என்னுள் சங்கீதமாய் நீ 11

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 11



ஒரு “பங்க்ஷன்..” நடக்குற இடத்துல இப்படித்தான் நடந்துப்பியா..? அப்படியென்ன கன்ட்ரோல் பண்ண முடியாத “கோவம்..” உனக்கு..?

அதுவும் உங்க “தாத்தாட்ட..” வேற கொஞ்சம் கூட மரியாதை இல்லாம., அந்த பேச்சு பேசுற..?

இதுல என்ன தைரியம் உனக்கு..? நான் யாரு அவருக்குன்னு வேற கேட்குற..? ஏன் நான் அவருக்கு யாருமே இல்லங்கறியா..?

என்ன நினைச்சு இந்த கேள்வியை கேட்ட நீ..? பதில் சொல்லுடி..? என்று ஆகாஷ் கேட்க., கேட்க., ஹர்ஷினிக்கு கோவம் மறைந்து., “விரக்தி..,” தான் தோன்றியது.

இனி தான் “ஆச்சார்யாவுடன் மட்டுமல்ல., ஆகாஷுடனும் தான்., அவள் மல்லு கட்ட வேண்டும் என்று”, என்று புரிந்ததால் மனதளவில் ஓய்ந்து போனவளாக, அருகில் இருந்த சேரில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்.,

அவள் குனித்திருந்ததால் அவளின் விரக்தியை புரிந்து கொள்ள முடியாத ஜெய் மேலும் பேசினான்.,

இதுதான் "பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட் வார்னிங்க்" உனக்கு..! இனிமேல் இது சம்மந்தமா ஒரு வார்த்தை கூட அவர்கிட்ட நீ பேச கூடாது..?

எது கேட்கிறதா இருந்தாலும் என்கிட்ட தான் நீ கேட்கணும்.., புரிஞ்சுதா..? அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..?

இவ்ளோ நேரம் அந்த குதி குதிச்ச..! இப்போ எனக்கு பதில் சொல்லுடி.., என்று ஆகாஷ் கோவத்தில் பேச.. பேச.. ஹர்ஷினிக்கு எந்த வருத்தமும் தோன்றவில்லை..

மாறாக "மனது முழுவதும் எதிர் மறை எண்ணங்களே..", என்னை காதலிக்காமல்.., இருந்திருந்தால் ஆகாஷிற்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லையே..?

ஆனால் இப்பொழுது “என் காதலே..” அவனின் வளர்ச்சிக்கு மிக பெரிய தடை கல்லாக உள்ளதே..! தாத்தா மாறுவாரா..? என்பதும் மிக பெரிய கேள்விக்குறி..?

எந்த சூழ்நிலைலும் நாங்கள் இருவருமே.., எங்கள் “இரு குடும்பத்தையும் எதிர்த்து..” கண்டிப்பாக எதுவும் செய்ய போவதில்லை.., அதற்கு கடந்த காலங்களே சாட்சி…

இப்பொழுது.., இனி தான் என்ன செய்ய வேண்டும்.? என்பதே அவளின் தீவிரமான யோசனையாக இருந்தது.

உன்கிட்ட தானே பேசிட்டுருக்கேன்., முதல்ல என்னை நிமிந்து பாருடி..? என்று ஆகாஷ் அதட்டவும், அவனை நிமிர்ந்து பார்த்த ஹர்ஷினியின் முகத்தில் உள்ள பாவத்தை புரியாது பார்த்தவன்.,

என்னடி பார்வையே சரியில்ல..? சந்தேகமாக அவளின் முகத்தை பார்த்தவாறே கேட்டான்,

சோர்வான முகத்துடன் எழுந்து நின்ற ஹர்ஷினி “நாம ரெண்டு பேறும் மீட் பண்ணிருக்கவே வேண்டாம்..!” என்று விட்டாள்.,

ஏய்.. என்னடி சொன்ன..? என்று வேகமாக அவளை அறைய கையை ஓங்கி விட்டவன்.., அவளின் ஓய்ந்த தோற்றத்தில் ச்சே.. என்றுவிட்டான்.,

அப்படியும் அவனால் அவளின் பேச்சால் உண்டான கோவத்தை அடக்கமுடியாமல் அவளின் கையை இறுக்கி பிடித்தவாறே.,

இதுதான் கடைசி.., இனிமேல் ஒரு வார்த்தை பேசுனா உன்னை இங்கேயே நொறுக்கிருவேன்.,! என்று கடுமையாக எச்சரித்து அவளை முறைத்து நின்றான்.,

பார்க்கும் தூரத்தில் இருந்ததால்.., அனைவரும் அவர்களையே “பார்க்காமல்., பார்த்து..!” கொண்டிருந்ததால், ஆகாஷ்.., ஹர்ஷினியை அறைய கையை ஓங்கி கொண்டு கோவமாக நெருங்கும் போதே, ஏதோ பிரச்சனை..? என்று புரிந்து கொண்டு வேகமாக அவர்கள் இருக்குமிடம் வந்தனர்..,

இருவரும்.., ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு நிற்பதை கண்டவர்கள் என்னாச்சு..? என்று புரியாமல் பதட்டத்துடனும்.., அவளை அறைய கையை ஓங்கியதால் கொஞ்சம் கோவத்துடனும் பார்த்தனர்.,

ஜெய்.., “முதல்ல அவ கையை விடு..,” என்று சுபத்ரா கோபத்துடன் அதட்டலாக சொல்லவும்., ஆகாஷ்

“இனிமேல் இவ கையை எப்பவும் விட்றதா இல்ல மேம்..” என்று ஒரு இன்ச் கூட தன் கையை அசைக்காமல்.., ஹர்ஷினியை பார்த்தவாறே உறுதியாக சொன்னன்..,

ஜெய் என்ன இது..? ஆச்சார்யா கொஞ்சம் கண்டிப்புடன் கேட்கவும்.,

பேச வாய் திறந்த ஹர்ஷினி., ஆகாஷ் மேலும் தன் கையை இறுக்கி பிடிக்கவும் அவனை திரும்பி பார்த்தவள்.., அவனின் பொசுக்கும் பார்வையில்.., எதுவும் பேசாமல் கடுப்புடன் முகத்தை திரும்பி கொண்டாள்.

ஹர்ஷினி என்னடி இதெல்லாம்..? ஆச்சார்யா எல்லாம் சொன்ன பிறகும்., தன் மகளின் காதலை நம்ப முடியாமல்.., மனவருத்ததுடன் ரேணுகா கேட்கவும்

அவளின் கையை பற்றிய படியே அனைவரையும் பார்த்த ஆகாஷ் “நான் மேடையில சொன்னது ஹர்ஷினியை..” தான்.., நாங்க 9 வருஷமா லவ் பண்றோம்.,

கண்டிப்பா நீங்க எல்லாம்., “எங்க காதலுக்கு அகைன்ஸ்டா இருக்க மாட்டேங்கன்னு..” தெரிஞ்சும்., ஒரு சில பிரச்சனைகளால் எங்களால் சொல்ல முடியாம போச்சு.,

“காரணங்கள்..?” எதுவா இருந்தாலும் உங்க எல்லார்கிட்டயும் மறைச்சது கண்டிப்பா தப்பு தான்.,

ஹர்ஷினியை., நினைச்சு நீங்க நிறைய கவலை பட்டுருக்கீங்க, ஏன் நிறைய பேச்சு, மனசு கஷ்டம் கூட..,

எல்லாத்துக்கும்., எங்களால “எந்த சமாதானமும் சொல்ல முடியாது.,” ப்ளீஸ் எங்களை மன்னிச்சிருங்க.., என்று ரேணுகாவிடம்.., ஆகாஷ் உண்மையான வருத்தத்துடன் சொல்லவுமே..,

ரேணுகாவின்.., மனதில் இருந்த “ சந்தேகமும், கவலையும் பனி போல் விலகிவிட்டது”.

என்னதான் “தாரணியுடனான பழக்கம் மூலமாக..” அவர்கள் குடும்பத்தை பற்றி ஓரளவு தெரிந்து இருந்தாலும்.., ஏன் ஆச்சார்யாவுமே “நல்ல பையன், நல்ல குடும்பம்..” என்று சொன்னாலும்., மனதில் கொஞ்சம் பயத்துடனே இருந்த ரேணுகாக்கு,

ஆகாஷின் நேர்மையான பேச்சு, அவனிடம் இருக்கும் கம்பீரம், எல்லாம் பிடித்து போய்விட்டது., தன் மகளுக்கு.., “மிகவும் பொருத்தமானவன்..,” தான் என்று நிம்மதியடைந்தவர்.,

என்ன தம்பி நீங்க.., அதெல்லாம் ஒண்ணுமில்ல, என்று கொஞ்சம் மலர்ந்த முகத்துடனே சொல்லவும், “கவுத்துட்டான்..,” என்று பல்லை கடித்தாள் ஹர்ஷினி.

சுபத்ரா தன்னை “குற்றம் சாட்டும் பார்வையுடன்..,?” கூர்மையாக பார்க்கவும்.., அவரின் எண்ணத்தை புரிந்து கொண்ட ஆகாஷ்

மேம்.., உங்களுக்கு நான் “குரு.., துரோகம் பண்ணல..”

“உங்க பொண்ண லவ் பண்ணதுக்கு அப்பறம் தான்..,” நான் உங்க ஸ்டுடென்டே தவிர., உங்க ஸ்டுடென்டா ஆனதுக்கு அப்பறம்.., “நான் அவளை லவ் பண்ணல.,” என்று உண்மையை சொல்லவும்..,

சுபத்ரா.., ஆகாஷ விட்டு ஹர்ஷினியை முறைத்து பார்த்தார்., ராஸ்கல்.., “என்ன மாட்டிவிட்டுடான்..,” என்று மனதுக்குள் ஆகாஷ திட்ட மட்டுமே முடிந்தது ஹர்ஷினியால்.

ஹர்ஷினியின் கையை விடாமல் பிடித்தவாறே ஆச்சார்யாவிடம் வந்தவன் தாத்தா.., இந்த வாரத்துல உங்களுக்கு தோதுப்பட்ட நாளா சொல்லுங்க.., நான் என் குடும்பத்தோடு உங்க வீட்டுக்கு வரேன்..,

“கல்யாண தேதி உறுதி பண்ணிரலாம்..,” என்று ஹர்ஷினியை பார்த்தவாறே முடிவுடன் சொன்னான்.

அதுவரை “சார்..,” என்று கூப்பிட்டு கொண்டிருந்த ஆகாஷ்.., இப்பொழுது “உறவு முறையுடன்..,” தாத்தா என்று கூப்பிடவும் ஹர்ஷினிக்கு புரியாதான் செய்தது. இனி அவன் பின் வாங்க மாட்டான் என..,

ஆனாலும் அமைதியாக இருந்து தன் காரியத்தை சாதிக்க நினைத்தவள் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமலே நின்றாள்.,

இப்போதிருக்கும் சூழ்நிலையில்.., “வேறு எதுவும் பேசவேண்டாம்..” என்று தோன்றியதால்.., ஓகே.. டைம் ஆச்சு.., நாங்க கிளம்புறோம்.., என்று எல்லாருக்கும் பொதுவாக சொன்னவன்., எச்சரிக்கும் விதமாக ஹர்ஷினியின் கையை ஒரு அழுத்து அழுத்தியே விட்டு கிளம்பினான்.

ஆகாஷ் கிளம்பவும், இருக்கும் சூழ்நிலையை உணர்ந்து கொண்ட தாராணியும், ரமேஷும் எதுவும் பேசாமல்.., எல்லோரிடமும் சொல்லி கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

அவர்கள் கிளம்பியவுடன்., ஹர்ஷினியின் குடும்பத்தினர் அனைவரும் அவளை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தனர் என்றால்.., ரேணுகாவும், சுபத்ராவும்.., நீயா இப்படி..? என்று அவளை வெறித்து பார்த்தனர்.

இந்த “வீட்டு பெண்ணாய் நான் இவர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் செய்யவில்லை…!” என்று தெரிந்ததாலே, அவளால் அவர்களின் பார்வையை எதிர் கொள்ளவே முடியவில்லை.

கடந்த வருடங்களில்.., தன்னால் இவர்கள் பட்ட “மனவேதனைய.,” முழுவதும் அறிந்தும், தன் காதலுக்காக “சுயநலமாக..,” இருந்தவளாயிற்றே.,

அப்படியிருந்தும் “எல்லாம் வீணே..!” எனும் நிலைய தான், அவளால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.

மெதுவாக திரும்பி தன் அப்பாவை பார்த்தாள், அவர் அவளை பரிவுடன், ஆறுதலாகவே பார்த்தார்.

ஒரு “அப்பாவாக..”, தான் செய்த செயல், அவருக்கு எவ்வளவு மனக்கஷ்டத்தை கொடுத்து இருக்கும்.., இருந்தாலும் இது வரை தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவே இல்லையே.,

இவை எல்லாம் ஒன்று சேர்ந்து.., “மிகுந்த மனஅழுத்தத்தை” கொடுத்தது ஹர்ஷினிக்கு .,

இப்போதிருக்கும் மனஅழுத்தத்தில் தன்னால் யாரிடமும் “தன்னிலை விளக்கமாக கூட.. ஒரு வார்த்தை சொல்ல முடியாது..” என்று புரிந்ததால்..

நான்.., உங்க யார் “பாசத்துக்கும் நியாயம் செய்யலன்னாலும் பரவாயில்ல.., ஆனா, நானே உங்க எல்லார் மனக்கஷ்டத்துக்குமே காரணமாயிட்டேன். என்னை மன்னிச்சிருங்க,,” என்று குற்ற உணர்ச்சியில் கலங்கிய குரலுடன் சொல்லவும்..,

எல்லோருக்கும் அவளின் மீது வருத்தம் இருந்தாலும், அவள் கலங்குவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதுவும் தன் பேத்தி கஷ்டப்படுவது பொறுக்குமா ஆச்சார்யாவிற்கு.., போங்க., எல்லாரும் கிளம்புங்க., நாளைக்கு பேசிக்கலாம்.,

அபி உங்களுக்கு டின்னர் பேக் பண்ணி எடுத்துக்கோங்க., வீட்ல போய் சாப்டுக்கலாம்.., என அனைவரையும் எதுவும் பேச விடாமல் .., அவர்கள் சென்னை வீட்டிற்கு கிளப்பி கொண்டு வந்துவிட்டார்.

எல்லாருக்கும் புரியத்தான் செய்தது அவரின் நோக்கம்., அது மட்டுமில்லாமல் ஹர்ஷினியின் ஓய்ந்த தோற்றமே.., அவர்களை வருத்தப்பட வைத்ததால், மேலும்.., அவளை கஷ்டப்படுத்த விரும்பாமல், அவளிடம் எதுவும் கேட்காமல் விட்டனர்.

அவனின் சென்னை பிளாட்டிற்கு வந்த பிறகும்.., ஆகாஷிற்கு, கோவம் போவேனா என்றது.., கோட்டை கழற்றி வீசியவன்.., கழுத்து பட்டனை கழட்டி விட்டு, முழுக்கை சட்டைகளை முட்டிக்கு மேல் ஏற்றி விட்டு குறுக்கும் நெடுக்குமாக சீறும் புலியென நடந்தான்..,

மீட் பண்ணிருக்கவே கூடாதுண்ணு..? எப்படி அவள் சொல்லலாம்..? எவ்வளவு திமிரு இருந்தா அப்படி சொல்லுவா..!

என் லைபிலே.., நான் அவளை பர்ஸ்ட் பாத்தது தான், பொக்கிஷமா நினைச்சிட்டிருக்க.., அவள் எப்படி சொல்லலாம்..? என கொந்தளித்து கொண்டிருந்தான் ஆகாஷ்.

அதே நேரம் ஹர்ஷினியும் தன் ரூமில் அமர்ந்து ஆகாஷின் கோவத்தை தான் நினைத்து பார்த்து கொண்டிருந்தாள். தான் சொன்னது அவனை மிகவும் வருத்தியருக்கும் தான்.,

ஆனால் அதில் எந்த தவறுமே இல்லையே., தங்களுடைய குடும்ப பிரச்சனையில்.., என்னுடைய காதலால் தானே அவன் சிக்கி கொண்டான்.,

அதை தான் நாம் மீட் பண்ணிருக்கவே கூடாதென்றும் ஆகாஷிடமும் சொன்னாள்., இருவருமே தாங்கள் முதன் முதலாக பார்த்து கொண்ட நாளை நினைத்து பார்த்தனர்.,



……………………………………………………….



தாத்தா.. காலேஜ்க்கு டைம் ஆச்சு.., சீக்கிரம் வாங்க.., என்று கத்தி கொண்டிருக்கும்போது, தன் தலையில் விழுந்த நறுக்கென்று “கொட்டில்,” திரும்பி பார்த்தவள்..,

“ம்மா.. “ எதுக்கு கொட்டுன..? என்று வலியால் தலையை தேய்த்து கொண்டே கேட்டாள் ஹர்ஷினி.

ஏண்டி.., நீ காலேஜ் போக அவர் உன் கூட வரணுமா..? அவரை தொந்தரவு பண்ணாம ஒழுங்கா நீயா கிளம்பு..,

ம்மா.. எனக்கு இன்னிக்கு தான் பர்ஸ்ட் டே காலேஜ் தெரியுமில்ல.., அவர் வந்து என்னை ட்ராப் பண்ணத்தான் நான் போவேன்..,

ஆமா.., இதோ இங்க., அடுத்த தெருவுல இருக்கிற காலேஜ்க்கு உன்னை ட்ராப் பண்ண அவரே வரணுமா உனக்கு., வர வர உனக்கு ரொம்ப கொழுப்பாயிடிச்சி.., கிளம்புடி நீயே..,

"தாத்தா.." என்று ஹை டெசிபலில் கத்திய ஹர்ஷினி., ரேணுகாவிடம் இரு உன்னை தாத்தாகிட்ட., சொல்றேன் என்று மிரட்ட வேறு செய்தாள்.

என்னாச்சு ஹர்ஷினி..? அவளின் கத்தலில் வேகமாக வந்த ஆச்சார்யா கேட்கவும்,

நான் பர்ஸ்ட் டே காலேஜ் போறதால, நீங்க தானே தாத்தா என்ன ட்ராப் பன்றேன்னு நேத்து சொன்னீங்க., ஆனா அம்மா உங்கள தொந்தரவு பன்றேன்னு.., என்னை கொட்டிட்டாங்க என்று முகத்தை அழுவது போல் வைத்து கொண்டு சொல்லவும் ,

என்ன ரேணுகா இது..? “என் பேத்தி முத நாள் காலேஜ் போகும் போது, இப்படித்தான் அவளை அழவைப்பியா..?” என்று கோவமாக கேட்கவும்,

இல்லேங்க “மாமா..” மெதுவா தான் கொட்டுனேன்., உங்களுக்கு எதுக்கு தொந்தரவுன்னு தான்..,

என் பேத்திக்கு செய்றது தொந்தரவா எனக்கு..? நீ போய் முதல்ல எங்களுக்கு டிபன் எடுத்து வை.., எனவும் ரேணுகா ஆச்சார்யாக்கு தெரியாமல் ஹர்ஷினியை கண்களால் மிரட்டி விட்டே சென்றார்.

நீ வா ஹர்ஷினி.., நாம சாப்ட்டு கிளம்பலாம், டைம் ஆச்சு என்று அவளை தோளோடு அணைத்தவாறே டைனிங் டேபிளுக்கு வந்தவர்., ரேணுகா, மாலதி உடன் இருந்து பரிமாற அவளுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு., அவரே அவளை காலேஜில் விடவும் செய்தார்.

.........................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

என்னுள் சங்கீதமாய் நீ 11 போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க ப்ரண்ட்ஸ்.., thank you
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
போங்கப்பா எல்லோரும் நல்லவங்களாவே இருக்காங்க
ஆசைக் காதலன் ஜெய் ஆகாஷ் எனக்கு டான்ஸை விட ஹர்ஷினிதான் பெரிசுங்கிறான்
அருமைக் காதலி ஹர்ஷினி என் காதலை விட ஆகாஷின் முன்னேற்றம்தான் முக்கியம்ங்கிறாள்
இவ்வளவு நாளாய் இவள் பேசாமல் டூ விட்டுட்டு இருந்த அப்பா சந்திரன் ஹர்ஷினிக்கு பார்வையிலேயே ஆறுதல் சொல்றார்
பேத்தி வருத்தப்படுவதை தாத்தா ஆச்சார்யா மட்டுமில்லே குடும்பத்தில் யாருமே விரும்பலை
மகளின் காதல் தெரிந்து அரை மனசாய் இருந்த அம்மா ரேணுகா ஜெய்யின் பேச்சில் க்ளீன் போல்டாயிட்டாங்க
பாசமுள்ள அன்பான தாத்தா ஹர்ஷினி பேத்தியின் காதலுக்கு ஏன் முட்டுக்கட்டை போடுறார்?
சீக்கிரமா வந்து சொல்லுங்க, நிதி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top