முதுகில் முகம் புதைத்தாள்.....



அவள் கைமேல் தன் கையை வைத்தவன்.......”ஏய்... என்னடி ஆச்சு.... பயமாயிருக்கா...”



“ச்சே....ச்சே.... நீங்க இருக்கையில எனக்கு என்னங்க பயம்......”



“ஆமாமா... மச்சான் இருக்கையில உனக்கு என்ன பயம்......”



அவர்களுடைய ஊருக்கு வரும் வழியில் ஒரு சரிவு பாலம் இருக்கும்...மழை அதிகமாக பெய்யும் நேரங்களில் அதில் முழங்கால் அளவு தண்ணிர் செல்லும்... அந்த பாலம் வந்தவுடன் கண்ணனுக்கு எப்பொழுதைவிட அதில் தண்ணிர் அதிகமாக செல்வதை போல தெரியவும் தன் வண்டியின் வெளிச்சத்தில் அதில் ஒருவர் நடந்து வருவது தெரியவும் வண்டியை ஓரமாக நிறுத்தினான்.....





அங்கு வந்து கொண்டிருந்தவர் கண்ணனுக்கு நன்கு தெரிந்தவர்... நன்கு வசதியானவர்... இவர்களை பார்க்கவும் கண்ணனின் அருகில் வந்தவர்....” கண்ணா.... என்னப்பா ஊருக்கா...”



“ஆமாண்ணே... என்ன நடந்து வாரிங்க...”





“ஒண்ணுமில்லப்பா.... வண்டி பாலத்துக்கு அங்கிட்டு இருக்கு தண்ணி கொஞ்சம் அதிகமா வருது....அதான் எஞ்சின்குள்ள தண்ணி போனா வண்டி வீனா போயிரும்னு நிப்பாட்டிட்டு நடந்து வாரேன்.... என்னன்னு தெரியல தண்ணி அதிகமா வாரமாதிரி தெரியுது .... நீங்களும் வண்டியில போக வேண்டாம்பா... லேசா சாஞ்சாக்கூட தண்ணியோட இழுத்துக்கிட்டு போயிருவிக.....இங்கன நிப்பாட்டிட்டு நடந்து போங்க......”



“ம்ம்ம் சரிண்ணே.... நீங்க எம்புட்டு தூரம்ணே நடந்து போவிக.... என்னோட வண்டிய எடுத்துகிட்டு போங்க....நான் காலையில வாங்கிக்குறேன்....” என்றபடி தன் வண்டியை கொடுக்க......



“அப்ப இந்தாப்பா என்னோட வண்டி சாவி..... பாலத்தை தாண்டி அந்த ஆலமரத்துக்கு பின்னாடி நிப்பாட்டி வச்சிருக்கேன்..... எடுத்துட்டு போங்க.... காலையில வண்டிய மாத்திக்குவோம்.....”



“சரிண்ணே....” என்றபடி அவர் வண்டிசாவியை வாங்கிக் கொண்டான்...... அவர் தன் வண்டியை எடுத்துக் கொண்டு செல்லவும்.... கண்ணன் கயலின் கையை பிடித்தபடி அந்த பாலத்தை நோக்கிச் சென்றான்.....





கிரண்டைகால் தண்ணிர் அளவில் இறங்கியவர்கள் மெதுவாக அந்த தரைபாலத்தின் சரிவை நோக்கிச் செல்ல கண்மாய்களை மூடி பிளாட் போடவும் அங்கு செல்ல வேண்டிய தண்ணிர் அங்கு செல்லமுடியாமல் சரிவாக இருந்த அந்த பாலத்தை நோக்கி வேகமாக வந்து மற்றொரு கண்மாய்க்கு சென்று கொண்டிருந்தது...... கண்ணன் இதே ஊரில் பிறந்து வளர்ந்து இந்த பாதையிலேயே சென்று வந்தவன்... சிறுவயதில் இருந்து இதே பாதையில் நூறு முறை சென்று வந்திருப்பான்... தண்ணிர் முழங்காலுக்கு மேலாக போனதே இல்லை....





இருவரும் நடு பாலத்துக்கு வரவும் தண்ணிரின் வேகம் மிகவும் அதிகரித்து கண்ணனுக்கு இடுப்புக்கு மேலாக சடாரென உயர்ந்தது.... கயலின் கழுத்தை தாண்டி உயர்ந்து விட்டது.....கயலை பார்த்த கண்ணனுக்கு பயம் வந்த்து....மீண்டும் திரும்பி செல்லலாம் என்றால் பாலத்தின் நடுவில் நின்றார்கள்......அங்கிட்டும் போக முடியாமல் இங்கிட்டும் போகமுடியாமல் நின்றார்கள்..... ஊரெங்கும் ஒரே இருட்டு ஒரு ஆள்நடமாட்டம்கூட இல்லை....

.”.உனக்கு நீச்சல் தெரியுமா.....”



“தெரியாதுங்க......”தண்ணிர் அவளின் வாயருகே வந்தது.....கண்ணனுக்கு நீச்சல் தெரியும் ஆனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் அவனால் கயலை கையில் பிடித்தபடி நித்தயம் நீச்சலடிக்க முடியாது........



கண்ணனுக்கு மூளையே மறத்து விட்டது.... தன் காலை பலமாக ஊன்றியிருந்ததால் அவனால் நிற்கமுடிந்தது.... லேசாக காலை அசைத்தால்கூட இருவரும் தண்ணீர் வந்த வேகத்திற்கு தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டு ஏதாவது மரத்தில் மோதி உயிர் இழக்கத்தான் வாய்ப்பு அதிகம்.... மழையோடு மழையாக எல்லா பொருட்களும் அடித்து வரப்பட்டது.... பெரிய பெரிய மரக்கம்புகளும் இவர்களை மோதி சென்றது.......ஒரு தண்ணிர் பாம்புகூட நெளுநெளுவென்று கயலை தொட்டுச் சென்றது..... மற்ற நேரமாக இருந்தால் கயல் கத்தி ஊரையே கூட்டியிருப்பாள்.... இப்போது தன் உணர்வின்றி இருந்தாள்....அவளுக்கு தெரியும் கண்ணன் கைபிடியிலேயே தான் நிற்பது... ஏனென்றால் தண்ணீரின் வேகம் கயலின் காலை கீழே ஊன்ற முடியாமல் அதிக வேகமாக சென்றது...





தன் வாயை தாண்டி தண்ணிர் வரவும் லேசாக எக்கியவள்... கண்ணனின் கையை உதற ஆரம்பித்தாள்......” என்னோட கையை விடுங்கங்க.... உங்களுக்குத்தான் நீச்சல் தெரியும்ல.... நீங்க போங்க......”



கயலின் கையை விட மறுத்தவன்....” ஏய் என்னடி கிறுக்கு வேலை பாக்குற.... பேசாம இரு....”





“இல்லங்க நீங்க கைய விட்டுட்டு நீச்சலடிச்சு போயிருங்க...... என்னால உங்களுக்கு ஒன்னும் ஆகக்கூடாது....ப்ளிஸ் விடுங்க....” வேகவேகமாக கையை உதறினாள்... கயலுக்கு கண்ணனுக்கு எதுவும் ஆகக்கூடாது நமக்கு என்ன ஆனாலும் சரி அவரு அவுக குடும்பத்தோட சந்தோசமா இருக்கனும்..... என்னை காப்பாத்த போய் இவருக்கு எதுவும் ஆகக்கூடாது கடவுளே அவர காப்பாத்து..... என்று அவனுக்காக வேண்டிக்கொண்டே இருந்தாள்...... இப்போதுதான் தெரிந்தது தான் கண்ணன் மேல் கொண்டிருக்கும் அன்பு...... இவர் தன் அக்காவுக்கு பாத்த மாப்பிள்ளை என்பதெல்லாம் மறந்தது.... இவரு என்னோட உயிர்.... இவருக்கு எதுவுமே ஆகக்கூடாது..........என்று



கண்ணனுக்கு தெரியும்............ தான் கையை விட்டால் கயலை பிணமாகத்தான் கிடைப்பாள்.... என்று...........





இனி......................??????



தொடரும்.................
nice
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Rendu perum evlo santoshama erumdamga kayal unaku onnum agadu ayyanaar unnai unnai vidamatan, inda Sudha avanumga pechu ketutu Enna pannuvalo, nice epi mam thanks.
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சகோ.... இந்த கயல் அப்பவே சொன்னா ... போக வேணாமுன்னு...ம்ம் பாப்போம்..... இந்த சுதா வேற சும்மா இருக்கமாட்டேங்குறா....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super update Priya dear
Kayaluku kannanun meethana anbai unara vaika ippadi oru aabathu vanthirukirathu....
Rendu perayum safe ah kappathirunga dear
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி டியர்.... கயல் கண்ணனோட அன்பை இப்பதான் உணர ஆரம்பிச்சிருக்குறா.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இது என்ன கயல் கண்ணன்
இப்படி நடக்கிறது
இந்த சுதா புத்தி இல்லாமல் நடக்கிறா
வாசு கவனிக்கலயா
கோவிந்தனுக்கு உதவுவது
அருமையான பதிவு
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி சரோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top