தூரம் போகாதே என் மழை மேகமே!! - 34

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



மனத்திரையில் ஆதிரை கண்ட அர்ஜூனை தவிர வேறு யாரையும் அவள் பார்த்ததில்லை. ஆதிரையைப் போல இருந்த அந்தப் பெண்ணையும் அந்த விளக்கொளியையும் முன்பும் கண்டது போல உணர்ந்த ஆதிரை. சில நொடிகள் அந்தத் திரையில் நடப்பதில் அவள் கவனம் திரும்பும் விதமாக அந்த மாலுமி சத்தமிட்டு அரற்றினான். அவன் மீது சாமி வந்தாடியது போலத் தெரிந்தது..


“அந்தப் பெண் இந்த விளக்கை எடுத்துக் கொண்டு வேறு நிலம் சேரும் வரை அவள் மனம் கொண்டவன், இங்கு இருக்கும் மற்றொரு விளக்கில் எண்ணை ஊற்ற வேண்டும். அவன் தன்னலமற்றவனாகவும் , தானே மனமுவந்து தன்னுயிர் நீர்த்து இம்மக்கள் உயிரைக் காக்க கூடிய பவிர்த்தமான உள்ளம் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த நில நடுக்கத்திற்கு முன்பு இங்கிருக்கும் இவ்விளக்கணைந்தால் உங்கள் யாராலும் உயிர் தப்ப இயலாது” எனக் கூறி மயங்கி விழுந்தான்.

மகிழ்ச்சியில் திண்டாடிக் கொண்டிருந்த மக்களின் உள்ளம் எரிமலையால் தூவப்பட்ட நெருப்பு பிழம்பு போலக் கொதிகொதித்து போனது. இதனைக் கேட்டு துடிதுடித்து எழுந்த ராஜா, தன் மகன் திகேந்திரனை எழுந்து நேர் கொண்ட பார்வை பார்த்தார். எந்தச் சிந்தனையுமின்றி மக்கள் உயிர் காக்க தான் இக்கோவிலில் இருந்து எண்ணை ஊற்றுவதாகச் சொல்லிவிட்டான் திகேந்திரன். முதலில் வருந்திய கஜேந்திரர் , பின் தன் மகனை விடத் தன்னலமற்று இக்காரியத்தைச் செய்ய யாரும் எத்தனிப்பது அரிது என எண்ணி திகேந்திரனின் செயலுக்குப் பெருமையுடன் சம்மதித்தார். கஜேந்திரரின் மனைவியும் முதலில் தவித்த போதும், வேறு வழி இல்லாமல் ஒருவாறு இதற்குச் சம்மதித்தார்.

ஆனால் கஜேந்திரரின் தங்கை அதிரிந்து போனார். தன் மகளுடன் திகேந்திரனுக்கு அடுத்த திங்களில் திருமணம் நிச்சயித்திருந்த இந்தத் தருணத்தில் திகேந்திரரின் முடிவு அவர் மகள் ஆதிரையைத் துடிதுடிக்க செய்தது. முதலில் தவித்த போதும், பிறகுத் தானும் திகேந்திரனுடனே இத்தீவில் அவர் இருக்கும் காலம் வரை இருக்கவிருப்பதாக கஜேந்திரரிடம் அனுமதி கேட்டாள். ஆதிரையின்றி இங்கு யாரும் உயிர் தப்புவதற்கு வழிக் கிடையாது. ‘சியாமளா அம்மன் தன் மனக் கண் முன் கூறியதும் இந்தத் தடங்கல்தானோ!’ என வேதனையுற்றார்.

கஜேந்திரர் பேசும் முன்னே, திகேந்திரன் தன் மனதை கல்லாக்கிக் கொண்டு உயிருக்குயிராக எண்ணி இருந்த ஆதிரையிடம் தன்னை மறந்து வேறுவனை மணம் செய்து கொள்ள வேண்டினான். ஆதிரை அதற்குச் சம்மதிக்க மறுத்து “வாழ்வானாலும் , இறப்பானாலும் தங்களுடனே என உறுதியாகச் சொல்லி திகேந்திரனுடன் இருப்பேன்” எனத் தீர்க்கமாக கூறினாள்.


‘திகேந்திரரே! என்னை விட்டுப் போய்விடாதீர்கள்’ என்று திகேந்திரனை நோக்கி விழியால் மன்றாடினாள் ஆதிரை.

அப்போதுதான் கண் விழிப்பது போல் விழித்த மாலுமி, என்ன நடந்து என்று அவனைத் தாங்கி பிடித்திருந்தவர்களிடம் கேட்டான். பின் திகேந்திரன் , ஆதிரை பேச்சில் இடை புகுந்து, “அம்மா ஆதிரை உன் தவிப்பு நியாயமானது. இருந்த போதும் இங்கு இருக்கும் ஊர் மக்களையும் கொஞ்சம் எண்ணி பாரம்மா?” எனப் பேச்சை திசை திருப்பினான்.

சிறிது தயங்கி அம்மக்களை எண்ணிய போதும் , அவள் மனம், தான் நேசித்த ஒரே காரணத்திற்காக திகேந்திரனின் இந்நிலை வருவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “என்னால் முடியவில்லையே” என கண்கலங்கினாள்.

அதற்கு மாலுமி , “ இவை எல்லாவற்றிற்கும் ஒரு வழி இருக்கிறது தாயே” என்று ஆதிரையின் உதவிக்கு வந்தான்.

அவனை விசித்திரமாக நோக்கி “எப்படி ஐயா!” என்றாள் ஆதிரை.

“என் கப்பலில் ஒரு படகு இருக்கிறது அதனை இறக்கி இங்கு விட்டு விடலாம். கடலின் மேற் பரப்பில் பறவைகள் பறப்பதால் , நிச்சயமாக மிக அருகில்தான் நிலப்பரப்பு இருக்கும். அதனால் 2 நாட்களில் நாம் நிலம் சேர்ந்துவிடுவோம். அதன் பிறகு அவர் கிளம்பி வந்தால் சரியாக இருக்கும். கடவுள் இவர் இங்கேயே இறக்க வேண்டும் என்று சொல்லவில்லையே!. நீங்க மீண்டும் நிலம் சேரும் வரை இந்த விளக்கில் இவர் எண்ணை ஊற்ற வேண்டும் என்றுதானே சொன்னார் “ என்று கூறி மாலுமி ஆதிரையின் மனதை மாற்ற முயன்றான்.

திகேந்திரன் மாலுமியின் முன் வந்து ,” நல்ல யோசனை ஐயா. ஆதிரை அவர் சொல்வதற்கு சம்மதன் தானே! இனியும் காலம் தாமதிக்காதே. உடனே ஊர் மக்கள் அனைவரும் இங்கிருந்து கிளம்ப ஆணையிடுங்கள் தந்தையே” என்று ஆதிரைக்கும் கஜேந்திர்ருக்கும் ஒருங்கே பதிலளித்தான் திகேந்திரன்.

ஆதிரை ஒரு பெரு மூச்செறிந்து , “தங்கள் ஆணைபடி செய்கிறேன். ஆனால் , நீங்கள் அல்லாது , வேறு ஒருவனை நான் மனதாலும் நினையேன். நீங்கள் வரும் வரை நான் காத்திருப்பேன். இது என் மீது சத்தியம். நான் விரதம் இருந்த அந்தத் துர்கை அம்மன் மீது சத்தியம்” என சபதமிட்டு கையிலிருந்த விளக்கினூடே அந்தக் கப்பலை நோக்கி நடந்தாள் ஆதிரை. அவளின் இந்த உறுதியான முடிவையும் , நடையையும் பார்த்து, மாலுமி அதிர்ந்தான்

அதன் பிறகு அனைவரும் அந்தத் தீவை விட்டுக் கிளம்ப ஆதிரை அக்கப்பலின் முன் விளக்குடன் நின்று தன் மனம் வென்றவனை தன் நிரம்பிக் கொள்ளும் அளவிற்குக் கண் இமைக்க மறந்து கண்டாள். திகேந்திரனும் மன வலியுடன் அவன் உள்ளம் கவர்ந்தவளை கண்ணீருடன் வழியனுப்பினான். கப்பல் கண் மறையும் வரை பார்த்திருந்துவிட்டு திகேந்திரன் கோவிலின் உள்ளே சென்று எண்ணை ஊற்றினான்.


இதனை அருவமாகப் பார்த்திருந்த ஆதிரைக்கு திகேந்திரன் என்ற அர்ஜூனை பார்ப்பதா! அல்ல விக்கித்து அந்தக் கப்பலில் சென்று கொண்டிருக்கும் ஆதிரையைத் தொடர்வதா என்று தெரியவில்லை. அதோ அந்தக் கப்பலில் இருந்த ஆதிரையைத் தொடர்ந்தே சென்றது அவள் நினைவலைகள்.

அனைவரும் கவலையுடன் கிளம்பி இருக்க, மாலுமி மட்டும் உள்ள கழிப்புடன் இருப்பதை இப்போதைய ஆதிரை திரையில் உணர்ந்தாள்.


ஆம்.. அனைத்தையும் முதலில் உள்ள பொருமலோடு பார்த்திருந்தான் அந்த மாலுமி. அந்த ஊருக்கு வந்ததுமே ஆதிரையின் அழகிய முக அமைப்பும் , நீண்ட நெடிய கூந்தலும், மாலுமியை அவள் மீது ஆசை கொள்ள செய்தது. அடைக்கலம் தந்த இடத்தில் உடனே எதுவும் செய்ய கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். ஆனால் ஆதிரையினை அந்த விளக்கொளியில் பார்த்ததும் அவனின் போதை தலைக்கேறியது. அச்சமயம் அவள் திகேந்திரனை பார்த்ததும் அவன் உள்ளம் குமுறியது. ஏன் ஆதிரை திகேந்திரனை பார்க்கிறாள் என்று காரணம் அறிந்ததும் அவன் மனம் உலைக்களம் போல கொதித்தது. உடனே தீவிரமாக சிந்தித்த மாலுமி , சாமி ஆடுவது போல நாடகம் ஆடி ஆதிரையை திகேந்திரனிடம் இருந்து பிரித்தான். ஏற்கனே குழம்பி இருந்த மக்களின் இந்த மனனிலையும் அவன் மீது சந்தேகம் கொள்ள வழியில்லாமல் செய்தது.


‘இனி திகேந்திரன் உயிருடன் தப்புவது கடினம். அந்த ஓட்டைப் படகை வைத்துக் கொண்டு ஆற்றையே கடக்க முடியாது இதில் கடலை கடக்கப் போகிறானாம்’ என உள்ளுக்குள் நினைத்துக் சிரித்துக் கொண்டான்.

அதன் பிறகு மீண்டும் நிலத்தை அடைந்த பிறகுதான் மாலுமியின் சுயரூபம் தெரிந்தது. ஆதிரையிடம் பொய் கூறி தன்னை திகேந்திரனிடமிருந்த பிரித்த மாலுமியின் மீது தீயிட்டு எரித்துவிட்டாள். தன் மகன் மற்றும் ஆதிரையின் நிலையை எண்ணி, தன் மகனைத் தேடி பல ஆட்களை அனுப்பினார். ஆனால் அவர்களால் அத்தீவினை கண்டு பிடிக்க முடியவில்லை.

சில நாட்கள் திகேந்திரனுக்காக காத்திருந்துவிட்டு கடல் அன்னையை நோக்கி உண்ணாமல் கன்னி தவமிருந்துவிட்டு ஆதிரை இறந்துவிட்டாள்.


இதனால் மனவேதனையுற்ற கஜேந்திரன், சியாமள தேவியிடமே முறையிட்டார். அப்போது அவர் கனவில் நடப்பவை அனைத்தும் விதி இட்டவை. ஆதிரையும் திகேந்திரனும் பின்னொரு காலத்தில் மீண்டும் பிறந்து பல துன்பங்களுக்கு பின் இணைவர். அதற்கும் நானே வழிவகைச் செய்வேன்.


நினைவில்..


அப்போது மழைபொழிவது நின்றது. அந்த மழையின் சப்தம் நின்றதும் அர்ஜூன் ஆதிரையை நோக்கிப் பார்த்தான். அவள் இரு கண்களிலும் கண்ணீர் துளிர்த்திருந்தது.


ஆதிரை கண் விழித்தாள். அவள் நேர் எதிரே அந்த மரவீட்டின் கூரைத் தெரிந்தது. அவள் தலையினை ஏதோ தாங்கி இருப்பதை உணர்ந்த ஆதிரை. அர்ஜூனின் தொடை என்பதை அதனைத் தொட்ட உடனே உணர்ந்தாள். திடுக்கிட்டு எழுந்தவள் அவன்புறம் திரும்பி அவன் விழிகளைப் பார்த்தாள். ‘இவன் திகேந்திரனை போல இருக்கிறானே. நானும் தான் ஆதிரை போல இருக்கிறேன். அதனோடு என் பெயரும் ஆதிரை. அப்படி இருக்க சியாமளா அம்மன் கூறிய பிறவி இதுவாக இருக்குமா! இவன்தான் அந்த திகேந்திரனா! மற்றும் நான் தான் அந்த ஆதிரையா?’ என்று ஆதிரையின் மன போராட்டம் ஆரம்பித்தது.


அதுவரை மழையின் சப்தம் கேட்டுக் கொண்டிருந்ததால், அந்த மாய மழையினை பற்றியே யோசித்துக் கொண்டிருந்த அர்ஜூன் அப்போதுதான் ஆதிரையின் மீதே கவனம் செலுத்தினான். நனைந்த அவனது சட்டையில் ஆதிரையினை பார்க்கும் போது அவனால் அவனை கட்டுக் கொள்ள முடியுமென்று தோன்றவில்லை. முயன்று வேறுபுறம் விழி திரும்பியவனின் மனமும் சஞ்சல பட்டது. அவனை மீறி ஏதும் நடந்துவிடுமோ என்று அச்சம் மீண்டும் தோன்றியது. மீண்டும் அவளை விழி உயர்த்திப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு என்ன செய்தும் அவனால் தடுக்க முடியவில்லை. அப்படி விழி உயர்த்திப் பார்த்தவனின் கண்களில் ஆதிரை முகம் தீவிர யோசனையில் இருப்பது தென்பட்டது. அவளது விழி என்ற கருவண்டுகள் நடனம் ஆடிக் கொண்டிருந்தது. அந்த விழி அழகை மறைக்கும் விதமாக ஒரு துண்டு ஈரமுடி அவள் முகமுன் நின்று கொண்டு அவன் விழியழகை ரசிப்பதை தடுத்துக் கொண்டிருந்தது.


ஏற்கனவே நடப்பதுபுரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆதிரையின் மோவாயை பிடித்து அவள் முகத்தில் இருந்த முடியினை விலக்கிவிட்டான். திடீரென்று எதிர்பாராத அவனது தொடுகை ஆதிரையின் பெண்மையை சோதித்தது. அவள் கன்னங்கள் சூடேறுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அப்போது அவனை விழி உயர்த்திப் பார்த்த ஆதிரையால் அவனது கண்களிலிருந்த தன் கண்களை பிரிக்க முடியாத ஒரு காந்தம் போல விழி மாற்றும் எண்ணமற்று அவன் எதிரில் அமர்ந்திருந்தாள்.


“ஆதிரை…” என்றான் அர்ஜூன்.


“ம்ம்..” என்ற ஆதிரைக்கு அதற்கு மேல் பேச சக்தியில்லாதது போலவோ பேச விரும்பாத சுகத்தையோ உணர்ந்தாள்.


“நான்.. உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்.. கேட்கட்டுமா!” என்றான் அவன்.


“ம்ம்… “ என்றவள் ஏனோ வெட்கம் பரவ தலை குனிந்தாள்.


“நீ.. எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா!” என்றான். அதற்கு ஆதிரையின் கன்னகுழி தெரிய புன்னகை விரிந்தது. நாணத்தால் மேலும் பேச முடியாமல் நின்றாள். அவள் கண்ட கனவு போல இவன் என் பூர்வ ஜன்மத்து மணாளன் , எனக்காக இப்பிறவி எடுத்து வந்திருக்கிறான் என்று அவள் எண்ண ஆரம்பித்திருந்தாள். அதற்கு இணங்க அவனும் பேசினான்.


“நீ என்னை மணந்து கொள்கிறாயா!.” என்றான் அர்ஜூன். இதனைக் கேட்டதும் தேனாறு பாய்ந்தது போல தோன்ற இருந்த ஆதிரை மதி மயங்கி அர்ஜூனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த ஸ்டோரி ரொம்பவே நல்லாயிருக்கு, Yogi டியர்
பூர்வ ஜென்மம் இந்த ஜென்மம்
இரண்டும் சேர்ந்து ஸ்டோரி செம
interested-டா இருக்குப்பா

அடப்பாவி
அந்த மாலுமி எவ்வளவு கெட்டவனாக இருந்திருக்கான்
திகேந்திரன் and ஆதிரை இரண்டு
பேரும் பாவம்ப்பா
பெண்ணாசையால் இந்த இளம்
ஜோடியை அநியாயமா அந்த
மாலுமி பிரிச்சுட்டானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top