ஏரிக்கரை 2

Advertisement

Thoshi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் சகோஸ் ...நான் அடுத்த குட்டி எபியோட வந்துட்டேன் ...படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க ...உங்க கருத்துக்களுக்காக நான் காத்துகிட்டு இருக்கேன் ...அடுத்த பதிவு சனிகிழமை அன்று சகோஸ் ....
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
அம்மாக்களுக்கான குழந்தைகளின் கவிதைகளும் ...குழந்தைகளுக்கான அம்மாக்களின் கவிதைகளும் முத்தங்களாலே எழுத படுகின்றன....



ஏரிக்கரை 2 :

சென்னை பேருந்து நிலையம்:

பேருந்திலிருந்து 5 அடி உயரமும் 3 அகலமுமாய் இறங்கியவனின் கண்கள் இரண்டும் ஈட்டீயாய் பார்ப்பவரின் நெஞ்சின் ஆழம் வரை சென்று துளைப்பது போல் இருக்க அதற்க்கு நேர்மாறாய் உதடுகள் புன்னைகைத்துக்கொண்டிருந்தது .

அங்கிருந்து ஆட்டோ பிடித்து அவன் வந்து நின்ற இடம் அவ்வூரின் காவல் நிலையம் . அவன் வந்த நேரம் காவல் நிலையம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டதில் அங்கிருந்த ஒரு போலீசாரிடம் கேட்ட பொழுது , அதாம்பா அந்த ஏரிக்கரை கிட்ட திரும்ப இன்னொரு பொணம் கிடக்குதாம். இந்தவாட்டி கமிஷ்னரே விசாரிக்க போறாரு அதான் எல்லோரும் அங்க கிளம்பிட்டு இருக்காங்க .

அவன் , இன்னொரு பொணம்னா ஏற்கனவே அங்க ஒரு பொணம் கிடைச்சிதா என்ன ??

இந்த உலகத்துல தான் இருக்கானா என்பது போல் இவனை ஓர் பார்வை பார்த்து, ஏன்பா நீ பேப்பர்லாம் படிக்க மாட்டியா??? இது அந்த ஏரிக்கரையில் கிடைக்குற ௫ வது பொணம்பா ... அவனிடம் சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே அங்கு தன் மேலதிகாரி வருவதை கண்டு அமைதியாகி அனைவருடனும் சேர்ந்து தானும் பரபரப்பாகினார் .
ஏதோ யோசனையுடன் சிறிது நேரம் நின்றவன் பின் அங்கிருந்து கிளம்பிச்சென்றான் ....


ஏரிக்கரை இன்று மிகுந்த பரபரப்புடன் இருந்தது ... இத்துடன் இதே இடத்தில் 5 பிணங்கள் கிடைத்ததில் அங்கு சுற்றி இருந்த மக்களின் முகத்தில் பீதி அப்பட்டமாய் தெரிந்தது . அதுவும் விசாரணையின் முடிவில் அது வெவ்வேறு ஊரை சேர்ந்த பெண்களின் உடல்கள் என தெரிந்ததால் அவர்களின் அனைவருக்கும் இதை போலீஸ் கூறுவதுபோல் தற்கொலை என ஏற்றுக்கொள்ள முடியவில்லை..ஆயினும் அவர்களால் போலீசார் கூறுவதற்கு தலை ஆட்டமட்டுமே முடிகிறது .

போலீசார் முகத்திலும் இது குறித்த சிந்தனையே ....ஒவ்வொரு முறையும் இது தற்கொலை இல்லை என தோன்றினாலும் மேலே விசாரிக்க முடியாமல் ஏகப்பட்ட தடைகள் . அப்பெண்களின் குடும்ப சூழ்நிலைகளும் அதற்க்கு தக்கவாரே அமைய தற்கொலை என்றே கேஸை முடித்தனர் . வழக்கம் போல் தடவியல்துறையை சார்ந்தவர்கள் பிணத்தை பேருக்காய் சோதித்த பின் கொண்டு செல்லாமல் இம்முறை சிறுது தீவிரமாக சோதித்துப்பார்த்தனர் . போலீசாரும் அவ்விடத்தை முதல்முறையாய் ஆராய்ச்சியுடன் காண்கையில் போலீசாருடன் சேர்ந்து மற்றோரு ஜோடி கண்களும் கூர்மையாய் அப்பிணத்தையும் , அதன் சுற்றுசூழலையும் ஆராய்ந்தது . அந்த ஜோடி கண்களுக்கு சொந்தக்காரன் வேறுயாருமில்லை ...காலையில் பேருந்தில் இருந்து இறங்கியவன் தான் . அவனின் கண்கள் துள்ளியமாக அவ்விடத்தை ஆராய்ந்ததில் பிணத்தை கண்டவனுக்கு அச்சிறு வித்தியாசம் சிக்கியது . உடனே பிணத்தை நெருங்கியவன் அதை ஆராய முற்பட்டான் . இதைக் கண்ட போலீசார் ஒருவர் அவனிடம் வந்து ,

யார்பா நீ?? என்ன பண்ற ? விசாரணை போய்ட்டுஇருக்கும்போது இப்படி கிட்டலாம் வரகூடாது போபா போய் ஓரமா நில்லு .

சற்று தயங்கியவன் , சார் இந்த காயங்கள் எல்லாம் வெறும் மீன் கடித்தது போல் இல்லையே அதான் பார்க்கலாம்னு என இழுத்ததில் ....

சுற்றி இருந்த போலீசார் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டதில் பெரிய அதிகாரியாக இருந்த ஒருவர் ...ஏய் என்னபா நீ உனக்கே தெரியும் போது எங்களுக்கு தெரியாதா ?? மீன்கள் கடிச்சதுதான் இதுலாம் உடல பார்த்தாலே தெரியல ரொம்ப நாளா தண்ணில கிடக்குதுனு மேல மேல னு கடிச்சிற்கும் அதான் அப்டி இருக்கு முதல நீ தள்ளி போ பா . விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கோம்ல என்றார் .

அவர் சொல்லுவது மிக சரியாக இருந்தாலும் அக்காயத்தில் ஏதோ சிறு வித்தியாசம் உள்ளது போலவே அவனது உள்ளுணர்வு சொல்லியது . அவனது ஆராய்ச்சி பார்வை கண்ட போலீசார் தடவியல் நிறுபனர்களிடம் சோதனை முடிஞ்சிடிச்சின்னா பிணத்தை எடுத்துக்கிட்டு போலாம் என சொல்ல உடனே மற்றவர்கள் பிணத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துக் கொண்டு சென்றனர் ..

அனைவரும் சென்ற பிறகும் அங்கு இருந்த அவன் அவ்விடத்தின் சிறுசிறு இடங்களையும் விடாமல் தனது கூர்பார்வையால் ஆராய்ந்தான் . அவனது பார்வை பிணத்தைக் கிடத்தி இருந்த அந்த சமமான நிலத்தில் இருந்து ஏரிக்கரையோரம் வரை தொடர்ந்தது . இத்தொடர் சம்பவங்களுக்கு பின்னால் ஏதேனும் காரணம் கண்டிப்பாக இருக்கும் என அவனது உள்ளுணர்வு சொன்னது... அதுமட்டுமல்ல இச்சம்பவங்கள் தொடரப்போவதாகவும் சொல்லியது.....

..........................................................................................



என்னையா பண்ணிட்டுஇருக்கீங்க எல்லோரும் அந்த ஏரிக்கரை கேஸ் என்னாச்சி ...மேல்இடத்துல இருந்து கேள்வியா கேக்குறான்யா என தன் முன் இருந்த இன்ஸ்பெக்டர் . வசந்த்திடம் (ஏரிக்கரை கேஸ்களை விசாரிப்பவர் ) கேள்வி கேட்டுக்கொண்டிருந்தர் டிஜிபி.


சார் நாங்களும் விசாரிச்சிட்டோம் சார் தனி தனியா விசாரிக்கும் போது எல்லாமே தற்கொலை மாதிரி தான் இருக்கு ..

டிஜிபி , என்னய்யா சொல்ற ??

வசந்த் , ஆமா சார்

1 .மொதல்ல அங்கிருந்து நம்மளுக்கு கிடைச்ச உடல் அகல்யா என்னும் பெண்ணுடையது அவங்க குழந்தையா காணாம வருத்தத்துல தற்கொலை பணிகிட்டாங்க னு விசாரணையில் தெரிஞ்சிது .

2. கல்பனா , அவங்க வீடு தரமணில இருக்கு ரொம்ப நாளா வயத்துவலி பிரச்சனையில் கஷ்டப்பட்டவங்க அன்னிக்கு வேளச்சேரில இருக்க சொந்தகாரங்க வீட்டுக்கு வந்தப்ப அதிகமான வயத்து வலிய தாங்க முடியாம தற்கொலை பண்ணிற்காங்க .

3. பவித்ரா இவங்க தன் மாமியார் வீட்ல ரொம்ப கொடும படுத்துறதா ஏற்கனவே தன் புகுந்தவீட்டு மேல கம்ப்லைன் குடுத்துருக்காங்க ஆனா அவங்க ரொம்ப செல்வாக்கான குடும்பம்றதுனால என்ன நடந்துச்சோ கம்ப்லைன வாபாஸ் வாங்கிட்டாங்க .அந்த பிரச்சனையில அவங்க தற்கொலை பண்ணிட்டாங்க அதுக்கு அவங்க புகுந்தவீடு தான் காரணம்னு அந்த பெத்தவங்களே சொன்னதுல அதுவும் திசை மாறிடிச்சி .

4. கவிதா இவங்க கவனக்குறைவால விளையாடிட்டு இருந்த அவங்க குழந்தை வீட்ல வச்சிருந்த சின்ன தண்ணி தொட்டில விழுந்து செத்துடிச்சி தான் குழந்தை சாவுக்கு தான் தான் காரணம்னு அவங்க உளறிட்டு இருந்ததாகவும் அதுனால அவங்க அந்த ஏரில விழுந்து தற்கொலை பண்ணிகிட்டதாவும் அவங்க குடும்பத்துல இருக்கவங்களே சொல்றாங்க .

இப்படி எல்லா கேசுக்குமே தனித்தனியா ஸ்ட்ரோங் ஆன ரீசன் நடந்தது தற்கொலைனு சொல்ற மாதிரி இருக்கு சார் .

டிஜிபி , நீ சொல்றதுலாம் சரியாத்தான்ய இருக்கு ....ஆனாலும் வரிசையா எல்லாம் நடக்கிறதும் அதுவும் அதே ஏரில விழுந்து சாகுறதும் தான் இடிக்குது .தற்கொலை பண்ணிக்க எவ்ளோ இடம் இருக்க எல்லாம் இந்த ஏரில விழுந்து நம்ப உசுர வாங்குறாங்க என புலம்பி கொண்டிருக்கும்போதே அவரது தொலைபேசி அழைக்க எடுத்து பேசியவர் ,
......
எஸ் சார்.....
.......
ஓகே சார்...


பேசிமுடித்தபின் மற்ற போலீசாரை பார்த்து வரிசையா நடந்த சம்பவத்தால இந்த கேஸோடா விசாரணையை சி ஐ டி கிட்ட குடுத்துட்டாங்களாம்யா ...வசந்த் இப்போ அந்த ஆஃபீஸ்ர் வந்தவுடனே கேஸ் பத்தின டீடெயில்ஸ் அ அவர்ட்ட கொடுத்துருங்க சொல்லிக்கொண்டிருந்தவர் கதவு தட்டும் ஒலியில் அமைதியானார் .

உள்ளே வந்தவன் ...

ஹலோ சார் ஐம் இன்ஸ்பெக்டர் அரசு , from CID என தன் கம்பீரக்குரலில் கூறினான் .

அவனை கண்டவரின் கண்கள் அவனின் கம்பீரத்தில் வியப்பை வெளிப்படுத்தின. அவன் வேறுயாருமில்லை
அவன் தான் அப்பேருந்தில் வந்தவன் .ஏரிக்கரையை ஆராய்ந்தவன் . இன்ஸ்பெக்டர் from CID


.............................................
செய்தித்தாள்கள் அனைத்திலும் ஏரிக்கரையில் நடக்கும் தொடர் சம்பவங்களே குவிந்திருந்தது .


" ஏரிக்கரையோரம் மற்றோரு பிணம் !!
விசாரணை சி ஐ டி யிடம் மாறியுள்ளது . இத்தொடர் சம்பவங்களுக்கு குற்றவாளியை கண்டறிவார்களா ?? தற்கொலையென முடித்துவிடுவார்களா ??



முக்கிய செய்தித்தாள் ஒன்றை படித்துக்கொண்டிருந்தவனின் இதழ்கள் சிறிது சிறிதாக புன்னகையை சிந்தியது . செய்தித்தாளில் இருந்த பிணத்தின் புகைப்படத்தை கண்டவனின் கண்களில் வெற்றியின் பளபளப்பு .


தி கேம் ஸ்டார்ட் நௌ


----------------------------------------
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top