தூரம் போகாதே என் மழை மேகமே!! - 35

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer


“நீ என்னை மணந்து கொள்கிறாயா!.” என்றான் அர்ஜூன். இதனைக் கேட்டதும் தேனாறு பாய்ந்தது போல தோன்ற இருந்த ஆதிரை மதி மயங்கி அர்ஜூனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.


அவன் மார்பில் அவள் சாய்ந்ததையே அவள் சம்மதமாக எண்ணி உல்லாச புன்னகை செய்து அவளை அவனும் அரவணைத்துக் கொண்டான். சில்லிட்டிருந்த இருவரின் ஆடைகளும் அதன் வேலையைச் செய்ய தொடங்கியது. குளிரினால் நடுங்கிய இருவருக்கும் ஒருவருடைய அரவணைப்பு மற்றொருவருக்கு தேவைப்பட்டது. விலகும் எண்ணமற்று இருவரும் அதே மோன நிலையிலே பல நிமிடங்கள் இருந்தனர். இப்படியே இருந்துவிட வேண்டும் போன்ற ஒரு மாயவலை அவர்களைச் சுற்றி பின்னப்பட்டது போல, கட்டிப் போட்டது போல அப்படியே அமர்ந்திருந்தனர்.


அப்போது வரை அங்கு நடப்பதை அமைதியாக பார்த்துக் கொண்டு அந்த அறையின் புல்மெத்தையில் படுத்திருந்த அணில் அவர்கள் அசைவற்று இருப்பதைப் பார்த்துவிட்டு அவர்களை நோக்கி ஓடி வந்தது. அவர்கள் இருவர் தோட்பட்டை மீதும் மாறி மாறிக் குதித்தது. அதன் பலனாக இருவருமே சுயநினைவு வந்தவர்களாக, ஒருவரை விட்டு ஒருவர் அவசரமாக விலகி அமர்ந்தனர். ஆதிரை ஒருபடி மேலாக ‘அவன் கண்முன் அமர்ந்திருந்தால் என்னமோ என்னமோ செய்கிறது. யாரென்றே தெளிவாக தெரியாதவன் மீது இந்தக் காதல் இப்படி ஆலமரம் போல வளர்ந்து நிற்கிறதே! இவன் இன்னும் என்னை ஏன் குறுகுறுவென்று பார்க்கிறான். இந்தப் பார்வை காலையில் பார்த்தது போல் பயத்தை மட்டும் தராமல், குதுகலத்தையும் தருகிறதே. அவன் பார்வையிலிருந்து விலகி அந்த புற்களுக்குள்ளே போய் மறைந்து கொள்ளலாம் போல அல்லவா தோன்றுகிறது’ என்று எண்ணி உடனே எழுந்து சென்று அந்த அறாய்யிலிருந்த சின்ன ஜன்னல் வழியே எதையோ தேடுபவள் போலச் சைகை செய்து கொண்டு அவன் பார்வையிலிருந்து ஒளிந்து கொள்ள முயன்றாள்.


ஆனால், அவன் பார்வை அவளையே தொடர்ந்தது. அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்த போதும் அவன் பார்வை அவளைச் சுகத்தை தரும் வலியற்ற ஊசியைப் போல இருந்தது. அவள் மனம் அவனை எதிர்பார்த்து நின்றது. அவளைத் தொடர்ந்து மெதுவாக எழுந்த அர்ஜூன் அவளை நோக்கிச் சென்று அவளை முதுகிலிருந்து அணைத்தான். முன் போல் அல்லாமல் , அவன் அணைப்பு அவளை மயங்கச் செய்தது. அப்படியே தோய்ந்து பின்புறமாகவே அவன் மார்பில் சாய்ந்தாள். அவள் இடையினை அவன் கைகள் வளைத்திருந்தது. அந்த நிலையிலிருந்து விலக ஆதிரைக்கும் தோன்றவில்லை. அர்ஜூனும் விலகும் எண்ணமற்று அப்படியே பேசலானான்.


“ஆதிரை… உன்னிடம் இன்னொன்றும் சொல்ல வேண்டும்..” என்றான்.


“ம்ம்… “ என்றவள் வேறெதுவும் பேசவில்லை.
“நான் அஸ்மிதா.. என்று சொல்லிருக்கிறேனே! நினைவிருக்கிறதா!” என்று கேட்டான்.


அஸ்மிதாவென்றதும், ஆதிரைக்கு அவள் அர்ஜூனின் மனைவி அல்லது காதலி என்று நேற்று நினைத்தது ஞாபகம் வந்தது. அந்தப் பெண்ணைபற்றி இப்போது சொல்ல வேண்டுமென்றால், என்று யோசித்தவள், ‘இவன் யார் என்னவென்றே தெரியாமல் , இதற்கு முன் எத்தனைக் காதலிகளோ! அல்ல அவன் ஏற்கனவே மணமானவனாகக் கூட.. பல பெண்களோடு என்னையும் கூட… இந்த மழை மேகமும், அந்த மனத்திரையும் என்னை மதிமயங்க செய்துவிட்டதே!’ என்று கலங்கினாள். உடனே விலகி நின்று , வராத தைரியத்தைக் கொண்டு கேட்டாள். “சொ…சொல்லுங்க சா… சார்” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவன் பார்வையை சந்திப்பதைத் தவிர்த்தாள்.


அவளது இந்த திடீரென்ற மாற்றம் அர்ஜூனுக்கு வலித்தது. சரியென்று சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்க எண்ணினான். “நான் உன்னை என்ன திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவில்லை. என் சூழலை முழுதும் தெரிந்து கொண்டு பின் யோசித்து உன் முடிவைச் சொன்னல் போதும் என்றான்”


அதற்குப் பதிலாக ஏதேனும் அவளிடமிருந்து எதிர் பார்த்தவன் அவள் மௌனமாக அவள் தலை தாழ்த்தி இருப்பதைப் பார்த்தபின் , அந்த அறையிலிருந்த மற்றொரு ஜன்னலோ நோக்கி நடந்தவிதமாக பேசலானான். “ஆதிரை, அஸ்மிதா என் அக்காவின் மகள்.” என்றான்.


‘அக்கா மகளா!. ஓ.. அக்கா மகளை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டேன். இப்போது உன்னைத்தான் விரும்புகிறேன். அதனால் உன்னையும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்று சொல்ல போகிறானா!. இது என்ன அநியாயம். எப்படி பெண்ணுக்கு ஒரே ஆண் இருக்க வேண்டுமோ அப்படியேதானே ஆணுக்கும். இருந்தும் அவன் மீது கொண்ட ஆசை.சே சே அப்படியெல்லாம் இருக்காது’ என்று அவன் சொல்ல எடுத்துக் கொண்ட ஒவ்வொரு நொடியிலும் ஆயிரம் serial காட்சிகளைக் கற்பனை செய்து கொண்டிருந்தாள் ஆதிரை. ஆனால் எதுவும் பேசினாள் இல்லை.


அர்ஜூன் மேலும் தொடர்ந்தான். “என் அக்காவும் மாமாவும் ஒன்றரை வருத்திற்கு முன்பு ஒரு விமான விபத்தில் இதோ இந்த வங்க கடலிலே இறந்துவிட்டனர். கைக்குழந்தையாக இருந்த அஸ்மிதா மட்டும் அதிர்ஸ்டவசமாக பிழைத்தாள். “ என்றான்.


அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அஸ்மித ஒரு குழந்தை என்றிறந்தவுடன் அவசரமும் ஆதங்கமுமாக, “ என்ன சொன்னீங்க கைக்குழந்தையா! என் ராஜாவுக்காவது நான் இருந்தேன். அஸ்மிதவிற்கு இருவருமே இல்லையா!” என்றான்.


“ம்ம்…” என்ற அர்ஜூன் நீண்ட பெருமூச்செடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான். “ஆமா. அவளுக்காகத்தான் நானும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். அவள் ஓரளவு விவரம் பெரும் வரை திருமணம் பற்றி யோசிக்கவும் என்னால் இப்போது முடியாது. ஒரு 6 வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாமென்று எண்ணியிருந்தேன். அப்போது ஒரு வேளை என் அஸ்மிதா என்னை புரிந்து கொள்ள கூடும். ஒரு நாள் இரு நாள் என்றால் என்னைப் பிரிந்து இருப்பாள். ஆனால் எல்லா நாட்களும் என்பது கொஞ்சம் கஷ்டம். அதனால் உன் ராஜாவோடு என் அஸ்மிதவும் நமக்கு இரு பிள்ளைகள். அவர்கள் ஓரளவு விவிரம் ஆகும் வரை நாம் அவர்களுக்கு மட்டுமாக பெற்றோர்களாக இருக்க வேண்டும். இதற்கு உனக்கு சம்மதம்னா சொல்லு” என்றான்.


அவனிடமிருந்து இப்படியொரு கேள்வியை ஆதிரை சிறிதும் எதிர் பார்க்கவில்லை. ஆதிரையின் கண் முன்னே அவன் குணத்தால் அவன் வானுயர்ந்து தெரிவது போல இருந்தது. இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்காகவும் அவள் ராஜாவுக்காவும் சேர்த்தல்லவா அவன் யோசித்து இருக்கிறான். என்று அவளுக்கு அவன் மீதும் மேலும் காதல் அதிகமானது. இருந்த போதும் உடனே அவனுக்குப் பதில் சொல்ல மனமின்றி மன மகிழ்ச்சியுடன் “ம்ம்….” என்றாள்.


அவள் மாறி முகம் மீண்டதை எண்ணி அர்ஜூனும் கொஞ்சம் உற்சாகம் கொண்டான்.


அவள் பேச்சையும் சூழலையும் மாற்ற எண்ணி , “ அது இருக்கட்டும் சார்…. எனக்கு என் ஆடைகளைக் கொஞ்சம் கீழே இருந்து எடுத்து வரமுடியுமா! உங்க சட்டை ஏதும் எனக்கு சரிப்பட்டு வருமென்று தெரியவில்லை. போட்ட 10 நிமிடத்தில் எங்கிருந்தோ வந்த அந்தச் சுகமான மழை மேகமும் மழையும் நனைத்துவிட்டுப் போய்விட்டது. “ என்றாள்.


அவளது சார் என்ற அழைப்பு அவளுக்கு இன்னும் முழு சம்மதம் இல்லையோ என்ற எண்ணத்தையே அவனுக்கு ஏற்படுத்தியது. இருந்த போதும் அவளே மாறி வரக் காலம் கொடுத்தான். அதனால் அதனைத் தவிர்த்து அவளுக்குப் பதிலளித்தான் , “ இதற்கென்ன! அழகாகத்தான் இருக்கிறாய். சொல்லப் போனால் உன்னுடை ஓலைச் சட்டைக்கு என் சட்டை 100 மடங்கு மேல்.” என்று இல்லாத சட்டை காலரைத் தேடினான்.


அவனது சைகையில் உடனே சிரித்தவள் , “இப்போது உங்க சட்டையை போட்டிருப்பதற்குப் போடாமலே இருக்கலாம், மிகவும் மெல்லியதாக, உடலொட்டி எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. அதனால்தான் அந்தக் கரடி போய்விட்டதா என்று பார்க்க வெளியில் சென்றேன். அது எப்போதோ போய்விட்டது. அதனால் போய் எனக்கு என் ஆடையையும், கொஞ்சம் கொறிக்க ஏதேனும் அந்தக் கரடி விட்டுப் போயிருந்தால் அதையும் கொண்டு வாங்க” என்றாள்.


“ம்ம் … அது சரி. இந்தத் தீவிற்கு வந்த நாளிலிருந்து அம்மையார் மகாராணியாராகவும் நான் சேவகனாகவும் அல்லவா மாறிவிட்டன். “ என்று அவளுக்குக் கேட்குமாறு புலம்பிவிட்டு “ இது வருகிறேன்” என்று வெளியில் செல்ல எத்தனித்தான்.


அவனையே பார்த்திருந்த ஆதிரை சிரித்தாள் , “ பரவாயில்லை. செய்ங்க செய்ங்க. வேறு வழியுமில்லை உங்களுக்கு” என்றாள்.


சென்று கொண்டிருந்தவன் ஒரு நொடி தாமதித்தவன் ஒரு நொடி நின்று, “ சரிங்க மகாராணியாரே” என்று கிண்டளடித்துவிட்டு கீழே யாருமில்லையென்பதை இன்னொருமுறை உறுதி செய்து கொண்டு இறங்கினான். இறங்கிய வேகத்திலே இருந்த இரண்டு பைகளையும் சேர்த்து தன் இடுப்பில் கட்டிக் கொண்டு மேலேறிவந்தான்.


“ஹலோ சார். கொஞ்சம் வெளியில் நில்லுங்க” என்று அவனை உள்ளே வரவிடாமல் ஆடையிருக்கும் பையை மட்டும் வாங்கிக் கொண்டு துரத்திவிட்டாள்.


“அடிபாவி… “ என்று சப்தமாக சொன்ன போதும் , வம்பு செய்யாமல் வெளியில் நின்றான்.


ஆடை மாற்றிவிட்டு உள்ளே அழைத்த ஆதிரை. “சார் நீங்களும் ஆடை மாற்றிக் கொள்கீரீங்களா! உங்களதும் தானே நனைந்திருக்கிறது. நான் வேண்டுமென்றால் வெளியில் நிற்கிறேன்.” என்றாள்.


“ஹப்பபா! என்னவொரு பெருந்தன்மை பாரேன். சரி எங்கமா எனக்கு dress இருக்கு. “ என்றான் அர்ஜுன்.


அவனது phant –ஐ எடுத்துக் கொடுத்தாள். “ம்ம்… rightu” என்றான். அதற்குப் பதிலாக புன்னகித்தாள்.


“நான் உன்னைப் போல வெளியில் தள்ளி கதவை மூடவெல்லாம் மாட்டேன். நீ இங்கே இருக்கலாம். ஒரு நிமிடம்” என்றான் அர்ஜூன்.


“அது சரி” என்ற போதும் வெளியில் செல்ல பயம் கொண்டு அவனுக்கு முதுகுகாட்டி நின்றாள்.


“முடிந்ததா!” என்றாள். “ம்ம்ம்….. திரும்பு. “ என்றான். பனியனையும் கழட்டிவிட்டு வெறும் உடம்புடனும் phant உடனும் நின்றிருந்தான்.


முதலில் பார்க்க கொஞ்சம் கூச்சம் கொண்ட போதும், பின் சகஜமானாள் ஆதிரை. இருவரும் இருப்பதை உண்டுவிட்டு அன்று இரவு இங்கேயே தங்கிவிட்டு பின் நாளைக் காலை மீண்டும் நம் பயணத்தை தொடரலாமென்று முடிவெடுத்தனர்.
அதன்படியே இருவரும் உறங்கி எழுந்து கிளம்ப தயாராகினர். அதிசயமாக அந்த அணிலும் அவர்களுடனே உறங்கியது.


காலை எழுந்த போது அவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணின் குரல் கேட்டது , அந்தப் பெண் குரல் ஏதோ ஒரு பெயரை கேட்டு அழைப்பது போல தோன்றியது.


“ருத்வி… ருத்வி” என்று யாரையோ அழைத்துக் கொண்டு நெருங்கி வந்தது போல தோன்றியது அந்தப் பெண்ணின் குரல்.


ஆதிரைக்கு அவளை அழைத்த அதே குரல் போல இருந்தது. இருந்தபோதும் இம்முறை அவள் அழைத்தது அர்ஜூனுக்கும் கேட்டது. அதனோடு அந்தக் குரல் ஆதிரையை அழைக்கவில்லை. யாரோ ருத்வி என்ற பெண்ணா! இல்லை ஆணையோ அழைத்தது. அவசரமாக இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டு அந்த அறையிலிருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தனர்.
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த ஜென்மத்திலாவது ஆதிரையும்
திகேந்திரனும் ஒண்ணு சேருவாங்களா?

இப்போ அணில் ரூபத்தில் இந்த
ஜோடிக்கு ஹெல்ப் செய்யுறவங்க
போன பிறவியில் என்னவாக or
யாராக இருந்தாங்க?

யாரு அந்த ருத்வி?
ஒருவேளை அணிலின் பெயர்தான்
ருத்வியா?

அர்ஜுன் ஆதிரை இரண்டு பேரும்
எப்போ சிவசக்தி அம்மாவிடம்
போவாங்க?
அந்த மலைக்குன்று வழியாக
போவாங்களா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top