தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்

Advertisement

Eswari kasi

Well-Known Member
நம்முடைய மதிப்பு

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில்ஒருபேச்சாளார் ஒரு 500 ரூபாய்நோட்டைக் காட்டி ”யாருக்கு இதுபிடிக்கும்?”
எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தமக்குப்பிடிக்குமென கையைத்தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த500 ரூபாயைத் தருகிறேன். ஆனால்,
அதற்குமுன்” எனச்சொல்லி அந்த
500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகுஅதை சரி செய்து “இப்போதும் இதன்
மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும்கையைத்தூக்கினர். அவர் அந்த ரூபாய்நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர். அவர் தொடர்ந்தார் “கேவலம்ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தம் அதன் மதிப்பை இழக்கவில்லை.

ஆனால் மனிதர்களாகிய நாம்
அவமானப்படும் போதும், தோல்விகளை சந்திக்கும்போதும் மனமுடைந்து போய்
நம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
தனித்தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை.
வாழ்க்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரம்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்..என்றார்..
படித்ததில் பிடித்தது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top