தேவதையிடம் வரம் கேட்டேன் P6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
HI HI HI நம்ம சைட் இன்னைக்கு ரொம்ப போர்l அடிக்குது அதான் நானே வந்தேன்.

இப்போ தான் எழுத ஆரம்பிச்சேன். தாராளமா உங்க கருத்துக்களை பகிர்ந்தா கதையை எழுத உதவியா இருக்கும்.

images (15).jpg

வழக்கம் போல் காலையில் எழுந்த உடன் தலையாய கடமையாக சீசீடிவியை ஆராந்துக் கொண்டிருந்தான் அக்ஷய். கொஞ்சம் நாட்களாகவே அவன் பார்வை மதியின் வீட்டின் முன்னால் உள்ள சீசீடிவியில் தான் அதிகமாக பதியும். காரணம் யோகா செய்யும் மதியும், லட்சுமியும் செய்யும் வாக்குவாதம் தான்.



அவர்கள் கொடுக்கும் முகபாவனையே அவர்கள் என்ன பேசுவார்கள் என்ற ஆவலை தூண்டியிருக்க, அதற்கும் ஏற்பாடு செய்து அவர்களின் பேச்சை ஒட்டுக் கேக்கலானான். அதில் அவன் அறிந்துக் கொண்ட முக்கியமான விஷயம் லட்சுமிக்கு ராஜவேல் ஆவியாக அலைவது தெரியாது என்பதே!



அவர்கள் சண்டை போடுவது போல் பேசிக் கொண்டாலும் ஒருத்தர் மீது ஒருத்தர் வைத்திருக்கும் அன்பை காணும் போது தன் அன்னையும் தன் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.



அன்னையுடனான நியாபகங்கள் ஏழு வயது வரை மாத்திரமே! அன்னை இறந்த பின் தான் தந்தையோடு வந்து வாழ ஆரம்பித்தான். சகோதர்களின் கொடுமைகளை தாங்காது மூன்றே மாதத்தில் தந்தையே அவனை அமேரிக்கா அனுப்பி வைத்தார்.



தந்தையின் முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. அதனாலயே அவரை விவாகரத்து செய்து தன்னுடைய பி.ஏ. வாக இருந்த சமேலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தன்னுடைய அன்னையை ஏன் திருமணம் செய்தார் என்று இதுவரை அவனுக்கு புரியவில்லை.



திருமணம் செய்து ஏன் பிரிந்து வாழந்தார்கள் என்றும் தெரியவில்லை. அன்னை இறந்ததற்கும் என்ன காரணம் என்றும் தெரியவில்லை. எல்லாரும் கூறுவது போல் தன் அன்னை தந்தையோடு முறையில்லாத வாழ்க்கை வாழ்ந்தவரா? இல்லையே! மங்கலசூத்ரா அணிந்திருந்தாரே! ஒவ்வொரு விஷேசத்திலும் தந்தை என் கூடவே தான் இருப்பர். என் ஒரு பிறந்த நாளைக்கு கூட மறக்காம வந்துடுவாரே! அந்த குடும்பத்தை எவ்வாறு வைத்திருந்தாரோ அவ்வாறே எந்த ஒரு குறையும் இல்லாது வைத்திருந்தார். பின் ஏன் இந்த நிலை என் அன்னைக்கு வந்தது. இன்றும் அசோக் சாம்ராட்டின் மூன்றாவது மகன் என்ற பெயரோடு சட்டவிரோதமாக பிறந்தவன் என்ற அவப்பெயர் ஏன் என்னை சேர்ந்தது?


இரண்டாவது மனைவியை முறை படி திருமணம் செய்தாலும் சமூகத்தில் அத்திருமணம் ஏற்றுக் கொள்ளப் படாமல் அப்பெண்ணுக்கு வேறு பெயர் தான் வைப்பார்கள். அக்ஷையின் அன்னையோ மூன்றாவது மனைவி. அமெரிக்காவில் வளர்ந்த அக்ஷய்க்கு இங்குள்ள கலாச்சாரமும், சூழ்நிலையும்
புரியவில்லை.


images (16).jpg

சிந்தனையில் இருந்து விடு பட்டவனோ மதி ஒருவனோடு தோள் மேல் கை போட்டுக் கொண்டு வந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

"யார் இவன்? எப்படி உள்ளே வந்தான்? இவ்வளவு நெருக்கமா மதியோடு....
 
Last edited:

JRJR

Well-Known Member
Mila சிஸ், ஒரே ஒரு ஸ்பெல்லிங் mistake ( ஆராய்ந்து) மட்டும் தான் பார்க்க முடிந்தது. ம‌த்‌த படி வேறு குறை இல்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top