என் காதல் தீ 11 TEASER

Advertisement

lekha_1

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

கடந்த திங்கள் அப்டேட் குடுத்தவள் எலெக்ஷனுக்கு ஊருக்கு போயிட்டேன். இன்னும் இங்கே தான் இருக்கேன். லேப்டாப் தொட கூட முடியலை. கிடைத்த நேரத்தில் கொஞ்சம் தான் எழுத முடிந்தது. அதில் சிறிது டீசரா குடுத்துருக்கேன். நாளை இரவு அப்டேட் குடுத்தறேன்ப்பா... சாரி...


“நான் அழுதா காய்ச்சல் வரும்னு தெரியும்ல, ஏன் அடிக்கறீங்க?” என்று கண்களை கசக்கிக்கொண்டு கேட்ட குழந்தைக்கு தன்னிடம் இருந்த குச்சியினால் ஒரு அடி வைத்துவிட்டு, “அழுதா காய்ச்சல் வரும்னு தெரியும்ல, எதுக்கு அழுகற?” என்றார் அந்த தாய்.

அதனை கேட்டு, ‘நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’ என்ற ரீதியில் முழித்துக்கொண்டிருந்தவளை அந்த தாயும் எதிரில் நின்று முறைத்துக்கொண்டிருந்தார்.

சரியாக அதே நேரத்தில் “அத்தை!” என்ற ஒரு குரல் வெளியில் இருந்து ஒலிக்க, அது யாருடையது என்று அறிந்துகொண்ட குழந்தையோ, “நிலா மாமா!” என்று ஓடிச்சென்று வந்தவனின் கால்களைக் கட்டிக்கொண்டு “அம்மா அடிக்குறா” என்று முறையிட்டாள்.

“ஓ… அம்மா அடிக்குறாங்களா எங்க பாப்பாவ? நீ என்ன செய்த அவங்க அடிக்குற மாதிரி?” என்று கேட்டவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தாள் நம் நாயகி. அவளின் முழியை வைத்தே என்ன நடந்திருக்கும் என்று யூகித்தவன், “வா… நாம என்னன்னு கேட்போம்” என்று அவள் கைபிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

தனக்கு ஒரு ஆள் துணைக்கு கிடைத்த திருப்தியில் அன்னையை மிதப்பாக பார்த்த நிரல்யாவைக் கண்டு அந்த தாய்க்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. பின்பு, தெரியாதா அவருக்கு, தான் நடந்ததை சொன்னால் கதிர் அவளுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்து விடுவான் என்று? (அப்போல இருந்து எல்லாருக்கும் பாடம் தான் எடுத்துட்டு இருக்கே?)

“ஏன் அத்தை இவளை அடிச்சீங்களாம்?” என்று கேட்டவனிடம், “நீயே கேளு கதிரு! பக்கத்து வீட்டுல கொஞ்ச நாள் முன்ன கோழி குஞ்சு பொறிச்சிருந்துது. இன்னிக்கு காலைல அவங்க வீட்டு வாசல்ல சுத்திட்டு இருந்த ஒரு கோழி குஞ்ச இவ தூக்கிட்டு வந்துட்டா. அத அவங்க கிட்ட கொடுடின்னு சொன்னா, அது இவளுதுன்னு சொல்ற. இவளோட என்னால முடியல கதிரு. நீயே சொல்லி புரியவை கதிரு, அத தர சொல்லி”

கதிரிடம் முறையிட்டவர் இதற்குப்பின், ‘நீயாச்சு அவளாச்சு’ என்ற ரீதியில் நிரல்யாவை மீண்டும் ஒரு முறை முறைத்துவிட்டு சென்றார். அவர் சென்றதும் நிரல்யாவின் புறம் திரும்பியவன்,

“நிலா… மாமா உனக்கு வேற கோழி குஞ்சு வாங்கி தரேன்மா. நீ இத அவங்கட்ட குடுத்தறியா?”

“எனக்கு இதுதா புடிச்சிருக்கு. நான் இத தரமாட்டேன்”

“உனக்கு அதே மாதிரியே வேற வாங்கி தரேன்மா. இது மத்தவங்களோடது. அவங்க குடுக்காம நாமலே எடுத்துக்க கூடாது”

“ஆனா, எனக்கு பிடிச்சிருக்கே!” என்று அப்பாவியாக அவள் கேட்ட விதத்தில் அவன் உருகிப்போனான்.

“நமக்கு பிடிச்சது எல்லாம் நமக்கு சொந்தமாகாது கண்ணு. அது நம்முடையதா இருக்கனும். நமக்கு உரிமையுள்ளது மேல நாம ஆசைபடறது தப்பில்லை. ஆனா, உரிமை இல்லாதத உரிமையாக்கிக்க அதோட உரிமையாளர் சம்மதம் வேனும்” என்றவனை கண்டு ‘ஙே’ என விழித்தாள் அந்த சின்னன்சிறு சிட்டு.

அவளுக்கு புரியவில்லை என்பது கண்டு தன் பின்னந்தலையை தட்டி, “இது நம்மோடது இல்ல கண்ணு. அவரு ஆசையா வளர்த்ததுல. அவருக்கு கஷ்டமா இருக்கும்ல. நாம குடுத்தறலாம்” என்று விதவிதமாக அவளை சமாதானப்படுத்தி அதற்கு உரியவரிடம் அந்த கோழியை ஒப்படைத்துவிட்டான்.

இருந்தும் அதனை நினைத்து நினைத்து அழுதே அவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. பின்பு, அதேபோல் ஒரு கோழிகுஞ்சை வாங்கி கொடுத்தபின்பே அவள் அழுகை நின்றது. அதன்பின் பெரும்பாலும் அவளை யாரும் அழவைத்ததில்லை.

இன்று, அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்துவைத்து அழுது தீர்த்து கையில் ட்ரிப்ஸுடன் படுத்திருப்பவளைக் கண்டு துக்கமடைந்தான் கதிர்,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top