என்னை சிரிப்பால் சிதைத்தவளே 4 (1)

Advertisement

Dharani dhara

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 4 (1)

என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


ஹாஸ்டெலில் இருந்து கல்லூரியில் நுழைந்திருந்த வைதேகி, தன்னுடைய வகுப்பிற்கு நேரமாகி விட்டது என்று வேகவேகமாக தலையை குனிந்து கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அதுவும் கல்லூரி ஆரம்பித்து இரண்டாம் நாளே லேட்டாக போனால் ஆசிரியர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று அவள் மனம் முழுவதும் இதே எண்ணங்கள் நிறைந்திருந்தது. அந்த எண்ணங்கள் அவளுக்கு இன்னும் தன் நடையின் வேகத்தை அதிகரித்து கொண்டிருந்தது.

அந்த எண்ணங்களின் விளைவில் அவளுக்கு வேறு எந்த ஒரு விஷயமும் தன் கவனத்தில் பதியவில்லை.

அவளின் எண்ணம் முழுவதும் தான் வகுப்பிற்கு சரியான நேரத்தில் சென்று விட வேண்டும் என்பதே பதிந்திருந்தது. அவள் மனம், மூளை இரண்டும் அவளுக்கு சொல்லியது ஒரே வார்த்தை தான்......வேகம் வேகம் வேகம்.

அஸ்வந்தின் நிலையோ வேறு மாதிரி இருந்தது. அவனை கடந்து சென்ற சில பெண்கள்.... அவனை ஒரு அதிசயத்தை பார்ப்பதை போல் பார்த்து கொண்டே சென்றனர்.

அந்த பார்வை அவனுக்கு அருவருப்பை ஏற்படுத்தியது. அதனால் அவன் எதையும் பார்க்கும் விருப்பம் இல்லாமல் தலையை குனிந்து கொண்டே எப்பொழுதடா வகுப்பு வரும் என்று நொந்து கொண்டே நடந்து கொண்டிருந்தான்.

அவரவர் நிலையில் மூழ்கியிருந்த இருவரும் எதிர் எதிர் திசையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவருக்கும் இடையில் பத்து அடி தூரமே இருந்தது. வைதேகி நிமிடத்திற்கு ஒருமுறை தன்னுடைய வேகத்தினை கூட்டி கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவருக்கும் இடையில் ஐந்தடி தூரம்.....

அப்பொழுது எங்கிருந்தோ ஓடி வந்த சுவேதா அவளை பிடித்து இடது புறமாக இழுத்தாள்.

ஆனால் அஸ்வந்த்திற்கு இவை எதுவுமே தெரியவில்லை. அவன் தன் நிலையை நொந்து கொண்டே நடந்து கொண்டிருந்தான்.

ஏனெனில் சுவேதா, வைதேகி அஸ்வந்த்தினை நெருங்குவதற்குள் தன் புறம் இழுத்திருந்தாள். அதனால் அவனுக்கு எதுவும் தெரியாமலே போயிற்று.

"ப்ச் என்னடி" என்று தன்னுடைய கையினை தேய்த்து கொண்டே வைதேகி கூறினாள். (அவளுடைய முகத்தினில் சிறிது எரிச்சல் கோடு வந்திருந்தது).

சுவேதா அதையெல்லாம் கவனிக்க வில்லை…"Just miss…. Suddenly I saw you… otherwise what will happen? என்று கோபமாக வைதேகியை பார்த்து திட்டி கொண்டிருந்தாள்.

வைதேகிக்கு அவள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறாள் என்று புரியவில்லை.

அவள் தன் கைவலி எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு “ஏன்டி கோவப்படற இன்னிக்கு கிளம்ப லேட் ஆகிடுச்சு அதான் கிளாஸ்க்கு லேட் ஆகிடும்னு பாஸ்ட்டா நடந்து வந்தேன்” என்று சுவேதாவின் கைகளை பிடித்து சமாதான படுத்தி கொண்டிருந்தாள்.

வைதேகி கூறியதிலிருந்து, அவளுக்கே தான் செய்யவிருந்த காரியம் தெரியாததினால் சுவேதாவின் கோபம் கொஞ்சம் குறைந்தது.

சுவேதா, வைதேகிக்கு தற்பொழுது நடக்கவிருந்த விபரீதத்தை கூறினாள்.

சுவேதா கூறிய அனைத்தையும் கேட்ட வைதேகி தன்னுடைய இரு கரங்களையும் கன்னத்தினில் அழுத்தி ஐயோ என்று அதிர்ச்சியினில் வாயை பிளந்தாள். அவளுடைய கண்கள் மிரண்டு விழித்தது.

வைதேகியின் ரியாக்ஷனை கண்ட சுவேதாவிற்கு, அத்தனை நேரம் அவளுள் இருந்த கோபம் போய்..... வைதேகியை கிண்டல் செய்ய தோன்றியது.

சுவேதா, “you know one thing…. He is looking very handsome…… I’m so sorry. Suddenly I came like a…… what you people call that word? Ya I got it….. “நந்தி”….yes, I came like நந்தி right, between you people…. If I didn’t came that time, what will happen vaithegi? என்று அழகாக தன்னுடைய ஒரு புருவத்தினை மட்டும் அவளை பார்த்து ஏற்றி இறக்கினாள்.

வைதேகி சுவேதா கூறியதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

வைதேகியின் கண்கள் தான் இடிக்க விருந்த நபர் யார் என்று தன்னை சுற்றி நடந்து சென்றவர்களை தேடி கொண்டிருந்தது.

அதனை கண்டு கொண்ட சுவேதா, “you are searching him only…. right. Look…. he is there” என்று மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட்டினுள் நுழைந்து கொண்டிருந்த அஸ்வந்த்தினை காட்டினாள்.

"அவள் காட்டிய திசையினை நோக்கி வேகமாக திரும்பிய வைதேகிக்கு அவன் முதுகு புறம் மட்டுமே தெரிந்தது.

“What… you missed him ah… It’s ok. We are in same college only na… you will definitely see him one day” என்று சுவேதா கூறிவிட்டு வகுப்பிற்கு நேரம் ஆகிவிட்டதால் வைதேகியை அழைத்து கொண்டு சென்றாள்.

ஆனால் அவனை பார்க்கும் சூழ்நிலை எந்த மாதிரி அமைய போகிறதோ??

அங்கு ஏற்கனவே வகுப்பு ஆரம்பித்து இருந்தது.

“Excuse me sir” என்று இருவரும் கோரஸ்ஸாக ஆசிரியரை அழைத்தனர்.

“Yes come in” என்று ஆசிரியரின் அனுமதியை பெற்றவுடன் இருவரும் வகுப்பிற்குள் நுழைந்து தங்களுக்கு என்று ஒரு இடத்தினை தேர்வு செய்து அதில் அமர்ந்தனர்.

“Introduce yourself” என்று ஆசிரியர் இருவரையும் பார்த்து கூறினார்.

"சுவேதா தன்னிடத்தில் இருந்து எழுந்து முதலில் தன்னை மற்றவர்களிடம் அறிமுகபடுத்தி கொண்டாள்". சுவேதா கூறியதை உன்னிப்பாக கேட்டு கொண்ட வைதேகி.... அவளை போலவே தானும் கூறி அமர்ந்து கொண்டாள்.

தன்னிடத்தில் அமர்ந்தவுடன் வைதேகியிடம் இருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது. அவளின் அருகில் அமர்ந்திருந்த சுவேதாவிற்கு அது நன்றாக கேட்டது.

அவள் வைதேகியின் புறம் திரும்பி "what happened?” என்றாள்.

வைதேகியின் மனம் "இப்ப தான் ஒன்ன முடிச்சோம், அதுக்குள்ள இன்னொன்னா. இந்த இங்கிலீஷு நம்மள எங்கபோனாலும் விடாது போலயே” என்று நினைத்தது. ஆனால் அவள் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டினாள்.

இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது. இனி ஒவ்வொரு விஷயத்தையும் வைதேகி எப்படி பேஸ் பண்ண போகிறாள்…. பார்ப்போம்.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்...........அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு (including me
also) ஆங்கிலத்தில் பேசுவதும்,
மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதும் கொஞ்சம்
கஷ்டம்-தான், தாரா டியர்

ஆனால் கவர்மெண்ட் ஸ்கூல்
டீச்சர்ஸ், கொஞ்சம் மனசு
வைத்தால், வருங்காலத்தில்
இந்நிலை மாறலாம்

இப்பொழுது சில டீச்சர்ஸ்
பழைய மாதிரி நல்ல
குருவாக, மாறி வருவதாக கேள்விப்படுகிறேன் பா
 
Last edited:

Suvitha

Well-Known Member
பரவால்லயே நம்ம வைதேகி....
சுவேதாவை follow பண்ணி அதே போல தன்னை introduce செய்திட்டாளே....
பிறகென்னபா...கூடிய சீக்கிரமே நம்ம புள்ளையும் English ஐ Catch பண்ணிக்குவா ன்னு எனக்கு நம்பிக்கை இருக்குப்பா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top