நன்றி நவிலல்

E.Ruthra

Well-Known Member
#1
மக்களே இது தான் என்னோட முதல் கதை, இந்த மாதிரி கதை எழுத விருப்பம்னு சொன்ன உடனே திரேட் ஒப்பன் பண்ணி கொடுத்தாங்க மல்லி அக்கா, எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.

எழுத ஆரம்பிச்சதுக்கு அப்புறம் கூட நிறைய தயக்கம், என்னால எழுத முடியுமான்னு ஆயிரம் சந்தேகங்கள், 5 எபிக்கு அப்புறம் கூட நான் இதுக்கு எல்லாம் சரி பட்டு வர மாட்டேன், எழுத வேண்டாம்ணு நிறைய தடவை நினைச்சி இருக்கேன், ஆனா அதை எல்லாம் தாண்டி இந்த கதையை முடிக்க நீங்கள், நீங்கள் மட்டும் தான் முக்கியம் காரணம், உங்களோட கருத்துக்கள் தான் எனக்கு உத்வேகம். உங்களோட தொடர் ஊக்கம் தான் என்னை எழுதி முடிக்க வைத்தது. உங்கள் விரிவான கருத்துகள், கதையை பற்றிய விமர்சனங்கள், இப்படி இருக்குமோ என்ற விவாதங்கள், கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப நீங்க கொடுத்த பாடல்கள் எல்லாமே தான் இந்த கதையை முடிக்க காரணம். உங்க எல்லாருக்கும் நான் தனி தனியாக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கேன், ஆனால் யாரையாவது தவரவிட்டால் மனவருத்தம், அதனால் தான் பொதுவாக, பொதுவில் சொல்றேன், என்னோடு இந்த கதையில் பயணித்த என் எல்லா தோழமைகளுக்கும் என் நன்றி உரித்தாகுக......

அமைதியாக கதையை படிக்கும் மக்களும் கதையை பற்றிய தங்களின் கருத்துக்களை திருவாய் மலர்ந்தால் மகிழ்ச்சி....

நிறையோ, குறையோ தயங்காமல் உள்ளதை உள்ளபடி என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்,
நிறைகள் என்னை ஊக்குவிக்கும்,
குறைகள் என்னை செதுக்கும்

இப்பவும் எப்பவும் உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் நான் உங்கள் இ.ருத்ரா.....
 
#8
ரொம்பவே அருமையான நாவல் இந்த "ராதையின் கண்ணன் இவன்" ருத்ரா டியர்
முதல் கதை போலவேயில்லை
ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல மிகவும் அருமையாக இந்த அழகிய நாவலை எழுதியிருக்கீங்கப்பா
பொன்னிற மேனியன் ராகவ் கிருஷ்ணா, அவனுடைய கார்மேகம் ராதிகா, ராஜமாதா ராஜேஸ்வரி, தாத்தா தில்லை, பாட்டி சிவகாமி, லட்சுமணன் போல தம்பி சஞ்சீவ், தங்கள் கடமையிலிருந்து தவறிய பெற்றோர் சண்முகம், தெய்வானை ஆணவமும் அகம்பாவமும் பிடித்த ஸ்வேதா இவர்கள் எல்லோரையும் ரொம்பவே மிஸ் பண்ணுறேன்
அடுத்து ஒரு லவ்லி நாவலோடு சீக்கிரமா வாங்க, ருத்ரா டியர்
 
Last edited:

Advertisement

Sponsored