தூரம் போகாதே என் மழை மேகமே!! - 36

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



அந்தக் குரல் ஆதிரையை அழைக்கவில்லை. யாரோ ருத்வி என்ற பெண்ணா! இல்லை ஆணையோ அழைத்தது. அவசரமாக இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டு அந்த அறையிலிருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தனர். அப்படிப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.


“ஆதிரை யாரோ பெண் அதுவும் நிறைமாத கர்ப்பிணி பெண் போல தெரிகிறது. இங்கு மனிதர்கள் கண்டிப்பாக இருக்கிறார்கள். அதுவும் அந்தப் பெண் யாரையோ தேடிக் கொண்டு வந்திருப்பது போல தெரிகிறது. வா கீழே போகலாம்.” என்றான் அர்ஜூன்.


“ஆமா.. அர்ஜூன் சார். அதனோடு என்னை அழைத்த பெண்ணின் குரலும் இந்தக் குரலும் ஒன்று போல தெரிகிறது. கீழே சென்று அந்தப் பெண்ணிடம் பேசினோம் என்றால் நாம் இந்தத் தீவை விட்டு வெளியில் செல்ல கண்டிப்பாக வழி கிடைக்கும். அந்தப் பெண் வேறெங்கும் சென்றுவிடுமுன், சீக்கிரமாகக் கீழே போவோம்” என்றாள் ஆதிரை.
“ம்ம்… சரி நான் முன்னே செல்கிறேன். நீ மெதுவாக என்னைப் போலவே வந்துவிடு. கீழே விழாமல் வந்து விடுவாய் தானே!” என்று கேட்டான் அர்ஜூன்.


“என்னைப் பற்றி கவலை படாதீங்க, நான் பொறுமையாக வந்துவிடுவேன். முதலில் நீங்க அந்தப் பெண்ணை எங்கும் போகுமுன் சந்தித்துவிடுங்க” என்று அவனுக்கு வலியுறுத்தினாள் ஆதிரை.


அதன்படி அர்ஜூனும் விரைவாக இறங்கி கீழே சென்றான். அதற்குமுன்பாக அவர்களோடு இருந்த அந்த அணில் விரைந்து இறங்கி கீழே இருந்த அந்தப் பெண்ணிடம் ஓடிச் சென்றது. அந்தப் பெண்ணிடம் சைகையில் எதையோ சொல்லிக் கொண்டிருந்தது.


“யார் வந்திருக்காங்க ருத்வி” என்று அந்தப் பெண் அந்த அணிலிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


அந்த அணில் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அர்ஜூன் கீழே சென்றுவிட்டான்.


சென்றவன் அவன் கண்களை நம்ப முடியாமல் கண்களை கசக்கிக் கொண்டான். பின் தன்னை கிள்ளிக் கொண்டான். அவனுக்கு வலித்ததும் இது உண்மை கனவேதுமில்லை என்பதை உணர்ந்தான்.


“அக்கா…” என்று கண்களில் ஈரம் வர அவளை அணைத்துக் கொண்டான். ஆம்… அது ரிதிகாதான். பேச்சற்று அவள் உயிருடன்தான் இருக்கிறாள் என்பதை மனதில் ஆழமாக உணர அவன் ஒரு சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டான்.


அவளும், அர்ஜூனை இங்கு எதிர் பார்க்காமல் சந்தித்ததில் பேச்சற்று சந்தோஷத்தில் கண்ணில் ஈரம் பணிக்க அவனை “தம்பி” என்று அரவணைத்துக் கொண்டாள் ரிதிகா.


பின் , “உன்னை இழந்துவிட்டேனென்று எத்தனை இரவுகள் தூக்கமற்று தவித்தேன் தெரியுமா அக்கா! அஸ்மிதாவிலே உன்னைப் பார்த்து நிம்மதி கொண்ட நாட்கள் ஏராளம் அக்கா. எப்படி அக்கா இருக்க. நீ எப்படி இங்க!” என்று கொஞ்சம் ஆசுவாச படுத்திக் கொண்டு கேட்டான்.


மேலிருந்து பார்த்த ஆதிரைக்கு அந்தப் பெண் ரிதிகா என்று அறியாமல் ‘ஏன் அர்ஜூன் அந்தப் பெண்ணை அணைத்துக் கொள்கிறான். இதுவும் ஒரு மாயமா’ என்று கேள்வி பிறந்தது. இருந்தும் ‘கீழே சென்றால் தெரிந்துவிடப் போகிறது’ என்று எண்ணி மெதுவாக அந்த ஆலம் விழுதினை பற்றி கீழே இறந்தினாள்.


ஆதிரை 20 அடிக்கும் மேலாக இருந்த போது ஆதிரைக்கு அந்தப் பெண் யாரென்று தெரிந்துவிட்டது. அவள் ஆதிரையின் அருமை அண்ணி. ‘அவள் இங்கு எப்படி வந்தாள். லண்டனில் இருக்க வேண்டிய அவள் எப்படி இந்தத் தீவில். அதுவும் கர்ப்பிணியாக இருப்பதென்றால் என் அண்ணனும் இவளுடன்தான் இருக்க வேண்டும்’ என்று குழம்பிய போதும் பல மாதங்களுக்குப் பின் அவள் அண்ணியைப் பார்த்த போது ஆதிரைக்கு இனம்பிரியாத சந்தோஷமும் குதுகலமும் ஏற்பட்டது. அதனோடு ‘ஏன் அர்ஜூன் என் அண்ணியை அணைத்துக் கொண்டு நிற்கிறான்’ என்று குழம்பிக் கொண்டே அவசரமாக இறங்கினாள் ஆதிரை.


அவள் 10 அடி இருக்கும் போது அவர்கள் பேசுவது ஆதிரைக்கு நன்றாகக் கேட்டது. அர்ஜூன் ரிதிகாவின் தம்பி என்பதை அறிந்ததும் அவளையும் அறியாமல் நிலை தடுமாறி அந்த ஆலம் விழுதினை நழுவ விட்டாள். மீண்டும் அதனைப் பிடித்துவிட முயல்வதற்குள் அவள் கீழே விழுந்துவிட்டிருந்தாள்.


ஆதிரைக்கு அவளது அண்ணியை இந்த இடத்தில் பார்த்தது அதிர்ச்சியென்றால் அவள் அண்ணி, இவன் இவன் இந்த அர்ஜூனின் அக்கா. யாரை அடியோடு வெறுத்தாலோ! யாரால் இல்லாத அவப் பெயரையெல்லாம் அனுபத்தாலோ அவன் , ரிதிகா அண்ணியின் தம்பி, அவள் மனதையும் மயங்கச் செய்து அவன் வசம் செய்தவனும் அவனே! அர்ஜூனே! என்று எண்ணி ஏற்பட்ட மன உலைச்சலே அவள் பலமிழந்து கீழே விழக் காரணமாக இருந்தது.


அவள் கீழே விழுந்ததும் அவளை நோக்கி ருத்வி என்ற அணில் உட்பட எல்லாம் ஓடினர். “ஆதிரை… வந்துட்டியா! எங்கு நீ வராமல் போய்விடுவாயோ என்று தினம் தினம் நான் பயந்து கொண்டிருந்தேன். இந்த மர வீட்டில்தான் இருவரும் இருந்தீர்களா! நேற்றே இங்கு வந்திருப்பீர்கள் போல இருக்கு. பார்த்து இறங்கக் கூடாதா ஆதிமா. அடி ஏதும் பட்டுவிட்டதா!” என்று அவளிடம் சென்ற ரிதிகா கீழே விழுந்த ஆதிரையின் கையினை பற்றிக் கொண்டே கேட்டாள்.


புரியாமல் விழித்துக் கொண்டிருந்த ஆதிரைக்கு ரிதிகாவிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. “ஆ… அ… அண்ணி… நீ… நீங்க…. இங்க எப்படி..? லண்டனில் தானே இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ரிதிகா மற்றும் அர்ஜூனின் முகம் பார்ப்பதை தவிர்த்துக் கேட்டாள். ‘தன்னிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல், தன்னிடம் எதுவும் கலந்து பேசாமல் என் நல்லதுக்கு’ என்று அவள் அண்ணியும் அண்ணனும் எடுத்த முடிவில் ஆதிரைக்கு அவர்கள் மேல் இருந்த கோபமும், அர்ஜூன் ரிதிகாவின் தம்பி என்ற வெறுப்பும் சேர, அவளது அண்ணி கிடைத்துவிட்ட சந்தோஷத்தையும் மீறிக் கொண்டு வெளிப்பட்டது.


ஆதிரையின் பாரா முகத்தை அனுபத்திராத ரிதிகாவிற்கு கண்களில் ஈரம் பணிந்தது. இன்னும் எழுந்திருக்காத ஆதிரையின் அருகிலே புல் தரையில் அமர்ந்த ரிதிகா ஆதிரையின் கையினை பற்றிக் கொண்டு “sorry ஆதிமா.. உன்னிடம் சொல்லாமல் நாங்க சில முடிவை எடுத்துவிட்டோம். நாங்க அப்படி உன்னிடம் ராஜாவை விட்டுவிட்டு வராமல் இருந்திருந்த நம் ராஜா உயிருடன் இருந்திருக்க முடியாது. எல்லாம் அந்த ஓலைச் சுவடியை உங்க அண்ணன் படித்ததிலிருந்து நாங்க இதனை திட்டமிட்டுத்தான் செய்தோம். அதனை பிறகு சொல்கிறேன். இப்போது வா நம் குகைக்கு போகலாம்” என்று அவள் சொல்ல சொல்லப் புதிர் போல விளங்காமல் விழித்து விழித்து பார்த்துக் கொண்டிருந்த ஆதிரையின் முகம் மாறுதலில் ரிதிகா நிம்மதியுற்றாள்.


“அண்ணி… நீங்க இல்லாம நான் எவ்வளவு கஷ்ட பட்டேன் தெரியுமா! பல கஷ்டங்களுக்கு பின்னும் என் ராஜாவும் இல்லாமல் போயிருந்தால் நான் கண்டிப்பாக உயிருடன் இருந்திப்பேனா! என்று தெரியவில்லை அண்ணி. என்னால் உங்க பிரிவை தாங்கவே முடியவில்லை தெரியுமா!” என்று விம்மிக்கொண்டே ரிதிகாவை அம்மாவைத் தேடும் குழந்தை போல அழுது கொண்டே அணைத்துக் கொண்டாள்.


“எல்லாம் நல்லதுக்கே ஆதிமா… அழுக கூடாதுடா.. உன்ன நாங்க பாத்துட்டோம்ல இனி எந்த நிமிடமும் உன்னை என்னிடமிருந்தோ அல்ல உன் அண்ணனிடமிருந்தோ யாராலும் பிரிக்க முடியாது. எங்களை மன்னித்துவிடு செல்லமே!” என்று குழந்தைக்கு ஆறுதல் கூறுவது போல ஆதிரையைத் தேற்ற முயன்றாள் ரிதிகா. அவளது ஆருதலான வார்த்தைகளால் இவ்வளவு காலம் தேக்கித் தேக்கி வைத்திருந்த எல்லாக் கவலையும் வேதனையும் போக அழுது தீர்த்தாள் ஆதிரை. அதற்கு மேல் அவளைத் தடுக்காமல் அவள் ஆசுவாச படுத்திக் கொள்ள ரிதிகாவும் அர்ஜூனும் பொறுத்திருந்தனர்.


ஒருவாராகச் சரியான ஆதிரை ரிதிகா கொடுத்த நீரினை விம்மலுடனே குடித்துவிட்டு சிறிய குழந்தை போல, “இனி என்னைவிட்டு எங்கும் போக கூடாது சரிங்களா! இது என் மீது சத்தியம்” என்று கேட்டாள்.


“ம்ம்.. உன் மேல சத்தியமா நீ அறியாமல் நாங்க எதுவும் செய்யமாட்டோம் ஆதிமா…. நீ இன்னும் மாறவே இல்ல. அதே சின்ன பெண் ஆதிமாதான் நீ” என்று புன்னகித்தாள் ரிதிகா. அவர்கள் உரையாடலை அமைதியாகக் கவனித்த அர்ஜுன், ‘இப்படி ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பவர்கள் ஏன் பிரிந்து வர வேண்டும். ஆதிரை இருப்பதைக் கூட மாமாவும் அக்காவும் ஏன் சொல்லவில்லை.’ என்று அர்ஜூனுக்கு கொஞ்சம் குழப்பம் இருந்தது. இருந்த போதும் எல்லாம் தானாக தெரியப் போகிறது எதற்குக் கவலை கொள்ள வேண்டும். அதனோடு நான் ரிதிகாவின் தம்பி என்பதை இனி நான் சொல்லி ஆதிரை தெரிந்து கொள்ள வேண்டியதில்லை ஆதிரைக்குத் தானாகவே தெரிந்துவிட்டது’ என்று பெருமூச்சுவிட்டான்.


“ம்ம்.. சரி வா.. போகலாம். கொஞ்சம் தூரம்தான் கரையிலிருந்து இவ்வளவு தூரம் உள்ளே வந்துவிட்டிருக்கீங்க. நல்ல வேலை ஆற்றின் அந்தப் பக்க கரையில் நீங்க சேரவில்லை. இல்லையென்றால் என்னாகி இருக்கும்” என்று ரிதிகா பேசிக் கொண்டே போனாள்.


“என்னவாகிருக்கும் ?” என்று அர்ஜூன் கேட்டான். அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே ரிதிகா எழுந்து கொண்டே பேச எத்தனித்தாள். ஆனால் ஆதிரை எழ முயற்சிக்க அவளால் முடியவில்லை. கால்கள் பிசைந்து கொண்டு விழுந்ததில் அவள் கணுக்காலில் பிடிப்பு ஏற்பட்டிருந்தது. எழ முயன்று வலி தாங்க முடியாமல் மீண்டும் “ஆ…” என்று கீழே விழுந்தாள் ஆதிரை.


“காலில் அடிப்பட்டுவிட்டதென்று நினைக்கிறேன் அண்ணி என்னால் எழ முடியுமென்று தோன்றவில்லை. நீங்க அண்ணாவை இங்கு அனுப்புறீங்கலா! கை தாங்கலாக பிடித்துக் கொண்டால் உடன் வந்துவிடுவேன்.” என்று அர்ஜூன் இருப்பதைத் தவிர்த்து அவன் இருக்கும் திசையையும் பாராமல் ரிதிகாவிடம் பேசினாள் ஆதிரை.


‘தன்னை மணக்கிறாயா என்று கேட்ட அர்ஜூன் மீது காதலும் , தன்னை அவதூறாக பேசிய மோசமான ரிதிகாவின் தம்பியின் மீது வெறுப்பும் போட்டி போட்டதில், வெறுப்பே வென்று அர்ஜூனை காண்பதை தவிர்த்தாள் ஆதிரை. அதன் விளைவே அவனை ஒதுக்கிப் பேசியது. இவ்வாறாக அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளை ஊடுருவிக் கொண்டிருந்த அர்ஜூனுக்கு எல்லாம் புரிந்தவிட்டது. இருந்த போதும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.


“என்ன ஆதிமா.. என் தம்பி உன்னை தூக்கிக் கொள்ள மாட்டானா!. நீ ஒன்னும் அப்படியொரு குண்டு கிடையாதே. சொல்லப் போனால் முன்பைவிட ஒல்லியாக அல்லவா ஆகிவிட்டிருக்கிறாய். நாங்க இல்லாமல் கண்டிக்க ஆளில்லாமல் இப்படி ஆகிவிட்டிருக்கிறாய். இனி உன்னை பார்த்துக் கொள்வதுதான் என் வேலை. அர்ஜூன் அவளை தூக்கிக் கொள்” என்று பேசிக் கொண்டே போனாள் ரிதிகா..


“ஆன்…. அண்ணி.. அப்படியெல்லாம் இல்ல. நானே எழுந்து நடக்க முடியும். எலும்பு முறிவு பேலெல்லாம் அல்ல. லேசாக தசைநார் இழுத்துக் கொண்டது என்று நினைக்கிறேன்” என்றாள் ஆதிரை. வலித்த இடத்தில் தொட்டு பார்த்தாள் ரிதிகா. வலி தாங்காமல் மீண்டும் கத்தினாள் ஆதிரை.


“இது சரி பட்டு வராது , தம்பி அவளை தூக்கிக்கோ அவள் கொஞ்சம் shy type அப்படிதான் பேசுவாள்.” என்று அர்ஜூனை ஊக்கினாள் ரிதிகா.


“இல்ல… அண்ணி… வேண்டாம். நானே “ என்று மீண்டும் எழ முயன்று கீழே விழுந்தாள் ஆதிரை.


“ஆதிரை. என்னைப் பார்த்து தீடிரென்று ஏன் இப்படி தயங்குகிற .. இல்ல பயமா” என்று சொல்லிக் கொண்ட ஆதிரையின் கண்களை ஊடுருவிப் பார்த்த வண்ணம் அவளை நெருங்கினான்.


“நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றாள் கொஞ்சம் குரலில் கடுமை காட்டி.


“அப்பறம் என்ன இது நாடகம்!” என்று அவளை உசுப்பிவிட்டான்.


அவனது விதண்டாவாத பேச்சில், “நீங்க தூக்க வேண்டாம் கை தாங்கிக் …” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே .”ஷ்…. அமைதியா இரு.” என்று அவளைத் தூக்கினான். அவனது இந்தச் செய்கையில் பேசும் சக்தியற்று அமைதியானாள் ஆதிரை. அவன் அவளைத் தூக்குவதற்கு தடை சொல்லாமல் இணங்கினாள். அவன் இருக்கைகளும் அவனை தாங்கிக் கொண்டு நின்றது. அவளது கைகள் அவனது கழுத்தை அணைத்துக் கொண்டு நின்றது. அவளது கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.


“அக்கா… எவ்வளவு தூரம் இருக்கும் அக்கா.. உங்க குகை “ என்று கேட்டவன் ஆதிரையின் பார்வையை அதன்பிறகு சந்தித்தான் இல்லை.


“இரண்டு கிலோமீட்டராவது இருக்கும் தம்பி. இப்படித் தூக்குவது ok தானே. கஷ்டமாக இருந்தால் உப்பு மூட்டை போல தூக்கிக் கொள். அவ்வளவாகக் கஷ்டமாக தெரியாது” என்றாள் ரிதிகா.


‘என்னது உப்பு மூட்டையா! அப்படியென்றால் அவனை முதுகில் அணைத்தபடியல்லாவா இருக்க வேண்டும் இப்படி இருக்கவே எங்கெங்கோ என்னன்னமோ செய்கிறது. ஏன் அண்ணி இப்படி ஒரு idea-வ தராங்க..’ என்று அவளுள் நொந்துக் கொண்டு, “ அண்ணி.. என்ன சொல்றீ…” என்று ஆதிரை பேசிக் கொண்டிருக்கும் போதே “ ம்ம்.. அதுவும் நல்ல idea அக்கா… ஆதிரை சொன்னது போல என் அக்கா idea குடுக்கிறதுல அடிச்சிக்க ஆளில்லை” என்று சப்தமாக சொல்லிச் சிரித்தான்.


மிக அருகில் பார்த்த அர்ஜூனின் சிரிப்பு ஆதிரையைக் கட்டி போட்டது. அதனோடு ‘பாவம் அவனும் இப்படியே எப்படி அவ்வளவு தூரம் தூக்கிச் செல்வான்’ என்று அவள் மனம் அவனுக்காக வாதாடியது. அவன் தொட்ட மாத்திரத்தில் அவன் மீது கொண்ட வெறுப்பு குறைந்து ஓசையற்று அவளுள் உறங்கச் சென்றுவிட்டது போல.


ரிதிகா சொன்னது போல ஆதிரையைத் தூக்கி தன் முதுகில் குழந்தைகளை உப்புமூட்டை தூக்குவது போல தூக்கிக் கொண்டான். வேறு வழியில்லாமல் அவனது கழுத்தில் தன் கைகளைக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டாள் ஆதிரை. அவனும் அவளது இரு தொடைகளையும் தன் இருக் கைகளில் பிடித்துக் கொண்டு அவள் விழுந்துவிடாமல் நடந்தான். அவனது சிகையில் மறைந்த ஆதிரையின் முகம் அவனது வலது தோட்பட்டையில் பதிந்து அர்ஜூனின் முகத்திற்கு மிக அருகில் நின்றது. படப்படத்த அவளது இதையும் அவளை இறுகக் கண்களை மூடிக் கொள்ள செய்தது. அவளது பெண்மை அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்தது. அவள் உடல் சூடேறுவதை அவள் ரத்த ஓட்டமே அவளுக்கு உணர்த்தியது. ‘ஒழுங்காக இறங்கி தொளைந்திருக்கலாமென்று. கவனம் சிதறவிட்டு விழுந்தற்கு நல்ல பலன்’ காலம் கடந்து பொருமினாள் ஆதிரை.


ஆதிரையையும் அர்ஜூனையும் பார்த்த ரிதிகாவின் கண்கள் வேறு கணக்கு போட ஆரம்பித்திருந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ரிதிகாவின் உள்ளம் குதுகலத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹை நான் சொன்ன மாதிரியே
அணிலின் பெயர்தான் ருத்வி
அரவிந்த்தும் ரிதிகாவும்
உயிருடன்தான் இருப்பாங்கன்னு
நான் நினைத்தேன்
ஆனால் சொல்ல மறந்துட்டேன்,
Yogi டியர்
அப்போ வேணுமுன்னேதான்
ஆதிரையையும் ராஜாவையும்
விட்டுட்டு அரவிந்த் மனைவியுடன்
போய் விட்டானா?
என்ன காரணம்?
அந்த ஓலைச் சுவடியில் என்ன
எழுதியிருக்கு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top