தூரம் போகாதே என் மழை மேகமே!! - 24

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



திருமணமாகி சுமார் ஒரு வருடத்திற்குப்பின் தன் தம்பியிடமிருந்துphone வந்ததால் ரிதிகா மிகவும் பூரித்து போனாள். ரிதிகா 'என் தம்பி, என் தம்பி' என்றே அர்ஜூனை பற்றி பேசுவாள். அதனாலோ என்னமோ அர்ஜூனை உண்மையில் சந்தித்த போது ஆதிரைக்கு அர்ஜூன் ரிதிகாவின் தம்பியாக இருக்க கூடுமென்று எந்தவித சந்தேகமும் வரவில்லை. அதனோடு சிம்லா அவனது ஊர் என்றதால், இன்னும் எந்தச் சந்தேகமும் ஏழுவில்லை.


phone செய்த அர்ஜூன், ஆசையுடன் நலன் விசாரிக்கக் கூடும். அன்பு அக்கா தம்பிகுள் பேச பல இருக்கும் என்று எண்ணி, ஆதிரையும் , அரவிந்தும் விலகி அடுத்த அறைக்குச் சென்றனர். ரிதிகாவிற்கு அவள் தம்பியிடம் பேச தனிமையை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஆனால் அர்ஜூன் அன்பாகப் பேசுவதற்கு பதிலாகக் குரலில் கட்டாயப்படுத்தி கடுமையாகப் பேச செய்தான்.


அர்ஜூனை உண்மையில் அறிந்த அவன் அன்பு அக்கா, “என்ன தம்பி ,என் மீது கோபம் இருப்பது போல இன்னும் எவ்வளவு நேரம் நடிக்கப் போகிறாய்?” என்று நமட்டு சிரிப்புடன் கேட்க அதற்கு மேல் அர்ஜூனால் நடிக்க முடியவில்லை.


“அக்கா..” என்று குரல் தழுதழுக்க அழைத்தான்.பின் " என்னால் நீ இல்லாமல், உன்னோடு பேசாமல் இருக்க முடியவில்லை. ஆனால் , என் வறட்டு பிடிவாதம் , என்னை உன்னுடன் பேசுவதை மிகவும் தடுத்தது.தாத்தாதான் உன்னிடம் இப்போதே பேச வேண்டும் இல்லையென்றால் அவரிடமும் பேச கூடாது என்று என்னிடம் சண்டை. நல்ல வேளை என்னிடம் சண்டை போட்டார். அதனால்தான் உன்னிடம் பேச முடிந்தது .எப்படி இருக்கிற அக்கா!” என்று புன்னகையுடனே கேட்டான் அர்ஜூன். அதற்குப் பதிலாக பேசத் தொடங்கிய ரிதிகா காலம் போவது தெரியாமல், அனாமிகாவையும் , ராஜாவையும் கூட மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.


அர்ஜூனின் ஆசையான பேச்சில் உலகம் மறந்து பேசிக் கொண்டிருந்த ரிதிகாவையும் , அவளது முகத்தில் தெரிந்த கவலை மறந்த புன்னகையும் பார்த்த அரவிந்தும், ஆதிரையும் காரண பார்வை பார்த்துக் கொண்டனர். ரிதிகாவை தொந்தரவு செய்யாமல் இரு குழந்தைகளையும் அவர்களே பார்த்துக் கொண்டனர். சுமார், 4 மணி நேரப் பேச்சிற்கு பின் ரிதிகா அறையை விட்டு வெளியில் வந்தாள்.


"என்ன அண்ணி , உங்க தம்பி முரங்கை மரத்திலிருந்து கீழிறங்கி ஒரு பெரிய கதை சொல்லி முடித்துவிட்டார் போல. நம் ராஜாவையும் அனாமியையும் கூட மறந்து போனீர்களே!” என்று கேலி செய்தாள் அன்பு நார்த்தனாரான ஆதிரை.


“ஸ்…….. அச்சோ. உண்மையில் அர்ஜூனிடம் குழந்தை பிறந்ததையும் சொல்ல மறந்தே போய்விட்டேன். நாளை phone செய்யும் போது சொல்ல வேண்டும்" என்று உண்மையான சோகம் காட்டிச் சொன்னாள் ரிதிகா.


“அண்ணி…!!! என்ன சொல்றீங்க .. உண்மையா! தம்பிக்காகக் குழந்தையை யாரேனும் மறப்பார்களா!. என்னைக் கேலி செய்யவில்லையே! "என்று வினயமாகக் கேட்டாள் ஆதிரை.


“இல்ல. ஆதி. உண்மையிலே மறந்துவிட்டேன்" என்றுவிட்டு, ராஜாவை மடியில் படுக்க வைத்துக் கொண்டு, “என்ன கண்ணா! உன்னைப் பற்றி உன் மாமனிடம் சொல்ல மறந்துவிட்டேனே. என்னை மன்னித்துவிடுடா செல்லம்" என்று கொஞ்சிக் கொண்டிருந்தாள் ரிதிகா.


அப்போதுதான் , அரவிந்தும் ஆதிரையும் காரண பார்வை பார்த்துக் கொண்டனர். பின் தனிமையில், “அண்ணா! நாம் தான் அம்மா அப்பா இல்லாமல் இருக்கிறோம். அண்ணி நமக்கு உன்னோரு உயிர் சொந்தமாக வந்தார்கள். ஆனால் தம்பி மீதே இவ்வளவு பாசமுள்ள அண்ணி உனக்காகவும் எனக்காகவும் இப்படி எல்லாச் சொந்தங்களையும் விட்டு இவ்வளவு நாள் இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இன்று அவர்களைப் பார்த்ததும் எனக்கு வருத்தமாகிவிட்டது அண்ணா!” என்று உண்மை வருத்தம் தோன்ற கூறினாள் ஆதிரை.


ஆதிரை ஒத்துப் பேசிய அரவிந்த்,” ஆமாம் ஆதிமா. எனக்கும் எவ்வளவு சுயநலமாக இருந்திருக்கிறோமென்று இப்போதுதான் புரிகிறது. ரிதிகா அடிக்கடி தாத்தாவை பார்க்கச் சென்னை மட்டும் போவாள். அதுவும் குழந்தைகளால் கடந்த 5 மாதமும் போக முடியாமல் தடைப்பட்டது. குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வீட்டிலிருந்து phone வரவில்லையே என்று அவள் கவலை படகூடுமென்று யோசிக்க கூட இல்லாமல் நான் என்ன கணவன். அவளின் ஏட்கம் நமக்குத் தெரியாமலே இவ்வளவு நாள் மறைத்து வைத்திருக்கிறாள்.” என்று கவலை பட்டான்.


“ம்ம்… எப்படியோ. கோபமாக இருந்த, அண்ணியின் தம்பியே இறங்கி வந்துவிட்டதால் அனேகமாக அண்ணியின் அப்பா அம்மாவும் கோபம் மறந்திருக்கக் கூடும். அதுவும் இந்தக் குட்டி ராஜாவையும் , அனாமிகாவையும் photo எடுத்து whats app – ல் போட்டால் ஓடோடி வந்துவிடப் போகிறார்கள். “ என்று ஆதிரை இலவச யோசனை கொடுத்துக் கொண்டு குதுகலித்தாள்.


அரவிந்து உடன் சேர்ந்து சிரித்த போதும், முழு மகிழ்ச்சி அவனில் உண்டாகவில்லை. ஏன் என்று ஆதிரையால் அன்று உணர முடியவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து ஆதிரை அறிந்து கொண்ட போது, ராஜா மட்டுமே ஆதிரையின் கையிலிருந்தான். கடவுள் நடத்தும் நாடகத்தில் நாமெல்லாம் கதாப்பாத்திரம் மட்டுமே. கதை எழுதுபவன் அவன் மட்டும்தானே!


குழந்தை பிறந்து முதல் பல் வரும் வரை குழந்தைகளைphoto எடுக்கக் கூடாது என்று தன் பாட்டி சொல்வார்கள் என்று ரிதிகா ஆதிரையிடம் சொல்லியிருந்தாள். அதனால் whats app-ல் photo அனுப்புவது நடக்கவில்லை. இருந்த போதும் ரிதிகா குழந்தைகளை பற்றி அர்ஜூனிடம் சொல்லிருக்க கூடுமென்று ஆதிரை எண்ணியிருந்தாள்.


ஆனால் ரிதிகாவும் , அரவிந்தும் சேர்ந்து முடிவெடுத்தது ஆதிரைக்குத் தெரிந்திருக்கவில்லை. என்றேனும் londan போக நேரிடலாமென்று அரவிந்த் Londan -க்கு visa எடுக்க ஆதிரிய ஏற்கனவே பணித்திருந்தாள். ஆனால் ரிதிகாவின் தம்பி பேச ஆரம்பித்த இரண்டாவது நாளே அது நடக்கக் கூடுமென்று யாருமே எண்ணவில்லை.


அப்பா, அம்மா ரிதிகாவை பார்க்க விரும்புவதாக ,அரவிந்தையும் ரிதிகாவையும் , ரிதிகாவின் தம்பியே அழைக்கும் போது அதை மறுக்க வாய்ப்பில்லை. குடும்பம் ஒன்று கூட போகிறது என்பதை எண்ணி ஆதிரை மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் இரண்டு மாதங்களே ஆன குழந்தைகள் இருவரையும் எடுத்துக் கொண்டு லண்டன் வரை போகும் போது சமாளிக்க முடியாமல் போனால் என்ன செய்வது என்று அனைவரும் கவலை பட்டனர்.


உண்மையில் ஆதிரை மட்டுமே கவலைப்பட்டாள். ரிதிகாவும் அரவிந்தும் என்ன செய்வது என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தனர். அதற்கேற்ப அனாமிகா பிறந்ததிலிருந்து துருதுரு வென்றும் ராஜா அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்பட்டுக் கொண்டும் இருந்தனர்.


மனதை கல்லாக்கிக் கொண்டு ரிதிகா, “ஆதி.. ராஜாவிற்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது , லண்டனில் நாங்க போகுமிடம் வேறு கொஞ்சம் குளிராக இருக்கும். அதனோடு என்னால் இருவரையும் உன் துணையின்றி அவ்வளவு தூரம் அழைத்துச் செல்ல இயலாது. கொஞ்சம் தயக்கமாகவும் பயமாகவும் இருக்கிறது. நம்ம அனாமிகா கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் ராஜாவிற்கு உன் துணை கண்டிப்பாக வேண்டும். அதனால் அனாமிகாவை மட்டும் நாங்க அழைத்துச் செல்கிறோம். ராஜாகுட்டி இங்கே இருக்கட்டும். இன்னும் அவன் ஆள் பலகவில்லை. அதனோடு அவன் அதிக நேரம் உன்னிடம்தான் இருக்கிறான். அதானால் ராஜா இங்கே இருக்கட்டும். நாங்க சீக்கிரம் வந்துட்றோம். " என்று காரணங்களுடன் கூறினாள் ரிதிகா.


“என்ன அண்ணி. இப்படி சொல்றீங்க. இது போன்ற சூழலில் நீங்க செல்ல கூடுமென்று தெரிந்திருந்தால் நானுமே visa வாங்கி வைத்திருப்பேனே!. ராஜா இல்லாமல் நீங்க எப்படி அண்ணீ" என்று யோசித்தவாறே கவலையுற்றாள் ஆதிரை.


“அதைப் பற்றி கவலைப் படாதே ஆதிமா. நாங்க இரண்டு மாதங்களுகுள் வந்துவிட பார்க்கிறோம். உன் காலேஜில் இன்னும் 3 மாதம் லீவும் கேட்டு வைக்கிறாயா. எனக்கு உன்னிடம் கேட்க கவலையாக இருக்கு. ஆனால் ராஜாவை பார்த்துக் கொள்ள நீ வேண்டும். அதனோடு அதனோடு. என் தாத்தா.” என்று திக்கிய ரிதிகா ஆதிரையிடம் அப்போதுதான் உண்மையைச் சொன்னாள்.


“என்னாச்சு அண்ணி" என்றாள் ஆதிரை.


“என் தாத்தா, மிகவும் உடல் சுகமில்லாமல் இருக்கிறாராம். நான் அவரையும் சென்று பார்த்துவிட்டு வர வேண்டும். நாங்க திரும்பி வர எவ்வளவு நாள் ஆகக் கூடுமென்று தெரியவில்லை. ஆனால் இரண்டு மாதத்திற்குள் வந்துவிடுவோம்” என்றாள் ரிதிகா.


“அச்சோ. எதுவும் ஆகாது அண்ணி. கவலை படாதீங்க. நீங்க தாத்தாக் கூட இருந்துட்டு வாங்க. நான் ராஜாவை பார்த்துக் கொள்கிறேன்.” என்று வாக்குறுதிக் கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தாள் ஆதிரை. அப்போது கிளம்பியவர்கள் இதுவரை வரவில்லை. பல முறை phone செய்தும் phone switch off ஆகிவிட்டிருந்தது. அவர்களைப் பற்றிய தகவலும் ஆதிரைக்குப் போய் சேரவில்லை. மாறாக ஆதிரைக்கு அவள் அண்ணன் எழுதிய கடிதம் மட்டுமே கிடைத்தது.


கடிதம் கிடைத்ததும், சேகர் அங்கிளுக்கே முதலில் phone செய்தாள் ஆதிரை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top