தூரம் போகாதே என் மழை மேகமே!! - 37

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


“ஆதிரை.. வசதியாக இருக்கா!” என்று அவள்புறமாக முகத்தினை திருப்பிக் கேட்டான் அர்ஜூன்.


“ஆன்….” என்று மூடியிருந்த அவளது கண்களை திறந்து அவன் முகத்தினை பார்க்க முயன்றாள். அவள் முகத்திற்கு மிக அருகில் வந்த அவனது முகம் அவளைத் திக்கு வாயாக்கியது. அவனது விழிகளைச் சந்தித்த அவளது விழிகள் சில வினாடிகள் சுற்று சூழல் மறந்து ஒன்றை விட்டு மற்றொன்று விலகும் எண்ணமற்று கவ்விக்கொண்டது. ஆதிரையின் பெண்மை மென்மையான அவள் முகமாறுதல்களால் வெளிப்பட்டது. அதுவே அர்ஜூனின் ஆண்மையோ அவளை அவன் அணைத்திருந்த அணைப்பு இறுகியதில் வெளிப்பட்டது. ஏற்கனவே படப்படவென ஓடிக் கொண்டிருந்த அவளது இதயம் நொடி நின்று மீண்டும் துடித்தது. வேகமாக அவள் விழிகளை தாழ்த்திக் கொண்டு ,”ம்ம்…” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறினாள் ஆதிரை.


“அர்ஜூன். அதெல்லாம் அவளே சொல்லியிருப்பால் ஒருவேளை வசதியில்லாமல் இருந்தால். எதையும் மனதில் வைத்துக் கொள்ள தெரியாது. எல்லா உணர்வுகளையும் உள்ளத்தில் மறைத்து வைக்கத் தெரியாது அவளுக்கு. “ என்று தன் நாத்தனார் பற்றி பெருமை பேசினாள் ரிதிகா.


ரிதிகாவின் பேச்சில் அர்ஜூனும் ஆதிரையும் இயல்பானர். அவள் சொன்னதற்கு ஆதிரையால் ஒரு விரக்தியான புன்னகையையே பதிலளிக்க முடிந்தது ஆதிரைக்கு. ‘இந்த இரண்டு வருடத்தில் எவ்வளவு மன அடக்கம் வந்திருக்கிறது என்று அண்ணிக்கு எப்படித் தெரியும். அவள் பிரிந்து சென்ற போது இருந்த ஆதிரைக்கும் இப்போது இருக்கும் ஆதிரைக்கும் எவ்வளவு மாற்றம் இருக்கு ‘ என்ற எண்ணத்தால் உண்டான புன்னகை அது.


“ஓ அப்படியா அக்கா.. எனக்கொன்றும் அப்படி தெரியவில்லை. முன்பு ஒருவேளை ஆதிரை அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது ஒரு வார்த்தை அம்மையாரிடமிருந்து வர வைப்பதற்குள் ஒரு மெகா சீரியலே பார்த்து முடித்துவிடலாம் . அப்படியோரு யோசனை அவளுள்” என்று நேற்று ஆதிரை நடந்து கொண்டதை மனதில் வைத்துக் கொண்டு கேட்டான்.


“என்ன ஆதிமா! உண்மையா!” என்று ரிதிகா ஆதிரையை பார்த்துக் கொண்டு கேட்டாள்.


“அ.. அதெல்லாம் இல்லை அண்ணி. நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன். என்ன நீங்க இல்லாத போது தேவையில்லாமல் வெளியால் யாரிடமும் வாயடிப்பதில்லை. அதைச் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.” என்று பாதி மறைத்து அர்ஜூனை வெளியால் என்று சொல்லாமல் சொல்லிப் பேசினாள்.


ஓரக்கண்ணால் அர்ஜூனை பார்த்த ஆதிரைக்கு அவனது முக இறுக்கம் என்னமோ செய்தது. இருந்தும் அவள் கூறியதை மாற்றிப் பேச அவள் நினைத்தாள் இல்லை.


“அதுவும் அப்படியா!. இனி அர்ஜூன் வெளியாள் எல்லாம் இல்லை. அவன் உனக்கு மச்சான் முறை. உன்னை விட அவன் இரண்டு வருடமாவது பெரியவனாக இருப்பான். அதனால் இனி நீ அவனை மாமா என்றோ மச்சான் என்றோ கூப்பிட்டுக் கொள்” என்று கற்பனையில் ஆதிரை அர்ஜூனை அவ்வாறு அழைப்பதை நினைத்து சிரித்துக் கொண்டாள் ரிதிகா.


“அண்ணி… இது என்ன… மச்சானா! அந்த வார்த்தையே என்னமோ போல இருக்கு. அர்ஜூன் சாரை நான் எப்படி அவ்வாறு அழைப்பது. Comedy-அ இருக்கு. மாமாவாது பரவாயில்லை.” என்று ரிதிகாவிற்கு சிணுங்கிய வண்ணம் கூறினாள் ஆதிரை.


“ஓ… ஒ… சரி அர்ஜூனையே கேட்டுக் கொள்ளலாம். என்ன அர்ஜூன் ஆதிரைக்கு மாமனாக ஆசையா, இல்லை மச்சானாக ஆசையா” என்று கேட்டாள் ரிதிகா.


ஏனோ அவன் முக இறுக்கம் குறையாமலே, “எதுவும் வேண்டாம். அர்ஜூன் என்றால் போதும். இல்லை இப்போது போல சார் என்றாலும் சரி தான்” என்று எங்கோ பார்த்தபடி சொன்னான் அர்ஜூன்.


அர்ஜூனை நங்கு அறிந்திருந்த ரிதிகாவிற்கு அவன் மனநிலை புரிந்துவிட்டது. மேலும் இது பற்றி பேசாமல் “உன் இஷ்டம் தம்பி” என்று முடித்துவிட்டுப் பேசாமல் நடந்தாள் ரிதிகா.


அர்ஜூனை இழுத்து வேறெதுவும் பேசாமல் ஆதிரை ரிதிகாவிடம் கேட்டாள், “அண்ணி இங்க எப்படி வந்தீங்க.” என்றாள் ஆதிரை.


“அது ஆதி.. உனக்கு ஞாபகம் இருக்க நாங்க லண்டன் கிளம்பியது. அந்தப் பயணமே ராஜாவுக்காகத்தான். அவசியமில்லாமல் உன்னையும் வருத்திவிட்டோமென்று இப்போது தெரிகிறது.” என்றாள் ரிதிகா.


“அது பரவாயில்லை அண்ணி. முடிந்தது முடிந்துவிட்டது. நீங்க சொல்லுங்க என்ன நடந்தது?” என்றாள் ஆதிரை..


“ம்ம்… சொல்கிறேன். உங்க அண்ணனுக்கு கடலூர் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு ஓலைச் சுவடி கிடைத்தது. ஒரு சிறிய கதையும் எழுதப்பட்டு இருந்தது.


அது என்னனா, 1000 வருடத்திற்கு ஒருமுறையாக அந்தச் சந்திரன் இந்தப் பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவார். அந்தத் தருணத்தில் 1000 வருடமாக மூழ்கி இருந்த ஒரு தீவு கடலிலிருந்து மேலே வரும். அந்த நாளில் ஒரு மரபடகு அந்தத் தீவின் கரைக்கு ஒதுங்கும். அந்த வேளையில் ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசியில் அந்த தீவுல ஒரு பெண் பிறக்கும். அந்தப் பெண்ணிற்கு ஆதிரை என்று பெயர் சூட்டி அவள் பெற்றோர் மகிழ்வர். அந்தப் பெண் நீ.அந்தத் தீவு நாம் நின்று கொண்டிருக்கும் இந்தத் தீவு. நீ இந்தத் தீவிலே பிறந்த பெண் ஆதிமா.” என்றாள் ரிதிகா.


“என்ன நான் இந்தத் தீவிலா!” என்றாள் ஆதிரை.


“ஆமாம். நீங்க மீனவர்கள். உன் அப்பா மட்டுமில்லை உங்க அம்மாவும் படகு செலுத்துவாங்கலாம். நீ பிறந்த அன்று தெரிந்த பௌர்ணமியின் அழகு உன் பெற்றோரை வசியம் போல இழுத்துச் சென்று இந்தத் தீவில் விட்டிருக்க வேண்டும். அன்றே ஆரம்பித்துவிட்டது இந்தத் தீவின் ஜாலம். இந்தத் தீவு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கடலின் மேலே வரும். இருந்த போதும் எல்லோருக்கும் இந்தத் தீவு கண்ணுக்குத் தெரியாது. இந்தத் தீவு கண்ணுக்குத் தெரிய கூடிய ஆட்கள் என் குடும்பமும் உன் குடும்பமும் தான். வேறு யாருடை கண்ணுக்கும் இது தெரியாது, எத்தனை நாள் இந்தத் தீவை விட்டுச் செல்ல முயன்று தோற்றோம் தெரியுமா? “ என்று ஒரு பெருமூச்செடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள் ரிதிகா.


அந்த ஓலையில் நீ பிறந்த கதைக்கு பின், அந்த ஓலைக் கிடைத்தபின் நடக்க இருப்பதையே போட்டிருந்தது. ராஜாவின் உயிருக்கு கேடு வரக்கூடும் ஒரு வேளை அவன் பிறந்த 300 நாட்கள் அவன் தாய் மாமனைக் காண நேர்ந்தாள் சூட்சமமா தப்பிக்க வழி தேடனும்னு போட்டிருந்தது. அத்தோட அர்த்தம் எனக்கும் இன்னமும் புரில. ஆனா அரவிந்த், ராஜா இருப்பதையே அர்ஜூனிடமும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். அதனோடு அர்ஜூன் கொஞ்சம் துடுக்குதனம் செய்யக் கூடியவன், நீங்க இருப்பது தெரிந்தால் வேண்டுமென்றே கூட உங்களைக் காண வரக் கூடும் அதனால் நாம் மறைத்துவிட்டோம். நீ பேச முயற்சி செய்வதையும் தவிர்த்தோம். அந்த ஓலைக் கட்டு பற்றி உன் 25 வயது வரை தெரிய கூடாது என்று இருந்தது. வேறு வழியில்லாமல் உன்னிடம் எதுவும் சொல்லாமல், நாங்க 1 வருடம் கழித்து வருவதென்று முடிவெடுத்துச் சொல்லாமல் லண்டனும் கிளம்பி சென்று விட்டோம்.


அந்த ஓலையில் எழுதி இருந்த பலதும் புரியவில்லை, லண்டனில் இருந்த நாங்க என் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் சிம்லா போனோம். அங்க என் தாத்தா அந்த ஓலையைத் தெளிவாக படித்து விளக்கம் சொன்னார். அதன் பிறகு உன்னிடம் சொல்லி உன்னையும் அழைத்து போகவென்றே நாங்க சென்னை வந்தோம். வரும்போது நாங்க வந்த flight control மீறி வங்க கடல் பக்கமா போயிடுச்சு எல்லோரும் கடல்ல குதிக்கும்படி ஆகிடுச்சு, அனாமிகா வ என்ட்ட இருந்து வாங்கி வைத்திருந்த பக்கத்து இருக்கை பெண்ணே என் குழந்தையையும் உடன் காப்பாற்றினாள். குழந்தையை என்னிடம் கொடுக்க கூட நேரமில்லாமல் கண நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.


கடலின் கரையில் ஒதுங்கி இருந்தேன். விழித்துப் பார்த்த போது இந்தத் தீவில் இருந்தேன். உன் அண்ணனோ ஆற்றின் அந்தக் கரையில் ஒடுங்கி இருந்தார். நதிக் கரைக்கு அந்தப் பக்கம் இருக்கும் தீவின் மறுபாதியில் எல்லா வித மிருகங்களும் இருக்கும். மாமிச பட்சினி மிருகங்கள் அதிகம்.பல நாட்களுக்குப்பின் போராட்டத்திற்குப் பின் இந்த நதி கடந்து இங்கு வந்தார் உன் அண்ணன்.


நாங்க வாழ வழியில்லாமல் இறந்து போவோம் என்று எண்ணியிருந்த சமயத்தில்தான் உன் அப்பா அம்மாவை இந்தத் தீவில் கண்டோம்” என்றாள் ரிதிகா.


“என்ன. என் அம்மா அப்பா.. இங்கு தான் இருக்கிறார்களா!. சுனாமியில் இறந்ததாக அல்லவா அண்ணன் சொன்னார்” என்றாள் வியப்பின் உச்சத்தில் ஆதிரை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top