தேவதையிடம் வரம் கேட்டேன் P8

mila

Writers Team
Tamil Novel Writer
#1
குட்டி டீஸர் தான் செல்லங்களா.. போன வாரம் UD போடாததால் கொஞ்சம் பெரிய அத்தியாயமே போடலாம் னு இருக்கேன். சனி அல்லது ஞாயிறு வரேன்.

download (18).jpg

பௌர்ணமிக்கு இன்னும் இரண்டே நாள் இருக்க, கொடிமலரையும் அழைத்துக் கொண்டு வீரவேலன் காட்டுக்கு கோவிலுக்கு பூஜைக்காக சென்று கொண்டிருந்தான்.அவர்களுக்கு துணையாக பணியாளர்கள் பூஜைக்கு தேவையானவற்றை சுமந்துக் கொண்டு முன்னால் நடக்க, கொடிமலர் தனது தோழியுடன் சேர்ந்து நடந்துக்க கொண்டிருக்க, வீரவேலன் அவர்களை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.கொடிமலரொடு மனம் விட்டு பேச வேண்டும் என்று ஆவலாக வந்தவனுக்கு அவள் தன் முகத்தை கூட பாராது, தோழியின் கையை பிடித்துக் கொண்டு நடப்பதை பார்க்கும் பொழுது இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லையோ என்று முதன் முதலாக தோன்ற ஆரம்பித்தது.அண்ணனை கொடிமலருக்கு நிச்சயிர்க்க சென்ற பொழுது, சந்தோசமாக அவள் முகம் இருந்தது போலும், அண்ணன் மறுத்து தன்னை நிச்சயம் செய்த போது அவளின் முகம் கவலையாக இருந்தது போலும் கண்ணில் தோன்ற, காதல் கொண்ட அவன் மனம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.ஒருவேளை அன்னை கேட்டதால் மறுக்காமல் சரியென்று தலையை ஆட்டுவித்தாளா? அண்ணனை விரும்பியிருப்பாளோ? எவ்வாறு அவளிடம் கேட்பது? ஆமாம் என்று சொல்லி விட்டால் தாங்குமா என் இதயம்? இல்லை இல்லை நான் எதை பற்றியும் கொடியிடம் கேக்கப் போவதில்லை. அவள் எனக்கானவள். எனக்கு நிச்சயக்கப் பட்டவள்" வீரவேலனின் உள்ளம் குமுற ஆரம்பித்தது.அனைவரும் காட்டுக்கு கோவிலை அடைய பணியாளர்கள் பூஜைக்கு தேவையானதை எடுத்து அடுக்கிக் கொண்டிருக்க, கொடிமலர் தோழியோடு சென்று நீர்வீழ்ச்சியில் குளித்து விட்டு வர, அவர்கள் அறியாமல் அவர்களுக்கு பாதுகாப்பாக நின்ற வீரவேலனும் குளித்து பூஜைக்காக அன்னை கொடுத்து விட்ட ஆடையை அணிந்து வர, பூஜையும் ஆரம்பமானது.காட்டுக்கு கோவிலில் வீற்றிருக்கும் வனதேவதைகளின் அரசிக்கு பூமாலை சூட்டி, கொண்டு வந்த புடவையையும் சாத்தி மஞ்சள் குங்கும திலகமிட்டு, தீபாராதனைக் காட்டி வழிபட்டு தனது வேண்டுதல்களை வைக்கலானாள் கொடிமலர்.வணங்கியவாறே கொடிமலரை பார்த்த வண்ணம் இருந்தான் வீரவேலன். அவளின் முகமோ நிர்மலமாக இருக்க, அதில் எதையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

images (24).jpg

வழிபாடு முடிய அதிகாலையாகி இருக்க, விபூதியிட்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டவர்கள் தங்களது பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர் திரும்ப ஆயத்தமானார்கள்.இரவு முழுவதும் விழித்திருந்தபடியால் கொடிமலருக்கு கண்கள் சொக்கிக் கொண்டு வரவே ஒரு பெரிய மரத்தின் வெளிப்புற வேர்களுக்கிடையே அமர்ந்து கண்மூடிக் கொள்ள நொடியில் கண்ணயர்ந்து விட்டாள்.பணியாளர்களை பொருட்களோடு முன்னால் செல்லவென உத்தரவிட்டவன் கொடிமலர் துயில் கலையும் வரை அவள் அருகில் அமர்ந்து ரோஜா இதழ்கள் போல் சிவந்த அவளுடைய உதடுகள் பிளந்து சிப்பி இமை மூடி உறங்கும் அழகை ரசித்துக் கொண்டிருக்க, கொடிமலரின் தோழியோ நீர்வீழ்ச்சியில் நீராட சென்றிருந்தாள்.கண் இமைக்க மறந்து மனதில் உள்ளவளை நேரில் ரசித்துக் கொண்டிருக்க மெதுவாக கண் திறந்தாள் கொடிமலர். தூங்கும் சிலை உயிர் பெற்றது போல் இமைகள் மட்டும் படபடக்க வீரவேலனை பார்த்தவள் மெதுவாக புன்னகைக்க, வீரவேலனின் காதல் மனமோ உற்றுத்தண்ணீர் போல் நிரம்பி வழிந்தது.


இந்த கொடிமலரும், வீரவேலனும் யாரு? பல நூற்றாண்டுகளுக்கு முன்னாசடி வாழ்ந்தவங்க. இவர்களுக்கும், மதியழகி மற்றும் அக்ஷய்க்கும் என்ன சம்பந்தம் என்று கதையில் காணலாம்.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement